"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

SAVAALE SAMAALI

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Movies - A Special Section!
View previous topic :: View next topic  
Author Message
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Fri Oct 05, 2007 6:22 pm    Post subject: SAVAALE SAMAALI Reply with quote

சவாலே சமாளி

Every one of us know well this is the 150th movie of the Great Nadigar Thilagam and was well expected by fans and cine goers. It was produced by ‘Malliyam Productions’ with the co-support of Gemini Movies. Story and Dialogues written by Malliyam Rajagopal and Directed by him. Songs written by great Kannadasan and title song was written by Malliyam Rajagopal (‘annai boomi endru mannai’), Music by another great ‘Mellisai Mannar’ M.S.V.. Camera handled by one more great A.Vincent.

As it is a village subject, it was fully shot in Malliyam village, which was new for that time. Story is not a new one, the subject (panakkAra thimir pdiththa pennai adakkuvathu) is already handled in several movies, but the method of taking it was little different and interesting.

The introduction of Nadigar Thilagam (hereafter NT ) will be different.
First his voice will come (pointing Nambiar)
“சொரணை கெட்ட மாடு, சொல்ல சொல்ல கேட்காம வயல்ல இறங்குது. ஊதை வாங்கிட்டுதான் கரை ஏறும் போல இருக்கு”.

His father V.S.Ragavan will call “டேய் மாணிக்கம்”

Then suddenly show Shivaji inside the field (from low angle) with the dialogue “புடிடா மாட்டை”.

Same like this, when NT meet Jayalalitha in the village railway station. Jeya will call “டேய்’, suddenly NT will turn from his newspaper and will surprise on seeing Jaya’s attractive face. Again Jeya “என்ன மொறைக்கிறே, நீதான் புதுசா வந்கிருக்கிற வேலைக்காரனா?. லக்கேஜ் எடுக்க ஏன் வரலை? என்ன கொழுப்பா?”

NT will reply “ஆமா, நீ பிரியாணி செஞ்சு போட்டீல்ல..! அந்த கொழுப்பு”.

From the very beginning when NT (Manickam) see Jaya (Sakunthala) , he fell in affection with her, but not able to deliver. But at the same time Jaya is insulting him whenever there chances come. When he is receiving her from railway station, she is insulting him, and as the result he leaves her in halfway and her dresses fall in mud.

When Pannaiyar (T.K.Bagavathy) and his son Nambiar discussing about how to bring Manickam under their control, there comes Nagesh (Chinnappannai) gives idea to crush VSRaghavan to return the loan he got from them for his daughter’s (Vijayakumari) marriage. If he is not able to return, ask his son Manickam to work in their farm. On hearing this idea from his father’s mouth, NT gets angry and he never agree to work in their farm. When the quarrel between father and son reaches the extreme, Vijayakumari (Kaveri) remove all her jwells and brings to NT to sell them and return back Pannaiyar’s loan. On seeing this NT gets shocked ("ஏம்மா, உன் வாழ்க்கைதான் மூளியா போச்சுன்னு கவலையோட இருக்கேன். இப்போ உன்னையுமா மூளியா பார்க்க சொல்றே..?. உனக்காக… உனக்காக அவங்க பண்ணையில் வேலை செஞ்சு அவங்க கடனை அடைக்கிறேன்")

In an Pongal festival, when the farm workers are enjoying by singing and dancing, Jeya comes there, and on seeing her NT started the song . ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம் வரும் தெரிஞ்சிக்கோ..தெரிஞ்சிக்கோ.. தெரிஞ்சிக்கோ After the song finished, there is a conversation between NT and Jaya and at the end of that, Jaya raises her hand to beat NT and NT catches her hand.

In continuation of this incident, on the next day morning, when NT goes to tale the ‘kalappai’ from pannaiyar’s house there is a fight between Jaya’s bother Nambiar (Rajavelu) and Shivaji (Manickam), which was then parted by TKB and VSR. There NT challenges “இப்பதான்டா நீங்க ஒரு சரியான எதிரியை தேடிக்கிட்டிருருக்கீங்க.”. On the opposite of this NT’s fathers V.S.Ragavan (KannAyiram) is doing more or less a slavery work for the ‘Pannaiyar family’.

