"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

The Factors that inspires MSV - 3

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV
View previous topic :: View next topic  
Author Message
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Mon Feb 25, 2013 1:46 pm    Post subject: The Factors that inspires MSV - 3 Reply with quote

ஒரு பாடல் மெல்லிசையாக அமைக்கப்படுவதற்கு. ஒரு ராகத்தை எடுத்துக்கொண்டு அதில் அதன் ராகத்தில் இல்லாத வேறு சில ஸ்வரங்களை கலப்பதின் மூலம் இசை அமைக்க முடியும் என்று பொதுவாக எல்லோரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். நானே இசை அமைக்கும் பொழுதும் அவ்வாறு தான் இசை அமைத்தும் இருக்கிறேன். ஆனால் பின்னாளில் MSV அவர்களின் பாடல்களை ஆராயும் பொழுது அவ்வாறு மற்ற ஸ்வரங்களை கலப்பு செய்யும் பொழுது அதற்கு ஒரு குறிக்கோள் இருக்கும் என்றும், அந்தக் குறிக்கோள் அந்த பாடலின் காட்சியின் தன்மை மற்றும் உணர்வினை வெளிப்படுத்தும் என்பதும் MSV யை தவிர மற்ற எந்த இசை அமைப்பாளரும் புரிந்து கொள்ளவில்லை என்பது அவர்களின் பாடல்களை கேட்டாலே புரியும். இந்த விளக்கம் மற்ற இசை அமைப்பாளர்களின் பாடல் தரம் குறைவு என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. ஆனால் மேல குறிப்பிட்ட குறிக்கோள் அவர்களுக்கு இருந்ததா என்பது தான் கேள்வி?

அதற்கு ஒரு உதாரணம் ஒரு பாடலை எடுத்துக்கொள்வோம்.
'கனா காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல'
என்ற பாடல் நமது 6வது ஆண்டு விழாவின் பொழுது இசைக்கப்பட்டது. அதன் பாடல் ஒத்திகையின் போது ஸ்ரீதர் அவர்கள் இந்த பாடலின் ராகம் மத்யமாவதி தானே என்று வினவினார்.
அதற்கு நான் மத்யமாவதி ராகத்துடன் மேலும் ஒரு ஸ்வரமான தைவதம் DA2 கலப்பு இருக்கின்றது என்றும் அதனால் இது மதயமாவதி இல்லை என்றும் கூறினேன். சிறிது நேர விவாதத்திற்கு பின் அவர் குழுவில் புல்லாங்குழல் இசை கலைஞர் சார்லஸ் அவர்கள் அதில் தைவதம் இருப்பதை உறுதி செய்தார். திரு ஸ்ரீதர் அவர்கள் அப்படி என்றால் இது என்ன ராகம்? என்ற கேள்வி எழுப்பினார். அதற்கு நான் அது MSV கே வெளிச்சம் என்று கூறினேன்இதை எதற்காக கூறினேன் என்றல் மேலே குறிப்பட்ட மெல்லிசை யை பற்றிய மக்கள் கொண்ட கருத்தை அறிவதற்காக.

சரி. இப்போது நமது கேள்வி எதற்காக MSV அவர்கள் மத்யமாவதி ராகத்துடன் தைவதம் DA2 யை கலந்தார் என்று ஆராய்வோம். இதை அறிவதற்கு நாம் முதலில் இசை சம்பந்தப்பட்ட சில உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அது என்னவென்றால் முதலில் மெல்லிசை என்பது ஒரு குறிப்பிட்ட தனி ஸ்வரமாக பாடாமல் கூட்டு ஸ்வரமாக இசைப்பது என்ற அடிப்படயில் தான் கர்னாடக சங்கீதத்திலிருந்து மாறுபடுகிறது.

அவ்வாறு கூட்டு ஸ்வரமாக இசைக்கும் போது எந்த ஸ்வரத்துடன் எந்த ஸ்வரத்தை கலக்க வேண்டும் என்று ஒரு நியதி இருக்கிறது. மேம்போக்காக எந்த ஸ்வரத்துடன் எதை வேண்டுமானாலும் கலந்தால் அந்த ஒலி ஒரு இனிமையை தாராது. இதை தான் HORMONY என்பார்கள். அவ்வாறு கலந்தால்தான் மெல்லிசை பாடல்களில் இனிமையை கொண்டு வரமுடியும்.முதலில் இந்த பாடலில் எதற்காக மத்யமாவதி ராகத்தையும் அதனுடன் தைவதம் DA2 வையும் கலந்தார் என்று ஆராய்வோம்.

