"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

"PAADAL PIRANDHA KADHAIGAL" by Saradha
Goto page 1, 2, 3, 4  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Thu Feb 22, 2007 6:45 pm    Post subject: "PAADAL PIRANDHA KADHAIGAL" by Saradha Reply with quote

மெல்லிசை மன்னரின் அன்பான ரசிக நெஞ்சங்களே....

நமது மெல்லிசை மன்னரின் கைவண்னத்தில் உருவான அத்தனை பாடல்களும், தித்திக்கும் என்பது மட்டுமல்ல. அவை உருவானதறகு ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு சுவையான பிண்ணனி உண்டு. அவற்றில் நமக்குத் தெரிந்த சிலவற்றை நமக்குள் பகிர்ந்து மகிழவே இந்த புதிய த்ரெட் திறக்கப்பட்டுள்ளது. அவரது பாடல்கள் உருவான விதம் மற்றும் அப்போது நடந்த சுவையான நிகழ்ச்சிகள் உரையாடல்கள் போன்றவைகளை இங்கே பதிக்கலாம். அது பற்றிய கருத்துக்களையும் இங்கே தெரிவிக்கலாம்.

(அவரது பாடல்களின் பட்டியல், அவற்றின் இசைச்சிறப்பு போன்ற விஷயங்களைப் பேச வேறு பல த்ரெட்கள் இருப்பதால் அவற்றையும் இங்கே கலக்க வேண்டாம். பாடல் உருவான சுவையான நிகழ்ச்சிகளை மட்டும் இங்கே பதியுங்கள்... ப்ளீஸ்.

பாடல் பிறந்த கதைகள் (1)

"விஸ்வநாதன் வேலை வேணும்"
(காதலிக்க நேரமில்லை)


காதலிக்க நேரமில்லை பாடல் கம்போஸிங்குக்காக சித்ராலயா அலுவலகத்தில் எம்.எஸ்.வி.தன்னுடைய ஆர்மோனியத்துடன் அமர்ந்திருந்தார். (அப்போதெல்லாம் புரொடக்ஷன் அலுவலகத்தில் வைத்து ட்யூன் போட்டு, பின்னர் ரிக்கார்டிங் தியேட்டரில் பதிவு செய்வது வழக்கம்). கவிஞ்ர் கண்ணதாசனும் வந்துவிட்டார்.

எம்.எஸ்.வி.அவர்களுக்கு இசையை விட்டால் வேறு எதுவும் தெரியாது. யார் எந்த நாட்டில் ஜனாதிபதி என்பதெல்லாம் கூட தெரியாது. அப்போது செய்தித்தாளில் ஐசனோவர் பற்றி யாரோ படிக்க இவர் உடனே "ஐசனோவர் யாருண்ணே?" என்று கேட்டார். அப்போது கண்ணதாசன் "அடே மண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்யா" என்றார்.

அப்போது அங்கு வந்த ஸ்ரீதர், "அடே, ரெண்டு பேரும் வந்துட்டீங்களா?. சரி, சிச்சுவேஷன் என்னன்னா தன்னை வேலையிலிருந்து நீக்கிய எஸ்டேட் ஓனரை எதிர்த்து ரவிச்சந்திரன் போராட்டம் நடத்துறார். இந்த சிச்சுவேஷனுக்கு பாட்டுப்போடுங்க" என்று சொல்லி விட்டு உள்ளறயில் சி.வி.ராஜேந்திரனோடும், கோபுவோடும் கதை டிஸ்கஷன்னுக்குப் போய் விட்டார்.

சற்று முன்னர் யாரோ சொன்ன ஐசனோவர் என்ற பெயரை மட்டும் நினைவில் வைத்திருந்த எம்.எஸ்.வி. "ஐசனோவர்...ஆவலோவா..." என்று வாய்க்கு வந்தபடி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். உள்ளறையிலிருந்து எட்டிப்பார்த்த ஸ்ரீதர் "அண்ணே இப்போ நீங்க கத்தினீங்களே அதுதான் ட்யூன்" என்றார். இவருக்கோ ஆச்சரியம். இதில் என்ன ட்யூனைக்கண்டு விட்டார் ஸ்ரீதர் என்று.