In the meantime there comes the Panchayath Board election and NT decided to contest against Pannaiyar. When they conduct a meeting in the village temple regarding this, NT challenges that he is going to contest against Pannaiyar. The dialogues between Chinnappannai Nagesh and NT will be more interesting.

நாகேஷ்: “மகா ஜனங்களே, நம்ம ஊர் பஞ்சாயத்து எலெக்ஷன்ல வழக்கம்போல நம்ம பெரியபண்ணை நிற்கிரார். வழக்கம்போலவே யாரும் அவரை எதிர்த்து நிக்க மாடீங்கன்னு நினைக்கிறேன்”

சிவாஜி: நான் நிக்கிறேன்”

நாகேஷ்: “யாருப்பா அது..? வெளியூரா..? அடடே மாணிக்கமா.. என்னப்பா சொல்றெ நீ?”

சிவாஜி: "நான் அவரை எதிர்த்து இந்த தேர்தலில் நிக்கப்போறேன்னு தமிழ்லதான் சொல்றேன்"

நாகேஷ்: " அவரை எதிர்த்து யாரும் நிக்கிறது வழக்கமில்லப்பா"

சிவாஜி: "அப்படீன்னா ஒவ்வொரு தடவையும் அவங்களே நின்னிக்குவாங்க. அவங்களே ஜெயிச்சுக்குவாங்க. அப்படித்தானே?"

நாகேஷ்: "ஆமாம்ப்பா அதுதான் வழக்கம்".

சிவாஜி: இந்ததடவை கண்டிப்பா நான் நிக்கத்தான் போறேன்.

நாகேஷ்: ஏம்ப்பா யார் யாரு எலெக்ஷன்ல நிக்கறதுன்னு ஒரு தராதரம் இல்லையா?. பையில இருபத்தஞ்சு ரூபா வச்சிருக்கிறவன் எல்லாம் எலெக்ஷன்ல நிக்கணுமா?. சரி அப்படி நின்னு நீ தோத்துட்டா நீ இந்த ஊரை விட்டே போகணும். சம்மதமா?

சிவாஜி: "நான் தோத்துட்டா இந்த ஊரை விட்டே போகணும், அவரு தோத்துட்டா என்ன செய்வாருன்னு சொல்லலியே".

நாகேஷ்: " சரி அவர் தோத்துட்டா மொட்டை அடிச்சிக்குவாரு. போதுமா?"

சிவாஜி: "ஓகோ, நான் தோத்துட்டா இந்த ஊரையே இழக்கணும், ஆனா அவர் தோத்தா கேவலம் 'இதை'த்தான் இழப்பாரா?"

நாகேஷ்: "என்னப்பா நீ, அதுக்காக அவரையும் ஊரை விட்டு துரத்த முடியுமா?. அவர் என்ன உன்னை மாதிரி அன்னாடம் காய்ச்சியா? அவருக்கு இங்கே நிலபுலம் எல்லாம் இருக்கு. சரி அவர் தோத்தா ஒரு ஐநூறோ ஆயிரமோ பனம் கொடுப்பாரு. வாங்கிக்க".

சிவாஜி: "சே... யாருக்கு வேணும் இந்த பிச்சை காசு"

நாகேஷ்: "யோவ்... இந்தக்காலத்தில் யாருய்யா ஐநூறு, ஆயிரம் பிச்சை போடுறான்?. சரி மொத்தமா ஒரு ரெண்டாயிரம் தருவார். அதை வச்சு பஞ்சாயத்து போர்டு ஆபீஸ் பக்கத்திலேயே ஒரு பெட்டிக்கடை வச்சு கடன் கொடுக்காம பொழைச்சுக்கோ".

சிவாஜி: "அவருடைய தகுதிக்கும் தராதரத்துக்கும் இது சரியான் போட்டியா தெரியலையே".

நாகேஷ்: "என்ன நீ, எதுக்குமே கட்டுப்பட மாட்டேங்கிறே?. பணம் கொடுக்காம, பின்னே அவரு பொண்ணையா உனக்கு கொடுப்பாரு?"

சிவாஜி: "ஆங்... அப்படி செஞ்சாருன்னா அது ஓரளவுக்கு சரியா இருக்கும்'.

நாகேஷ்: "சரிய்யா.. அதுவே சவால்".

