"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

IRU MANAM KONDA THIRUMANA VAAZVIL - AVARGAL

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Sat Nov 05, 2011 11:18 am    Post subject: IRU MANAM KONDA THIRUMANA VAAZVIL - AVARGAL Reply with quote

கே.பாலசந்தரும் மெல்லிசை மன்னரும் இணைந்து உருவாக்கிய 1976ல் உருவான அவர்கள் படத்தில் ஒவ்வொரு பாடலும் மிக மிக ப்ரபலமடைந்தவை.

இன்று நான் தேர்ந்தெடுத்த பாடல் :

இரு மனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்.

கதாநாயகி சுஜாதா.... காதலித்தது ஒருவரை ( ரவிகுமார் ). கை பிடித்ததோ இன்னொருவரை ( ரஜினி ). ரஜினி ஒரு சந்தேகப்பேர்வழி. தரம் தாழ்த்தி பேசி பேசியே சுஜாதாவை மனதால் நோகடிக்க ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் சுஜாதா அவரை பிறிந்து வேறு ஒரு இடத்திற்கு சென்று வாழ்கை நடத்த அவரின் அலுவலகத்தில் சக அலுவலாளியான கமல் அவரின்பேரில் இரக்கம் கொண்டு உதவுகிறார். இதற்கிடையே பழைய காதலரான ரவிகுமாரும் மீண்டும் சந்திக்க கை குழந்தையுடன் வாழும் சுஜாதாவிற்கு குழப்பம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் ரஜினி அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு தன்னுடன் மீண்டும் சேர கெஞ்ச , மறுபுறம் பழைய காதலர் இப்போதாவது நாம் இணையலாம் என்று வேண்ட ..இந்த இருவரில் யாரிடம் இணையலாம் என்று சுஜாதா தவிக்கிறார்.
ஆனால் அப்பாவி கமலோ பாவம், தானும் ஆசைபடுகிறார். தனியாக தவிக்கும் ஒரு பெண்ணிற்கு வாழ்வு கொடுப்பதற்காக அவர் நினைக்க ஆனால் தன் மனதை வெளியே சொல்ல முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் திரு கே.பி. ஒரு அருமையான நிழல் பாத்திரத்தை அறிமுகப்படுத்துவார். அது ஒரு பொம்மை. அந்த பொம்மை வேறுயாருமில்லை...கமலின் மனசாட்சியே அடிக்கடி வெளிப்படுத்துகொள்ள ஒரு வடிகால் ! சுஜாதாவிற்கு அந்த பொம்மை செய்யும் சேட்டைகள் பிடித்து போக …அது பாடும் என்று சொல்லி கமல் அதை பாடவைப்பார்.....

இப்பாடல் மூலமாக தன் உள்ளத்தில் இருக்கும் விருப்பத்தை மிக அற்புதமாக வெளிபடுத்துவார்.....

சரி...பல்லவி என்ன தான் சொல்ல வருகிறது ?

இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்


கமல் தன் நிலையை சொல்கிறார்....ஏற்கனவே இருவர் மூலமாக ஒரு குழப்பத்தில் இருக்கும் ஒரு பெண்ணிற்கு நீ ஏன் மூன்றாவதாக வந்து மேலும் முயற்சிக்கிறாய் ??

கவிஞர் கண்ணதாசனும் மெல்லிசை மன்னரும் போட்டி போட்டுகொண்டு உருவாக்கிய பாடலோ என்று தோன்றும் ! எளிமையான வரிகளின் மூலம் எவ்வளவு அழகாக நமக்கு புரிய வைக்கிறார் !

