"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Niththam niththam en kannodu - Koottu Puzukkal

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Sat Jun 20, 2009 2:05 am    Post subject: Lyrics - Niththam niththam en kannodu - Koottu Puzukkal Reply with quote

படம்: கூட்டுப் புழுக்கள்
பாடியவர்: எஸ்.பீ.பீ. மெல்லிசை மன்னர்
இசை: மெல்லிசை மன்னர்
பாடலாசிரியர்: புலமைப்பித்தன்

நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்பக்கனா
நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை சிந்தும் நிலா
இளமாலை நேரம் வந்தாய், விழி ஓரம் ஏதோ சொன்னாய்
எதையோ நினைத்தாய், சிரித்தாய், ஓடினாய்.
(நித்தம்)

மண்ணிலே வீடு கட்டி ஆட வந்தாய் நேற்று
நெஞ்சிலே கூடு கட்டி வாழ வந்தாய் இன்று
அந்த மலரும் நினைவு தோன்றும்
அதில் உலகம் மறந்து போகும்
அந்த உறவு தொடர வேண்டும்
இன்பக்கனவு பலிக்க வேண்டும்
(நித்தம்)

மின்னலோ சேலை கட்டி வீதி எங்கும் போகும்
அம்மம்மா பார்த்து இருந்தால் கண்கள் பட்டுப் போகும்
இது பருவம் வடித்த சீரோ
உன்னை படைத்த கலைஞன் யாரோ
அடி இரவில் மலரும் பூவே
எந்தன் இளமை பருகும் தேனே.
(நித்தம்)

இந்த படம் 1987- ல் R.C. சக்தி அவர்களின் இயக்கத்தில் வெளி வந்தது.

இந்த பாடலின் மெட்டை எஸ்.பீ.பீ. அவர்கள் 30 நிமிடத்திலேயே கற்றுக்கொண்டு மெல்லிசை மன்னருடன் பல விதங்களில் பாடி பார்த்து, இறுதியில் மெல்லிசை மன்னர் எப்படி சொன்னாரோ அதே விதத்தில் சிறிதும் மாற்றம் இல்லாமல் பாடினாராம். ஒரு பதிவில் படித்தேன்.

இந்த பாடல் யமன் கல்யாணி என்ற ராகத்தில் அமைக்கப் பட்டது. இந்த பாடலின் மெட்டு எவ்வளவு அழகோ அவ்வளவு அழகையும் தன் இனிமையான குரலுடன் சேர்த்து அற்புதமாக பாடி இருக்கிறார் எஸ்.பீ.பீ. என்னை பொறுத்தவரை எஸ்.பீ.பீ. அவர்கள் எவ்வளவோ இசை அமைப்பாளர்களின் பாடல்களைப் பாடி இருந்தாலும், வித்யாசமான, அற்புதமான மெட்டுக்களில் அதிக அளவு மனதை கவரும் பாடல்களை பாடி இருப்பது நம் மெல்லிசை மன்னர் இசை அமைத்த பாடல்களில்தான். இந்த பாடலும் அது போல வித்யாசமான மெட்டுடன் அமைந்த ஒரு அழகான பாடல்.

பாடல் தொடங்குவதே மெல்லிசை மன்னர் பாடும் இனிமையான ராகத்துடனும், ஸ்வரத்துடனும். அதை தொடர்ந்து எஸ்.பீ.பீயின் தேன் குரலில் பல்லவியின் முதல் வரி. பின்னணியில் இதமான தபலா. பாடலின் இறுதி வரை இந்த தபலாவின் மெட்டு மாறி மாறி வருவது மிகவும் அழகு. இந்த பாடலில் வரும் புல்லாங்குழல், கிடார் மற்ற வாத்தியங்கள் எல்லாமே மிதமாக, இதமாக வரும்.

பாடல் வரிகளும் மிகவும் யதார்த்தம். மனதில் காதல் வந்தால் தினமும் காதலர்கள் ஒருவரை மற்றவர் நினைத்து இனிமையாக கனவு காண்பது என்பது இயல்பு. அதையே பல்லவியின் முதல் வரியாக ' 'நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்பக்கனா' என்றும், காதல் கொண்டவர்கள் தனியாக எதையோ நினைத்து சிரிப்பதை அப்படியே வரிகளாக எழுதி இருப்பதும் இயல்பாக இருக்கிறது.

இந்த பாடலைப் போல், மெல்லிசை மன்னரும், எஸ்.பீ.பீ. அவர்களும் சேர்ந்து பாடிய பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்தான்.
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Sat Jun 27, 2009 11:07 am    Post subject: Reply with quote

அன்புள்ள திருமதி மீனாட்சி,

நித்‌தம் நித்‌தம் நினைத்து அனுபவித்துப் பாட வேண்டிய பாடல். ஏனோ இசை ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படாமல் புழுதி படிந்த வீணையாகக் கிடக்கிறது. நீங்கள் இதைத் தூசு தட்டி மெருகேற்றிப் பூஜையில் வைத்திருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள்.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Fri Aug 21, 2009 7:43 pm    Post subject: Reply with quote

dear mrs. meenakshi

this is one of the greatest songs of MSV -spb combo like yenakkoru kathali , but unfortunately , not much heard . i heard this during film release , and longing to hear again

any one -pls advs where from i can download this song -probably raghasudha can help me .
that reminds me
During raghamaliga 300 th episode , the compere bqlaji said that after singing yennakoru kathal irukindral song , the telephones poured from all parts to thank him for the selection , and he added that was most popular song of the series .

good music ,say MSV music never die- saghavaram petravai
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Aug 21, 2009 8:36 pm    Post subject: Reply with quote

அன்புள்ள விஜயகிருஷ்ணன்

இந்த பாடல் நம் MSV times music site-la இருக்கு. நீங்கள் அதில் கேட்கலாம். இல்லை என்றால் உங்கள் email-id சொன்னால் நான் உங்களுக்கு இந்த பாடலை அனுப்புகிறேன்.

நன்றி
மீனாக்ஷி
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sat Aug 22, 2009 12:12 pm    Post subject: Reply with quote

dear mrs meenakshi

thank you . pls send to vkseshu@yahoo.com
i am not able to browse any folders other than forum folder in our site .
i tried mozilla, opera to open ,
thank you &grateful for this

wregds
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sat Aug 22, 2009 6:44 pm    Post subject: Reply with quote

Dear Vijaykrishna,
Pls use Internet Explorer for listening the songs in our website, www.msvtimes.com. It will work.
Raghavendran
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Sat Aug 22, 2009 6:47 pm    Post subject: Reply with quote

Dear Mr. VK,

Other folders will open only with Internet Explorer. Since I use mostly Firefox, I had this problem for a long time. I also missed the piano concert, since info on this (about availability of tickets) was posted under latest updates. Then I saw the remark somewhere 'works with IE.' Then I started using Internet Explorer and the folders open up.

You may try with Internet Explorer. You have a lot of treasure inside (videos and audios) thanks to the core group.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun Aug 23, 2009 10:03 am    Post subject: Reply with quote

dear m/s pathavi and ragasudha

have an issue with IE at home desktop.
am infact trying with in my laptop today , hope fully its MSv day all day ,



thank you

dear mrs meenashi

you wouldnot believe , when i am writting this , the downloaded song sent by is starting

thanks a million
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group