"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

The 4th Dimension

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
Srinivass NV



Joined: 12 Feb 2007
Posts: 86
Location: Hosur

PostPosted: Tue Apr 24, 2007 9:12 pm    Post subject: The 4th Dimension Reply with quote

Claimer : The forthcoming Article is fully an outcome of my 'Thought-Process'... THIS GREAT WEBSITE IS NOT RESPONSIBLE FOR THE INFORMATION & CONTENT OF THIS ARTICLE in any way. This article intends to focus on the uncomparable 'Might' of the 4th Dimension of existence...'THE TIME'. In the process of manuscripting, I sincerely wish, I have not wounded the feelings of any individual or a Group. I apologize, if I would have done it even unintentionally. References to the generalistic characters / roles in the artistic society, have been done with an intention of explaining the subject rather than offending any individual.

நான்காவது பரிமாணம் : காலம்

முப்பரிமாணங்களை உள்ளடக்கிய இந்த வாழ்க்கையில் நான்காவது பரிமாணமான காலத்திற்கு மிகப் பெரியதொரு செல்வாக்கு உண்டு. காலச்சக்கரம், சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கியதற்கும், அவற்றை வெவ்வேறு காலக்கட்டங்களில் வேரறுத்ததற்கும் சாட்சியங்கள் தேவையில்லை!... குப்பை மேடுகளுக்கும் கோபுர அந்தஸ்து தரும் வல்லமை காலபுருஷனுக்கு மட்டுமே உரித்தாக இருந்து வந்திருக்கிறது...

மூடனுக்கும் யோகம் வந்தால்
மூவுலகம் வணக்கம் போடும்...


1980-களில் கவியரசு கண்ணதாசன் இவ்வரிகளை எழுதிய போது, முப்பதே ஆண்டுகளுக்குள் இவ்வரிகளுக்கான 'முழு உதாரணங்கள்' ஏராளமாக நம் கண்களின் முன்னே முளைத்துக் கூத்தாடிக்கொண்டிருக்கும் என்று யாரும் எண்ணிப்பார்த்திருக்க இயலாது... கவிஞனின் வாக்கு பொய்க்கவில்லை!...

இரண்டு வரி தொடர்ச்சியாக எழுதத் தெரிந்தவர் எழுத்தாளர்!... எழுத்தை அவர் ஆளவேண்டுமென்ற அவசியமில்லை...

முக்கி முக்கி மோனையுடன் எழுதிவிட்டால்?...கவிஞர்!... இலக்கணம், இலக்கியம், சொற்சுவை, பொருட்சுவை, இவையனைத்தும் இவர்களின் வசதிக்கேற்ப வளைக்கப்பட்டாயிற்று...

இப்படி முக்கியதை, ஏற்ற இறக்கத்துடன் படித்து விளம்பரப்படுத்திக் கொள்ளத் தெரிந்தவர் கவிகளில் சிறந்தவர்!... அவ்வாறு படிக்கப்பட்டது வசன நடையில் இருந்தாலும் பரவாயில்லை...

இத்தகைய வரிகளுக்கு வாத்திய முலாம் பூசுபவர் இசையமைப்பாளர்!... சத்தமிருந்தால் போதும்...சந்தமிருக்கவேண்டிய அவசியமில்லை...

எழுத முக்கியவர் கவிஞரென்றால்...எழுதியதை முக்கியவர் பாடகர்... 'இவர் முக்கிய புள்ளி' என்ற சொற்றொடருக்கு இனி அகராதியில் வேறொரு அர்த்தமும் காணலாம்!...

