"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

AMMADEE PONNUKKU THANGA MANASU - RAMAN ETHANAI RAMANADEE

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Tue Jul 19, 2011 11:41 am    Post subject: AMMADEE PONNUKKU THANGA MANASU - RAMAN ETHANAI RAMANADEE Reply with quote

நடிகர் திலகம் எத்தனையோ வியத்தகு பாத்திரங்களில் நடித்திருந்தாலும், தானே ஒரு நடிகராக வலம் வந்த ஒரே படம் ராமன் எத்தனை ராமனடி...

1970இல் வெளிவந்தது ...இச்சமயத்தில் அவர் புகழின் உச்சியில் இருந்த ஒரு பொற்காலம்....இந்த தருணத்தில் அவர் திருலோக்சந்தர், பி.மாதவன் , வியட்நாம் வீடு சுந்தரம் போன்ற இயக்குநர்களுடன் பணியாற்றினார்.

சிறு வயதிலேயே அனாதை.. சூதுவாது தெரியாத ஒரு அப்பாவி..ஊரே கேலி செய்கிறது.. வலிப்பு நோயால் துடித்துகொண்டிருந்த சமயத்தில் கருணை கொண்டு காப்பாற்றுகிறாள் ஒரு பணக்காரப்பெண்…அவரை அழகான அந்த பெண் காதலிக்கிறாள் என்று தவறாக எண்ணி அப்பெண்ணின் அண்ணனிடம் பெண் கேட்க செல்ல, அந்த பெரிய மனிதரோ பல பெரும் செல்வந்தர்களின் முன்னிலையில் அவரை அடித்து துன்புறுத்தி, அவருக்கு என்ன மதிப்பு என்று கேலி செய்ய, இதையே ஒரு சவாலாக ஏற்று கொண்டு , ஒரு மிக பெரிய நடிகராகி அந்த ஊருக்கு திரும்பி வருகிறார்..ஊரே அவரை வரவேற்கிறது..அவரை ஏளனமும் கேலியும் செய்த அதே கூட்டம் இப்பொழுது அவரை துதிபாடுகிறது....தன்னை அவர் கவனிக்கமாட்டாரா என ஏங்குகிறது..... அவரின் கவனமோ அந்த பழைய ஜமீந்தாரையும் அவரின் சகோதரியையும் பார்த்து தான் ஏற்றுக்கொண்ட சவாலை வெற்றிகொண்டு அவரிடம் மீண்டும் பெண் கேட்டு தன் மனைவியாக்கி கொள்ளவேண்டும் என்று ஒரு வேகத்துடன் வர.....வந்து தான் விரும்பிய அந்த பெண்ணை மணக்க விரும்ப ஆனால் தான் காண்பதோ வேதனையான திருப்புமுனை....அப்பெண் வேறு ஒருவருக்கு மனைவியாகி , ஒரு குழந்தையும் பெற்று , சந்தேகப்படும் தன் கணவனால் தினம் தினம் துன்பப்படுவதை கேள்விப்பட , அவள் படும் துன்பங்களை கண்டு மனம் இரங்கி அவளுடைய நல்வாழ்விற்காக போராடி வெற்றி பெறுகிறார்...மிண்டும் அவள் தன் கணவனுடன் சேர்ந்து வாழ வழி செய்து வைப்பது இக்கதையின் சாரம்.


தாய் தந்தை யார் என்பது கூட தெரியாது சிறு வயதிலிருந்து ஒரு ஆயாவின் அரவணைப்பால் வளர்ந்த ராமன் ( நம் கதாநாயகன் நடிகர் திலகம் ) உலகத்தின் கபடு சூதுவாது தெரியாமல் வளர அவருக்கு நல்லவர் யார் , கெட்டவர் யார் என்பதை கூட அடையாளம் கண்டுபிடிக்கும் சாமர்த்தியம் கிடையாது...அவரின் நண்பர்களோ மிகவும் சிறுவர்கள்... அவரின் செய்கைகள் , அப்பாவித்தனம் எல்லாவற்றையும் ஊரே கேலி செய்யும்....சாப்பாட்டு ராமன் என்ற ஒரு பெயரும் உண்டு...

