"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Paavalan paadiya pudhumai pennai - Mohammed Bin Tuglaq

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Wed May 04, 2011 9:11 pm    Post subject: Paavalan paadiya pudhumai pennai - Mohammed Bin Tuglaq Reply with quote

மெல்லிசை மன்னரின் நண்பரும் மிகசிறந்த அரசியல் விமர்சகருமான திரு சோ ராமசாமி முதலில் நாடகமாகவும் பின்னர் திரைபடமாகவும் எடுத்த வெற்றி சித்திரம் முகமது பின் துக்ளக்.. 1971 இல் வெளிவந்தது….

இப்படத்தின் பெயரை கேட்டவுடன் பெரும்பாலோருக்கு நினைவு வருவது….அல்லா அல்லா என்ற பாடல்… பட்டி தொட்டி எல்லம் புகழ் பெற்றது…இன்றும் இஸ்லாமிய புனித தினங்களில் இப்பாடலானது கேட்கபடுவது….எம்.எஸ்.வி. யே பாடியது…அதற்குபின் ஒரு சுவையான சம்பவம் உன்டு…ஆனால் அதை பற்றி நாம் வேறு ஒரு தருணத்தில் அலசுவோம்…

இதே திரைபடத்தில் மற்றுமொரு அற்புதமான பாடல் ஒன்றும் வரும்….ஆனால் அது அல்லா அல்லா பாடலின் மாபெரும் வெற்றியால் காலத்தால் அழிந்துவிட்டது….

நான் அந்த பாடலை ஒரு ஆராய்ச்சிக்காக தேர்ந்தெடுத்துள்ளேன் இன்று.

ஒரு சுதந்திர போராட்ட தியாகி தன் சீடர்களுடன் சேர்ந்து இந்த நாட்டு மக்கள் எந்த அளவுக்கு அறியாமையில் வாழ்கிறார்கள் என்றும் எவ்வளவு முட்டாள்கள் என்றும் ……எளிதாக நம்பிவிடுவார்கள் என்று உணர்த்துவதற்காக ஒரு செயலை செய்வார்கள்... டில்லியை ஆண்ட முகமது பின் துக்ளக் உண்மையில் இறக்கவில்லை என்ற ஒரு மாயையை உண்டாக்கி அவரை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக்கி பின்னர் ப்ரதம மந்திரியாகவும் ஆகிவிடுகிறார்.அவர் நடத்தும் ஆட்சி கேலிகூத்தாகிறது...ஒரு துணை ப்ரதம மந்திரியை அமர்த்துகிறார்.(மனோரமா...அந்த தியாகியின் பெண் )...பதவி ஆசை யாரைத்தான் விட்டது..அவருக்கு அப்பதவி மிகவும் பிடித்துபோக அவர் அதை நன்றாக அனுபவிக்கிறார்...ஊழல்கள் செய்கிறார்...அதிகாரத்தை செலுத்துகிறார்….அவர் பிறந்த நாளை மிக விமர்சையாக கொண்டாட வேண்டும் என்று சொல்கிறார்...அச்சமயத்தில் தான் இந்த பாடல் வரும்...


பாவலன் பாடிய புதுமை பெண்ணை பூமியில் கண்டது இன்று
இந்த தாரணி போற்றும் தாய் குலம் தந்த ஆயிரம் செல்வத்தில் ஒன்று.
ஆயிரம் செல்வத்தில் ஒன்று.

HAPPY BIRTHDAY TO YOU
HAPPY BIRTHDAY TO YOU
HAPPY BIRTHDAY TO YOU

Charanam 1 :
நீ இருக்குமிடம் குடியிருக்கும்...குடி இருக்கும்... குடியிருக்கும்
அன்பு குடியிருக்கும்
உன் நிழலிருக்குமிடம் ஒளி இருக்கும்...என்றும் ஒளி இருக்கும்... நல்ல ஓளி இருக்கும்

Charanam 2 :
நாகரீகம் தனை மனம் வெறுக்கும்...உந்தன் மனம் வெறுக்கும்..