இப்படிப் புற்றீசல் போலப் புறப்பட்டுவிட்ட இந்த விட்டில் பூச்சிகளையும்கூடப் புகழ்ந்து ரசிக்கவென்று பரிதாபத்துக்குரிய ஒரு ஜனநாயக மந்தை!... இவனென்ன செய்வான்!?... இவன் வீட்டுக் கழிவறையில் இருக்க வேண்டிய பொருட்களைக் கூட இவன் காணும் விளம்பரங்கள் தானே இன்று நிர்ணயம் செய்கின்றன!?... விளம்பரப்படுத்தப்படுவது பொருட்களாக இருந்தாலும், புருஷர்களாக இருந்தாலும், ஈர்க்கப்படும் ஈக்களுக்கு பஞ்சமா இங்கே?

தமிழ் வாழத் தார் பூசிய மறத்தமிழன் இன்று தமிழ்ப்(படும்)பாட்டால் தார் பூசப்பட்ட மரத்தமிழனாக கைபிசைந்து நின்றுகொண்டிருக்கிறான்!...

கண்ணனுக்கு தாசனே!... நீ எங்களுக்கு தந்திருப்பது வரமா...சாபமா?...

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா,... என்கிற இந்த நூற்றாண்டின் மரியாதைக்குரிய திரையிசை வரிசையைத் திரும்பிப்பார்க்கிறேன்... திரையிசை, தன் பொற்காலப் பெருவாழ்வை மகாதேவன் என்கிற மாமனிதனில் தொடங்கி, விஸ்வநாதனில் வரலாறு காணாத விஸ்வரூபமெடுத்து, இளையராஜாவில் இறங்குமுகமாகி இப்போது இருந்த இடம் தெரியாமல் தொலைந்து போயிருக்கிறது. அங்கே திருவான்மியூரில் இசையின் ஸ்வரூபம் இளைப்பாறிக்கொண்டிருக்க, இங்கே ஓசைகள் உலகாண்டுகொண்டிருக்கும் அவலத்தையும் ஓசையின்றி நிகழ்த்தியிருக்கிறது காலம்!... ஓசைகள் உலகாள்வதுகூட என்னை வதைக்கவில்லை... யுகங்களுக்கொருமுறை மட்டுமே தோன்றும் எம்.எஸ்.வி போன்ற மாமேதைகளுக்கு இந்த சமுதாயம் காட்டிக்கொண்டிருக்கும் கண்ணியமற்ற அலட்சியம்தான் என்னை வதைத்துகொண்டிருக்கிறது!...

கல்தரையில் கைபோட்டு நீந்துகின்ற மனிதா!...
காலமிட்ட கட்டளையை மாற்றுவது எளிதா?...
- கண்ணனுக்கு தாசன் கண்சிமிட்டி என்னை ஏளனப்படுத்துவது போலத் தோன்றுகிறது...

உயிரோடு இருந்த போது பாரதியை உப்புக்கும் அரிசிக்கும் அலைய விட்டு, பின்னர் அவன் மரணித்ததும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்த மஹா கனம் பொருந்திய (மண்டையில் மட்டும்) கனவான்களைக் கொண்டது நம்முடைய உயர்ந்த பாரம்பர்யம் என்பதை நானறிவேன்!... பாரதி ஒரு சிறு முன்னுதாரணமே!... அவனுக்கு முன்னும் பின்னுமாகப் பலப்பல பெருமக்களுக்கு இந்த சமுதாயம் காட்டியுள்ள, காட்டிகொண்டிருக்கும், காட்டப்போகும் கண்ணியம் இவ்வளவே!...

இத்தனை அவலங்களையும் அரங்கேற்றிக்கொண்டிருக்கும் காலமென்ற சர்வவல்லமை பொருந்திய அரசியல்வாதி, தன் காய்களை நகர்த்துவதன் பின்னணியில் ஏதேனும் இலக்கணம் இருந்திருக்குமோ?... யோசித்துப் பார்க்கிறேன். அறிவியலின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட விஷயமாகத் தோன்றுகிறது. சோதிட சாஸ்திரத்தில் ஏதேனும் விடையிருக்குமோ என்று ஆராய்ந்து பார்க்க முற்படுகிறேன்... இந்தத் தேடலின் பின்னணியில் இருப்பது ஒரு சிறு வேட்கை... அவ்வளவே!

