"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Sippi Irukkudhu muthum irukkudu - Ippo thaan neram vandhadhu

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Tue Mar 12, 2013 2:05 pm    Post subject: Sippi Irukkudhu muthum irukkudu - Ippo thaan neram vandhadhu Reply with quote

'சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி'

30 வருடங்களுக்கு முன்பு உருவான ஒரு பாடல். இன்றும் பல தலைமுறைகளால் ரசிக்கபட்டும் பாடப்பட்டும் வரும் ஒரு அருமையான MELODY CREATION.

மிகவும் எளிமையான வகையில் இருக்கும் இந்த பாடல் MSV இன் பாடல்களில் முதல் 10 இடத்தில இருக்கும் என்று உறுதியாக சொல்லல்லாம். இந்த பாடல் எப்படி ஒரு சாகா வரம்வரம் பெற்றது? இதில் உள்ள MELODY என்று பொதுவாக சொல்லலாம். என்றாலும் என் மனம் கேட்டகவில்லை. MELODYக்கு மேல் வேறு பல சூட்சமங்களும் இதில் அடங்கியிருக்க வேண்டும். அதுவும் பல முறை கேட்டு கேட்டு வந்த ஒரு பாடலில் உள்ள மறை பொருள் புரிந்தவுடன் MSV பற்றி நினைக்கும் போதே மயிர் கூச்செரிகின்றது.

சரி. இந்த பாடல் உருவான விதம் பற்றி MSV என்ன சொன்னார்? திரு பாலச்சந்தர் அவர்கள் 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில் ஒரு காட்சியினை விவரித்தார். அதில் கதாநாயகன் கவி பாரதி மீது பற்று கொண்டவன். எனவே அவனுக்கு கவிதை எழுத வரும். கதாநாயகி நாடகத்தில் நடிப்பவள். அவளுக்கு இசை நன்றாக வரும். நாயகி சந்தம் கொடுக்க கொடுக்க நாயகன் அதற்கு வார்த்தைகள் கொடுப்பது போல இருக்க வேண்டும்.

இந்த காட்சி உருவான விதம் பற்றி திரு பாலச்சந்தர் அவர்களும் ஒரு முறை கூறினார். இந்த பாடல் காட்சிக்கான INSPIRATION எனக்கு பல முறை MSVம் கண்ணதாசனும் கம்போசிங் செய்யும் விதம் மூலமாக வந்தது என்று கூறினார்.

அடுத்து பாடல் எழுதிய கண்ணதாசன் பற்றி MSV என்ன கூறினார்? இந்த பாடல் காட்சியில் எப்படி நாயகி சந்தம் கொடுக்க கொடுக்க, நாயகன் வார்த்தைகளை கொடுக்கிறானோ அது போலவே உண்மையில் கண்ணதாசன் வார்த்தைகளை கொடுத்தார். அதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்ல. பாடல் நேரம் எப்படி இருந்ததோ அது போலவே உண்மையான கம்போசிங் லும் இருந்தது என்று கூறினார்.

சரி. இப்படி பாலச்சந்தர் பற்றியும் கண்ணதாசன் பற்றியும் புகழ் பாடிய MSV தன் இசையை பற்றி என்ன கூறினார்? நல்ல காட்சி அமைப்பு, நல்ல வார்த்தைகள் எல்லாம் இந்த பாடலை வெற்றி பாடலாக ஆக்கிவிட்டன என்றுதான் கூறினார். ஆனால் உண்மை அதுவா? ஏன் MSV மற்றவர்களை பற்றி பெருமையாக கூறும் போது, ஏன் அவர்கள் MSV பற்றி கூறக்கூடாது? பொதுவாக MSV மிகச்சிறப்பாக இசை அமைத்தார் என்று தானே கூறினார்கள். ஏனெனில் அவர்களுக்கு இசை பற்றிய அறிவு கிடையாது. சரி MSV யாவது சொல்லலாமே என்றால் அவர் நான் முன்பே பல முறை கூறியது போல அறிவை கொண்டு படைக்காமல் ஆன்மாவை கொண்டு படைக்கும் போது ஏற்படும் நிகழ்வுகள் சிந்தனையில் பதியாது, அப்போது என்ன நடந்தது என்பதை அவராலும் விளக்க முடியாது என்பது தான் ஆன்மாவை கொண்டு படைக்கிறார் என்பதற்கு சாட்சி. நம் போல உள்ளவர்கள் தான் அதை பல சாட்சியங்களை கொண்டு வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.