மதயமாவதி ராகத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. அது என்னவென்றால் அந்த ராகத்தில் உள்ள ஒவ்வொரு ஸ்வரமும் அந்த ராகத்தின் மற்ற ஸ்வரங்களுடன் மதயம தொடர்பு உடையது.

மத்யமாவதி ராகத்தின் ஸ்வரங்கள்

ச ரி2 ம1 ப நி1 ச

இதில்
ச - ம - மத்யம தொடர்பு உள்ளது.
ரி2 - ப
ரி2 வை ஒரு நிமிடம் ' ச' வாக கொண்டீர்களானால் 'ப' ஸ்வரம் 'ம' வாக மாறும். எனவே ரி2 - ப மத்யம தொடர்பு உடையது.
இதே போல்
ம1- நி1 மதயம தொடர்பு உடையது.
ப - ச மத்யம தொடர்பு உடையது.

இம்மாதிரி ஒரு PERMUTATION COMBINATION போட்டு பார்த்தீர்களானால் இந்த மத்யமாவதி ராகத்திற்கு மட்டுமே இம்மாதிரி ஒரு தொடர்பு இருப்பது புரியும்.

இம்மாதிரி தொடர்பு இருப்பதினால் தான் இந்த ராகத்திற்கு 'மத்யமாவதி' என்ற பெயரே வந்தது,

பொதுவாக மத்யமாவதி ராகத்தினை தோஷ நிவர்த்தி ராகம் என்றுன் அதனால்தான் அதை கச்சேரிகளில் பாடும் பொழுது அதை கடைசி ராகமாக, மங்களாமாக பாடுகிறார்கள் என்பதும் அது ஏன் என்ற கேள்வி அடுத்து எழும்.

அதை புரிந்து கொள்வதற்கு முதலில் நாம் ஸ்வர உறவுகளின் தன்மையை புரிந்து கொள்ளவேண்டும்.

பொதுவாக இசை எனபது ஒரு ஒலி சார்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வாறு ஒரு ஒலி ஒழுங்கு படுத்தப்பட்டு வருவதை தான் இசை என்கிறோம். அவ்வாறு வரும் இசையில் 7 ஸ்வரங்கள் இருப்பதும் அது மேலும் 12 ஆகா பிரிந்திப்பதும் அனைவரும் அறிந்ததே.

இப்போது மெல்லிசை யில் எதை எதோடு கலக்க முடியும் என்றும் அவ்வாறு கலந்தால் என்ன ஆகும் என்றும் பார்க்கலாம்.

7 ஸ்வரங்களும் வரிசைப்படி

ச ரி2 க2 ம1 ப த2 நி2 ச

இதில் நான் மற்ற 5 ஸ்வரமான ரி1, க1, ம2, த1, நி1 என்பதை சொல்லவில்லை. அதை பிறகு விளக்குகிறேன்.

மேலே குறிப்பட்ட 7 ஸ்வரங்களில் ச என்ற ஸ்வரம் 'C' என்று கொண்டீர்களானால் அது 'C MAJOR SCALE' என்று சொல்லுவார்கள். அதாவது ஹார்மோனியம் அல்லது KEYBOARD இல் பார்த்தீர்களானால் அதில் எல்லாமே வெள்ளை கட்டை வரும். இதில் நாம் விட்டு விட்ட மற்ற 5 ஸ்வரங்கள் எல்லாம் கருப்பு கட்டைகளாக வருவதையும் உணரலாம். அந்த 7 வெள்ளை கட்டைகளை 'MOJOR TONES' என்றும் கருப்பு கட்டைகளை 'MINOR TONES' என்றும் கூறுவார்கள்.

இப்போது மேலே குறிப்பிட்ட 7+5 ஸ்வரங்களின் அமைப்பை கவனித்தீர்களானால் இசை ஸ்வரங்கள் ஒரு வட்டமாக வருவதை உணரலாம்.
ச வில் ஆரம்பித்து மறுபடியும் ச வில் தானே முடிகிறது. எனவே இசை ஸ்வரங்கள் ஒரு வட்ட பாதையை உருவாக்குகின்றன. ஒலி அலைகள் ஆதார சட்ஜமத்தை 0 டிகிரி எனக்கொண்டால் மற்ற ஸ்வரங்களான ரி, ம, ப, த , நி ஸ்வரங்கள், ஒலி அலைகள் 0 டிகிரி யிலுருந்து கோண மாற்றமடைந்து ஒரு குறிப்பிட்ட கோணத்தில் உருவாகுகின்றன என்பதயும் உணரலாம்.