உண்ணும் உணவில் கூட செந்தமிழ் மணக்கும்…..இன்பதமிழ் மணக்கும்..

பொன்மாலை பரிசுகள் தேவையில்லை என நாளும் கூறும் குணமிருக்கும்...

நல்ல குணமிருக்கும்

Charanam 3 :
ஏழை வாழ்வு தர துடி துடிக்கும்... துடி துடிக்கும்...நெஞ்ஜம் துடி துடிக்கும்..

உந்தன் ஆடை கூட அதை எதிரொலிக்கும்...இங்கு எதிரொலிக்கும்...எங்கும் எதிரொலிக்கும்

Charanam 4 :
கோட்டை மீது உந்தன் கொடி பறக்க...தனி கொடி பறக்க..

இந்த நாட்டை ஆளவந்த குலவிளக்கே.....பெண் குலவிளக்கே

தன் வீடு போலவே நாடு யாவையும் நாளும் காணும் தமிழணங்கே..

எங்கள் தழிழணங்கே...



பாடலின் சிறப்பே இது மோகனகல்யாணி அல்லது கல்யாணியின் சாயலின் அமைந்தது தான் !

பல்லவி :
பாவலன் பாடிய புதுமை பெண்ணை பூமியில் கண்டது இன்று

G..GP…PRRG..GSSR…SPD DDDDDD PD G

இந்த தாரணி போற்றும் தாய் குலம் தந்த ஆயிரம் செல்வத்தில் ஒன்று.

GP NNN NS NDDDPPP GRG GDPP GRS RR

ஆயிரம் செல்வத்தில் ஒன்று.

GPD RSDSS

பல்லவியின் ஆரம்பத்தில் எல்லாம் மோகனத்தின் சாயல் தான்... அதாவது G3 R2 D2 இவை எல்லாம் மோகன ராகத்தின் ஆரோகண சுருதிகள்...

ஆனால் உடனே நம்மை எம்.எஸ்.வி. திடீரென்று ஒரு நிஷாதத்தினை தொட்டு வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து சென்று விடுவார் !

அதாவது.....இந்த தாரணி போற்றும்...இவ்விடத்தில் தான் N3 நிஷாதம் வரும் ஒரு ஆச்சரியமாக ! நிஷாதம் மோகனத்தை சேர்ந்தது அல்லவே ! ஒரு வேளை கல்யாணியோ ? என்று நம்மை குழப்ப வைப்பார்


HAPPY BIRTHDAY TO YOU
HAPPY BIRTHDAY TO YOU
HAPPY BIRTHDAY TO YOU


சரி சரணத்திலாவது கல்யாணியின் பாதையில் போவார் என்று நம் முடிவு செய்வதற்குள் மற்றுமொறு ஆச்சரியம்!!


சரணம் :
நீ இருக்குமிடம் குடியிருக்கும்...குடி இருக்கும்... குடியிருக்கும்..

DDDDDD… PD.. PGD…. இங்கு சற்று சுருதி இறங்கி வரும்...இது மோகனமோ அல்லது கல்யாணியோ அல்ல !! அதாவது..குடி இருக்கும் என்பதை மது குடிப்பவர் என்பதை உணர்த்துவதற்காக ஒரு சுருதி குறைந்து வரும்!! அற்புதமான தருணம் இது ! வார்தைகளால் வர்ணிக்க இயலாது..

அன்பு குடியிருக்கும்

DP DS DS P

உன் நிழலிருக்குமிடம் ஒளி இருக்கும்...என்றும் ஒளி இருக்கும்... நல்ல ஓளி இருக்கும்

DSSSS NSNDNN DNDPD… இவையெல்லாம் கல்யாணியின் சாயல் ..ஆனால் நம்மால் ஒரு முடிவுக்கு வர இயலாது. ஏன் என்றால் இன்னும் நாம் மத்யமத்தை தொடவில்லையே !


