"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Monkey on my head
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV
View previous topic :: View next topic  
Author Message
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Fri Mar 13, 2015 12:15 pm    Post subject: Reply with quote

திரு சம்பத் அவர்களே.
என்ன ஒரு Coincidence பார்த்தீர்களா! இங்கு Facebookல் ஒருவர் பதித்த எண்ணங்களை நம் தள நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பாருங்கள் அதில் Subhadra Sankar 'கண்கள் இங்கே' பாடலை ஹிந்தோளம் ராகம் என கொள்கிறார். அடிப்படையில் இது சுத்த தன்யாசி என்று தானே நாமெல்லாம் கொள்கிறோம்.

https://www.facebook.com/


The discussion

Quote:
Subadhra Shankar‎M S Vishwanathan Fan Club
24 mins ·
What a musical number in Hinfolam!


Kamatchi Rajavel God. What a song. Unforgettable melodious
15 mins · Like

Subadhra Shankar Hindholam Excuse my wrong fingering!
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Fri Mar 13, 2015 12:25 pm    Post subject: CONFESSIONS OF THE CONFUSED IN PURSUIT OF EXCELLENCE Reply with quote

Dear All,

Coming back to the point of MSV's creations not belonging to the grammar, rules & regulations set by musical teachers of the olden era, again somewhere these arguments & their counters are being exchanged between two individuals, while the majority of our members are keeping quiet in spell bound shock! Either at the stupendous knowledge of two of the most prolific writers of our forum or at the mere stupidity of a few who agree to disagree on most of the inferences. What ever be the cause, for listeners like me (I am sure there are millions in this world), it is the emotion packed music that drives our passion to repeatedly listen over & over again demanding more from this Great Creator.

This is probably one of the main reasons that the entire Carnatic Musician's fraternity started respecting MSV like never before, not for deviating from the annals of the age old traditional musical grammar but how effectively was he able to deliver the same with out any blasphemy whatsoever. MSV's music is hence a feast not only for those who want to do a research (for which MSV himself is an enemy) but also for those who want to live those moments - unmatched mellifluous moments. Frankly, I can't recall or am aware of anyone from the Classical Industry ever refraining from heaping monumental praises on MSV for his unmatched creativity, something considered a near impossibility those days.

By the way, I am not sure in which category we all fall as the learned have chosen to categorise us all as "Idiots" and I am glad that they also have blatantly confessed that they belong to this same set irrespective of their analytical knowledge in music!!!

CHEERS

MSV IS MUSIC!!!

VAIDYMSV

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Fri Mar 13, 2015 2:13 pm    Post subject: Reply with quote

அன்புள்ள தள நண்பர்களுக்கு,
பொது வாழ்வில் ஒரு கற்பனையாளன் ஒரு படைப்பினை உருவாக்கி விட்டால் அது பொது சொத்தாகிவிடுகிறது. எனவே அது பற்றி கருத்து சொல்ல யாவருக்கும் உரிமை உள்ளது. ஆயினும் "இது பற்றிதான் எழதலாம் இது பற்றி எழ்தக்கூடாது" என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இந்த தளத்தின் கட்டுப்பாட்டை மீறாதவரை அனைவரும் அவர் அவர் கருத்துகளை சொல்லலாம். எனவே இது பற்றி ஏன் ஒருவர் அதிர்ச்சி அடையவேண்டும்?

சொல்கிற விஷயம் எல்லோர்க்கும் புரியும் என்று தேவை இல்லை. It is a forum at which we share our experience of listening his music. எனவே புரிந்தவர்கள் இதனை ஒட்டி, ஒத்த கருத்தோ அல்லது மாற்று கருத்தோ சொல்லலாம். இரண்டும் இல்லை என்றல் படித்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் போகலாம். அதுவும் இல்லை என்றால் படிக்காமலும் போகலாம். அது அவர் அவர்களின் சொந்த விருப்பம்.

ஆனால் இவ்வாறு கருத்தே சொல்லகூடாது என்பது புரியாத புதிராக உள்ளது. எனவே இதனை வன்மையாக கண்டிக்க வேண்டும். இது ஏற்கனவே பலமுறை அரிவுறுதப்பட்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் இது போல ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்துக்கொண்டு இருந்தால் அதற்கு என்ன அர்த்தம்?

ஒருவர் தனக்கு புரியாத அல்லது பிடிக்காத விஷயத்தை சொன்னால் நான் ஏற்றுகொள்ள மாட்டேன் என்பது. அதன் காரணம் 'தனக்கு தெரியவில்லையே என்ற ஆதங்கமா? அல்லது தனக்கு தெரியாதது மற்றவருக்கு தெரிந்ததே என்ற போறாமையா? அல்லது மற்றவர்களின் கருத்து பேசப்படுகிறதே என்ற பொறாமையா?

எதுவாக இருந்தாலும் இது கண்டிக்கபடவேண்டியதே.

MSVயே பல முறை சொல்லி இருக்கிறார். இசை அமைப்பாளர்கள் முதலில் கர்னாடக சங்கீதத்தை முறையாக கற்றுக்கொண்டு வாருங்கள் என்று. ஏன்? அவரே முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்ற பின் தானே இசை அமைக்க வந்தார். எனவே அவருடைய படைப்புகளை பற்றி கர்நாடக சங்கீதம் படி மற்றவர்கள் அலச கூடாது என்று ஒரு போதும் அவர் சொல்ல மாட்டார். என்ன? அவரிடம் சென்று உங்கள் கருத்துகளை கூறினால் அவர் அதில் பங்கெடுத்து கொள்ள மாட்டார். அது அவரின் தனிப்பட்ட உரிமை. அதை நாம் மதிக்க வேண்டும். மற்றபடி அவரின் படைப்புகளை பேச கூடாது என்று ஒரு போதும் சொன்னதில்லை.