எது MSVயின் இசை உருவாவதற்கு காரணமாய் இருந்ததோ, அதுவே மற்றவர்கள் மூலம் அதன் உண்மைகளை பற்றி அறிந்து கொள்ளவும் காரணமாய் இருந்தது என்பதை தவிர வேறு விளக்கம் என்னால் சொல்ல முடியவில்லை.

சரி. பீடிகை போடாமல் இந்த பாடலில் அவர் என்ன தான் செய்தார் என்று பார்ப்போம்.
மறுபடியும் மேலே சொன்ன காட்சியின் தன்மையை பாருங்கள். பாடல் ஒரு கம்போசிங் நடைபெறுவது போலவே இருக்க வேண்டும். பொதுவாக ஒரு கம்போசிங்க்ல் என்ன நடக்கும்? கவிஞர் இருப்பார். இசை அமைப்பாளர் ஆர்மானிய பெட்டியுடன் இருப்பார். கூட அந்த இசை அமைப்பாளருக்கு உதவியாக தாள வாத்திய கருவியான தபலா வாசிப்பவரும், ரிதம் கிடார் வாசிப்பவரும் இருப்பார். தாள வாத்தியம் பாடல் தாளத்தினுள் அடங்குகிறதா என்பதற்கும், ரிதம் கிடார் மெல்லிசை படுத்துவதற்கும் மிகுந்த உதவியாய் இருக்கும் என்பதுதான் காரணம்.
இப்போது பாடலை உன்னிப்பாக கவனியுங்கள். இந்த இரண்டு வாத்திய கருவிகளை தவிர வேறு வாத்தியம் இந்த பாடலில் பிரதானமாக ஒலிக்காது. இந்த இரண்டு வாத்திய கருவிகளை தவிர ஒரு TIMING இசை கருவி 'ITCH ITCH' என்று தபலாவுடன் சேர்ந்து ஒலிப்பதை கூர்ந்து கவனித்தால் தெரியும். அந்த TIMING இசை கருவி எவ்வாறு ஒரு பெட்டியில் முத்துக்களை போட்டு தாள கதியில் குலுக்கினால் ஒலி வருமோ அதுபோலவே இருப்பதை உணர முடியும்.

பாடலில் SITAR வருகிறதே என்று கேட்கலாம். உண்மைதான். ஆனால் அந்த SITAR வரும் இடத்தையும் கவனிக்க வேண்டும். இடை இசையில் மட்டுமே வரும். அதுவும் அந்த SITAR ஒலி, ஒருவர் நடந்தால் என்ன வேகத்தில் வருமோ அது போலவே வேகத்தில் வருவதை கவனிக்கலாம். இடையிசையில் மட்டுமே வரும் அந்த SITAR இசை உண்மையில் ஒரு நடை இசை.

சரி மற்ற விஷயங்களை பார்ப்போம். பாடலின் வரிகளை கவனியுங்கள்.

தனனனான தனனனான தனனனான தானனன தானான
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி

லல்ல லல்ல லல்ல லல்ல லால லல்ல லால லல்ல லால லா
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி

இங்குதான் முக்கியம். முதலில் தனனனான என்று சந்தம் கொடுத்தவர் அடுத்த முறை லல்ல என்று மாற்றி சந்தம் கொடுப்பது எதை குறிக்கிறது? சந்தம் கொடுக்கும் போது அதை பல விதமாக கொடுத்தால் அது கவிதை சொல்பவர்க்கு ஒரு உந்துகோலாக இருக்கும் என்ற அடிப்படையிலே அவ்வாறு மாற்றி சொல்லப்பட்டது. இதற்கு MSV மற்றும் கண்ணதாசன் இனைந்து உருவாக்கிய 'வா நிலா ' பாடலே சாட்சி. முதலில் தா ந நா என்று சந்தம் கொடுத்தபோது வராத கவிதை லா ல லா என்று சந்தம் கொடுத்த போது லா லா என்று ஒவ்வொரு வார்த்தையும் முடியும் வகையினில் சிறந்த பாடலாக வந்தது.

