"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Annamitta Kaigalukku (Iru Malargal) - By Saradha

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV
View previous topic :: View next topic  
Author Message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Sat Dec 23, 2006 9:55 am    Post subject: Annamitta Kaigalukku (Iru Malargal) - By Saradha Reply with quote

"அன்னமிட்ட கைகளுக்கு...." (இரு மலர்கள்)

'மெல்லிசை மன்னரின்' இனிய இசையில் விளைந்த எத்தனையோ அற்புதப் படைப்புகளில் ஒன்றுதான் "இரு மலர்கள்". பாடல்கள் அத்தனையும் இனிமை. அவற்றில் அதிகம் பேசப்படாத ஒன்றைத்தான் இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உயிருக்குயிராய் காதலித்த காதலி, காரணமே சொல்லாமல் காணாமல் போய் விட, தனக்காகவே காத்திருந்தவளை மணமுடித்து அமைதியாய் வாழ்ந்திருந்த நேரத்தில், பழைய காதலி மீண்டும் தோன்றுகிறாள். அதுவும் தன்னுடைய மகளுக்கே ஆசிரியையாக. தர்ம சங்கடத்தில் கதாநாயகனும் அவனது முன்னாள் காதலியும்.

திரும்பி நிற்பவள் முன்னாள் காதலி என்ற நினைப்பில் பழைய கதைகளை கணவன் கொட்டிவிட, கேட்டுக்கொண்டிருந்த மனைவிக்கு மாபெரும் அதிர்ச்சி, கணவனின் மனதில் இப்படி ஒரு காயமா என்று. முடிவு...?. கணவனின் நிம்மதியையே பெரிதாக நினைத்த அந்த பேதைப்பெண், (உண்மையில் கணவனின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல்) அவர்களுக்கு இடைஞ்சலாக இல்லாமல் விலகிப்போகும் முடிவெடுக்கிறாள்.

ஆனால் குழந்தை..?. அவளைப்பிரிய மனமின்றி ஆனாலும் வேறு வழியின்றி அவளைத் தூங்க வைத்து விட்டு வீட்டை விட்டு சென்று விடும் முடிவில் தான் இந்த அருமையான பாடல்.

கதாநாயகனாக 'நடிகர் திலகம்', முன்னாள் காதலியாக 'நாட்டியப்பேரொளி', மனைவியாக 'புன்னகை அரசி'. போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள்.

மெல்லிசை மன்னரின் இனிய இசையில் வாலியின் பாடல்களில் சப்தமெல்லாம் பூப்பூத்தது.


'இசையரசி' பி.சுசீலா தனக்குப்போட்டியின்றி தன்னாட்சி செய்து வந்த காலம் அது. எல்.ஆர்.ஈஸ்வரி என்ற அருமையான பாடகி, கவர்ச்சிப்பாடல்களுக்கும் இரண்டாம் நிலை கதாநாயகிகளுக்கும் மட்டுமே என்ற, தமிழ்த்திரைப்படத்தின் (கொடுமையான) எழுதப்படாத விதியினால் ஒதுக்கி வைக்கப்பட, இன்னொரு இசைக்குயில் எஸ்.ஜானகி எப்போதாவது அத்தி பூத்தாற்போல் மட்டுமே பாட அழைக்கப்பட, ஜமுனாராணியும் ஜிக்கியும் முழுதுமாக ஓரம் கட்டப்பட்டிருக்க, வாணி ஜெயராம் அப்போது அறிமுகமே ஆகாமல் இருக்க....... எந்தப்பக்கம் திரும்பினாலும் சுசீலா அம்மாவின் குரலே ஒலித்துக்கொடிருக்க, அவரது எல்லாப்பாடல்களுமே நல்லதாக இருந்ததால், நல்லவற்றில் மிக நல்லதாக தேர்ந்தெடுத்து வானொலிகள் ஒலிபரப்ப.......

.............நல்ல பாடலான இப்பாடல் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.

அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே
தாய்வழி நீ நடக்க தந்தை வழி பேரெடுக்க
நான் அதைப்பார்த்திருக்க நேரமில்லை மகளே
நான் அதைப்பார்த்திருக்க நேரமில்லை மகளே
நேரமில்லை மகளே

கைவிளக்கை ஏற்றிவைத்தேன் கோயிலுக்காக
என் தெய்வத்தின்மேல் எனக்கிருக்கும் காதலுக்காக
வாழ்ந்திருந்தேன் அன்பு என்றும் வளர்வதற்காக
ஒருதாய் வருவாள் மகளே உன் காவலுக்காக
தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக

அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே

தாய்க்குலத்தின் மேன்மையெல்லாம் நீசொல்ல வேண்டும்
என் தலைமகளே உ பெருமை ஊர்சொல்ல வேண்டும்
நல்லவர்கள் வாழ்த்துரைக்கும் நாள் வரவேண்டும்
அதை கண்குளிர காண்பதற்கு நான் வர வேண்டும்
கண்குளிர காண்பதற்கு நான் வர வேண்டும்

அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே

எப்போது பார்த்தாலும் கண்களில் நீரை வரவழைக்கும் பாடல் இது. எனக்குப்பிடித்த சுசீலா அம்மாவின் மிக நீண்ட பாடல் பட்டியலில் இதுவும் உண்டு.

Enjoy audio here (song no: 61)
http://psusheela.org/tam/audio.php?offset=60&ord=song

By
Sarada Prakash
Back to top
View user's profile Send private message Send e-mail
irenehastings
Guest





PostPosted: Wed Feb 07, 2007 7:16 pm    Post subject: Reply with quote

I never heared this song before.

Today only heared by help of the link.

I found more good songs also in the link.

thank you.
Back to top
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group