அவ்வாறு இருந்தால் திரு ராமமூர்த்தி அவர்கள் இந்த பாடல் பற்றி எல்லாம் நிறைய பேசியபோது மேற்சொன்ன கருத்து தடை சொன்னவர்கள் எங்கே போனார்கள்? அவர்கள் திரு ராமமூர்த்திக்கும் கருத்து தடை போடுகிறார்களா?

மேலும் ஒருவர் உண்மையான ரசிகனாக இருந்தால் இது புரிந்தாலும் அல்லது புரியாவிட்டாலும் 'எவ்வளவு விஷயங்களை உள்ளடக்கிய படைப்பாற்றல்' என்று பெருமிதம் தான் அடைவார்.

அதை விடுத்தது இம்மாதிரி கருத்து சுதந்திரத்தை தடை செய்பவர்கள் MSV அவர்களின் பெருமையை விட 'தான் எந்த அளவுக்கு msvஐ ரசிக்கிறேன்' என்பதனை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில்தான் அதிக ஆர்வம் கட்டுகிறார்களோ என்ற சதேகம் எழுகிறது.

Anyway this is complete hypocrisy.
Back to top
View user's profile Send private message Send e-mail
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Fri Mar 13, 2015 8:30 pm    Post subject: Reply with quote

[size=18]DEAR FRIENDS

ITS UNFORTUNATE THAT ANY DISCUSSIONS , WHICH STARTS GOOD IN THIS FORUM SLOWLY TURNS COLORS IN THE MIDDLE AND ENDS SOUR TO ALL OF US

ITS NOT TO ADVISE ANY ONE HERE BUT REMIND ALL OF US ARE MATURED ENOUGH TO UNDERSTAND ACCEPT REVIEWS , CRITICISM AND ONLY THOSE
WHO ARE READY FOR THAT SHOULD COME TO PUBLIC FORUM , IN MY OPINION . WHEN OUR VIEWS ARE NOT ALWAYS ACCEPTED AS IS BY OUR FAMILY MEMBERS , HOW DO YOU EXPECT THAT FROM THE REST OF THE WORLD .

LET US DO AWAY WITH OUR EGOS , MUTUAL DOUBTS , AND NOT SUSPECT OTHERS INTENTIONS - THE REASON

WE ARE HERE BECAUSE WE LOVE MSV AND HIS CREATIONS . AND HENCE LET US GET TOGETHER IN WHATEVER CAPACITY WE CAN TO STRENGTHEN THIS OUT FIT


LASTLY LET US NOT CLASSIFY MSV FANS - MSV FAN IS A MSV FAN THATS IT .THE GREATNESS OF MSV IS PEOPLE AT DIFFERENT LEVELS MENTALLY POSITION WISE ADORE HIM . WE HAVE HIS FANS FROM PRESIDENTS TO COOLYS , FROM GREAT CLSSICAL EXPONENTS TO GNASOONYA PEOPLE LIKE ME. SO LET US TAKE THINGS IN RIGHT PROSPECTS AND CONTINUE THE GOOD WORK ,THANK YOU . [/size]
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Sat Mar 14, 2015 9:28 am    Post subject: Reply with quote

அன்பு முரளி அவர்களே,


மத்ய ஸ்ருதி வைத்து பாடுவது நான் கூறியபடி, நாத நாமக்ரியா, குறிஞ்சி, புன்னக வராளி போன்ற ராகங்களுக்கு இருக்கலாம்.

அல்லது, ஒரே, ராகத்தை சம ஸ்ருதி ( நீங்கள் 'பஞ்சம் ஸ்ருதி' என்று எழுதிகிறீர்கள் - என்னறிவுக்கு எட்டிய வரை பஞ்சம் ஸ்ருதி என்பது எங்கும் குறிப்பிடபடவில்லை) அல்லது மத்யம ஸ்ருதியில் வைத்தும் பாடலாம். இங்கு இது மேற்கூறிய ராகத்திற்குத்தான் பொருந்தும் என்ற நிலையை தாண்டியது. இங்கு, பந்துவராளி உதாரணம். ம to ம , ச to ச ஆகிவிடுகிறது. மேல் மத்யம் வரை உள்ள range கிட்டதட்ட எல்லாராலும் பாடமுடியும்.


கர்னாடக முறை, அல்லது Western அல்லது வேறு எந்த முறையானலும் மத்ய ஸ்ருதியில் ம - சவாகிவிடும். இது science முரளி சார். இதில் நீங்கள் வேறு எந்த முறையாகவும் வைத்துக்கொள்ள முடியாது.

இது நீங்கள் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். . இல்லை, என்னால் ஒத்துக்கொள்ளமுடியாதென்றால் யாரும் ஒன்றும் செய்யமுடியாது.

ஏன், காந்தார, ரிஷப, தைவத, பஞ்சம், நிஷாத ஸ்ருதி எல்லாம் வழக்கத்தில் இல்லை? ஏனைனில், தம்புராவில், ஸ-ப-ஸ என்ற relationship மத்யம ஸ்ருதியில் தான் வரும்...மற்றவையில் வராது. உதாரணத்திற்கு,

ஆதார ஸ்ருதி C என்று வைத்துக்கொள்வோம். பின் G என்பது ப.சரியா.

இப்போது பஞ்சம் ஸ்ருதி (G - ச). பின் D தான் அதன் ப. ஆனால் D note தம்புராவில் சேர்க்கப்படவில்லை. சரியா...

இப்போது கந்தார ஸ்ருதி (E-ச). பின் B தான் அதன் ப. இதுவும் தம்புராவில் சேர்க்கப்படவில்லை. சரியா. புரிகிறதா?

ஆனால், எல்லா ஸ்வரங்களை வைத்து ஸ்ருதிபேதம் பண்ணலாம்.அது வேறு.

இதற்கு மேலும், உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நேரில் தான் explain பண்ணமுடியும்

நன்றி. வணக்கம்

அன்புடன்
சம்பத்


Last edited by S.SAMPAT on Sat Mar 14, 2015 9:46 am; edited 1 time in total
Back to top
View user's profile Send private message Send e-mail
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Sat Mar 14, 2015 9:43 am    Post subject: Re: CONFESSIONS OF THE CONFUSED IN PURSUIT OF EXCELLENCE Reply with quote

Dear Mr. Vaidy.