சரணம் : 2 :

நாகரீகம் தனை மனம் வெறுக்கும்...உந்தன் மனம் வெறுக்கும்..

உண்ணும் உணவில் கூட செந்தமிழ் மணக்கும்…..இன்பதமிழ் மணக்கும்..

பொன்மாலை பரிசுகள் தேவையில்லை என நாளும் கூறும் குணமிருக்கும்...

நல்ல குணமிருக்கும்...


இரண்டாவது சரணத்திலும் பெரும்பாலும் GPDS வரும்…

முடிவில்… “ பொன்மாலை பரிசுகள் தேவையில்லை என நாளும் கூறும் குணமிருக்கும்...”

GP NNNN SDDD PP MM GP GR D நாளும் கூறும் குணமிருக்கும் கூறும்.. என்று வரும்போது ஒரு வழியாக மத்யமத்திற்கு வருவார் !

இதை வைத்து பார்த்தால் மோகன கல்யாணியோ என்று தோன்றும்... ஆரோகணத்தில் மோகனமும்..அவரோகணத்தில் கல்யாணியும் கொண்டது தானே மோகனகல்யாணி…..


சரணம் : 3 :

ஏழை வாழ்வு தர துடி துடிக்கும்... துடி துடிக்கும்...நெஞ்ஜம் துடி துடிக்கும்..

உந்தன் ஆடை கூட அதை எதிரொலிக்கும்...இங்கு எதிரொலிக்கும்...எங்கும் எதிரொலிக்கும்..


இதில் பெரும்பாலும் GPDS தான்…. ஆனால் துடி துடிக்கும் என்ற சொல் வரும்போது முன்னர் குடி இருக்கும் வரும்போது எப்படி சற்று சுருதி இறங்கி வருமோ அது போல மீண்டும் !


சரணம் : 4

கோட்டை மீது உந்தன் கொடி பறக்க...தனி கொடி பறக்க..

இந்த நாட்டை ஆளவந்த குலவிளக்கே.....பெண் குலவிளக்கே

தன் வீடு போலவே நாடு யாவையும் நாளும் காணும் தமிழணங்கே..

எங்கள் தழிழணங்கே...

இதில் 2வது சரணத்தை போன்று அமைந்தது....கடைசியில் காணும் என்ற இடத்தில் மீண்டும் மத்யமம் !

இப்பொழுது சொல்லுங்கள்....மத்யமம்.M2 N3 சுருதிகள் கல்யாணியின் அடையாளமாகும்...


சிங்கக்குரலோன் திரு டி.எம்.எஸ்.. கம்பீரமாக பாடி பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார்...

கதைப்படி பார்த்தால் ஒரு நகைச்சுவை கலந்த ஆனால் ஒரு அரசியல்வாதியின் குணங்களை பற்றி கிண்டல் செய்யும் பாடல் இது... ஆனால் நம் எம்.எஸ்.வியோ ஒரு அற்புதமான மோகன கல்யாணி சாயல் கொண்ட மெட்டு அமைத்து அற்புதமான வடிவத்தினை கொடுத்திருப்பார் !

இவையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் நமக்கு ஒரே ஒரு முடிவுக்கு தான் வருவோம்...

மெல்லிசை மன்னர் ஒரு புரியாத புதிர்....

அவரிடம் கேட்டு பாருங்கள் இந்த பாடலை பற்றி....நானா மெட்டமைத்தது என்பார் !!!

Here is the video link :

http://www.youtube.com/watch?v=x3hB8IPiPyE
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Wed Nov 07, 2012 12:06 pm    Post subject: Reply with quote

Dear Mr. Balaji,
Thanks for the link. But for the link I would have never read this post unless accidentally finding it. A great write up indeed.

As you have rightly said very difficult to say as mohana kalayani but yet it has all the ingredients of mahana kalayani.

In vadivelu language it is mohana kalyani but it is not mohana kalayani.

May be we can name it as madhu mohana kalayani.

N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group