கவிஞர் கண்னதாசன் பாடலை சொல்லாமல், வெட்டிப்பேச்சில் நேரம் கழித்துக்கொண்டிருந்தார். அப்போது எம்.எஸ்.வி. அவர்கள் "அண்ணே சீக்கிறம் பாட்டைச் சொல்லுங்கண்ணே. இதை முடிச்சிட்டு ஆலங்குடி சோமு கூட வேறு இடத்தில் பாடல் பதிவு இருக்கு எனக்கு" என்றார்.

அதற்கு கண்ணதாசன் "இதோ பாருடா விசு. ஒரு வாரமா பெங்களூர்ல தங்கி கையில இருந்த காசையியெல்லாம் செலவழிச்சிட்டேன். இப்போ செலவுக்கே காசில்லை. இன்னைக்கு ஸ்ரீதருக்கு ரெண்டு மூணு பாட்டு எழுதினேன்னா அவர் ஒரு தொகை கொடுப்பாரு. இந்த நேரத்தில என்னை விட்டுட்டு அங்கே இங்கேன்னு போகாதேடா. எனக்கு வேலை கொடுடா விஸ்வநாதா...!" என்றார்.

எலிக்காது படைத்த ஸ்ரீதருக்கு இதுவும் கேட்டுவிட்டது. மீண்டும் தலையை நீட்டி "கவிஞ்ரே, இப்போ கடைசியா சொன்னீங்களே அதுதான் பல்லவி" என்றார். இப்போது இருவருக்கும் அதிர்ச்சி. விஸ்வநாதன் கேட்டார் "ஏண்ணே, இன்னைக்கு ஸ்ரீதருக்கு என்ன ஆச்சு..?. நான் வாய்க்கு வந்தபடி கத்தியதை 'அதுதான் ட்யூன்'னு சொல்றார். வேலைகொடுடா விஸ்வநாதான்னு நீங்க சொன்னதை 'அதுதான் பல்லவி' என்கிறார். என்னண்ணே இதெல்லாம்?" என்று கேட்டதும் கண்ணதாசன் சொன்னார்.

"இதோபார் விசு, நம்ம ரெண்டு பேருக்கும் ஸ்ரீதர் இன்னைக்கு ஒரு டெஸ்ட் வச்சிருக்கார். அதை சாதிச்சுக்காட்டி பேர் வாங்கணும். நீ கத்தியதுதான் ட்யூன், நான் சொன்னதுதான் பல்லவி. ஆரம்பி" என்றார்.

சரியென்று இறங்கினார்கள். "ஐசனோவர்...ஆவலோவா..." என்று கத்தியதற்கு ஏற்ப "வேலை கொடு விஸ்வநாதா" என்று ஆரம்பித்தார்கள். அப்போது எம்.எஸ்.வி. அவர்கள் "அண்ணே எஸ்டேட் ஓனர் பாலையா வயசானவர், தவிர முதலாளி, ரவிச்சந்திரனோ சின்ன வயசுக்காரர், அவரிடம் வேலை பார்க்கும் குமாஸ்தா, தவிர இப்படத்தில் புதுமுகம். வேலை கொடுன்னு கேட்பது மரியாதைக்குறைவா தெரியுதே" என்று அபிப்பிராயம் சொல்ல, உடனே கண்ணதாசன் "சரி, அப்படீன்னா இப்படி செய்வோம் 'வேலை கொடு விஸ்வநாதா' என்பதற்கு பதிலாக "விஸ்வநாதன் வேலை வேணும்" என்று துவங்குவோம் என்று சொல்லி மள மள வென மற்ற வரிகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

நாற்பத்தி மூன்று ஆண்டுகளை (2007 - 1964) கடந்து இன்றைக்கும் புதுமை மாறாமல், பொலிவு குறையாமல் வலம் வந்து கொண்டிருக்கும்

"விஸ்வநாதன் வேலை வேணும்"

என்ற 'காதலிக்க நேரமில்லை' படப்பாடல் பிறந்தது இப்படித்தான்.