(நாகேஷ் சொல்லும் இந்த வார்த்தைதான் கதைக்கே பெரிய முடிச்சு)

The dialogue will go in a jovial way but at the same time, very powerful to move the story in its way. The word from Nagesh only made NT to catch the point to marry Jaya. Dialogues are one of the main reasons to move the story well.
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Fri Oct 05, 2007 6:32 pm    Post subject: Reply with quote

சவாலே சமாளி (PART - 2)

Eye catching camera work by Vincent will cover the village in a pleasant way. Especially the lighting work which gives the night effect very nicely for the song “nilavaip pArththu vAnam sonnathu ennai thodAthE”. Nadigar Thilagam will come in full movie only with ‘vEshti-sattai’ , with very nice make-up and Hair-Style. We can see several scenes for his family attachment with his mother Gandhimathi, sister Vijayakumari and with father VSR also. The first scene he will be talking with his mother politely and enquiring about Vijayakumari. On knowing that she has gone to meet her husband Muthuraman (Marimuthu) his face expression will suddenly change to the anger one and shouting his mother, why she sent her there. (Shivajikku idhellAm summa jujubi).

Throughout the movie his action will be wonderful to watch and all other actors/actresses also done their part well. Especially Jayalalitha. It will be little doubt whether any other heroine will suit for that roll this much.

Regarding songs by Kannadasan and music by MSV சொல்லனுமா?. பிண்ணி எடுத்திருப்பாங்க. Particularly in the song

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கெது சொந்த வீடு
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு


the preludes and interludes are somewhat well advanced and well suited for the situation. Through this song P.Suseela madam got the National Award for the second time. (First time from ‘Uyarndha Manithan’ another rock from ‘Mellisai Mannar’).

The next song

ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம் வரும்
தெரிஞ்சிக்கோ..தெரிஞ்சிக்கோ.. தெரிஞ்சிக்கோ
சேனை பரிவாரத்துடன் சீமான் போல் வாழ்ந்தவனும் எவனும் இல்லை
தெரிஞ்சிக்கோ..தெரிஞ்சிக்கோ


teasing Jayalalitha in the Pongal vizA.

The third one, the very situationed song

நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிழலைப்பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
நதியைப்பார்த்து நாணல் சொன்னது என்னை தொடாதே
நாளைப்பார்த்து இரவு சொன்னது என்னை தொடாதே

புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல்தானது
திருநீலகன்டனின் மனைவி சொன்னது

தாளத்தை ராகம் தொடாத போதிலே
கீதத்தை நெஞ்சம் தொடாமல் போகுமே
தந்தை தன்னையே தாய் தொடாவிடில்
நானும் இல்லையே இங்கு நீயும் இல்லையே

தங்கம் எடுத்த கை தங்கம் பார்த்ததா
தர்மம காத்த கை சமதர்மம் கண்டதா
ஆலயம் செய்வோம் அங்கே அனுமதியில்லை
நீ அந்த கூட்டமே இதில் அதிசயம் இல்லை


Terrific power packed lines from the great Kaviyarasar Kannadasan. Wonderful tune and composing by Mellisai Mannar . (Speciality is the Frog sound, which gives midnight effect).

Another song by Suseela and LREswari, which showed as Jayalalitha is thinking about both side of her decision
என்னடி மயக்கமா சொல்லடி Both were sung well according to their own style of expression.

Muthuraman’s roll eventhough a small one but very excellent and he done it well (Same like his Anandh roll in Sivandha Mann). Nambiar, asusaul villain. அவரே நடந்து நடந்து பழகிப்போன பாதை. நன்றாகவே பண்ணியிருந்தார்.. The dangerous man is Nagesh . konjam asandhAl pOthum, he will steal the show.

Totally this movie “SAVAALE SAMAALI” is a combination of entertainment, family oriented, emotional, sentimental movie, which we can enjoy in repeated times.

This movie was released on 3rd July 1971 and ran well more than 100 days. In Chennai it was released at Shanthi, Crown, Bhuvaneswari and run 107 days, but lifted for release of Babu, even with reasonable crowd. It also run more than 100 days in Madurai Devi, Trichy Prabhat, Salem Jeya and Kumabakonam Noor-Mahal (now name changed as Selvam).
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Fri Oct 05, 2007 6:42 pm    Post subject: Reply with quote

"சவாலே சமாளி" (PART - 3)

மடலின் நீளம் கருதி பல காட்சிகளைக் குறிப்பிட விட்டு விட்டேன். ஆனால் நினைத்துப் பார்க்கும்போது அதில் வரும் ஒவ்வொரு காட்சியும் எந்த அளவு மெருகேற்றப்பட்டிருந்தது என்று வியக்கத் தோன்றுகிறது. குறிப்பாக காட்சிகளில் வரும் வசனங்கள். (நான் குறிப்பிட ம‌றந்த இன்னொரு அருமையான கதாபாத்திரம் எஸ்.வரலட்சுமி).