பூங்குடி க்ராமத்திலுள்ள பெரிய ஜமீந்தார் நம்பியாரின் சகோதரி தான் கதாநாயகி கே.ஆர்.விஜயா....கே.ஆர்.விஜயாவிற்கு சிவாஜியின் அப்பாவித்தனமான பேச்சு மிகவும் பிடித்துபோகிறது... வலிப்பு நோயால் அடிக்கடி பாதிக்கப்படும் ராமன் ஒரு நாள் ஒரு குளத்தங்கரையில் மீண்டும் வலிப்பு வந்து துடிக்க அச்சமயம் கருணை கொண்டு கே.ஆர்.விஜயா அவரை காப்பாற்ற, சிவாஜிக்கு அவரை மிகவும் பிடித்து போகிறது.....உடன் இருக்கும் வாண்டுகளோ விஜயா அவரை விரும்புகிறார் என்று தூண்டிவிட நம் ராமனுக்கு மிகுந்த உற்சாகம் பிறக்கிறது.... தன் வாழ்நாளில் அந்த ஆயாவை தவிர யாரும் அவ்வளவு அன்பு செலுத்தியதில்லையாதலால் அவருக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி...அந்த சந்தோஷத்தை ஒரு பாடலாக வெளிபடுத்துவார் நம் திலகம்... மிகவும் உற்சாகத்துடன் ஒரு பாடல் பாடுவார்....

அது தான் மிகவும் புகழ் பெற்ற பாடலான....... அம்மாடி....பொண்ணுக்கு தங்க மனசு !

உண்மையிலேயே பாடுவது திரு டி.எம்.சவுந்தர ராஜனா அல்லது நடிகர் திலகமா என்று நம்மை வியக்கவைக்கும் ஒரு பொருத்தமான குரல் !!!!

இப்பாடலை நாம் தெம்மாங்கு அல்லது நாட்டுப்புற பாடல் என்று எளிதாக வகைபடுத்தலாம்....மெல்லிசை மன்னர் பயன் படுத்திய கருவிகள் அனைத்தும் ஒரு கிராமத்து இசை தவழும் கருவிகள்...


பாடலை எவ்வளவு அழுத்தம் திருத்தமாக பாடியுள்ளார் டி.எம்.எஸ். !!! பிரமிக்கவைக்கும் குரல்.....அதுவும் துவக்கமே நம்மை அதிரவைக்கும் ......அம்மாடீஈஈஈஈஈ.........................பின் ஒரு கணம் இடைவெளி.....அது ஆயிரம் அர்த்தங்களை தரும் ! பொண்ணுக்கு தங்க மனசு.....என்று பாடியவுடன் பிண்ணனியில் ஒரு கிராமத்து பம்பை அல்லது உடுக்கை இசை ! அதனோடு போட்டி போடுவது போல வியக்கவைக்கும் தபலா அமைப்பு....பாடல் முழுவதும் இந்த இரண்டு கருவிகளுக்குமிடையே பலத்த போட்டி என்றே சொல்லலாம்.... இடையே மெய்சிலிர்க்க வைக்கும் புல்லாங்குழல் ஒலி ! ( சிவாஜியே வாசிப்பார்...இதில் ஒரு அருமையான காட்சியம்மைப்பு என்னவென்றால்.. முதலில் அப்பாவி ராமனாக வரும்போது அவர் புல்லாங்குழலை ஒரு நாயனம் போல வாசிப்பார் நேராக வைத்துகொண்டு விளையாட்டாக...அதே ராமன் படத்தின் பிற்பகுதியில் நடிகர் விஜய் யாக வரும்போது ( சித்திரைமாதம் பவுர்ணமி நேரம் பாடலின்போது ) மிகவும் அழகாக ஒரு நேர்த்தியான , வித்வான் போல மிக அழகாக பக்கவாட்டில் வைத்து இசைப்பார் !!! முற்பகுதியில் ஒரு அசட்டு சாப்பாட்டு ராமனாக மீசையிலாத அரை நிஜாருடன் வரும் நடிகர்திலகம் பிற்பகுதியில் ஒரு மாபெரும் நடிகரானபின் ஒரு பேட்டியளிப்பார்...அப்பொழுது அவர் பேசும் விதத்தை பார்த்தால் , அவரின் நடை உடை பாவனையினை கவனித்தால் ..சே இவரா அவர் என்று குழம்பவைக்கும்..... தான் விளையாட்டாக பாடிய அந்த பாடலின் அதே இடத்தில் மீண்டும் வலம் வருவார். அப்பொழுது அவர் காட்டும் பாவனை, ஸ்டையில்.....என்னால் விளக்க இயலாது !!! நடிகர் திலகத்தை பற்றி எழுத எனக்கு தகுதியில்லை


பாடலின் முண்ணனியிசை ஒரு அருமையான புல்லாங்குழலில் துவங்கும்...ஆனால் ஏனோ படத்தில் அது வருவதில்லை..ஆனால் சென்னை வானொலி நிலயத்தின் நேயர் விருப்பத்தில் இதை நான் எப்போதும் கேட்டதுண்டு..

பல்லவி முடிந்ததும் நம்மை டி.எம்.எஸ். ஒரு தனி உலகத்திற்கே அழைத்துச்சென்றுவிடுவார் !! அந்த காட்சியும் மிக கற்பனையோடு ஒரு தூரத்திற்கு நம்மை ஒரு உயரத்திற்கு கொண்டு செல்லும் !..