(அடுத்த பாடலில் சந்திப்போம்)
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
tvsankar



Joined: 24 Jan 2007
Posts: 229

PostPosted: Thu Feb 22, 2007 8:18 pm    Post subject: Reply with quote

Dear Saradha,
NIce topic. Pl share your collection in your WAY.....
Sridhar in Isai aarvarthai feel panna mudigiradhu. Indha combo vin Unity ai unara mudigiradhu.

Nalla padal vendum enral - Director, Lyricist and MD - Ivargal Mmovarin understanding miga avasiyam enru ninaikiren.

Andha vidhdathil - Sridhar - MSv - Kannadhasan - is an Excellant Combo....

With Love,
Usha Sankar.
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Thu Feb 22, 2007 9:01 pm    Post subject: Reply with quote

This brings the composing scene, right to the readers!

Awaiting more in this section.
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
sankaran.lic



Joined: 07 Dec 2006
Posts: 77

PostPosted: Thu Feb 22, 2007 9:04 pm    Post subject: Reply with quote

DEAR MADAM,

GOOD RECOLLECTION OF MEMORY.MANY SONGS OF MSV-KK COMBINA-

HAVE AN INTERESTING MATTER BEHIND.EVEN FROM A PAPERBOY HE

OPENED A PALLAVI.KK-MSV HAVE MAGNAMITY TO ACCEPT OPENLY.

GREAT PEOPLE.GREAT SONGS.GREAT TUNES.

GREAT MOVIES.GREAT ARTISTS.GREAT TIMES.OFCOURSE WE GREAT

FANS

SANKARANARAYANAN.
Back to top
View user's profile Send private message
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Thu Feb 22, 2007 9:18 pm    Post subject: Reply with quote

Dear Sister,

Ungal Articlekku Thalai Vanangukiraen.

Melum Palappala Suvaiyana Paadal pirandha Kadhaikalai Pathivuseyungal.

regards
sampat
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Thu Feb 22, 2007 11:37 pm    Post subject: Thank you Sharadha Reply with quote

Dear Sharadha,

Thank you for bringing Kannadasan & MSV right into my drawing room. I have taken a video of MSV narrating this story to me & Sabesan some months back. We will upload this video once Ram is back in the US. Nice thread started by you. Lets hope more would flow.
Cheers
vaidy
_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Fri Feb 23, 2007 9:53 am    Post subject: Reply with quote


Great beginning Sarada !
Let the 'Paadal Piranda Kadai' thread grow into a rope and then a
'ther vadam' to tell the world the story behind immortal songs of MSV.
WIth best regards
RAMKI
LONG LIVE MSV AND HIS CREATIONS
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Fri Feb 23, 2007 2:34 pm    Post subject: Sonnathu neethAnA (nenjil Or Alayam) Reply with quote

எல்லோருடைய அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி. ஆனால் நான் மற்றவர்களிடம் இருந்து திரட்டியதைத் தான் இங்கு தருகிறேன். இதில் என்னுடைய பங்களிப்பு குறைவானதுதான். இருந்தாலும் உங்கள் அனைவரின் பாராட்டு மேலும் ந்ழுத தூண்டுகிறது.

பாடல் பிறந்த கதை (2)

"சொன்னது நீதானா...."
(நெஞ்சில் ஓர் ஆலயம்)


மீண்டும் ஸ்ரீதரின் படம்தான். ஏற்கெனவே இப்படத்தின் 'முத்தான முத்தல்லவோ' பாடலை எப்படி இருபது நிமிடங்களில், ஓடும் காரில் மெட்டமைத்தார்கள் என்று அண்ணன் ராம்கி அருமையாக விளக்கியிருந்தார். இப்போது நான் சொல்லவிருப்பது இன்னொரு பாடல்.