கரையினில் ஆடும் நாணலே நீ
நதியிடம் சொந்தம் தேடுகின்றாய்


இவ்விடத்தில் எம்.ஏஸ்.வி...ஒரு படி முந்துகிறார் ! நாணலே நி .....ஒரு சிரிய இடைவெளி.......கேள்விக்குறிபோல நிலை தோன்றும்..... தான் ஒருவேளை சுஜாதாவிடம் விண்ணப்பம் விடுத்தால் அவர் என்ன நினைப்பாரோ என்ற ஒரு அச்சம் தோன்றிய வரிகள் ... இதற்கு பொம்மை பதில் சொல்லும் ! எம்.எஸ்.வி.யின் ஆஸ்தான சதன் தான் இதை செய்வார் என கேள்விபடுகிறேன்.....ஒரு பொம்மை பேசினால் எப்படி இருக்குமோ அந்த தாக்கத்தினை கொடுப்பார் !

பாடல் முழுவதும் கமல் தான் முயன்றாலும் இது நடக்காத ஒரு தோல்வி தான் என்ற ஒரு விரக்தியை வெளிபடுத்துவார் ...
வரிக்கு வரி எம்.எஸ்.வி.யின் முத்தான இசையமைப்பு......

இளகிய பெண்மை........ இங்கு எஸ்.பி.பி.... மனதை இளக வைப்பார் ...நமக்கே ஒரு பச்சாதாபம் ஏற்படும்...

ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்

இதில் ஒரு ஏக்கம் !

கரையினில் ஆடும் நாணலே நீஇதில் விரக்தி....

ஆனால் பாடல் முழுவதும் அந்த பொம்மை மிக உற்சாகமாக பாடும் ! ...ஏன் என்றால் கமலே இரு மனம் கொண்டவர் தானே !!

கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா
இங்கு கவிஞர் விளையாடுகிறார் !!

சுஜாதா இன்னொருவருக்கு ஏற்கனவே சொந்தமானவர் என்பதை இதைவிட எளிமையாக சொல்லமுடியாது

உதயத்தை காண மேற்கு நோக்கி
ஒவ்வொரு நாளும் ஏங்குகின்றாய்


மீண்டும் மெல்லிசை மன்னர் !....படிபடியாக உச்சஸ்தாயி சென்று மீண்டும் பல்லவிக்கு மந்தரஸ்தாயியில் திரும்புவது தான் அவரின் சிறப்பே !

இப்படத்தின் எல்லா பாடல்களும் மிக ப்ரபலமானாலும் இப்பாடல் மேடைகளில் அதிகம் பாடப்பட்டது.....

பாலசந்தர்-எம்.எஸ்.வி- கண்ணதாசன் அணியின் மற்றுமொரு மறக்கமுடியாத பாடல்

FULL LYRICS :


Junior...Junior...Junior
Yes boss
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்
கரையினில் ஆடும் நாணலே நீ
கரையினில் ஆடும் நாணலே நீ
நதியிடம் சொந்தம் தேடுகின்றாய்

சிற்பம் ஒன்று சிரிக்க கண்டு
ரப்பர் பொம்மை ஏக்கம் கொண்டு
காதல் கீதல் செய்யக் கூடாதோ
சின்னப்பையன் வயசும் கொஞ்சம்
பொம்மைக்கென்ன மனசா பஞ்சம்
ஒட்டிப்பார்த்தால் ஒன்றாய் சேராதோ

Junior...Junior...Junior
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்

கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா
If it is அபூர்வ ராகம்?
கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா
வயலுக்கு தேவை மேகம் என்பாய்
அவளது தேவை அறிவாயோ
வயலுக்கு தேவை மேகம் என்பாய்
அவளது தேவை அறிவாயோ

பாட்டைக்கண்டு ராகம் போட்டேன்
நீரைக்கண்டு தாகம் கொண்டேன்
பாவம் கீவம் பார்க்கக்கூடாது
No...it's bad
But I am mad
பாவப்பட்ட ஜென்மம் ஒன்று
உமைக்கேள்வி கேட்கும் போது
ஆசை மோசம் செய்யக்கூடாது
Junior
Junior...Junior...Junior
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்