I have a request for you.


vaidymsv wrote:
,



This is probably one of the main reasons that the entire Carnatic Musician's fraternity started respecting MSV like never before, not for deviating from the annals of the age old traditional musical grammar but how effectively was he able to deliver the same with out any blasphemy whatsoever. ]


Can you list some of the occasions you remember about Carnatic musicians expressing appreciation for MSV either in public or in private. I will be happy to know about these because I am aware of only a few people like Maharajapuram Santhanam, GS Mani, BMK and Aladi Aruna expressing their admiration for MSV.

Recording such instances in this forum will also be appropriate.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Sat Mar 14, 2015 10:09 am    Post subject: Reply with quote

S.SAMPAT wrote:
அன்பு முரளி அவர்களே,


மத்ய ஸ்ருதி வைத்து பாடுவது நான் கூறியபடி, நாத நாமக்ரியா, குறிஞ்சி, புன்னக வராளி போன்ற ராகங்களுக்கு இருக்கலாம்.

அல்லது, ஒரே, ராகத்தை சம ஸ்ருதி ( நீங்கள் 'பஞ்சம் ஸ்ருதி' என்று எழுதிகிறீர்கள் - என்னறிவுக்கு எட்டிய வரை பஞ்சம் ஸ்ருதி என்பது எங்கும் குறிப்பிடபடவில்லை) அல்லது மத்யம ஸ்ருதியில் வைத்தும் பாடலாம். இங்கு இது மேற்கூறிய ராகத்திற்குத்தான் பொருந்தும் என்ற நிலையை தாண்டியது. இங்கு, பந்துவராளி உதாரணம். ம to ம , ச to ச ஆகிவிடுகிறது. மேல் மத்யம் வரை உள்ள range கிட்டதட்ட எல்லாராலும் பாடமுடியும்.


கர்னாடக முறை, அல்லது Western அல்லது வேறு எந்த முறையானலும் மத்ய ஸ்ருதியில் ம - சவாகிவிடும். இது science முரளி சார். இதில் நீங்கள் வேறு எந்த முறையாகவும் வைத்துக்கொள்ள முடியாது.

இது நீங்கள் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். . இல்லை, என்னால் ஒத்துக்கொள்ளமுடியாதென்றால் யாரும் ஒன்றும் செய்யமுடியாது.

ஏன், காந்தார, ரிஷப, தைவத, பஞ்சம், நிஷாத ஸ்ருதி எல்லாம் வழக்கத்தில் இல்லை? ஏனைனில், தம்புராவில், ஸ-ப-ஸ என்ற relationship மத்யம ஸ்ருதியில் தான் வரும்...மற்றவையில் வராது. உதாரணத்திற்கு,

ஆதார ஸ்ருதி C என்று வைத்துக்கொள்வோம். பின் G என்பது ப.சரியா.

இப்போது பஞ்சம் ஸ்ருதி (G - ச). பின் D தான் அதன் ப. ஆனால் D note தம்புராவில் சேர்க்கப்படவில்லை. சரியா...

இப்போது கந்தார ஸ்ருதி (E-ச). பின் B தான் அதன் ப. இதுவும் தம்புராவில் சேர்க்கப்படவில்லை. சரியா. புரிகிறதா?

ஆனால், எல்லா ஸ்வரங்களை வைத்து ஸ்ருதிபேதம் பண்ணலாம்.அது வேறு.

இதற்கு மேலும், உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நேரில் தான் explain பண்ணமுடியும்

நன்றி. வணக்கம்

அன்புடன்
சம்பத்


அன்புள்ள சம்பத் அவர்களே,

மேற்கூறிய விஷயம் குறித்து நான் எந்த தெளிவான முடிவுக்கும் வரவில்லை. எனவே தான் இதன் தலைப்பையே 'Monkey on my head' என்று பெயரிட்டு இருக்கிறேன். எனவே நீங்கள் கூறிய அத்தனை விஷயங்களையும் சீர்தூக்கி பார்க்கிறேன்.

மேலும் நீங்கள் கூறிய 'இது Science' என்பது முற்றிலும் உண்மை. Science என்றும் பொய்க்காது. அவ்வாறு பொய்யானால் அது science ன் தவறு இல்லை. அதை கண்டவரின் தவறு. அவ்வாறெனில் தவறை திருத்திக்கொண்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்து உண்மையை காண வேண்டும்.

எனவே இதனை இந்த நிலையில் நிறுத்திக்கொண்டு. என் தொடர் பதிவினை தொடர்கிறேன். ஆயினும் நீங்கள் கூறிய 'Science' என்ற வார்த்தை accident ஆக வந்தாலும் அதுபற்றித்தான் என் தொடர் பதிவின் 3வது பகுதி அமையும் என்பது நான் ஏற்கனவே தீர்மானித்த ஒன்று.

அங்கங்கே உங்கள் கருத்தகளை தெரிவியுங்கள். நன்றி
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Sat Mar 14, 2015 12:28 pm    Post subject: Reply with quote

" MSV பாடல்களில் 'ஆதார ஸ்ருதி'" - Part 3

என்ன ஆச்சரியம்! இந்த 3வது பகுதியை science மூலம் தான் எழத வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்திருந்தேன். அதற்கு ஏற்றாற்போல் நண்பர் சம்பத் அவர்களும் இது science தான் என்று கூறியது மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

சரி. விஷயத்திற்கு வருவோம். இதுவரை நாம் பார்த்த பஞ்சம ஸ்ருதி அதாவது தம்புராவில் ச-ப-ச அல்லது மத்யம ஸ்ருதி அதாவது ச-ம1-ச என்பது science பிரகாரம் என்ன?

தற்போது உள்ள கரநாடக இசை சுமார் 300 அல்லது 400 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. ஆனால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ் நாட்டில் வழக்கில் இருந்த இசை 'பண்ணிசை' என்பது. அதில் இவ்வாறு பஞ்சம மற்றும் மத்யம ஸ்ருதி பற்றி பேசியிருக்கிறார்கள்.