கவிஞர் கண்ணதாசனின் வருகைக்காக மொத்த ஆட்களும் காத்திருந்தார்கள். எம்.எஸ்.வி. அவர்கள் அடிக்கடி வாட்சைப் பார்த்துக்கொண்டிருந்தார். இதைக்கவனித்த சித்ராலயா கோபு "என்னண்ணே ரொம்ப ரெஸ்ட்லெஸ் ஆக இருக்கீங்க?" என்று கேட்டார். அதற்கு விஸ்வநாதன் அவர்கள் "இந்தப்பாட்டை கம்போஸ் பண்ணிட்டு, வேலுமணி சாரோட பணத்தோட்டம் பட ரீ-ரிக்கார்டிங்குக்குப் போகனும். இந்த ஆளை (கண்ணதாசனை) இன்னும் காணோமே" என்று புலம்பிக்கொண்டிருக்க, ஸ்ரீதரோ இந்தப்பாடலை நீங்க கம்போஸ் பண்ணிக் கொடுத்துட்டுத்தான் வேறு இடத்துக்குப்போகணும் என்று கண்டிப்பாக சொல்லி விட்டார். இடையிடையே சரவணா ஃபிலிம்ஸில்ருந்து ஃபோன் வந்த வண்ணம் இருந்தது.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து விட்ட விஸ்வநாதன் அவர்கள் "என்னய்யா இந்த குடிகாரரோடு இதே வேலையா போச்சு. சொன்ன நேரத்துக்கு வந்து தொலைய மாட்டேங்கிறார்" என்று கத்தி விட்டார். (சாதாரணமாக இப்படி மரியாதையில்லாமல் கண்ணதாசனைப் பற்றிப் பேச மாட்டார். ஆனால் வேறு கம்பெனியில் இருந்து அடிக்கடி வந்த போன் அவரை பொறுமையிழக்கச்செய்து விட்டது).

கண்ணதாசனும் வந்தார். ஸ்ரீதரும் சிச்சுவேஷனைச் சொன்னார். ஆஸ்பத்திரியில் புற்று நோய் காரண்மாக அனுமதிக்கப்பட்டிருக்கும் கணவன், தான் எப்படியும் இறந்துவிடுவோம் என்பதையும், அந்த ஆஸ்பத்திரி டாக்டர் தன் மனைவியின் முன்னாள் காதலன் என்பதையும் அறிந்து, தான் இறந்து விட்டால் அந்த டாக்டரை தன் மனைவி மணந்து கொள்ள சம்மதிக்க வேண்டும் என்று கூற, மனம் நொருங்கிப்போகும் மனைவி தன் சோகத்தைப்பிழிந்து பாடுவதாக காட்சியை விளக்கினார்.

பி.சுசீலாவும் தயாரக இருக்கிறார். விஸ்வநாதன் அவர்களும் மெட்டுக்களைப்போட்டு காட்டுகிறார். அந்த மெட்டுகளுக்கு கண்னதாசனுக்கு வார்த்தைகள் வர மறுக்கின்றன. அவர் சொல்லிய சில வரிகளும் ஸ்ரீதருக்குப்பிடிக்கவில்லை.

இடையில் பாத்ரூம் போவதற்காக கண்னதாசன் எழுந்து போகிறார். அவர் திரும்பி வருபோது ஒருவர் கண்ணதாசனிடம் "நீங்க வர லேட்டாச்சுன்னு விஸ்வநாதன் சார் உங்களை குடிகாரர்னு திட்டிட்டாருங்க" என்று சொல்லி விட்டார். (அதாவது போட்டுக்கொடுத்து விட்டார்).

கண்ணதாசன் கோபப்படவில்லை. மீண்டும் வந்து அமர்ந்தவர், எம்.எஸ்.வி.அவர்களிடம்

"ஏண்டா விசு, என்னை நீ குடிகாரன்னு திட்டினியாமே. அப்படியா, ஆச்சரியமா இருக்கே. நீ இப்படியெல்லாம் சொல்லமாட்டியே. நீயா இப்படிச்சொன்னே. என்னால் நம்பவே முடியலை" என்றவர் சட்டென்று ராகத்தோடு "சொன்னது நீதானா.. சொல்.. சொல்... சொல்... என்னுயிரே" என்று பாடிக்காட்ட......