காந்திமதி வீட்டில் ஜெயலலிதா மோர் சாப்பிடும் காட்சியில் ஜெ.யின் முகபாவம் அருமை (உண்மையில் அவர் மோர் அருந்தமாட்டார். சிவாஜி முகத்தில் அபிஷேகம் பண்ணி விடுவார்).

சிற‌ப்பான‌ வ‌ச‌ன‌ங்க‌ளில் சில‌ இட‌ங்க‌ள்:
தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடத்துக்கு வரும் நாகேஷ், இன்னும் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்த்ததும்..

“ஏம்ப்பா... எண்ண முடியலையா, எண்ணி முடியலையா?. என்ன முடியலை?" என்று கேட்கும் இடம்.

தேர்த‌லில் மாணிக்க‌ம் (சிவாஜி) வெற்றி பெற்ற‌தும் ஊர்வ‌ல‌மாக‌ வ‌ரும் கூட்ட‌ம், பண்ணையார் (டி.கே.ப‌க‌வதி) வீட்டின் முன் உட்கார்ந்திருக்க‌, அந்நேர‌ம் பார்த்து ச‌ம்ப‌ந்தி வீட்டுக்கார‌ர்க‌ளை அழைத்து வ‌ரும் ந‌ம்பியார், கூடியிருக்கும் கூட்ட‌த்தைப் பார்த்து கேட்பார்:

"என்ன‌டா கூட்ட‌ம்?. ஏதாவ‌து கூலித்த‌க‌ராறா?"

கூட்ட‌த்தில் ஒருவ‌ர் :"இல்லீங்க‌, தாலித்த‌க‌ராறு".

ந‌ம்பியார்: "ச‌ரி என்ன‌ த‌க‌ராறாக இருந்தாலும் அப்புற‌ம் பேசிக்க‌லாம். இப்போ என் த‌ங்கைக்கு ச‌ம்ப‌ந்த‌ம் பேச‌ ச‌ம்ப‌ந்தி வீட்டுக்கார‌ங்க‌ வ‌ந்திருக்காங்க‌".

ஒருவ‌ர்: "நாங்க‌ளும் ச‌ம்ப‌ந்த‌ம் பேச‌த்தான் வ‌ந்திருக்கிறோம்".

ந‌ம்பியார்: "டேய் என்ன‌டா வாய் நீளுது".

ஒருவ‌ர்: "உங்க‌ கிட்டே என்ன‌ங்க‌ பேச்சு. இதோ உங்க‌ அப்பா எழுதிகொடுத்த‌ ப‌த்திர‌ம். நீங்க‌ளே ப‌டிச்சுப் பாருங்க‌".

அவ‌ர்க‌ள் கையிலுள்ள‌ ப‌த்திர‌த்தை சாதார‌ண்மாக‌ ப‌டிக்க‌த் துவ‌ங்கிய‌ ந‌ம்பியார், பாதி ப‌டிக்கும்போதே முக‌த்தில் அதிர்ர்சியைக் காட்டுவார்.

இது போல வசனத்துக்கு இன்னொரு அருமையான‌ இடம். அது ந‌டிக‌ர் தில‌க‌மும் ஜெய‌ல‌லிதாவும் முத‌ல் இர‌வில் ச‌ந்திக்கும்போது பேசும் வ‌ச‌ன‌ம். உண்மையில் ந‌டிக‌ர் தில‌க‌ம் ம‌ட்டும்தான் பேசுவார். தொங்கிக்கொண்டிருக்கும் லாந்த‌ர் விள‌க்கின் திரியை தூண்டி விட்ட‌பின் ஆர‌ம்பிப்பார்.