அடுத்து வரும் வரிகளை கவனியுங்கள்.

ஒரு விசில் சந்தம்
சந்தங்கள்

நா ந நா
நீயானால்

ரிசரி.
சங்கீதம்

இங்கு சங்கீதம் என்ற வார்த்தைக்கு எப்படி பொருத்தமாக 'ரிசரி.' என்று ஸ்வர சந்தம் கொடுக்கிறார் பாருங்கள்.

பாடல் முழவதும் சில அழகான EXPRESSIONSகள். அவை எல்லாம் MSVயும் கண்ணதாசனும் இனைந்து பணியாற்றிய போது நிச்சயமாக நடந்திருக்கும்.

இப்படியே பாடலின் முதல் சரணம் செல்லும் பொது, அவர்களுக்குள் ஒரு போட்டி போல ஒரு கடினமான சந்தம் வருகிறது.

தானே தானே தான
தேவை பாவை பார்வை
அதற்கும் வார்த்தை சுலபமாக வந்துவிட்டதால், அடுத்த சரணத்தில் இன்னும் கடினமான துரித கால(FAST) நடை சந்தங்கள் வருகிறது. இங்கு ஒரு விஷயம் முக்கியமாக கவனிக்க வேண்டும்.
இம்மாதிரி போட்டி உண்மையாகவே கண்ணதாசனுக்கும் MSVக்கும் இருந்ததா என்றால், இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு முறை MSV அவர்கள் கண்ணதாசனிடம் கிண்டல் அடித்தாராம். எப்போதும் நீங்கள் கொடுக்கும் வார்த்தைகளுக்கு தான் நான் மெட்டமைக்கிறேன். கடினமான சந்தங்களுக்கு நீங்கள் இசை அமைக்கவே இல்லை என்று. இதை கேட்டதும் கண்ணதாசனுக்கு கோபம். சரி. நீ சந்தம் சொல்லு. நான் வார்த்தை சொல்கிறேன் என்றாராம்.

உடனே MSV
தான நன்னன தான நன்னன தான நன்ன நா நா
என்று சந்தம் கொடுக்க சிறிது நேரம் யோசித்த கண்ணதாசன்
'தேரு வந்தது போலிருந்தது நீ வந்த போது' என்ற வார்த்தை கொடுத்தாராம். MSVயும் அதை பாராட்டினாராம். அந்த சந்தம் ஏன் கடினமானது?. ஏன் என்றால் அது நெடில் குறில் என மாறி மாறி தொகுக்கப்பட்டது. இதை ஒரு டிவி நிகழ்ச்சியில் சொன்னவர் பஞ்சு அருணாசலம்.

சரி மீண்டும் பாடலுக்கு வருவோம்.
இரண்டாவது சரணத்தில் கொடுக்கும் கடினமான சந்ததிற்கு சிறிது யோசனை செய்த பின்

ரதியும் நாடும் அழகிலாடும் கண்கள்

என்ற வார்த்தை வருகிறது.

MSV கண்ணதாசனை பாராட்டியது போலவே இங்கும் 'சபாஷ்' வருகிறது.
அதை அடுத்து கண்ணதாசனின் ஆளுமை நிறைந்த வரிகள் வருகின்றன.