ஸ்ரீதர் எப்படிப்பட்டவர்? 'கப்'பென்று பிடித்துக்கொண்டார் "ஐயோ கவிஞ்ரே, இதுதான்யா நான் கேட்டது. எப்படி திடிற்னு உங்களுக்கு வந்தது?. விசு அண்ணே அவர் பாடிக்காட்டிய மெட்டையே வச்சுக்கொவோம். அதையே தொடர்ந்து மெட்டுப்போடுங்க. கவிஞரே நீர் வரிகளைச்சொல்லுமய்யா" என்று கூற, சற்று முன்னர் இருந்த இறுக்கமான சூழ்நிலை மறைந்து கண்ணதாசனும் விஸ்வநாதனும் மற்றும் குழுவினரும் உற்சாகமானார்கள்.

யூனிட்டே வாய் பிளந்தது. மை காட்... இன்னொருவனை திருமணம் செய்யும்படிக்கூறும் கணவனுக்கு பதிலாக "சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே" என்ற வரிகள் எவ்வளவு கன கச்சிதமாகப் பொருந்துகின்றன என்று திகைப்பில் ஆழந்தனர். அதே உற்சாகத்தோடு கண்னதாசன் வரிகளை அள்ளி வீச, மெல்லிசை மன்ன்ர் அவற்றுக்கு சந்தம் அமைத்துக்கொண்டே வந்தார்.

சம்மதம்தானா... ஏன்...ஏன்...ஏன்...என்ன்யிரே

இன்னொரு கைகளிலே... யார்...யார்... நானா
எனை மறந்தாயா...ஏன்...ஏன்...ஏன்...என்ன்யிரே

மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
மணமகளை திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே
இறுதி வரை துணையிப்பேன் என்றதும் நீதானே
இன்று சொன்னது நீதானா
சொல் சொல் சொல் என்னுயிரே

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா
ஒருகொடியில் ஒருமுறைதான் மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா


பாடல் எழுதி முடிந்ததும், எம்.எஸ்.வி. அவர்கள் கண்ணதாசனைக் கட்டித் தழுவி கண்ணீர் விட்டார். "செட்டியாரே, லேட்டாக வந்தாலும் வட்டியும் முதலுமாக அள்ளித்தந்துட்டீங்கய்யா" என்று மனம் மகிழ்ந்தார். இவர்களுடைய போட்டியில் ஸ்ரீதருக்கு அருமையான பாடல் கிடைத்து விட்டது.

பின்னர் இந்தப்பாடலை சிதார் இசையுடன் பி.சுசீலா நம் நெஞ்சைப்பிழியும் வண்னம் பாடியதும், அதற்கு சோகமே உருவாக தேவிகா நடித்ததும் சரித்திரங்கள்.

மீண்டும் அடுத்த பாடலில் சந்திப்போம்
அன்புடன்...சாரூ........................
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
Ramesh.P



Joined: 07 Dec 2006
Posts: 177
Location: Chennai

PostPosted: Fri Feb 23, 2007 5:33 pm    Post subject: Reply with quote

Dear Saradhaa

You have opened interesting topic. Pl continue. Interesting point is even though Sridhar moved away but his concentration was with MSV&KD.
I think he enjoyed this combination and allowed them freely to extract best out of them.

regards
ramesh
Back to top
View user's profile Send private message Send e-mail Yahoo Messenger
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Fri Feb 23, 2007 5:46 pm    Post subject: Reply with quote

And Saradhaji,

pls post in Tamil font only. Its really pleasing to read Very Happy Maintain your individuality .

Pls do a thorough research on every song , gather full information from all sources & finally post so that we are all enlightened.

Stunning to hear the history of 2 great songs !

