"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Sendhoor murugan kovilile

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Fri Nov 09, 2012 7:12 pm    Post subject: Sendhoor murugan kovilile Reply with quote

செந்தூர் முருகன் கோவிலிலே பாடல் பற்றி ஒரு அலசல்.

சில நாட்களாக இந்த பாடல் மனதை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது . என்னதான் இதில் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று KEYBOARD எடுத்து வாசித்தேன் . சில அபூர்வ விஷயங்கள் வெளிப்பட்டன.

முதலில் இந்த பாடல் என்ன ராகத்தில் அமைந்தது என்று பார்த்தோமானால் இதில் சிவரஞ்சனி ரகசாயல் இருப்பது போல் தோன்றும். சிவரஞ்சனி ராகத்தின் ஆரோஹனம் அவரோஹனம்
ச ரி2 க1 ப த2 ச
ச த2 ப க1 ரி2 ச
ஆனால் இந்த பாடலில் அந்தர காந்தாரமும் (க2) கேட்கிறது.
எனவே இதை மிஸ்ர சிவரஞ்சனி என்றும் சொல்லலாம்.
ஆனாலும் இந்த பாடலில் சுத்த மத்யமம் (ம1 ) பிரதானமாக ஒலிப்பதினால் இதை மிஸ்ர சிவரஞ்சனி என்றும் சொல்ல முடியாது.
மேலும் முக்கியமாக ஒரு ராகம் என்பது கீழ் சட்சமம் முதல் மேல் சட்சமம் வரை ஒரு range ஆகா கையாளப்படுவது. ஆனால் இந்த பாடலின் சாகித்யதிற்கு(அதாவது வார்த்தைகளுக்கு) , மத்ய ஸ்தாயி மேல் தைவதம் வரை தான் செல்கிறது. நிஷாதமும், மேல் சட்சமம் ஒலிக்கவே இல்லை. ஒரு விதி விலக்காக பாடலின் முன்னிசையிலும், மூன்றாவது சரணம் முன் வரும் இடை இசையிலும் மேல் சட்சமம் மற்றும் கைசகி நிஷாதம் வருகிறது. அதை வைத்து இந்த பாடலை கரஹரப்ரியா என்றும் சொல்லமுடியாது. ஏனெனில் அந்த ராகசாயல் இல்லாததோடு அந்தர காந்தரமும் இதில் கலப்பதினால் இதை கரஹரப்ரியா என்றும் சொல்லமுடியாது.

முடிவாக இந்த பாடல் அமைந்த விதம்,
கீழ்ஸ்தாயி(lower octave) தைவதம் (த2) முதல் மதயஸ்தாயி (normal octave) தைவதம் (த2) வரை. அதிலும் நிஷாதம் கிடையாது. மற்றும் அந்தர காந்தாரம் (க2) கலப்பு.
அதாவது சட்ஜம் முதல் சட்ஜம் வரை என்பதிற்கு பதிலாக சட்ஜம் முதல் தைவதம் வரை என்று கொள்ளல்லாம்.
சில ராகங்களில் மேல் ஸ்தாயி சட்ஜம் இல்லாமல் வருவதுண்டு என்று கூறுவார்கள். அம்மாதிரி ஒரு ராகமா?

இதற்கு யார் பதில் கூற முடியும்?

மேலும் இந்த பாடல், காட்சிக்கேற்ற வகையில் இசை அமைக்கப்பட்டதும் புதுமை. பல்லவி, அடுத்து முதல் இரண்டு சரணம் வரையில் கண்ணிழந்த நாயகி தன தோழியின் உதவியுடன் நாயகனுக்கு மடல் வரைகிறாள். மூன்றாவது சரணத்திற்கு முன்னிசையில் அந்த மடல் நாயகனை வந்தடைகிறது.
அதற்கு அவன் பதில் கூறுவது போல வித்யாசமான காட்சிக்கு ஏற்ப இசை அமைத்து உள்ளார்கள்.
இந்த பாடலை கேட்கவும்.

http://youtu.be/03j5HV7lcLg



N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group