சோதிட சாஸ்திரம் :

இன்றைய அளவுகோல்களின் படிப்பார்த்தால், ஐந்து விரல்களில் குறைந்த பட்சம் ஆறு மோதிரங்களையாவது அணிந்திருப்பவரே "அஸ்ட்ராலஜர்"... அவ்வகையில் எனக்கு அவ்வரிசையில் கடைசியிலும்கூட இடம் கிடைக்காது!... எனினும் சோதிடக் கலையைப் பற்றியதான என் சிற்றறிவின் துணைக்கொண்டு, எனக்குத் தெரிந்தவரை மேற்கொண்டு தொடர முற்படுகிறேன்.

சோதிட சாஸ்திரத்தில், இந்தத் தொடருக்கு மிகவும் தொடர்புடைய மூன்று கோள்கள் உள்ளன. சுக்ரன், புதன், சந்திரன்...ஆகிய இம்மூன்று
கோள்களும், முறையே இசை, கவி, கற்பனை ஆகிய மூன்று பிரிவுகளை (Departments-ஐ) ஆளும் அதிகாரம் பெற்றவை. ஒரு உன்னதமான கவிஞனின் ஜாதக அமைப்பில், புதன் - சந்திரன் தொடர்பு மிகவும் பலமாக அமைந்திருக்கும். அதுபோல, ஒரு உன்னதமான இசைப்படைப்பாளியின் ஜாதக அமைப்பில், சுக்ரன் - சந்திரன் தொடர்பு மிகவும் பலமாக அமைந்திருக்கும்.

பி.கு : விதிகள் இரண்டு

1. மேற்சொன்ன அமைப்புகள், இசையும் கவிதையும் கற்பனையில் அருவியாகக் கொட்டும் MSV, Kannadasan இவர்களைப் போன்ற உன்னதமான படைப்பாளிகளுக்கு மட்டுமே பொருந்தும்... பூங்காவில் புல்தேய நடந்து வார்த்தைகளைக் கோர்க்கும் கோமகன்களுக்கோ, அல்லும் பகலுமாக keyboard-ஐ பிராண்டிப் பிராண்டி ஓசைகளைப் பதிவு செய்துகொண்டிருக்கும் ஒலிப்பதிவாளர்களுக்கோ (Meesic Directors) இவை பொருந்தாது!...

2. ஒருவருக்குக் கிடைக்கும் சமூக அங்கீகாரமும் செல்வமும், மேற்சொன்ன அமைப்புகளால் நிர்ணயம் செய்யப்படுவதில்லை!... அவர்களது புகழ், செல்வம் ஆகியவை, அவர்களது ஜாதக அமைப்பின்படி, அது சம்பந்தமுள்ள மற்ற கோள்களின் வலிமையை ஒட்டியே அமைகின்றன. எனவே, இன்றைய நிகழ்க்கால உலகில் பலருக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரத்தின் அளவிற்கும் அவர்களது திறமைக்கும் சம்பந்தமிருக்கத் தேவையில்லை என்பதை உன்னதமான சோதிடக் கலை தெளிவாக்குகிறது. உலகெங்கும் பரவி இருப்பதால், 'உலகப்புகழ் பெற்ற எய்ட்ஸ் நோய்!' என்று சொல்வது புகழுக்குரியதாகுமென்றால், இவர்களும் புகழுக்குரியவர்களே!...

தொடருக்கு வருவோம்!...

இப்படி, சுக்ரன் - சந்திரன் தொடர்பு மிகவும் பலமாக அமைந்திருக்கும் ஒரு மாமனிதனின் வாழ்க்கையில், சுக்ரனின் ஆளுமைக்குரிய காலம் (சுக்ர தசை) வருமேயானால், அந்த சுக்ர தசை முழுவதும் (20 வருடங்களுக்கு) அவன் நல்லிசையைப் படைக்கும் பாக்கியம் பெறுகிறான். இந்த காலக் கட்டங்களில், இசை அவனிடம் பிரவாகிக்கும் என்பது உத்தரவாதம். கோடிக்கணக்கான மாந்தர்களில், ஒருசிலருக்கே வாய்க்கும் பணி இது!...