அவர்கள் கருத்தின்படி பஞ்சம ஸ்ருதி என்பது வலமுறை அதாவது left to right. மத்யம ஸ்ருதி என்பது இடமுறை. அதாவது right to left.

இப்போது இதை ஆராய்வோம்.

ச ரி க ம ப த நி ச என்ற ஸ்வர நிரல் ஆரோஹனம் அல்லது ascending order என்பதை அறிவீர்கள்

அது போல ச நி த ப ம க ரி ச என்பது அவரோஹனம் அல்லது descending order என்றும் அறிவீர்கள்.

இப்போது பஞ்சம ஸ்ருதி அதாவது ச-ப-ச என்பதில் மேற்கூறிய ஆரோகன ஸ்வர நிரலின் 'ச' என்பது துவக்கம். 'ப' என்பது நடு. மேல் ச' என்பது முடிவு. இதை என் கொள்கிறோம் என்றால் பாடுபவரின் குரல் இந்த ஸ்வர நிரலின் தன்மை சிறிதும் மாறாது பாடுவதற்காக ஏற்பட்டது. எனவே இதன் துவக்க-நடு-முடிவு பகுதியினை மனதில் தெளிவாக கொண்டு மற்ற ஸ்வரங்களை பாட வேண்டும். குறிப்பாக அதன் நடு பகுதியான 'ப' என்பதில் கவனம் உள்ளதால் இது பஞ்சம ஸ்ருதி பெயர் பெற்றது என்று என் எண்ணம். அது ஏன் அவசியம் என்று கேட்கலாம். ஒரு உதாரணம் சொல்லுகிறேன். ஒரு கம்பியை எடுத்து கொள்ளுங்கள். அதன் துவக்க பகுதியை எடுத்துக்கொண்டு உயரே தூக்கி பிடித்தீர்கள் என்றால் அது தொய்ந்து வளையும். அதே கம்பியை தொய்யாமல் பிடிக்க வேண்டுமானால் அதன் நடு பகுதியை பிடிக்க வேண்டும். அதுபோல தான் ச-ப-ச விலும்.

சரி இப்போது இந்த பஞ்சம ஸ்ருதி என்பது வலமுறை என்று பண்ணிசையில் இலக்கணம் சொன்னார்கள் என்று பார்த்தோம். அது எப்படி. ஏனெனில்
ச ரி க ம ப த நி ச என்ற வலமுறையில் 'ச' என்ற ஸ்வரத்திற்கு 'ப' என்ற ஸ்வரம் 5வது ஸ்வரமாக வருகிறது.

அப்படி என்றால் மத்யம ஸ்ருதி என்ற இடமுறை என்பது என்ன?

அது ச நி த ப ம க ரி ச என்ற நிரல்தான். இப்போது ஒரு கேள்வி எழலாம். மேற்கூறிய ஸ்வர நிரல் அவரோஹனம் என்று தான் பார்த்தோம். அப்படி என்றால் இது எப்படி இடமுறையாகும் என்றால் இதனை ஒரு உதாரணத்துடன் விளக்கலாம்.

'மோரு போருமோ'

மேற்கண்ட வார்த்தைகளை கவனியுங்கள். இதில் 5 எழுத்துகள் உள்ளன. அதில் 'போ' என்ற எழுத்து தான் நடுபகுதி. எனவே இந்த வார்த்தைகளை இடமிருந்து வலமாக படித்தால் வார்த்தையின் பொருள் புரிகிறது. இவ்வாறு இருப்பது வலமுறை.

இப்போது மேற்கூறிய இதே வார்த்தைகளை வலமிருந்து இடமாக படியுங்கள். அப்போது என்ன வருகிறது?

மோருபோ ருமோ என்று தானே வரும். இந்த வார்த்தையில் பொருள் இருக்கிறதா? எனவே இந்த வார்த்தைகளுக்கு வலமிருந்து இடமாக பொருள் பெற வேண்டுமானால் 'போ' என்ற எழுத்தை இரண்டாவது வார்த்தையுடன் சேர்த்து பேசினால் அப்போது அதன் பொருள் விளங்கும்.

ஆயினும் இது அவரோஹனம் என்ற ச நி த ப ம க ரி ச வுக்கு எப்படி பொருந்தும் என்ற கேள்வி எழலாம். ஒரு நிமிடம் இந்த ச நி த ப ம க ரி ச என்ற அவரோகனதை, ச ரி க ம ப த நி ச என்ற ஆரோகனமாக பாருங்கள். it is just an abstract thinking. அப்போது மேல் சா வுக்கு அடுத்து வரும் நி என்பது 'ரி' என்று கொள்ளத்தானே வேண்டும். அவ்வாறு வரும் போது இதன் தொடர்புகள்

நி-ரி
த-க
ப-ம
ம-ப
என்று வருவதை காண்பீர்கள்.அவ்வாறு வரும் போது, இடமுறையில் 5வது ஸ்வரமாக வருவது 'ம' ஆக இருக்கும். 5வது ஸ்வரம் நடு பகுதி என்ற முறையில் 'ம' என்பது வலமுறையின் ச-ப-ச என்பதற்கு equivalent. அதாவது வலமுறையில் ச-ப-ச என்றால் இடமுறையில் ச-ம-ச


மேலும் வலமுறையில் மற்றும் இடமுறையில்
ப-ம
ம-ப

என்பது ஒன்றுக்கொன்று இட பரிவர்த்தனை பெறுவதை காணலாம். எனவே இட முறையில் 'ம' என்ற ஸ்வரம் 'ப' ஆக கொள்ளபடுகிறது. ஆயினும் அவரோகனதை எப்படி ராகமாக கொள்வது. எனவே அதனை வலமுறையில் மாற்றி அதாவது மீண்டும் ச ரி க ம ப த நி ச என்று மாற்றி ஆயினும் ச-ப-ச என்று கொள்ளாமல் ச-ம-ச என்று கொள்ளவேண்டும்.

