"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Health of Shri Msv
Goto page Previous  1, 2
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Speak to Members, Introduce Yourself, Discuss any topic of your interest, Fun, Puzzles, Riddles, Games
View previous topic :: View next topic  
Author Message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Wed Jul 08, 2015 4:43 pm    Post subject: Reply with quote

UPDATE Mellisai mannars health 8/7 9.30 am
Good morning to all .Met mellisai manner again this morning .When I was standing little far as thought he was sleeping .he woke up called me close with his usual Vanga when I enquired about his health ippo paravaa illaiya.he nodded his head .When the assistant asked whether he would sing mannar with usual mischievous ippovaa appuram padaren endrar .meanwhile his doctor came he surprised doctor in his trade mark pitch vaanga vaanga .I am writing so elaborately to all of you understand he is on recovery path .and we continue our prayers vigorously for his quick return .thank you all
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Thu Jul 09, 2015 12:45 am    Post subject: Reply with quote

Dear Sir,
Excellent news!! It gives us courage and confidence! Thanks a lot for this reassurance by reproducing the words that he spoke this day....
Regards and joining with prayers,
Sai
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Thu Jul 09, 2015 7:15 am    Post subject: Reply with quote

UP DATE
8/07/15 9 PM
எல்லா வல்ல இறை அருளாலும், உங்கள் அனைவரின் அன்பு ப்ராத்தனைகளாலும், மெல்லிசை மன்னர் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் அடைந்துவருகிறார் .

மிகவும் உற்சாகத்துடன் . கிட்டத்தட்ட 60 வருடங்களாக தமிழ் மக்கள் உள்ளங்களை தன வசம் வைத்திருக்கும் இசை சக்ரவர்த்தி , இன்று தனக்கு மருத்துவ சேவை புரிபவர்களின் விருப்ப பாடல்களைப பாடி பரவசப படுத்தியுள்ளார் .

மிக உற்சாகத்துடன் இருக்கிறார் . அதனால் அவரை சுற்றி உள்ள அனைவருக்கும் அந்த உற்சாகம் தொற்றிகொண்டுள்ளது .மற்ற நோயாளிகள் உட்பட , ஏனென்றால் அவர்களுக்கு மருந்துடன் மெல்லிசை மன்னரின் இசைத தேன் கொடுக்கப்படுகிறது அல்லவா

நம் பிராத்தனைகள் தொடரட்டும். மெல்லிசை மன்னர் உத்வேகம் பெறட்டும் , நமக்கு இன்னும் இசைஅருளைத தரட்டும்

கோடி நன்றி இறைவனுக்கு
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Thu Jul 09, 2015 3:43 pm    Post subject: Reply with quote

Thanks for the update VK. Great to hear the news, which is really heartening.

எந்த நோயையும் விரைவில் குணப்படுத்த MSVஇன் பாடல்களைக் கேட்பதைவிட சிறந்த மருந்து எதுவும் இருக்க முடியாது.

Hope and pray our Master returns home very soon.

Regards,
Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Thu Jul 09, 2015 3:46 pm    Post subject: Reply with quote

News item in today's Daily Thanthi:

சென்னை,

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சினிமா இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், இன்னும் ஒரு வாரத்தில் வீடு திரும்புவார் என்று அவருடைய மகன் எம்.எஸ்.வி.கோபி தெரிவித்தார்.

மூச்சுத்திணறல்

சினிமா இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் சில வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பிறகு அவர் பூரண குணம் அடைந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர், சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். சிகிச்சைக்குப்பின், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜா ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று எம்.எஸ்.விஸ்வநாதனிடம் உடல் நலம் விசாரித்ததுடன், அவருக்கு தன் வீட்டில் இருந்து சாப்பாடு வரவழைத்து ஊட்டியும் விட்டார்.

பி.வாசு-நடிகர் சிவகுமார்

டைரக்டர் பி.வாசுவும் ஆஸ்பத்திரிக்கு சென்று எம்.எஸ்.விஸ்வநாதனிடம் உடல் நலம் விசாரித்தார். நடிகர் சிவகுமார் போன் மூலம் எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல்நிலை பற்றி விசாரித்தார்.

விஸ்வநாதனின் உடல்நிலை பற்றி அவருடைய மகன் எம்.எஸ்.வி.கோபி, ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

ஒரு வாரத்தில்...