சோதிட இலக்கணப்படி பார்த்தால், இந்த 20 வருட வரம்பைத் தாண்டி, முப்பது வருடங்களுக்கு மேல் இசைத்துறையை ஆண்ட ஒரே சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன் என்கிற இசைவிந்தை மட்டுமே!... இளையராஜா என்கிற இசை மேதையின் சகாப்தம்கூட, பறைசாற்றிக் கொள்ளும் அளவிற்கு ஏறக்குறைய 20 வருடங்களுக்கு மட்டுமே நீடித்து இருந்திருக்கிறது!...

இவ்விடத்தில் ஒரு Logical Derivation-ஐ சொல்ல விரும்புகிறேன்...

Equation 1 : ஒரு இசைப்படைப்பாளிக்கு சுக்ரன் - சந்திரன் இந்தக் கோள்களின் பலமான அமைப்பு அவசியம்...

Equation 2 : அப்படி, பலமான சுக்ரனின் தசை அந்த மேதையின் வாழ்க்கையில் வந்தால், அவன் பிரவாகித்து இசையுலகை சர்வ நிச்சயமாக ஆள்வான்

Equation 3 : அவ்வாறு அவன் ஆளும் காலம் குறைந்தது 20 வருடங்களாவது இருக்கும் (அவன் உயிரோடு இருக்கும் பட்சத்தில்)

Inference : மேற்சொன்ன வாக்கியங்களின் படி, குறைந்தது 18 ~ 20 வருடங்களாவது ஒருவன் இசையுலகில் பிரவாகிக்கவில்லை என்றால், அவனுக்கு சுக்ரபலமில்லை என்றே அர்த்தம். அவ்வாறு சுக்ரபலமில்லாதவன், சோதிட இலக்கணப்படி இசைஞானியாக நிச்சயம் இருக்க முடியாது!...

ஞானமற்றவனின் இசை ஊனமுற்றதே!...

அவன் இசையமைக்கவே முடியாது என்றோ, அவ்வாறு அவன் இசையமைத்ததில் ஒன்றிரண்டு கூட தேறாது என்றோ நான் சொல்லவில்லை...அவன், இசையைப் பிரவாகமாகத் தரமுடியாது என்று சொல்கிறேன். ஒரு திருக்குற்றாலத்திற்கும் தெருவோரப்பூங்காவின் நடுவில் வழியும் செயற்கை நீர்வீழ்ச்சிக்கும் உள்ள வித்தியாசமிது!...

அப்படி, 20 வருடங்கள் பிரவாகிக்கும் ஒரு இசைமேதை, அந்த காலக்கட்டதிற்குப் பிறகு பிரவாகிப்பதில்லையா?... பதில் எனக்குப் பிடிபடவில்லை!... சரித்திரம் உணர்த்தும் ஒரு உண்மை நினைவுக்கு வருகிறது...

'தேவை' (Demand) என்பது 'இருப்பை' (Supply) எப்போதெல்லாம் சந்தித்திருக்கிறதோ, அப்போதெல்லாம் 'வெற்றி' (Success) விளைந்திருக்கிறது;

ஒருவேளை...

மக்களின் தரத்திற்கேற்ப தேவையின் தரம் தாழும் காலக்கட்டங்களில், மேதைகள் ஒதுக்கப்படலாம்!...

வாழ்வென்றும் தாழ்வென்றும்
வளமென்றும் குறைவென்றும்
சக்கரம் சுழல்கின்றது - அதில்தான்
சரித்திரம் இருக்கின்றது....