இங்கு திரு சம்பத் சொன்னதை பார்ப்போம். அவரின் கருத்து படி, ச-ப என்ற பஞ்சம ஸ்ருதி முறையில் ச என்பது 'ச' வாகவே இருக்கும். ச-ம என்ற மத்யம ஸ்ருதி முறையில், எப்போது ச-ம என்று வந்து விட்டதோ அப்போதே 'ம' என்ற ஸ்வரம் 'ச' ஆக மாறிவிடும் என்பது. அவ்வாறு மாறினால் 'ச' என்ற ஸ்வரம் 'ப' ஆக மாறிவிடும். எனவே திரு சம்பத் சொன்னது எப்போதுமே வலமுறைதான். எனவேதான் சம்பத் சொன்ன முறையில் எப்போது மத்யம ஸ்ருதி வருகிறதோ, அப்போதே 'ம' என்ற ஸ்வரம் 'ச' ஆக மாறிவிடுகிறது.

ஆனால் நான் சொல்ல வருவது ச-ம என்ற இடமுறையில். ச-ம என்பது ச-ம என்றே மாறாமல் இருக்கும்.

அதாவது திரு சம்பத் சொன்னது இசையில் எல்லாமே Clockwise. அது மத்யம ஸ்ருதியாக இருந்தாலும் கூட.

ஆனால் நான் சொல்லவருவது பஞ்சம ஸ்ருதி என்பது வலமுறை. அதாவது clockwise. மத்யம ஸ்ருதி என்பது இடமுறை. அதாவது anticlockwise.

இவ்வாறு இருப்பதற்கான சான்றுகள் இருக்கிறதா என்று கேட்டால் சிலப்பதிகாரத்தில் இருக்கிறது. அதில் மாதவி தன நாட்டிய அரங்கேற்றம் செய்யும் பொழுது இளங்கோவடிகள் கூறும் ஒரு தகவல்.

அந்த பாடலில்
யாழில் பாலை இடமுறை மெலிய
குழலில் கோடி வலமுறை மெலிய'

என்று வருகிறது. இதற்கான விளக்கம். 'பாலை' என்றல் செம்பாலை என்று பொருள் கொள்ள வேண்டும் அதாவது நம் தற்போதைய சங்கராபரணம் ராகம். மேலும் மேற்கூறிய பாடலில் அந்த யாழில் 'ம' தான் முதல் சுரம் என்றும் 'க' என்பது கடைசி சுரம் என்றும் கூறுகிறார்.

மேற்கூறிய பாடலில்
'மேலது உழை கீழது கைக்கிளை' என்று வருகிறது. உழை என்றால் 'ம'. கைக்கிளை என்றால் 'க' அதாவது அந்த யாழில் 'ம' முதல் 'க' வரை நிரல் அமைந்துள்ளது. ஆனால் குழலில் 'ச' முதல் 'நி' வரை சுர நிரல்கள் அமைந்துள்ளன.

இதனை மேலும் தெளிவாக புரிந்து கொள்ள western music முறைப்படியும் ஸ்வரங்களை குறிப்பிடுகிறேன். அதாவது ச ரி க ம ப த நி என்பது C D E F G A B C என்று கொண்டால் யாழில் F முதல் E வரை. குழலில் C முதல் B வரை. இப்போது இருவருமே 'C' என்ற ஆதார ஸ்ருதியில் வைத்துதான் பாடலை வாசிக்கிறார்கள். 'C' என்ற ஆதார ஸ்ருதிவைத்து பாடினால் அது 'சங்கராபரணம்' ராகம் என்று ஆகும். இருவருமே வெவ்வேறு ராகங்கள் ஒரே சமயத்தில் பாடினார்கள் என்பது அர்த்தமற்றதாகிவிடும். யாழ் வாசிப்பவன் 'C' என்ற ஆதார ஸ்ருதியிலேயே வாசிக்கிறான். ஆனால் இடமுறையில் வாசிக்கிறான். அதாவது மத்யம ஸ்ருதி. குழல் வாசிப்பவன் அதே 'C' என்ற ஸ்வரம் வைத்து அதே 'சங்கராபரணம்' ராகத்தைத்தான் தான் வாசிக்கிறான். ஆனால் வலமுறையில். அதாவது பஞ்சம ஸ்ருதியில். யாழ் வசிப்பவன் வாசிக்கும் முறை anticlockwise. குழல் வாசிப்பவன் வாசிப்பது clockwise.

ஆனால் சம்பத் சொல்வது இரண்டுமே வலமுறையில். எனவே இது வேறு வேறு ராகமாக கேட்கும். ஏனெனில் அவர் முறைப்படி ஆதார ஸ்ருதி மாறிவிடுகிறது. ஆனால் நான் சொல்ல வருவது பஞ்சம ஸ்ருதி என்பது வலமுறை. அதாவது clockwise. 'மாதவி பொன் மயிலாள்' என்ற பாடல் ச-ப-ச என்ற பஞ்சம ஸ்ருதியில். அதாவது clockwise முறையில். ஆனால் 'மகாராஜன் உலகை ஆளலாம்' என்ற பாடல் மத்யம ஸ்ருதியில். அதாவது anticlockwise. இந்த இரண்டிலும் இதன் ஆதார ஸ்ருதி என்பது மாறாமல் இருக்கிறது. ஆனால் அதன் திசை அதாவது direction மாறுகிறது.

I hope I have clarified.

இவ்வாறு கொண்டது ஏன்? என்ற கேள்விதான் என் தலையில் ஏறிய குரங்கு. அதற்கும் சில விடைகளை கண்டிருக்கிறேன். ஆயினும் அது சரியா அல்லது தவறா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

அதை பற்றி அடுத்த பதிவில் விளக்குகிறேன்.