அந்த கோணத்தை இப்போது தருகிறேன்.

ச - 0 டிகிரி
ரி2 - 45
க2 - 90
ம1 - 120
ப - 180
த2 - 240
நி2 - 315
ச (மேல் சட்சமம்) - 360 டிகிரி

இதில் ஸ்வரங்களுக்கு உள்ள கோண இடை வெளி 45,30,60,60,75 டிகிரி இருப்பதையும் அது ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு முறையில் பிரிவதையும் காணலாம். எனவே தான் இதை 'MAJOR TONES' என்று கூறினார்கள்.

மற்ற 5 ஸ்வரங்களுக்கும் கோணம்
அப்ப்ரொக்ஷிமடெ
ரி1 - 27 டிகிரி
க1 - 72
ம2 -144
த 1 - 214
நி1 - 279

என்ற அளவில் வரும் பொழுது அதன் இடைவெளிகள் அது ஒழுங்கற்ற முறையில் வருவதையும் அதனால் அதை 'MINOR TONES' என்றும் கூறினார்கள்.

இதில் நமக்கு வேண்டியது எந்த ஸ்வரத்தை எதோடு கலந்தால் ஒரு ஒழுங்கு முறை வரும் என்பதும் அது எவ்வாறு இந்த பாடலுக்கு உயிர் கொடுக்கிறது என்பதும் தான் முக்கியம்.

நான் மேலே குறிப்பிட்ட ஸ்வரங்களின் கோண (ANGLE) அளவுகளை ஒரு வட்டம் வரைந்து அதில் ஸ்வரங்களை அந்தந்த கோணத்தில் புள்ளி வைத்து, அவ்வாறு சில ஸ்வரங்களுடன் சில ஸ்வரங்களை கலந்தால் என்ன வடிவம் கிடைக்கிறது என்றும் அவ்வாறு கிடைக்கும் வடிவதினைக்கொண்டு எது PERFECTவடிவம் (PERFECT HORMONY) என்றும் பார்க்கலாம்.

இதை சுலபமாக அறிவதற்கு அந்த இசை வட்ட வடிவத்தை ஒரு கடிகாரத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். அதில் வரும்
ச - 0 DEGREE - 12 மணி
ரி2 - 45 DEGREE - 1 மணிக்கும் 2 மணிக்கும் இடைப்பட்டது
க2 - 90 DEGREE - 3 மணி
ம 1 - 120 DEGREE - 4 மணி
ப - 180 DEGREE - 6 மணி
த2 - 240 DEGREE - 8 மணி
நி2 - 315 DEGREE - 10 மணிக்கும் 11 மணிக்கும் இடைப்பட்டது.

இந்த வட்டத்தில்ஏதாவது மூன்று ஸ்வரங்களை எடுத்துக்கொண்டு அந்த மூன்றையும் ஒரு நேர் கோட்டால் இணைத்துப் பார்ப்போம்.என்ன வடிவம் கிடைக்கும்?

உதாரணமாக

ச - க2 - ப
என்ற ஸ்வர கூட்டு கலவையில்
12 மணி, 3 மணி மற்றும் 6 மணி என்ற இடத்தின் புள்ளிகள் தான் அந்த மூன்று ஸ்வரத்தையும் குறிப்பதால் அந்த மூன்றையும் ஒரு நேர் கோட்டின் மூலம் இணைத்தால் ஒரு முக்கோண வடிவம் கிடைக்கும்.

அந்த முக்கோணம் ஒரு செங்கோன முக்கோணமாக(RIGHT ANGLE TRIANGLE) இருப்பதை அறியலாம். அந்த செங்கோன முக்கோணத்தின் இரு பக்கங்கள் சமமாகவும் மற்றொரு பக்கம் மற்ற இரண்டு பக்கங்களின் அளவை விட அதிகமாகவும் இருப்பதையும் உணரலாம்.

இதே போல் எந்த ஒரு மூன்று ஸ்வரங்களையும் பொருத்தி பார்த்து அதன் வடிவம் என்ன என்று பார்த்தோமானால் எந்த ஒரு வடிவமும் சமமாக இல்லாததையும் நாம் அறிய முடியும். ஒரே ஒரு COMBINATION இதற்கு விதி விலக்கு.