யாருக்கும் வாழ்வுண்டு
அதற்கொரு நாளுண்டு
அதுவரை பொறுப்பாயடா - மகனேயென்
அருகினில் இருப்பாயடா!...


- அன்னை மஹாசக்தி, கவி காளிதாசனை நோக்கிப் பாடுவதாகப் இந்தப் பாடல் அமைந்திருக்கிறது.

பாடப்பட்ட திரைப்படம் 'மகாகவி காளிதாஸ்'...படைத்த கவிஞன் யாரோ யானறியேன்!... சொல்லியது மட்டும் உண்மை என்கிறது உள்ளுணர்வு...

தாயே!... நீ சொல்லியது போல் உன்னருகினில், காலம் வரும்வரை காத்திருக்க நான் தயார்... இன்னொரு விஸ்வநாதனைப் படைக்க நீ தயாரா?


அன்புடன்
_________________
NVS
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Wed Apr 25, 2007 4:35 pm    Post subject: Reply with quote

அன்புள்ள என்.வி.எஸ்

"தாயே உன் காலருகில் நான் காலமெல்லாம் காதிருக்க தயார் .. நீ ஒரு விஸ்வநாதனைக் கொடுக்கத்தயாரா ?"

விழியில் நீர் வழிய இவ்வரி படித்தேன்.

"இந்த விஸ்வநாதனை மறுபடி இசை உலகுக்கு கொடு" - இது என் முறையீடு .. அந்த இறையிடம்.

எழுதிக்கொண்டே இருங்கள், என்விஎஸ்.

ராம்கி
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Wed Apr 25, 2007 6:40 pm    Post subject: THE GREATEST TRIBUTE TO OUR LEGEND Reply with quote

Dearest NVS,

I consider your writing as THE GREATEST TRIBUTE / REVERENCE ONE COULD PAY TO OUR LEGEND. Each & every line of your writing has proved to this world to what extent Music (especially TFM) has detiorated to - Melody has become Malady, Music has become Meesic.......and what not. It's a shame in deed. I thank the Almighty for having given us MSV without whom I hate to imagine the Music scenario itself! If it warrants a penance for another reincarnation / rebirth of MSV, NVS just count on me at any place in this universe any time!!!

I was talking to a good friend of mine some months back and during the conversation with him I mentioned "I really don't know how we could cope up the days after MSV, he replied to me saying - first of all why to think and even if anything had to happen, we have His Music to live with! How true NVS, Our Master's Music is here to stay for, both MSV and his music are Immortal. I personally feel that the so called (lousy) changes this TFM is going thro' is something that we hate to see or talk about. I am absolutely comfortable if someone doesn't talk about MSV's music, but for God's sake refrain from talking about Meesic!!!!

CHEERS NVS & GREAT WRITING MY MENTOR!!! YOUR WRITING IS AS ENJOYABLE AS OUR LEGEND'S MELODIES!!! MOOOOOOOOOOOOORRRRRRRRRE PLLLLLLLLLLLLLLLLLLEASE......


MSV SCORES FOREVER
VAIDY

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Fri Apr 27, 2007 4:33 am    Post subject: Great Writing! Reply with quote

Great writing, dear NVS! Your quality writings add value to this website!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
Srinivass NV



Joined: 12 Feb 2007
Posts: 86
Location: Hosur

PostPosted: Fri Apr 27, 2007 9:59 am    Post subject: Thank you! Reply with quote

Dear Ramki Sir & Ram,
Thank you very much for the encouragement. In fact, without you and the great people behind the formulation of this WebFamily, I would not have had an opportunity to adore the deity of Music...the true credit goes to all those who have toiled to host this Forum.

Thank you so much...

Disclaimer : If at all any thing commendable has been found in this article, it is to the credit of our beloved Vaidymsv. To confess.. this article found its inspiration subseq to a telephonic conversation with Mr.Vaidy about MSV!...

With Love
_________________
NVS
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group