"ப‌ய‌ப்ப‌டாதே, இருட்டில்தான் த‌வ‌றுக‌ள் ந‌ட‌க்கும். நாம்தான் இப்போ வெளிச்ச‌த்தில் இருக்கோமே. உன்னை என‌க்கு ரொம்ப‌ பிடிச்சிருக்கு. குறிப்பாக‌ உன்னுடைய‌ பிடிவாத‌ குண‌ம் என‌க்கு ரொம்ப‌ ரொம்ப‌ பிடிச்சிருக்கு. ஏன்னா நானும் ஒரு பிடிவாத‌க்கார‌ன். உன்னை முதன்முத‌லில் பார்த்த‌துமே நான் அச‌ந்து போயிட்டேன். ஆனால் அடுத்த‌ நிமிஷ‌மே உன்னுடைய‌ ப‌ண‌த்திமிரைக்காட்டி என்னை அவ‌மான‌ப்ப‌டுத்திட்டே. போக‌ட்டும். நீ ப‌டிச்ச‌வ‌, நானும் உன்ன‌ள‌வுக்கு ப‌டிச்ச‌வ‌ன்தான். என்ன‌ பார்க்கிறே?. ஆயிர‌ம் புத்த‌க‌த்தை ப‌டிச்ச‌வ‌னை விட‌ ஆயிர‌ம் நில‌த்தை உழுத‌வ‌ன் அறிவாளின்னு பெரிய‌வ‌ங்க‌ சொல்லியிருக்காங்க‌. இந்த‌ புது இட‌ம் இங்குள்ள‌ சூழ்நிலைக‌ள் உன‌க்கு பிடிக்காம‌ல் இருக்க‌லாம். ஏன் அருவ‌ருப்பா கூட‌ இருக்க‌லாம். இருந்தாலும் சூழ்நிலைக்கு த‌குந்தப‌டி உன்ன‌ மாத்திக்கிற‌துதான் உன‌க்கு ந‌ல்ல‌து. என்னுடைய‌ ஏழ்மையை நீ வெறுக்க‌லாம். ஆனால் என்னை ஏன் வெறுக்கிறே?. புரிய‌ல‌ இல்லையா. உன‌க்கு ம‌ட்டும‌ல்ல‌ உங்க‌ வ‌ர்க்க‌த்துக்கே புரியாது. ஏன் இவ‌ங்க‌ளை வெறுக்கிறோம்னே தெரியாம காலம் காலமா வெறுப்பு உங்க‌ ர‌த்த‌த்திலேயே ஊறிப்போச்சு. நீ ம‌ட்டும் என்ன‌ ப‌ண்ணுவே".

பேசிக்கொண்டே ஜெய‌ல‌லிதாவின் தோளில் கைவ‌க்க‌ப்போவார். அப்போது ஜெயா

"தொடாதீங்க‌. நீங்க‌ மான‌ம் ரோஷ‌ம் உள்ள‌வ‌ரா இருந்தா என்னைத் தொட‌க்கூடாது. ஏதோ சூழ்நிலையாலே நான் உங்க‌ளுக்கு க‌ழுத்தை நீட்ட‌ வேண்டிய‌தா போச்சு. அதை வ‌ச்சு நீங்க‌ என்னை சொந்த‌ம் கொண்டாட‌லாம்னு ம‌ட்டும் நினைக்காதீங்க‌. வெளியே போங்க‌".

அப்போது ந‌டிக‌ர் தில‌க‌ம்

" இதோ பார். இப்போ நீ என்னுடைய‌ ம‌னைவி. உன்னுடைய‌ அனும‌தியில்லாம‌ உன்னை க‌ச‌க்கி முக‌ர‌வும் எனக்கு உரிமை இருக்கு. ஆனா என்னைக்கு நீயா வ‌ந்து என்னை தொடுறியோ அது வ‌ரைக்கும் நான் உன்னை தொட‌ மாட்டேன். இது எங்க‌ அம்மா மேலே ச‌த்திய‌ம்".

சொல்லி விட்டு வெளியேறுவ‌தும், அதைத் தொட‌ர்ந்து வ‌ரும் "நில‌வைப் பார்த்து வான‌ம் சொன்ன‌து என்னைத் தொடாதே" பாட‌லும் ப‌ட‌த்துக்கே உயிர் நாடி. (இந்த‌ப் பாட‌லை ஏற்கென‌வே நான் முழுதாக‌ சொல்லியியிருக்கிறேன்).