இன்னும் வரும்.
Back to top
View user's profile Send private message Send e-mail
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Sat Mar 14, 2015 1:12 pm    Post subject: Reply with quote

அன்பு முரளி அவர்களே,

வலமுறை, இடமுறை என்பது தான், Western Musicல் Circle of 5th என்பது

Clockwise - C G D A E B (வலமுறை)

Anticlockwise- C F Bb Eb Ab Db Gb (இடமுறை)


முரளி அவர்களே, ஒன்றை தெளிவாக்க வேண்டுகிறேன். ஒரு scaleல் அமைந்த பாட்டு,அதாவது சக்ரவாகத்தில், D major வைக்கும் போதும், G major வைக்கும்போதும் ஒன்றாக தொனிக்கிறதா? அல்லது different ஆக தொனிக்கிறதா? இதை முதலில் தெளிவாக்கவும்.
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Sat Mar 14, 2015 3:14 pm    Post subject: Reply with quote

S.SAMPAT wrote:
அன்பு முரளி அவர்களே,

வலமுறை, இடமுறை என்பது தான், Western Musicல் Circle of 5th என்பது

Clockwise - C G D A E B (வலமுறை)

Anticlockwise- C F Bb Eb Ab Db Gb (இடமுறை)


முரளி அவர்களே, ஒன்றை தெளிவாக்க வேண்டுகிறேன். ஒரு scaleல் அமைந்த பாட்டு,அதாவது சக்ரவாகத்தில், D major வைக்கும் போதும், G major வைக்கும்போதும் ஒன்றாக தொனிக்கிறதா? அல்லது different ஆக தொனிக்கிறதா? இதை முதலில் தெளிவாக்கவும்.




அன்புள்ள சம்பத் அவர்களே,

நீங்கள் சொன்னது உண்மைதான். வலமுறை என்பது ச-ப(C-G) உறவு முறையில் cycle of fifth தான். இடமுறை என்பது ச-ம உறவு முறையில்(C-F) . C-G உறவு முறையில் வருவதை sharp scale என்றும், ச-ம உறவு முறையில் வருவதை flat scale என்றுதானே சொல்கிறீர்கள். இங்கு இதனை வலமுறை, இடமுறை என்கிறார்கள். மேலும் western musicல் மொத்தம் 24 scales தானே உள்ளது. அதாவது sharp scales 12 மற்றும் flat scales 12. அதே போல பண்ணிசையிலும் scale என்பதை பாலை என்கிறார்கள். வலமுறையில் 12 பாலைகளும் இடமுறையில் 12 பாலைகளும் ஆக மொத்தம் 24 பாலைகள்.

மற்றுமொரு விஷயம். மேற்கூறிய இந்த பாலைகளை அவர்கள் வட்டப்பாலை என்கிறார். 'ச' தொடங்கி மீண்டும் 'ச' கே வருவதால் இது வட்டம் தானே. மேலும் ச-ப என்ற 2 ஸ்வர உறவுகளை கொண்ட இது வட்டத்தின் விட்டம் தானே. அதாவது diameter. எனவே தான் western musicல் இதனை diatonic scale என்று கூறுகிறார்கள் என்று எண்ணுகிறேன்.

ஒரு ஆச்சரியமான விஷயம். western music போலவே இங்கும் triads பற்றி பேசுகிறார்கள். அதனை அவர்கள் திரிகோணப்பாலை என்கிறார்கள். திரிகோணம் என்றல் triangle தானே. அதாவது 3 சுரங்களின் உறவுகள். மொத்தம் 48 திரிகோணப்பாலை இருப்பதாக கூறுகிறார்கள். நீங்கள் தான் அடிக்கடி கூறுவீர்களே. triads என்பது major, minor, diminished, augment என்று. எனவே ஒரு ஸ்வரத்திற்கு 4 triads என்றல் 12 ஸ்வரத்திற்கு 48 தானே.

அதற்க்கு மேலும் அவர்கள் சதுரப்பாலை என்பதை பற்றி பேசுகிறார்கள். மொத்தம் 98 சதுர பாலைகள் உள்ளதாக கூறுகிறார்கள். சதுரம் என்றால் square தானே. western music படி அது 7th chord ஆகும். அதாவது 4 ஸ்வரங்கள் கொண்ட ஸ்வர உறவுமுறை. ச-க-ப என்ற triadsல் நி1, நி2 என்ற இரண்டு combination சேர்த்தால் 48 triadsx2 வீதம் மொத்தம் 96 square அதாவது சதுர பாலைகள் உள்ளன.

இதனை ஒரு பாடலின் மூலம் அவர்கள் விளக்குகிறார்கள்.

ஆயத்துக்கு ஈராறு அறு நான்கு வட்டம்
ஏயும் கோணத்துக்கு இரட்டிப்பு
தூய விசைக்கும் அதில் இரட்டிப்பு
என்பது இந்த பாடல். அதில் ஆய பாலை என்பது இசை இலக்கணம் வருவதற்கு முன்பு ஆயர்கள் கொண்ட 12 ஸ்வரங்களை ஒவ்வொன்றையும் ஆதாரமாக வைத்து வருவது.

இது பற்றி பண்ணிசையை ஆராயும் அறிஞர்களுக்கு இதுவரை ஒன்றும் தெரியவில்லை என்பது முக்கியம். இன்னும் திரிகோணம், சதுரம் என்றால் என்ன என்பதில் மண்டையை போட்டு உடைத்து கொள்கிறார்கள். ஆனால் MSVஇன் இசை மூலமாகவே இதை நான் அறிந்தது. அவருக்கு கோடி நமஸ்காரங்கள்.

சரி நீங்கள் சொன்ன 2வது கேள்விக்கு பதில். ஒரு நிமிடம் சக்ரவாகத்தை மறந்துவிட்டு கரஹரப்ரியாவுக்கு வாருங்கள். ஏனெனில் அங்கு 'D' க்கு 'D' minor மற்றும் அதன் மதயமமான் 'G' MAJOR வருவதால் குழப்பம் நேரிடாது. சக்ரவ்கத்தில் இரண்டுமே MAJOR.