கவிதை உலகம் கெஞ்சும் உன்னை கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும்
(மனத்தினுள் MSVம் கண்ணதாசனும் எப்படி இருந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்)

கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய நானுரைத்தேன்

இதுதான் பாடல் காட்சியின் முக்கிய கட்டம். ஒரு விளையாட்டிற்கு போட்டி போல அவர்கள் சந்தம் சொல்லி வார்த்தை அமைத்தாலும் அந்த வாய்ப்பின் மூலம் தன காதலை நாயகன் நாயகிக்கு உணர்த்துகிறான்.எனவே அதன் முக்கியத்துவம் உணர்ந்த MSVயும் அந்த வார்த்தையை மட்டும் இரண்டாவது முறையாக வைத்திருக்கிறார். மேலும் இரண்டாவது முறை பாடும் போது வேண்டிய இடத்தில 'PAUSE' கொடுத்து செய்தது, தன கருத்து(கதாநாயகன்) கேட்பவரை (கதாநாயகி) சென்றடையவேண்டிய தீவிரத்தை உணர்த்துகிறது. மேலும் 'என்' மற்றும் 'நீ' என்ற வார்த்தையின் அழுத்தத்தையும் கவனிக்கலாம்.
இப்போது சிறிது நேர இடை வெளிக்கு பின் SITAR ஒலிக்கிறது. அவர்கள் மனம் செல்லும் ஓட்டத்தை படம் பிடிப்பது போலவே அந்த இசை இருக்கும்.அடுத்து SITAR ஒரு HARP போல ஒலி அவர்கள் காதல் மலர்ந்து விட்டதையும். அது வரை சந்தம் கொடுத்த நாயகி அவன் கொடுத்த வார்த்தைகளை பாடும் போது அதன் காரணம், அவள் அவன் பால் ஈர்க்கப்பட்டாள் என்ற உணர்விலும் அமைந்தது. மேலும் தாள நடையும் அதி வேகமாக செல்லும் விதம் அவர்களின் மனோ வேகம் காதலினால் அதிகரித்தது என்ற முறையிலும் காட்சிக்கு எவ்வாறு இசை பொறுத்தமாக அமைந்தது என்று உணரலாம்.

சரி இவ்வளவு விவரங்கள் சொல்லிவிட்டு 'ச ரி க ' பற்றி பேசாவிட்டால் ஒரு குறை தானே!
அதையும் சற்று பார்த்துவிடுவோம்.

பாடல் என்ன ராகம் என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் நாம் செல்ல வேண்டாம். ஆனால் பாடலின் BASIC MELODY என்ன என்று பார்ப்போம். பாடல் ஆரம்பிக்கும் போது சங்கரபரனத்தின் ராக சுரங்கள் போல (அந்த ராகம் என கொள்ள வேண்டாம்) தொடங்கிய MELODY ஒரு SIMPLE TUNE போலவே இருக்கும்., ஆனால் சரணத்திற்கு வரும் போது
'தேவை பாவை பார்வை' என்ற வரிகளுக்கு வரும் சந்தம் 'நி 1" என்று ஸ்வரத்தில் மாறித் தொடங்கி

நீ1 தா2 மா1 கா2 நீ1 தா2 ....(தேவை பாவை பார்வை) என்ற ஸ்வர பிரயோகம் வரும். இம்மாதிரி ஸ்வர பிரயோகம் எல்லோர்க்கும் எளிதில் தோன்றாது. மத்திய ஸ்தாயி (MIDDLE OCTAVE) வில் தொடங்கி வேகமாக கீழிறங்கி மந்த்ர ஸ்தாயியில் (LOWER OCTAVE) நீ1 தா2 என்று முடியும்.

(மந்த்ர ஸ்தாயி EMBOLDEN செய்யபட்டது.)

பிறகு
தத்தன தான
நினைக்க வைத்து
என்ற இடத்தில் மீண்டும் தா2 நீ1 என்ற வந்த வழியில் மேல் ஏறும்.
பிறகு
தானனன தனன நான
என்ற சந்ததிற்கு
நெஞ்சில் நின்று நெருங்கி வந்து

என்ற வார்த்தைக்கு தா2 நீ1 ஸா என்றும் மேலும் ஏறும்.

பிறகு வரும் சந்தம்
தனன தனன நா தான நா தான நா தானே நா
என்ற சந்தத்திற்கு
மயக்கம் தந்தது யார் தமிழோ அமுதோ கவியோ
என்ற வார்த்தைக்கு இசை தா2 நீ1 ஸா
என்று இன்னும் மேலேறி மத்ய ஸ்தாயி (MIDDLE OCTAVE) ம1 வரை சென்று பிறகு
ம1 க2 ரி2 ச என்ற வகையில் சங்கராபரன SCALEஇல் திரும்ப வரும்.