‘‘அப்பாவின் உடல்நிலையில், இப்போது முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு 87 வயது நிறைவடைந்து, 88 வயது நடக்கிறது. பார்வையாளர்களை தவிர்க்கவும், நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இன்னும் ஒரு வாரத்தில், சிகிச்சை முடிந்து அப்பா வீடு திரும்புவார். அதுவரை ஆஸ்பத்திரியிலேயே தங்கியிருப்பார். அவருடைய உடல்நலத்தில் அக்கறை கொண்டு விசாரித்தவர்களுக்கு நன்றி.’’

இவ்வாறு எம்.எஸ்.வி.கோபி தெரிவித்தார்.

Regards,
Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Thu Jul 09, 2015 3:59 pm    Post subject: Reply with quote

This is from today's Hindu Tamil. Please see our VK's comments too:

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article7402204.ece?homepage=true&css=print

Regards,
Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Thu Jul 09, 2015 4:11 pm    Post subject: Reply with quote

UPDATE:
09.07.2015 .. 9.30 A.M. MET MELLISAI MANNAR WHO SPOKE SWEETLY I ASKEDHIM WHEN HE IS GOING TO SING FOR US. REFERRING HIS KUTCHERIS TO STAFFS HE SAID EPPO VAANA. I SAID ONCE YOU GET OUT FROM THIS, HE SHOULD SING FOR US. HE SAID OK ND TALKED ABOUT PEOPLE VISITED AND FANS PRAYERS. HE LOOKED AT TOP AND THANKED ALL. OUR PRAYERS CONTINUE...
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Thu Jul 09, 2015 9:03 pm    Post subject: Reply with quote

Dear sirs,
What a satisfaction to hear his words! It is also important that authentic information is published in the media and thanks to VK sir for that!
With prayers,
Sai
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sat Jul 11, 2015 4:51 pm    Post subject: Reply with quote

நாளைய கூட்டு ப்ராதனைக்கான சுலோகம் . இதை பின் பற்றுபவர்கள் பின் பற்றலாம் அல்லது அவரவர் முறைப்படி பிராத்தனை செய்யலாம்
முகமதிய மய்ற்றும் கிருஸ்தவ நண்பர்கள் அவரவர் மத கோட்பாட்டின் படி இறை வேண்டுதலை தொடரலாம்
நாளை காலை 9 மணி துவக்கம் -
நன்றிகள் பலப்பல
நமது பிராத்தனைகள் அவரின் உடல் நலம் முன்னேற ஒரு காரணம் . இந்த பிராத்தனை அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்ப
அஸ்மிந் பராத்மாந் -நநு பாத்மகல்பே
துவமித்தம் உததாபித -பத்மயோநி:1
அநந்த பூமா - மம ரோகராஷீம்
நிருந்த்தி - வாதாலய வாஸ விஷ்ணோ11
ஸ்ரீ நாராயணீயம்
8 வது தசகம் கடைசி சுலோகம்
காஞ்சிபரமாச்சாரியார் இதே ஸ்லோகத்தை பக்தர்கள் 45 நாட்களுக்கு 108,64,32 அல்லது 16 முறை சொல்லிவந்தால் மஹாரோகங்களிடமிருந்து குணமடையும் என்று அருளியுள்ளார்

ஸ்ரீ கோவிந்த தாமோதர சுவாமிகள் 1956 இல் மிகுந்த வயிற்று வலியால் சிரமப்படும் போது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னபோது ,ஒரு நாள் இரவு முழுவதும் ஸ்ரீ குருவாயுரப்பனை திணித்து கொண்டு மேற்கண்ட ஸ்லோகத்தை விடாமல் சொல்லிக்கொண்டு இருந்து விட்டு மருத்துவரிடம் போனாராம் ..

ஸ்ரீ கோவிந்த தாமோதர சுவாமிகள் தன வாழ்நாள் முழுவதும் ஸ்ரீமந் நாராயணத்தை பாராயணம் செய்து வந்து அதன் பெருமைகளை தன்னிடம் வருபவர்களிடம் சொல்லுவது வழக்கம்

ஒவ்வொரு வருடமும் கோகுலாஷ்டமி சமயத்தில் மஹா பெரியவர் முன்னிலையில் ஸ்ரீமத் பாகவத சப்தஹா மூலஸ் பாராயணமும் உபன்யாசமும் 1973 முதல் 1991 வரை கூறும் பெரும் பாக்கியம் பெற்றவர்

thanks to v kannan iyer : a note on Shri Narayeeyam:

நாராணயப்பட்டத்திரி என்ற மிகச்சிறந்த ஞானியும் கவிஞருமானவரால் நாராணீயம் எழுதப்பட்டது.

