"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Raadha kaadhal varaadha - Naan avanillai

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Thu Nov 08, 2012 8:44 am    Post subject: Lyrics - Raadha kaadhal varaadha - Naan avanillai Reply with quote

படம்: நான் அவனில்லை
பாடியவர்: எஸ்.பீ.பாலசுப்ரமணியன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர்


ஹரே நந்தா ஹரே நந்தா ஹரே நந்தா ஹரே ஹரே
ஹரே நந்தா ஹரே நந்தா ஹரே நந்தா ஹரே ஹரே
கோகுல பாலா கோமகள் ராதா
ஆயர்கள் பாலா ஆனந்த ராதா
கோகுல பாலா கோமகள் ராதா
கோகுல பாலா கோகுல பாலா கோகுல பாலா

ஹே ராதா ஆஆஆஆஆஆ.......
ராதா ஆஆஆஆஆஆஆஆ ...ஹே ராதா
ராதா காதல் வராதா, ராதா காதல் வராதா
நவநீதன் கீதம் போதை தராதா
ராஜலீலை தொடராதா
ராதா காதல் வராதா
ராதா காதல் வராதா

செம்மாந்த மலர் சூடும் பொன்னார்ந்த குழலாளை
தாலாட்டும் புல்லாங்குழல்
செந்தூர நதி ஓடும் செவ்வாயின் இதழோரம் கண்ணா உன் காதல் கடல்
இடையணி இருக்க உடை மட்டும் நழுவும்
சுகம் என்ன சொல்லடி ராதா, ராதா சுகம் என்ன சொல்லடி ராதா
ராதா காதல் வராதா, ராதா ராதா காதல் வராதா

(கோகுல பாலா)

மந்தார மழை மேகம் நின்றாடும் விழிவண்டு
கொண்டாடும் இசை என்னடி
தாளாத இடை மீது தள்ளாடும் மணி சங்கு ஆடாதோ உன் கை வழி
மார்கழி ஓடை போலொரு வாடை
என்னிடம் ஏனடி ராதா, ராதா என்னிடம் ஏனடி ராதா

நவநீதன் கீதம் போதை தராதா, ராஜலீலை தொடராத
ராதா காதல் வராதா, ராதா ராதா காதல் வராதா

(கோகுல பாலா)



1974 -இல் வெளிவந்த 'நான் அவனில்லை' படத்தில் வரும் பாடல் இது. எஸ்.பீ.பீ. பாடிய பாடல்களில் எனக்கு மிக மிக பிடித்த பாடல் வரிசையில் இடம் பெரும் பாடல் இது.

கண்ணதாசன், மெல்லிசை மன்னர், எஸ்.பீ.பீ. இந்த மூவரின் கூட்டணியின் அட்டகசாமான பாடல்களில் இதுவும் ஒன்று.
சிதார், தபலா, ஷெனாய், புல்லாங்குழல், வயலின் எல்லாம் சேர்ந்து ஒரு கலக்கு கலக்கி நம்மை போதையில் ஆழ்த்தி விடும் இசை அமைப்பு.

முதல் சரணத்தில் முதல் வரியில் 'தாலாட்டும் புல்லாங்குழல்' என்று முடியும் பொழுது வரும் அந்த புல்லாங்குழல் நம்மை தாலாட்டவே செய்யும். அடுத்து இரண்டாவது சரணம் தொடங்கும் முன் வரும் இசையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அருவியென ஓடிவரும் வயலின் இசை தபலாவுடன் வந்து நம் மேல் பொழியும். அதை தொடர்ந்து வரும் அந்த ஷெனாய் இசையில் நான் எத்தனை முறை லயித்து இருப்பேன் என்று சொல்லவே முடியாது. என்னுடைய டேப் ரெகார்டரில் இந்த இடம் தேய்ந்து போகாத குறைதான். அவ்வளவு அழகு அந்த ஷெனாய் இசை. பல நேரங்களில் இந்த ஷெனாய் இசையை திரும்ப திரும்ப கேட்பதற்காகவே சீ.டீ யில் இந்த பாடலை கேட்பதை தவிர்ப்பேன். 'கோகுல பாலா' என்று கோரஸ் பாடும் இடங்களில் வரும் ட்ரம்ஸ் கலக்கல்.
அந்த நவநீத கிருஷ்ணன் குழலிசை போதை தருமோ என்னவோ தெரியாது, நம் மெல்லிசை மன்னரின் இசையில் அமைந்த இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் போதை தரும்.

கண்ணதாசன் அவர்கள் ரசித்து எழுதி இருக்கும் பாடல் வரிகளின் ஒவ்வொரு வார்த்தையையும் அனுபவித்து பாடி இருக்கிறார் எஸ்.பீ.பீ. அவர் கொஞ்சி கொஞ்சி பாடிய பாடல் இது என்றே சொல்லலாம்.
என்னை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் இது. நீங்களும் ஒரு முறை கேளுங்கள்.

http://www.youtube.com/watch?v=Vs8pipAGFKY
Back to top
View user's profile Send private message
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Thu Nov 08, 2012 10:50 am    Post subject: Reply with quote

மீனாக்ஷி அவர்களே,

மிக அழகான பாடலின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. 'நவ நீ தன் கீதை போதை தராத என்ற இடத்தில இசை 1/2 ஸ்ருதி குறைந்து வருவதை உணர முடியும். போதை என்றால் ஸ்ருதி குறையும் தானே !!!


அன்புடன்,

N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Nov 09, 2012 7:50 am    Post subject: Reply with quote

நன்றி முரளி. அருமையா சொல்லிடீங்க. :))
Back to top
View user's profile Send private message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Fri Nov 09, 2012 9:36 am    Post subject: Reply with quote

Thanks for writing this super hit song Meenakshi Madam.

It was a craze in Chennai when the movie was released along with the other beauty Mandhaara malare.

My preliminary assessment says its a shade Sankarabaranam for pallavi.

That Bodhai tharaadha is MSV's speciality. He had done this for many such numbers like Javaadhu medaiyittu , Naan uyara uyara pogiren etc

A young SPB was the emerging singer then.

Thanks
Back to top
View user's profile Send private message Send e-mail
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Fri Nov 09, 2012 4:42 pm    Post subject: Reply with quote

Thanks Madam, for recalling this lovely song.

Regards,
Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group