'சவாலே சமாளி' படத்தைப்பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
P. Sankar



Joined: 03 Feb 2007
Posts: 142

PostPosted: Sat Oct 06, 2007 2:32 pm    Post subject: Reply with quote

Saratha Madam,
This is a very special movie of Shivaji. One of the ever memorable entertainment movies of Shivaji which will go with the audience of any age. The film was different in many aspects.
The film didnt have any duet, inspite of a leading pair doing the roles in the film.
The editing of the movie would be really superb. You wont see any scene dragging beyond a limit.
Very crispy acting by all the actors. No pinch of overacting.

Would somebody tell about the Director of the film shri.Malliyam Rajagopal? His earlier assignments, his next projects, from whom he got trained, about his present status?

Our MSV would have given the music for the film in the most perfect manner?

P. Sankar.
Back to top
View user's profile Send private message Send e-mail
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Sat Oct 06, 2007 6:42 pm    Post subject: Movies A Special Section Reply with quote

Dear Mr Sankar,
Like Vietnan veedu Sundaram, Malliyam Rajagopal started off as a very promising movie maker. But probably the right support from producers did not come by. Malliyam Rajagopal shares the same Cauvery basin origins as K.Balachander. M R had some original approaches to handle family subjects and has the credit of introducing [as a sprightly girl] Lakshmi in his movie Jeevanamsam when she was in her teens. She was, for a long time referred to as Jeevanamsam Lakshmi. Obviously M R was of a different mould then and had made some good movies. If one can vertically stretch Kunnakudi Vaidyanathan 18-20% that would be Malliyam Rajagopal -just to recall his appearance. I hope our other friends would fortify the information on M R .
Warm regards Prof.K.Raman Navi Mumbai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Thu Oct 18, 2007 3:56 am    Post subject: Reply with quote

Amazing narration of Savale Samali! Simply outstanding!!!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
irenehastings
Guest





PostPosted: Sat Oct 20, 2007 7:15 pm    Post subject: Reply with quote

Dear Saradhaa madam,

A detailed analysis about the beautiful movie Savaale Samaali, one of my favourite Shivaji number.

I enjoyed the conversations between Shivaji & Nagesh in the temple and between Shivaji & Jayalalitha in their first night.

Superb songs by Mellisai Mannar.
Back to top
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Mon Oct 22, 2007 9:26 am    Post subject: Reply with quote

Dear Saradha,

A great analysis on the wonderful movie SAVALE SAMALI".
The way you have narrated a few dialogue sequences is enjoyable.

In fact every piece of dialogue in the movie would be too good to miss in the film.

Even after seeing the movie a couple of dozen times, it is fresh if I see is again.

Every actor, actress in the movie would have done their best and the role of Nagesh has been unmatchable (a comedy cum villain cum friend cum chareter role which has been unique).

Great anaylysis !

Ramki
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Mon Oct 22, 2007 7:24 pm    Post subject: YOU BROUGHT BACK MEMORIES Reply with quote

Dear Sharadha,

The movie Savaaley Samaali you have analysed about brought back good old memories of my school days. I think I saw this film in the year 1973 or 1974 in a theatre called Ramadoss in a place called Sunkuvar Chathiram (near Sriperumbudur). I was studying in Sriperumbudur and there used to be only a tent theatre in which I saw some of the best MSV orchestrated movies. I must admit here that it was Sriperumbudur that fueled the fire in me to enormous levels that virtually turned me into a "MSV TERRORIST" today. My most favourite song of this movie is Nilavai Paarthu Vaanam Sonnathu. Sharadha, your writing was nothing but another re-run of the movie without having to actually watch the film. Who cares, we literally visualised every scene thro' your writing. Great Work and unique in every way. Thanks a ton for taking me on a nostalgic trip Sharadha.

Sharadha Rules the Narration!!!
cheers
MSV IS MUSIC
VAIDY

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Thu Oct 25, 2007 9:32 pm    Post subject: Reply with quote

As Vaidy rightly mentioned, you are NARRATION QUEEN dear Saro Chechiiiiiiiiii Very Happy Very Happy

We all know about you and every post of yours is as precious as ever & pls continue to contribute in the same level of enthusiasm .

Through your post, I could recollect each and every frame of this super movie Savale Samalee of our NT. In particular, the dialogues of Nagesh are something to remember and cherish !

Great going . Very Happy
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Movies - A Special Section! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group