பாடலின் மற்றோரு சிறப்பு உச்சஸ்தாயி மற்றும் மத்யமத்தில் மாற்றி மாற்றி அமைந்திருக்கும்...

இரண்டாவது சரணதிற்கு முன் ஒரு அற்புதமான புல்லாங்குழலிசை ....

அடுத்து வரும் வரிகள் இப்படத்தின் கதாநாயகன் எப்பேற்பட்டவர் என்பதை மிக அழகாவும் எளிமையாகவும் ஒரு சராசரி மனிதனும் புரிந்த்து கொள்ளும்படி எழுதியிருப்பார் காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன்....

அடித்தால் அழுவேன் ஒரு நாள்
யாரும் அணைத்தால் சிரிப்பேன் மறு நாள்
எடுப்பார் கைகளில் பிள்ளை
ஒரு பகையோ உறவோ இல்லை


முழு பாடலும் ஒரு வேகத்துடன் அமைந்திருக்கும்....பாடல் முழுவதும் டி.எம்.எஸ். ஒரு தனி உற்சாகத்துடன் பாடியிருப்பார் ......

கிராமத்து இசையில் பாடலை வடிவமைத்த மெல்லிசை மன்னர் இதே பாடலை பின் மெல்லிசை கலந்து கொடுத்திருப்பார்..... அச்சமயம் சாப்பாட்டு ராமன் நடிகர் விஜய் ஆகிவிட்டார் அல்லவா ! அக்கார்டியன், வயலின், பாங்கூஸ் என மாற்றியமைத்து ஆனால் ஒருவித சோகமும், தனிமையையும் இருப்பது போல ஒரு உணர்வினை தந்திருப்பார் .......

இப்பாடலை எப்பொழுது கேட்டாலும் ஒரு உற்சாகம் ஏற்படுகிறது !

ஒரு அருமையான நாட்டுப்புற பாடலை தந்த மெல்லிசை மன்னருக்கு நாம் எப்படி நன்றி செலுத்துவது ?

Watch the song here :


http://www.youtube.com/watch?v=YkE3X-5k-yI

and for the another version of the song :

http://www.youtube.com/watch?v=GL6Zpcs6qC8


LYRICS :

அம்மாடி.........பொண்ணுக்கு தங்க மனசு
பொங்குது சின்ன மனசு
கண்ணுக்கு நூறு வயசு
அவ சொல்லுக்கு நாலு வயசு
சொல்லுக்கு நாலு வயசு

எண்ணையில் எரியும் விளக்கு
அவள் என்னையே அழைக்கும் சிரிப்பு
என்னவோ நடக்குது நடப்பு
இதில் ஏதோ சுகமும் இருக்கு
யாருக்கு இந்த கதை தெரியும்
சாமிக்கு மட்டும் இது புரியும்
பாலுக்குள் மோரு கூட இருக்கும்
நாலுக்கும் காலம் வந்தால் நடக்கும்

அடித்தால் அழுவேன் ஒரு நாள்
யாரும் அணைத்தால் சிரிப்பேன் மறு நாள்
எடுப்பார் கைகளில் பிள்ளை
ஒரு பகையோ உறவோ இல்லை

தோப்புக்கு எந்தமரம் சொந்தம்
காட்டுக்கு எந்த மரம் சொந்தம்
பூமிக்கு காட்டு வெள்ளம் சொந்தம்
பொண்ணுக்கு இந்த உள்ளம் சொந்தம்
Back to top
View user's profile Send private message Send e-mail
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Mon Jul 25, 2011 10:42 pm    Post subject: Reply with quote

I listened to the second song after reading the story first. It made a big difference. The story is brought out beautifully by our master (just as you have done) as much as the lyricist has contributed. Since the song was not heard often over the radio, only the first version is still popular. The flute and tabla are still mesmerising! TMS's voice is divine!!
Thanks,
Sai Saravanan
Back to top
View user's profile Send private message
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Wed Jul 27, 2011 8:12 am    Post subject: Reply with quote

Dear All,
The orchestration of MSV in many songs is so seamlessly intertwined with the melody that while we tend to sing the song we not only sing the melody but also the instrumental piece that got intertwined with that.

Example of the one is the typical Islamic style string instrument in the song 'Allah Allah' in which who ever sings will also give the effect of the string instrument sound.

This is another song in which people sing the folk like string instrument which follows each line.

N Y MURALI
Back to top
View user's profile Send private message Send e-mail
rajeshkumar_v



Joined: 19 Apr 2007
Posts: 79

PostPosted: Sat Aug 13, 2011 2:56 am    Post subject: Reply with quote

beautiful pick Balaji. Wonderful song
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group