Pl cover the famous Paa series movies also from where the duo became a formidable force in tfm.
Back to top
View user's profile Send private message Send e-mail
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Sat Feb 24, 2007 5:35 pm    Post subject: kEttavarellAm pAdalAm (thangai) Reply with quote

பாடல் பிறந்த கதைகள் (3)

"கேட்டவரெல்லாம் பாடலாம்...."
( தங்கை )


கே.பாலாஜி அவர்களின் தங்கை படத்துக்காக பாடல் எழுத அம்ர்ந்திருந்தார்கள் கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி., தயாரிப்பாளர் பாலாஜி, இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் இவர்களுடன் 'சுஜாதா சினி ஆர்ட்ஸ்' நிர்வாகிகளும்.

திருலோக் சிச்சுவேஷனைச்சொன்னார். கதாநாயகி கே.ஆர்.விஜயாவின் பர்த்டே பார்ட்டியில் சிவாஜி பாடுவதாக சீன் என்று சொல்ல, இதற்கு பாட்டு எழுதி ட்யூன் போடுவதை விட முதலில் ட்யூன் பண்ணிக்கொண்டு பாடல் எழுதுவது நன்றாக இருக்கும் என்று பெரும்பாலோர் சொல்ல, அண்ணன் விஸ்வநாதன் அவர்களும் ஒன்று இரண்டு என நான்கு ட்யூன்களைப்போட்டு விட்டார். அப்போது வந்தது குழப்பம். நான்குமே நன்றக இருக்கிறதே இதில் எதை செலக்ட் பண்ணுவது என்பதுதான் குழப்பம்.

முதல் ட்யூன் கண்ணதாசனுக்குப் பிடித்திருக்கிறது. அடுத்த ட்யூன் மெல்லிசை மன்னருக்கு பிடித்துள்ளது. மூன்றாவது இயக்குனர் திருலோகசந்தருக்கு பிடித்துப்போக, நாலாவதுதான் பாலாஜிக்குப் பிடிக்கிறது. ஒவ்வொருவருமே தாங்கள் செலக்ட் பண்ணிய ட்யூன் தான் பாடலாக்கப்பட வேண்டும் என்று சாதிக்கிறார்கள்.

அப்போது கண்ணதாசன் கோபத்துடன் "விசு உன்னை யார் நாலு ட்யூன் போடச்சொன்னாங்க. ஒரேயொரு ட்யூன் போட்டுக்காட்டி இதுதான்னு சொல்லிட்டுப்போக வேண்டியதுதானே" என்று சொல்ல எம்.எஸ்.வி. முதலில் போட்டியிலிருந்து பின் வாங்கினார்.

"சரிண்ணே நான் முதலில் விலகிக்கிறேன், நீங்க மூன்று பேரும் ஒரு முடிவுக்கு வாங்க" என்று உட்கார்ந்து விட்டார். ஆனால் மற்ற மூவரும் விடுவதாக இல்லை.

அப்போது வாசலில் "சார்..போஸ்ட்" என்று குரல் கேட்டது. உடனே கவிஞர், ஆஃபீஸ் பாயை அழைத்து "யப்பா அந்த போஸ்ட் மேனை உள்ளே கூப்பிடு" என்றார். "அவனை எதுக்கு கூப்பிடுறீங்க?" என்று பாலாஜி கேட்க "பாலு, நீ கொஞ்சம் சும்மா இரு. நாம எல்லோரும் சினிமாவில் இருப்பவர்கள். இந்த துறைக்கு சம்மந்தமில்லாத போஸ்ட் மேனை செலக்ட் பண்ணச் சொல்வோம்" என்றார்.

போஸ்ட் மேனும் வந்தார். அவ்ரிடம் "தம்பி எங்களுக்காக நீ ஒரு அரை மணி நேரம் ஒதுக்க முடியுமா?" என்று கேட்க "சரி, சொல்லுங்க சார்" என்றார்.