இந்த இடத்தில முக்கியமான இன்னொரு விஷயம். இங்கும் 'மயக்கம்' என்ற வார்த்தை வருகின்றது. விடுவாரா MSV!

இந்த இடத்திலும் ஒரு 'SEMI-TONE-LESS CHROMATIC SLIDE செய்கிறார். சாதரணமாக
'மயக்கம்' என்ற வார்த்தையிலேயே அதை அவர் செய்திருக்கலாம். 'தமிழோ' 'அமுதோ' என்ற வார்த்தையிலும் செய்திருக்கலாம. அங்கும் செய்யாமல் 'கவியோ' என்ற வார்த்தையை செய்தார். அவ்வாறு செய்தது ஏனெனில், கதாநாயகன் தன்னை IMPRESS செய்வதற்க்க்காகக்தான்.

அந்த CHROMATIC SLIDE எப்படி நடக்கிறது என்றால், 'அமுதோ' என்ற வார்த்தை ரி2 என்ற ஸ்வரத்தில் முடிகிறது. எனவே அதை அடுத்து வரும்'கவியோ' என்ற வார்த்தைக்கு ரி2-ரி1 என்ற விதத்தில் செய்கிறார்.

'மயக்கம் தந்தது யார் தமிழோ அமுதோ கவியோ'என்ற வார்த்தைக்கு அவர் செய்த சந்த இசையும் அடுத்த சரணத்தில் வரும்
'கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய நானுரைத்தேன்'
என்ற இசையும் ஒரே வகைதான். 'கவியோ' என்ற வரிக்கும் 'நானுரைத்தேன்' என்ற வரிக்கும் தான் வேறுபாடு உள்ளதை மீண்டும் கூர்ந்து கேட்டல் அறியலாம்.

இந்த பாடலின் YOUTUBE தொடர்பு

http://youtu.be/5JS0fPN3_hA


மேலும் இந்த பாடலுக்கான வார்த்தை இல்லாத KARAOKE வடிவ தொடர்பையும் கொடுக்கிறேன்.

http://youtu.be/7zlcQWrkZe8


இந்த வடிவத்தில் தபலா, மற்றும் ரிதம் கிடார் மட்டும் வருவதை தெளிவாக உணர முடியும்.



அன்புடன்,

N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Wed Mar 13, 2013 6:17 am    Post subject: Pick a song and analyze Reply with quote

Dear Friends,
I cannot add a syllable more to NYM's description of the song 'sippi irukkudhu' from "varumaiyin niram sigappu". But, going by his recall of the then prevalent mode of composing [ MSV- KD SYNERGY], I prefer sharing some inputs. This 'bang of a song' was a polite but powerful reminder of MSV's calibre [for the nth time of course] when the industry was eulogising another MD skyhigh for reasons best known to them alone.
This number kept every listener enthralled even though promotional efforts like 'music album release' and other such gimmicks were not resorted to.

Yet, as NYM has said the song show cased MSV- KD ENSEMBLE'S PROFESSIONAL COMPETENCE IN COMPETITION AND IN NOTCHING UP EVERY OPPORTUNITY TO FORTIFY A SONG, RELEGATING PERSONAL PRIORITIES OF SHOWMANSHIPS LIKE "I did it".

Another small correction I intend to make for NYM's description of a song composition. The scenario with rhythm , percussion , lyric , tune providers at a common spot had its glorious say and stay in the days of MSV -KD and the movie Director /movie makers also physically sat over the issue to precisely induct the feel for the song.