சித்திரை மாதம் மழையைத்தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத்தேடி ஓடுகின்றாய்
Boss, Love has no season or even reason
Shut up
சித்திரை மாதம் மழையைத்தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத்தேடி ஓடுகின்றாய்
உதயத்தை காண மேற்கு நோக்கி
ஒவ்வொரு நாளும் ஏங்குகின்றாய்
உதயத்தை காண மேற்கு நோக்கி
ஒவ்வொரு நாளும் ஏங்குகின்றாய்

அடங்கியவனுக்கு ஐப்பசி மாசம்
ஏமாந்தாலோ ஏப்ரல் மாசம்
அடியேன் முடிவை சொல்லக்கூடாதோ
It's highly idiotic
No boss, only romantic
கொஞ்சும் பொம்மை பாடுது பாட்டு
குழம்பிய நெஞ்சம் சிரிக்குது கேட்டு
முடிவை சொல்லி சிரிக்கக்கூடாதோ
முடிவை சொல்லி சிரிக்கக்கூடாதோ

இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்
Back to top
View user's profile Send private message Send e-mail
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Sat Nov 05, 2011 6:06 pm    Post subject: Reply with quote

Dear Balaji,
Yet another excellent posting from you in your inimitable style. The way MSV stuffs each word with the emotion associated with it is amazing, whether it is the pining 'engugiraay' or the humorous 'but i am mad.'

In 'maharaja oru maharaani' of 'iru malargal' also, ventriloquism has been used, again with Sadan's voice ('kutti raani kap chip') but it had only limited scope for both the geniuses. But when they got a powerful situation in 'Avargal,' the duo have shown to the world what they are capable of. This is one of those few songs where the lyrics, music, the singer's voice modulations, acting and picturization all excel in their own ways.

If ARR would compose a song like this today, people would clamor for recommending him to another Oscar. But here go our unsung geniuses.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Sat Nov 05, 2011 11:56 pm    Post subject: Reply with quote

Dear Mr.Balaji,
A brilliant blend of poetry, harmony and emotions from a marvellous combination of Kannadasan and MM. And you have touched those vital instances so delicately which have enhanced the situation, so carefully and naturally created by our MM! Very beautiful analysis sir!
Thanks,
Sai Saravanan
Back to top
View user's profile Send private message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Tue Nov 08, 2011 1:54 pm    Post subject: Reply with quote

அன்பான பாலாஜி, "இருமனம் கொண்ட" பாடல் பற்றிய தங்கள் எழுத்து மிக அருமை ! கவியரசரும் மெல்லிசைமன்னரும் பாலசந்தரின் கதைப்பில், இப்பாடலை உருவாக்கியிருக்கும் அழகை மிக அருமையாக தாங்கள் விவரித்திருப்பது அருமையிலும் அருமை !! அந்த நாளும் வந்திடாதோ - இப்பேர்ப்பட்ட பாடல்களும் கிடைத்திடாதோ என்ற ஏக்கத்துடன், ராம்கி.
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Wed Nov 09, 2011 7:10 pm    Post subject: Reply with quote

Dear Mr. Balaji,
The way you have given the intro for the situation of the song would be some thing similar to what KB would have briefed the MD and the lyricist.

The song has some very special features in terms of composing values. The tune which Kamal sings and the tune which the toy sings are distinctly different making us feel that the two emotions are very different.

I do not know how to express the technical details but I am trying to put in simple terms. The melody which Kamal sings has Nishadham 2 whereas the melody which the toy sings would have the Nishadham 1.

Line by line MSV has played with the melody to express the emotions.

A great song.