"இது ஒரு பர்த்டே பார்ட்டியில் பாடும் பாட்டு. இப்போ நாங்க நாலு மெட்டு போட்டுக்காட்டுவோம். அதுல உனக்கு எது பிடிக்கிறதுன்னு நீ சொல்லணும்" என்று சொல்லி விட்டு "விசு அந்த நாலு ட்யூன்களையும் வாசித்துக் காட்டு" என்று சொல்ல எம்.எஸ்.வி.யும் வாசித்தார். கண்ணை மூடிக்கொண்டு கேட்ட அந்த போஸ்ட் மேன் "சார், அந்த மூணாவது மெட்டு அருமையா இருக்கு சார்" என்று சொல்ல இயக்குனர் திருலோக் முகத்தில் வெற்றிப்புன்னகை. ஆம் அது அவர் தேர்ந்தெடுத்த மெட்டு.

"ரொம்ப நன்றிப்பா" என்று போஸ்ட் மேனை அனுப்பி வைத்தனர்.

புன்னகையுடன் பாலாஜியைப்பார்த்தார் இயக்குனர். "பாலு, உங்களையெல்லாம் விட மக்கள் ரசனையை நன்கு அறிந்தவன் நான் என்று அந்த போஸ்ட்மேன் தெளிவுபடுத்தி விட்டான்" என்றார்.

அப்போது கண்ணதாசன் "விசு.... அந்த போஸ்ட்மேன் செலக்ட் பண்ணிய ட்யூனை வாசி. டேய் பஞ்சு (வேறு யார், பஞ்சு அருணாச்சலம்தான்) நான் சொல்லசொல்ல எழுதிக்கிட்டே வா" என்று வழக்கம்போல வரிகளைக்கொட்டத் துவங்கினார்.

கேட்டவரெல்லாம் பாடலாம்
என்பாட்டுக்கு தாளம் போடலாம்
பாட்டினிலே சுவையிருக்கும்
பாவையரின் கதையிருக்கும்
மனமும் குளிரும் முகமும் மலரும்
ஓ....ஓ....ஓ....ஓ...ஓஓஓஓஓஓஓஓ


பாடல் அருமையாக அமைந்ததுடன், 1967 ல் 'டாப்டென்' பாடல்களில் ஒன்றாக அமைந்தது.

ஒரு பொதுஜனப் பிரதிநிதி தேர்ந்தெடுத்த மெட்டு இது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இதுபோல நாலைந்து ட்யூன்களில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் வரும்போது, எம்.எஸ்.வி.அவர்களைப்பார்த்து கவிஞர் கண்ணதாசன் "விசு, வாசல்லே யாராவது போஸ்ட்மேன் வர்ரானா பார்" என்று கிண்டலடிப்பார்.

(மீண்டும் சந்திப்போம்)
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Sun Feb 25, 2007 11:40 pm    Post subject: Reply with quote

Dear Friends,

What a topic. Idha, Idha thaan indha forumthula yedhurpaarthom Mr.Vaidy,Ram, MSVRamki sir. Congrats sister Sharaadha.

Pani Melum thodarattum. Tamilil sharadhavai poll yezhudha AAsaiyaai irukkiraddhu. Yethanai murai Kaettalum Padhil Illai. Tamilil Eppadi Yezhudhuvadhu.

When is Ram's marriage. Will there be invitation for all of us and will there be a chance tor all of us to meet each other? MSVRamki Sir, thapaa yedhavudhu Kaeturindha Manithukollungal.
regards,
sampat.
Back to top
View user's profile Send private message Send e-mail
Srinivass NV



Joined: 12 Feb 2007
Posts: 86
Location: Hosur

PostPosted: Mon Feb 26, 2007 9:26 am    Post subject: To Post in Tamil Reply with quote

Dear Sampat,
To post in Tamil, you have to first convert the Writing to UNICODE. (UNICODE CONVERSION); In order to do this, pls follow the foll. steps :

1. Pls download install any TTF Tamil Font like (New Kannan Text etc) in your PC; (I can mail you one, if you don't have)