Pizza- like delivery of songs inducted by later MDs has just managed to make Pizzas of songs, in the sense, the product is given with a little or no information on "When, Where ,Who and HOW" of the Pizza's making. Effectively , 'PISASU' is made. Also like Pizza of unknown assemblage, these songs are received fast but they disappear faster.
But, "sippiyum muthum eppodhum jolikkum"

Warm regards. K.Raman Camp: Navi Mumbai.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Wed Mar 13, 2013 9:08 am    Post subject: Reply with quote

This song was broadcast several months before the film was released. (While all along, the AIR would broadcast a song only after a film is released unlike radio Ceylon which had broadcast many songs from yet-to-be-released films, the advent of Vividh Bharathi brought some refreshing flexibility to AIR's approach!)The novelty of the structure and the engrossing melodyof this evergreen song instantly captured the attention of everyone. I can say it was the talk of the town for sometime (at least within the circles I had access to). Other pieces of information like the name of the film and that it was a KB film etc. were known to curious listeners only after a while. It was MSV's rgistering his presence, his competence, hie creative genius and his grandeur with a bang when the attention of the multitude was getting diverted elsewhere. Naturally, people looked forward to seeing the song sequence in the film and KB didn't disappoint them. The song sequence was well conceived and picturized with Kamal and Sridevi giving their best, though the film itself was only average.

The only thing I can add to NYM's nothing-more-left-to-add analysis is Janaki's rendering of the pallavi in a hush hush voice while all along she has been giving the sandhams in a normal and challenging tone. Since the heroine's rendering the pallavi as

சிப்பியிருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது

(the heroine has changed the phrase நேரம் இல்லடி ராஜாத்தி into நேரம் வந்தது இப்போது) is by way of accepting the hero's love, MSV might have wanted to add a note of confidentiality or secretiveness (Traditionally, lovers do not proclaim their love in a loud voice but in a subdued, secret tone) and also an undertone of shyness. After rendering the lines in a hush hush tone, she repeats them in a normal tone with a bang (literally a bang as signified by the tabla note at that point.), since she has become more confident and free of shyness after conveying her mind! Another uniquely- MSV nuance!

The heroine responds to the pallavi that comes before the first charanam with a short humming 'aaaaaa...' which sounds dismissive since she has not accepted or even understood the hero's love at that time. But after hearing the pallavi after the first charanam, she receives it with an appreciative 'aahaahaa.' We can see Sridevi's distinct gestures showing these attitudes. MSV's songs often have rerecording incorporated in them. This is another example of this phenomenon.

MSV uses his favorite whistling but this time in a female's voice which should have momentarily stunned the audience, as it has,the hero.

The long silence towards the end (before the effusive sitar piece) and the heroine's short giggle are the results of team work for which KB also should be given credit. We had missed this in the audio version.

As pointed out by Murali, the line
கவிதை உலகம் கெஞ்சும் உன்னை கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும்
is Kavignar's tribute to MSV.

But the song itself can be taken as a message of Kavignar to the film industry, film critics and other groups:"Here is a pearl called MSV entrapped in the oyster of your ignorance. You have no time to open it and discover its brilliance."
Sadly, the message remains relevant till today.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Wed Mar 13, 2013 10:24 am    Post subject: Reply with quote

Dear Friends,
Thanks for a very nice additional information provided by Prof and Parthavi.
For the better understanding and appreciation of the musical notes movements if this wonderful creation I thought if I could add a video demonstration. The key which played at the start of the paalavi 'sippi' is the aadhara shruthi SATJAMAM. This could enable the readers to understand better, of the movements of musical keys particularly at the sandham 'thevai paarvai paavai' and the melody taking the reverse route at 'ninaikka vaithu' and so on. Thanks to youtube without which we probably would not be able to communicate these facets.

Youtube link

http://youtu.be/8Oy0Ccw5t1I



With Best regards,

N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
V Sivasankaran



Joined: 13 Nov 2008
Posts: 152

PostPosted: Wed Mar 13, 2013 2:34 pm    Post subject: Reply with quote

Dear All,

Muralis splendid analysis and further postings on the same by professor and MR. Parthavi were excellent. Since Mr. Parthavi had conveyed about AIR, i thought it would be worth to inform that AIR did not broadcast PATTU ONNU PADDU THAMBI which is also from the same movie.

The song portraying the travails of unemployed was more than popular. Catchy rythem, good use of trumphet and SPB'S great singing are still in my memory.

Excepting few glaring errors , i have always valued greatly the contribution of AIR towards MUSIC.

V SIVASANKARAN
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group