"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

EM ULLAM URUKKIYA "PONNOOSAL"

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV
View previous topic :: View next topic  
Author Message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Sun Aug 12, 2007 1:44 pm    Post subject: EM ULLAM URUKKIYA "PONNOOSAL" Reply with quote

[எம்.எஸ்.வி. டைம்ஸ். காம்.
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.


Last edited by msvramki on Wed Aug 15, 2007 11:22 am; edited 2 times in total
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Sun Aug 12, 2007 2:29 pm    Post subject: Reply with quote

[color=darkblue]எம் உளம் உருக்கிய " பொன்னூசல்"
========================

"பொன்னூசல் " - தேவார, திருவாசகங்களின் இசை வடிவம்.

மூன்றாண்டுகளுக்குமுன், ராஜா அண்ணாமலை மன்றத்தில், மெல்லிசை மன்னருக்கு 'தமிழ் இசைப்பேரறிஞர்" பட்டம் வழங்கப்பட்ட அன்று, எம்.எஸ்.வி யின் மேடை இசை நிகழ்ச்சியில் முதன் முதலாக ஓரிரு பாடல்கள் கேட்டேன். அன்று முதல் நானும், என் மனைவி, குடும்பத்தினரும் இப்பாடல்களுக்கு அடிமை.

அன்றுதொடங்கி, இந்த இசை நாடா தேடி கடைகடையாக அலைந்து, பின் அண்ணாமலைமன்றத்திலேயே விசாரித்து, எப்படியோ வாங்கி, கேட்டோம், கேட்டுக்கொண்டு இருக்கிறோம், கேட்டுக்கொண்டே இருப்போம். ஒவ்வொரு பாடல்களும் மணிமணியாக உள்ளத்தை உருக்குபவை.

கண்ணதாசன் - விசு பற்றி, அவர்கள் தந்த இறவாப்பாடல்கள் பற்றி பலர், முதலில் வந்தது பாடலா, இல்லை டியூனா என்று விவாதித்துக்கொள்வதை நிறையக்கேட்டிருக்கிறோம் ( இறுதியில் இரண்டும் ஒன்றுக்குள் ஒன்று முடிவுக்கு வருவார்கள் !)

ஆனால் இந்த தேவார, திருவாசகத்தைப்பொருத்தவரை அந்த தர்க்கத்துக்கு இடமே இல்லை ! என்றோ எழுதப்பட்ட இறைப்பாடல்களுக்கு இன்று இசை வடிவம் கொடுத்துள்ளார் மெல்லிசை ம்ன்னர். அது எப்படி வார்த்தைகள் இசைக்கு அவ்வளவு கச்சிதமாகப் பொருந்தின ? யாரும் பதில் சொல்ல முடியாத கேள்வி !
ஏனெனில் சரஸ்வதி தேவி விசுவை தன் மடியில் கிடத்தி அவரை வீணையாக வாசித்து, அவர் மூலம் வந்ததல்லவா எம்.எஸ்.வி யின் இசை !!

ஒவ்வொரு பாடல்களுக்கும் முகவுரை வழங்கும் பேராசிரியர் திரு. ஞானசம்பந்தரின் தமிழும் கருத்தும் வெகு அழகு !

திரு. ஞானசம்பந்தர் பற்றி எம்.எஸ்.வி அவர்கள் ஒரு முறை கூறியது :

" பேராசிரியருக்கு இரு கண்களும் தெரியாது. பாடல்களின் இசையமைப்பு எல்லாம் முடிந்தபின், பேராசிரியர் என் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு கண்ணீர் ததும்ப கூறினார் :
' விஸ்வநாதா ! நீ எப்படி இருப்பாய் என்று நான் பார்க்கமுடியாது. ஆனால் நீ அளித்த இந்த தெய்வீக இசைக்கு, உன் பத்து விரல்களுக்கும் வைர மோதிரம் போடவேண்டும் என்று என் ஆசையப்பா ! "

இது கேட்ட நான், என் மனைவி, வைத்தி, ராம், எம்.எஸ்.வி யின் மனைவி அனைவரும் விம்மி அழுதது வாழ்நாளில் என்றும் மறக்கமுடியாது.

எங்களை ஆட்கொண்ட இப்பாடல்கள் சிலவற்றை ஒவ்வொன்றாக இத்தளத்தில் இயன்றவரை அலச ஆசை !!

தொடர்வேன்.

ராம்கி.[/color]

_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Wed Aug 15, 2007 10:59 am    Post subject: Reply with quote

..
அன்புள்ள ராம்

உன் LAPTOP ரெடியானதும் கீழே கொடுதுள்ள பாடல்களை இத்தளத்தில் ஏற்றவும்.

நிறைய நண்பர்கள் இந்த பாடல்களை கேட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால் ( என் முகவுரைக்குப் பதில்கள் ஏதும் வராததே அதற்கு அத்தாட்சி !)!, அந்த பாடல் 'லிங்க்' உடன் எழுதினால் நன்றாக இருக்கும்.

1. வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் ( டி.எல். மகராஜன்)
2. அன்னம்பாலிக்கும் தில்லைச்சிற்றம்பலம் (எஸ்.பி.பி)
3. எந்த மாதவம் செய்தனை நெஞசமே (எஸ்.பி.பி)
4. மெய்தான் அரும்பி ( மெல்லிசை மன்னர்.)

ராம்கி.

_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Fri Aug 17, 2007 1:56 pm    Post subject: Reply with quote

நான் மேற்சொன்ன பாடல்களை ராம் தளத்தில் ஏற்றும் முன்,
இன்னொரு செய்தி, இப்பாடல் பற்றி - நம் மாஸ்டர் சொன்னது :
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group