அக்கால மக்களின் குரு பக்தியும் தியாகமும் தெய்வ பக்தியும் நம்மை சிலிர்க்க வைக்கிறது.

நாராயணப்பட்டத்திரி சமஸ்கிருதம், தர்க்கம், வியாகர்ணம், வேதம் முதலியவற்றை அச்சுத பிஷாரோடி என்ற பெரியவரிடம் கற்றார்.

நல்ல திடகாத்திரமாக இருந்த அந்த மகா பண்டிதருக்கு திடிரென முடக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர் நிற்கவும் நடக்கவும் முடியாமல் துன்பப்பட்டார்.

குருநாதரின் இந்த துயரம் நாராயண பட்டத்திரியின் மனதை கசக்கி பிழிந்தது. குருவினுடைய முடக்குவாத நோய் எனக்கே வரட்டும். அவருக்காக வேதனை அனுபவிப்பதே நான் அவருக்கு கொடுக்கும் குரு தட்சனையாக இருக்கட்டும் என்று சங்கல்ப்பித்து நோயை தன் உடம்பில் வாங்கி கொண்டார்.

பட்டத்திரியின் தியாகம் வியாதிக்கு தெரியவா போகிறது. தான் திண்ண ஆரம்பித்திருப்பது குழந்தையின் உடலா. கிழவனின் உடம்பா என பார்க்கவா செய்யும்.

நாராயணப்பட்டத்திரியும் கசக்கி பிழியப்பட்டார். கடைசியாக கொடுமை தாங்காது கேரள நாட்டு பெருக்கவிஞரும் பக்தருமான துஞ்சத்து ராமானுஜ எழுத்தச்சன் என்பவரிடம் நிவாரணம் கேட்டார்.

எழுத்தச்சனோ மீனில் துவங்கி அதை தின்று விடு என பூடகமாக சொன்னார். எழுத்தச்சனின் பூடக மொழி நாராயண பட்டத்திரிக்கு தெளிவாக தெரிந்தது.

மச்சவாதாரம் துவங்கி கல்கி அவதாரம் வரை ஒரு காவியம் படைக்க தான் பணிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார்.

நாராணீயம் என்ற அமரகாவியம் பிறந்தது. நாராணீயத்தின் ஒவ்வொரு செய்யுளையும் குருவாயுரப்பன் முன்னிலையில் உருவாக்கிய பட்டத்திரி கவிதையின் முடிவில் இப்படி நடந்ததா குருவாயுரப்பா என கேட்பார். அதற்கு உலகை அளந்த எம்பெருமான் ஆமாம் என தலையசைத்தாராம்.

தனது பெருமையை தானே கேட்டு கடவுளே தலையசைத்தான் என்றால் நாராணீயத்திற்கு வேறு பெருமை எதற்கு.

மண்ணை உண்ட கண்ணனின் திருவிளையாடலை ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட கவிதைகளாக பாடினார். அதை நூறு தசாங்கங்களாக்கி பாகவதத்தின் சாரத்தையே பிழிந்து கொடுத்தார்.

நாராணீயத்தின் கடைசி பாடல் பூலோக மக்கள் எல்லாம் ஆயுளும் ஆரோக்கியமும் பெற வேண்டும் என குருவாயூர் அப்பனை பிராத்தனை செய்து முடிக்கிறது.

இந்த நூலில் பிரம்மன் தவம், வைகுண்ட தரிசனம், உலகத்தின் தோற்றம், படைப்பின் வகைகள், கபிலர் அவதாரம், தட்சன் யாகம், துருவன் சரித்திரம், பிரிதுவின் மோட்சம், பார்க்கடல் கடைதல், மோகினி மற்றும் வாமன் அவதாரம், பலியை அழித்தல், கம்பசன் சரித்திரம், பரசுராம கிருஷ்ண அவதாரம், சகடா சூரன்,சுதர்சன கம்ச முக்தி, ருக்மணி திருமணம், குருஷேத்திர யுத்தம், சுதாமர் மார்க்கண்டேயன் கதை என ஏராளமான சுவையான விஷயங்கள் பேசப்படுகின்றது.

இன்று கூட நாராணீயத்தை முழுவதுமாக ஓதுவதால் தீராத நோய் எல்லாம் தீருவதாக நம்பப்படுகிறது.


.
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Speak to Members, Introduce Yourself, Discuss any topic of your interest, Fun, Puzzles, Riddles, Games All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2
Page 2 of 2

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group