2. You have to create your Article using that Tamil Font in a Word file.

3. Goto "http://sarma.co.in/FConversion/Default2.aspx"

4. You will find two TEXTBOX Windows on your Monitor

5. The one on your left is the "Source Layout" where you paste your Writing from the Word file

6. From the Combo Box below the TEXTBOX Window, choose the Font with which you have created (For Eg: New Kannan Text)

7. Now come to the TEXTBOX onto your RIGHT. Ensure you have selected "UNICODE" in the Combobox below the RIGHT Window.

8. Choose the "CONVERT" Command Button

9. After some delay you can find the UNICODE CONVERTED Article on your right Window.

10. Choose all and paste it to another new WORD File; and Save it. You can now copy the whole content from your UNICODE CONVERTED Word file to our Website Posting area.

NB : There will be lot of Letter Swappings after this Conversion. You might have to Cut-Paste some letters to correct the mistakes.

Yours

NVS
_________________
NVS
Back to top
View user's profile Send private message Send e-mail
irenehastings
Guest





PostPosted: Mon Feb 26, 2007 2:03 pm    Post subject: Reply with quote

mr. srinivas

now only i understood this much problems and steps for typing in tamil.

i thought it is just an easy thing.

that means, saradha madam ivlo siramapattu thaan thamizla type panraangala?.

really a great job.

but at the same time, when we are reading in tamil only, thay are touching our heart.
Back to top
tvsankar



Joined: 24 Jan 2007
Posts: 229

PostPosted: Mon Feb 26, 2007 3:40 pm    Post subject: Reply with quote

Dear friends,

One Good tamil fonts is available nowadays. It won't take long time for tamil font.


http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

Indha tamizh font user friendly. Idhai payan paduthum murai.

1.INdha font ai , copy and paste seidhu Note pad il store seidhu kollungal.
2. or - favourite il add seidhu kollungal.

3.IDhai open seidha udan, 2 box open agum.Melae onrum, keezhae onrum aga 2 box irukum.

3..Idhai payan padutha.

angae - therivu seiyga - enra oru box irukum.

4.Angae - thaminglish - enra box il tick seidhu vidavum. Keezh irukum box il sila ezhuthukal irukum ADhai DELETE seidhu vittu, ungal vishayathai ezhudhavum.

5.Ippodhu neengal, ungal kadidhathai , melae ulla box il, thanglish il (ennai pol) ezhudhavum.

6.Ungal thanghlish automatic aga , keezhae ulla box il tamilzh aga maari vidkum.

7. Type pannum podhae ungaluku adhu theiryum..

8.Spelling patri
p adithal thamizh ezhuthil pp varum . Arugil. a adithal pa aga maarum.

shift illamal wa = Thnnagaram kidaikum - Nagaram - Na kidiakum.

shift illamal za - thamil pazham - zha - kidiakkum.

shift illamal sri type panninal - sanskirt sri kidaikum.

shift illamal irandu murai oo adithal

"" "" "" iraundu murai uu adithal -- Nedil ezhuthukal kidiakum. eg. koo - kii kuu

shift illamal oru murai o , u. i adithal - kuril kidaikum.

shift illamal - sau adithal - sow kidaikkum.

shift use panninal,

irandu suzhi na - moonru suzhi na vaga marum

la garam - mathalam la kidaikum

vallina RA

important - Melae irukum box il than thngalish il ezhudha vendum.ADhu automatic aga keezh box il thamizha ga maari vidum.

Indha Tamizh font enaku kidaith vidham..

En amma ,'Sandhavasandham " enra Tamizh Kavidhai Group il irukirar.
Angae. Thiru P.S.Pasupthy avargal , indha tamizh font ai koduthu udhavi irukirar.

"Sandhavasandham group moderator Thiru.Elandhai Ramasamy avarkalukum., Thiru P.S.Pasupathy avarkalukum - indha tamizh font thandhu udhaviyadharku ennudaiya manamarndha Nanri...

With Love,
Usha Sankar.


Last edited by tvsankar on Mon Feb 26, 2007 3:55 pm; edited 2 times in total
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Goto page 1, 2, 3, 4  Next
Page 1 of 4

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group