அது தான்

ச - ம1 - த2

அந்த மூன்று ஸ்வரங்களின் கோணம் 0 - 120 - 240 (12 மணி - 4 மணி - 8 மணி ) என்ற புள்ளியில் இருப்பதனால் அந்த மூன்று புள்ளிகளையும் இணைத்தால் அது ஒரு சம பக்க முக்கோணம் (EQUILATERAL TRIANGLE) வருவதையும் காண முடியும்.


இப்போது பாடலுக்கான காட்சியையும் அதற்கான MSV அவர்கள் கையாண்ட முறையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.

ஒரு மனச்சிதைவு (HYSTERIA) நோயாளியின் எண்ண அலைகள் ஒழுங்கற்று இருக்கும். அவ்வாறு இருக்கும் ஒரு நோயாளியை தூங்க செய்ய எந்த விதமான ஒலி அலைகளை பயன்படுத்தினால் அந்த மனம் ஒழுங்கடையும் என்பதும் புரியும்.

மத்யமாவதி ராகத்தின் ஸ்வரங்களை மீண்டும் நினைவு படுத்துகிறேன்

ச ரி2 ம1 ப நி1 ச

இந்த ராகத்துடன் தைவதம் (DA2)கலந்ததால் வரும் ச - ம1 - த2 தொடர்பு ஒரு சம பக்க முக்கோணத்தை உருவாக்கிறது (EQUIVALENT TRIANGLE).

இதன் அர்த்தம் அந்த ஸ்வர கூட்டு கலவையின் மூலம் அவளின் மனச்சிதைவை போக்கி ஒரு சம நிலையை உருவாக்க என்பதும் அதன் மூலம் அவளை தூங்க செய்யா முடியும் என்பதுதான்.

மேலும் அந்த தைவத ஸ்வரத்தை (DA2) எப்போது உபயோகிக்கிறார் என்று பார்த்தால்

'கனா காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல'

என்ற இடத்தில் உறங்காதோ என்ற இடத்தில தான் உபயோகிக்கிறார். அதை என்னும் பொழுது எப்படி கற்பனை எவ்வளவு கச்சிதமாக பொருந்துகிறது.

மேலும் பாடலின் வரும் இடை இசையில் அந்த ராகத்திற்கு தொடர்பில்லாத மற்ற பல்வேறு ஸ்வரங்களை (CHROMATIC) ஆகா உபயோகிப்பதையும் அது அவள் மனம் மீண்டும் மீண்டும் திசை மாறி செல்வதையும் அவள் மனப்போராட்டத்தை உணர்த்துவதையும் இறுதியில் அந்த இசைக்கு அவள் மனம் கட்டுபடுவதையும் உணரலாம்.


N Y Murali


Last edited by N Y MURALI on Mon Feb 25, 2013 4:44 pm; edited 1 time in total
Back to top
View user's profile Send private message Send e-mail
V Sivasankaran



Joined: 13 Nov 2008
Posts: 152

PostPosted: Mon Feb 25, 2013 3:30 pm    Post subject: Reply with quote

Dear Murali,

On reading once, iam not in a positon to absorb all. I shall read more times to completly understand your incisive analysis. I take this opportunity to recall what VidwaN GS MANI said about MSV.

" Carnataka sangeetham pyarichakku utpatathu. Mellisai eswara anugraham iruntal mattuma varakudiathu. GS Mani deserves to be applauded for his forthright views.

V Sivasankaran
Back to top
View user's profile Send private message
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Mon Feb 25, 2013 4:46 pm    Post subject: Reply with quote

Dear Siva,
Appreciate your fair comments. I have edited certain portion for better understanding.

unfortunately I cannot draw. Otherwise I would have drawn circles and triangles and explained it better.

N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
V Sivasankaran



Joined: 13 Nov 2008
Posts: 152

PostPosted: Mon Feb 25, 2013 5:46 pm    Post subject: Reply with quote

Dear Murali,

Your painstaking effort is laudable. The most important aspect is to understand why MM had used annya swaras. Continue your great work.

V SIVASANKARAN
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Mon Feb 25, 2013 8:48 pm    Post subject: Reply with quote

Dear Murali,

Though I can't understand the technical details, the substance of your post makes amazing reading. MSV has used some notes to create harmony when the hero sings to pacify her ( 'urangaatho? paaral solla') and discordant notes to portray the heroine's agitated mind and has yet made the song so brilliant and vibrant. An excellent analysis of the construction of the song.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group