எனவே கரஹரப்ரியா படி 'D' ல் அமைந்த பாடலுக்கு 'D' minor வரவில்லை. 'G' MAJOR தான் வருகிறது. ஆயினும் அது ஹரிகம்போஜியாக இல்லாமல் கரஹரப்ரியாவாக கேட்பதற்கு காரணம் this is in anticlockwise. clockwise என்றால் நீங்கள் ஆதார ஸ்ருதியை கர்னாடக சங்கீத படி 'D லிருந்து 'G' க்கு மாற்றி விடுகிறீர்களே.

நன்றி
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Sat Mar 14, 2015 3:40 pm    Post subject: Reply with quote

S.SAMPAT wrote:
அன்பு முரளி அவர்களே,

வலமுறை, இடமுறை என்பது தான், Western Musicல் Circle of 5th என்பது

Clockwise - C G D A E B (வலமுறை)

Anticlockwise- C F Bb Eb Ab Db Gb (இடமுறை)


முரளி அவர்களே, ஒன்றை தெளிவாக்க வேண்டுகிறேன். ஒரு scaleல் அமைந்த பாட்டு,அதாவது சக்ரவாகத்தில், D major வைக்கும் போதும், G major வைக்கும்போதும் ஒன்றாக தொனிக்கிறதா? அல்லது different ஆக தொனிக்கிறதா? இதை முதலில் தெளிவாக்கவும்.




அன்புள்ள சம்பத் அவர்களே,

நீங்கள் சொன்னது உண்மைதான். வலமுறை என்பது ச-ப(C-G) உறவு முறையில் cycle of fifth தான். இடமுறை என்பது ச-ம உறவு முறையில்(C-F) . C-G உறவு முறையில் வருவதை sharp scale என்றும், C-F உறவு முறையில் வருவதை flat scale என்றுதானே சொல்கிறீர்கள். இங்கு இதனை வலமுறை, இடமுறை என்கிறார்கள். மேலும் western musicல் மொத்தம் 24 scales தானே உள்ளது. அதாவது sharp scales 12 மற்றும் flat scales 12. அதே போல பண்ணிசையிலும் scale என்பதை பாலை என்கிறார்கள். வலமுறையில் 12 பாலைகளும் இடமுறையில் 12 பாலைகளும் ஆக மொத்தம் 24 பாலைகள்.

மற்றுமொரு விஷயம். மேற்கூறிய இந்த பாலைகளை அவர்கள் வட்டப்பாலை என்கிறார். 'ச' தொடங்கி மீண்டும் 'ச' கே வருவதால் இது வட்டம் தானே. மேலும் ச-ப என்ற 2 ஸ்வர உறவுகளை கொண்ட இது வட்டத்தின் விட்டம் தானே. அதாவது diameter. எனவே தான் western musicல் இதனை diatonic scale என்று கூறுகிறார்கள் என்று எண்ணுகிறேன்.

ஒரு ஆச்சரியமான விஷயம். western music போலவே இங்கும் triads பற்றி பேசுகிறார்கள். அதனை அவர்கள் திரிகோணப்பாலை என்கிறார்கள். திரிகோணம் என்றல் triangle தானே. அதாவது 3 சுரங்களின் உறவுகள். மொத்தம் 48 திரிகோணப்பாலை இருப்பதாக கூறுகிறார்கள். நீங்கள் தான் அடிக்கடி கூறுவீர்களே. triads என்பது major, minor, diminished, augment என்று. எனவே ஒரு ஸ்வரத்திற்கு 4 triads என்றல் 12 ஸ்வரத்திற்கு 48 தானே.

அதற்க்கு மேலும் அவர்கள் சதுரப்பாலை என்பதை பற்றி பேசுகிறார்கள். மொத்தம் 96 சதுர பாலைகள் உள்ளதாக கூறுகிறார்கள். சதுரம் என்றால் square தானே. western music படி அது 7th chord ஆகும். அதாவது 4 ஸ்வரங்கள் கொண்ட ஸ்வர உறவுமுறை. ச-க-ப என்ற triadsல் நி1, நி2 என்ற இரண்டு combination சேர்த்தால் 48 triadsx2 வீதம் மொத்தம் 96 square அதாவது சதுர பாலைகள் உள்ளன.

இதனை ஒரு பாடலின் மூலம் அவர்கள் விளக்குகிறார்கள்.

ஆயத்துக்கு ஈராறு அறு நான்கு வட்டம்
ஏயும் கோணத்துக்கு இரட்டிப்பு
தூய விசைக்கும் அதில் இரட்டிப்பு
என்பது இந்த பாடல். அதில் ஆய பாலை என்பது இசை இலக்கணம் வருவதற்கு முன்பு ஆயர்கள் கொண்ட 12 ஸ்வரங்களை ஒவ்வொன்றையும் ஆதாரமாக வைத்து வருவது.

இது பற்றி பண்ணிசையை ஆராயும் அறிஞர்களுக்கு இதுவரை ஒன்றும் தெரியவில்லை என்பது முக்கியம். இன்னும் திரிகோணம், சதுரம் என்றால் என்ன என்பதில் மண்டையை போட்டு உடைத்து கொள்கிறார்கள். ஆனால் MSVஇன் இசை மூலமாகவே இதை நான் அறிந்தது. அவருக்கு கோடி நமஸ்காரங்கள்.

சரி நீங்கள் சொன்ன 2வது கேள்விக்கு பதில். ஒரு நிமிடம் சக்ரவாகத்தை மறந்துவிட்டு கரஹரப்ரியாவுக்கு வாருங்கள். ஏனெனில் அங்கு 'D' க்கு 'D' minor மற்றும் அதன் மதயமமான் 'G' MAJOR வருவதால் குழப்பம் நேரிடாது. சக்ரவ்கத்தில் இரண்டுமே MAJOR.