N Y MURALI
Back to top
View user's profile Send private message Send e-mail
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Sun Jun 10, 2012 4:48 am    Post subject: Reply with quote

மிகவும் அருமையான பாடலை தேர்ந்தெடுத்து அழகாக இருக்கிறீர்கள் பாலாஜி. நான் மிக மிக ரசிக்கும், அடிக்கடி கேட்கும் பாடல் இது. இந்த படத்தில் வரும் எல்லா பாடல்களையும் எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன், இன்னமும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
வரிக்கு வரி கதையோடு ஒன்றிய பாடல். பாலசந்தர் படத்தில் இடம்பெறும் பெரும்பாலான பாடல்கள், நம் மெல்லிசை மன்னர் இசையில், இது போல அற்புதமான, காவியம் படைக்கும் பாடல்கள்தான்.

மிகவும் நன்றி!
Back to top
View user's profile Send private message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Sun Jun 10, 2012 7:27 am    Post subject: lyrics Reply with quote

Dear Friends,
'Iru manam konda' is a unique piece- the likes of which can comfortably be bracketed 'never before and never again' kind of masterpiece showcasing KD /MSV as the 2 minds trying to completely surrender to each other.
The phrase 'irumanam konda' has many meanings that independently mean different things to different persons in the story; it connotes different domains in friendship if very critically understood.
Kamal's on screen character has 2 minds [that way it is 'irumanam']

Sujattha's ,, ,, ,,, ,, ,, has 2 minds [another 'irumanam'] with an

uncharitable husband and the flutist friend [as another 'irumanams']

Kamal the ventriloquist expresses his desire through the puppet
[ the puppet has 1 'manam' while the handler has his own manam thus another 'irumanam']

There have been functional 'irumanams' for KD and MSV trying to outwit each other without suppressing the delivery of the intricate mood.

KD's reference to 'looking for impossible' in a wrong season is a suggestion that a married women cannot reopen this bondage however tempting the new offer could be.
Expressions in English 'it is bad' but 'I am mad' reflect the human conflict of mind though fully aware of each other's background [that is the central 'irumanam' to the story itself.

In fact the predicament of 'irumanam' is rendered pitiable through the next phrase 'idaiyinil nee yEn mayangukirAi'

The 5 letter word 'idaiyinil' summarises the whole story.That is Kannadasan- undoubtedly a monarch in situational expressions.

MSV has outshone the lyric by using puppet voice interjects, staccato laughter pieces and a cohesive orchestration permitting slots for the lady character that has no specific domain in the lyric itself.
SPB's absolute participation has added substantial value while Sadan holds the pivot of the song. Absolute teamwork under the judicious leader MS Viswanathan. Thanks for the opportunity

Warm regards K.Raman Madurai.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Sat Jun 23, 2012 9:11 am    Post subject: Reply with quote

Meenakshi Madam,

I am a fan of your lyrics section posts... pls write more whenever time permits..


Dear All,

I normally post my writings in Pick a song and analyse section.... somehow I thought that this one should appear in LYRICS section....the brilliant Kavignar really is a God sent messenger !

Right from the first word IRU MANAM itself, Kavignar has grasped the expectation of KB immediately and had given a marvel !!! great souls they are !
Back to top
View user's profile Send private message Send e-mail
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Thu Jul 12, 2012 7:29 am    Post subject: Reply with quote

மிகவும் நன்றி பாலாஜி நான் எழுதுவதையும் ரசிப்பதற்கு. :) இது போன்ற வரிகள்தான் மனதிற்கு புத்துணர்ச்சி.

சில மாதங்களாகவே எனக்கான நேரமே கிடைக்கவில்லை. மெல்லிசை மன்னரின் பாடலை கேட்காத நாட்களே கிடையாது. எத்தனை வேலைகள் இருந்தாலும் பின்னணியில் அவர் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். பாடலை பற்றி எழுததான் நேரம் கிடைப்பது அரிதாகி விட்டது. இனிமேலாவது அடிக்கடி எழுதி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். உயிர் மூச்சாக நினைக்கும் பாடல்களை பற்றி எழுதுவது மிகுந்த மன நிறைவை தருகிறது. அதற்காகவே எழுத வேண்டும்.
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group