எனவே கரஹரப்ரியா படி 'D' ல் அமைந்த பாடலுக்கு 'D' minor வரவில்லை. 'G' MAJOR தான் வருகிறது. ஆயினும் அது ஹரிகம்போஜியாக இல்லாமல் கரஹரப்ரியாவாக கேட்பதற்கு காரணம் this is in anticlockwise. clockwise என்றால் நீங்கள் ஆதார ஸ்ருதியை கர்னாடக சங்கீத படி 'D லிருந்து 'G' க்கு மாற்றி விடுகிறீர்களே.

நன்றி
Back to top
View user's profile Send private message Send e-mail
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Sat Mar 14, 2015 4:16 pm    Post subject: Reply with quote

அன்புள்ள முரளி அவர்களே,


இப்பொது, ஒரு பாடல், C majorல் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

இந்த scaleக்கு உண்டான chords C major, G major, G7, F major, A minor, D minor , E minor and B diminished (இதை விட்டு விடுங்கள்). இதில் நீங்கள் அந்தந்த ஸ்வரங்களுக்கு உண்டான chords use பண்ணுவதால் scale change ஆகாது. உதாரணத்திற்கு, ம,த,ச சம்பந்த பட்டவை வந்தால் F major use செய்யலாம். ப நி ரி சம்பந்த பட்டவை வந்தால் G major use பண்ணலாம். ரி,ம,த வந்தால் D minor, த,ச, க வந்தால் - A minor use பண்ணலாம். இதனால் C scale மாறிவிடாது.

ஆனால், நீங்கள் கூறியது ஆதார ஸ்ருதியாக, F major ஆக வைத்தால் C major (சங்கராபரணம் ஸ்கேல்) கல்யாணியாகிவிடும். இல்லையெனில், கேட்டு பழகி போன சங்கராபரணமே (F - சா மனம் எடுத்துக்கொள்வதால்), கல்யாணி சாயலில் different ஆகக்கேட்கும். சொல்லப்போனால், சங்கராபரணம் ஹிந்துஸ்தானி பிலவாலாகக்கேட்கும். இதனால் தான் உங்களுக்கு கரகரப்ரியா ஒரு ஹிந்துஸ்தான் காபி மாதிரி கேட்கிறது. இதை பல முறை சொல்லிவிட்டேன். ஆனால், நீங்கள் கூறியதையே, கூறிக்கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் வாதத்திற்கே மீண்டும் வருகிறேன். எதற்காக, சம ஸ்ருதியில் அமைந்த பாடலுக்கு (இந்த ராகம்/ஸ்கேல் - நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமான்ய ராகம் அல்ல. இது nornmal சம்பூர்ண ஸ்கேல்) மத்ய ஸ்ருதியில் வைக்கவேண்டும். அந்த ஸ்கேலுக்கு ஒரு different color /சாயம் தொனிக்கவேண்டும் எங்கின்ற காரணித்தினால் தானே?? இல்லாவிடில் சம ஸ்ருதியிலே பாடிவிடலாமே. மத்ய ஸ்ருதியில் ஒரே ராகம் different ஏன் கேட்கிறது என்பதற்கே, நான் சொன்னவிளக்கம் ...

மேலும் ஒரு உதாரணம் கொடுக்கிறேன். "அந்தி மழை பொழிகிறது" என்ன ஸ்கேல்.. சிலருக்கு பந்துவராளியாகக்கேட்கும். சிலருக்கு வஸ்ந்தா சாயல் வரும். சிலருக்கு பந்துவராளியே different ஆகக்கேட்கும். இது நீங்கள் கூறும் ஸ்ருதி வேறுபட்டால் தான். நான் கொடுத்த விளக்கம் ஏன் ஒரே ஸ்கேல் ஏன் வேறுபட்டு கேட்க வேண்டும் என்பதற்கே. நான் கூறுவது தான் நடக்கிறது முரளி . Please, இப்பொதாவது நான் சொல்வதை நம்புங்கள்.


நான் இதைக் கூறினால், தற்பெருமையாகப்போய்விடும். ஆனாலும் நீங்கள் என்னைச்சொல்ல வைத்து விட்டீர்கள். சொல்லிவிடுகிறேன். ஒரு கச்சேரி sub main ஆக பந்துவராளி ராகம் பாடினேன். வயலின் வித்வான் (Graded Artist of AIR) ராகம் வாசித்தார். பாட்டு நின்னு நேர நம்மி நானுரா. அதே கச்சேரியின் முடிவிலே, மத்யம ஸ்ருதியில் அதே பந்துவராளி ராகம் பாடினேன். வயலின் வித்வான் ராகம் வாசிக்க மறுத்துவிட்டார். ஏனைனில், மத்ய ஸ்ருதியில் பந்துவராளியின் கமகங்கள் அவருக்கு வேறாகக்கேட்டன. அது, சம ஸ்ருதியில் Dwi-madhyama ராகமான "சூர்யஸ்ரீ" ஆகும். ஷோபனே - த்யாகராஜ ஸ்வாமி பாட்டு பாடி கச்சேரி முடித்தேன். அங்குள்ள வித்வாங்கள் எல்லாம் அசந்து போனார்கள்.
Back to top
View user's profile Send private message Send e-mail
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Sat Mar 14, 2015 5:40 pm    Post subject: Reply with quote

அன்பு முரளி அவர்களே,


குழல் வாசிப்பவன் - C D E F வாசித்திருந்தால்,

யாழ் வாசிப்பவன் என்ன வாசித்திருப்பான்?

மேலும் இங்கு, C தான் ஆதார ஸ்ருதி என்று சொல்லப்பட்டுள்ளதா? இல்லை நீங்கள் கூறுகிறீர்களா?
Back to top
View user's profile Send private message Send e-mail
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Sat Mar 14, 2015 5:52 pm    Post subject: Reply with quote

முரளி அவர்களே,

நீங்கள் எழுதிய போஸ்டை delete செய்துவிட்டீர்களா என்ன?
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Sat Mar 14, 2015 6:20 pm    Post subject: Reply with quote

Mr. Sampath,
Yes. I have deleted that post. There are some corrections. Please bear with me for some time. I shall correct it and post it again. Sorry.


Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6  Next
Page 3 of 6

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group