"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

TMS and Vamanan praises MSV!
Goto page Previous  1, 2, 3  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Fri Dec 21, 2007 7:04 am    Post subject: Articles &Writings by Fans Reply with quote

Dear Mr. Ram and other core crew,
The current pieces by Raghavan Kannan have been meticulously gathered and submitted for all MSV fans to grasp the not-so-well known [to TFM lovers]dimension of MSV as a grand composer in Malayalam movies. My appeal to the core crew is to convert these articles in to CDs as well as printed pamphlets that may be used on appropriate occasions to recollect /honour MSV, since after a time the postings go deep into the track unless someone earnestly looks for the message. Besides independent of net browsing, CDs and pamphlets can help as sources of information for all. I hope the spirit of the suggestion is recognized. Once again our sincere thanks to Mr. Raghavan Kannan for this excellent coverage about MSV-- the legend.
Warm regards Prof.K.Raman Navi Mumbai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
raghavankannan



Joined: 05 Jan 2007
Posts: 57

PostPosted: Fri Dec 21, 2007 7:10 am    Post subject: Reply with quote

குருவின் அண்பு ரசிகர்களே

இன்று நம் குரு எல்லோருடைய மனதிலும் செவிகளிலும் இருப்பார். ஏன் தெரியுமா? இன்று நபிகள் நாயகத்தின் தியாகத் திருநாள். இன்று எல்லா வானொலி நிலையங்களில் "அல்லா அல்லா" பாட்டு நிச்சயம் இடம் பெற்றுள்ளது. நம் குருவை நினைவு கூற வேறு என்ன வேண்டும். நம் குருவின் வெற்றி இது தான். வேறு எந்த விதமான பதக்கங்கள், பாராட்டுப் பத்திரங்கள் போன்றவை வேண்டாம். ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக குடியிருக்கிறார். அது மட்டும் போதும். அதுவே நிரந்தரமானது. விடியற்காலையில் 'அல்லா அல்லா' என்று அவர் இனிய குரலைக் கேட்க என்ன ஆனந்தம். வேறு எவருக்கும் இது கிடைக்காது அவரது இசையை அனுபவிக்கிறவர்களுக்கு மட்டுமே அது கிடைக்கும்.

வாழ்க அவரது இனிய குரல்..வாழ்க எம்.எஸ்வி
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Fri Dec 21, 2007 7:27 am    Post subject: Re: Articles &Writings by Fans Reply with quote

madhuraman wrote:
Dear Mr. Ram and other core crew,
The current pieces by Raghavan Kannan have been meticulously gathered and submitted for all MSV fans to grasp the not-so-well known [to TFM lovers]dimension of MSV as a grand composer in Malayalam movies. My appeal to the core crew is to convert these articles in to CDs as well as printed pamphlets that may be used on appropriate occasions to recollect /honour MSV, since after a time the postings go deep into the track unless someone earnestly looks for the message. Besides independent of net browsing, CDs and pamphlets can help as sources of information for all. I hope the spirit of the suggestion is recognized. Once again our sincere thanks to Mr. Raghavan Kannan for this excellent coverage about MSV-- the legend.
Warm regards Prof.K.Raman Navi Mumbai


Dear Professor,

Great suggestion.... This is the precise reason we need people you to guide us with your experience....

I totally agree with you... The volume of the discussions have grown far beyond what we think....Infact this was another thought I shared with my dad last week, to collect these sort of articles and form a booklet. You have gone one step higher to convert to a CD.

We could form something like an "MSVTimes - Year Book" each year which would have these outstanding articles and write-ups and we can preserve as well as circulate it....

I'll discuss this further with rest of the core crew to implement these ideas...

High thoughts, professor !!!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
raghavankannan



Joined: 05 Jan 2007
Posts: 57

PostPosted: Fri Dec 21, 2007 7:54 am    Post subject: Reply with quote

தொடர்கின்றேன்..

என் மொழி ஏழு சுரங்கள்தான் என்பார் எம்.எஸ்.விஸ்வநாதன். ஆனால் வெறும் சுரங்களால் மக்களைக் கவர முடியாது. சுரங்களை உணர்ச்சிகளுடன் இணைத்தால் தான் முடியும். உணர்ச்சிகளை இழுத்து வருபவை சிறந்த வரிகள். அந்த வரிகளை பாவத்திற்கு ஏற்ப இசை வாகனத்தில் பூட்டுவதுதான் எம்.எஸ்.வியின் வெற்றி ரகசியம்.

ஆரம்பத்திலேயே தமிழ்-தெலுங்கு இரு மொழி இசை அமைக்கும் போது தெலுங்குப் படங்களுக்கு இசை அமைத்தார். பின்னர் கே. பாலசந்தரின் தமிழ்ப் படங்களின் தெலுங்குப் பிரதிகளுக்கு அவர் அமைத்த இசை தெலுங்கு தேசத்தில் பலித்தது. இளைஞர்களின் காதல் கதையான 'மரோ சரித்ரா'வில் இளம் உள்ளங்களை தன் இசையால் கவர்ந்தார்.

சண்டிராணி, அம்மலகலு (மருமகள்), பிரஜாராஜ்யம் (சொர்க்கவாசல்), சந்தோஷம் (வேலைக்காரி), தெனாலிராமன் (தெலுங்கு/தமிழ்), பக்த மார்கண்டேயா (தெலுங்கு/தமிழ்/கன்னடம்), மாகோபி (தமிழில் ஜெயகோபி என்று டப் செய்யப்பட்டது), ராஜா மலையசிம்மன்(தமிழ்/தெலுங்கு), இண்டிகி தீபம் இல்லாலே (மணப்பந்தல்), ஆஷா ஜீவலு (தென்றல் வீசும்), அம்மைகாரிகி(நிச்சயதாம்பூலம்) அகிய படங்களுக்கு 1962 வரை இசை அமைத்தார்கள் மெல்லிசை மன்னர்கள்.

தமிழில் முதல் இடத்திற்கு போன பின்பு இப்படி அமையவில்லை. தமிழ்-தெலுங்கு இரு வேறு தயாரிப்புகளும் அறுகிப் போயிருந்த நிலையும் இதற்கு காரணம். பின்னர், கே. பாலசந்தர் மூலம் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது.

இந்த காலகட்டத்தின் படங்கள், பிரேமலு பெள்ளிள்லு, அந்துலேனி கதா (அவள் ஒரு தொடர் கதை), சிலகம்மா செப்பிந்தி, மரோ சரித்ரா, இதி கத காது (அவர்கள்), குப்பிடு மனசு (நூல்வேலி), அந்தமைன அனுபவம் (நினைத்தாலே இனிக்கும்), ஆகலி ராஜ்யம் (வறுமையின் நிறம் சிவப்பு), தொலி கோடி கூசிந்தி, 47 ரோஜூலு (47 நாட்கள்), மானச வீணா முதலியவை...

சிம்ஹபலுடு (என்.டி.ஆர் டார்ஜன் போன்ற வேடத்தில் வந்த படம்), சத்தெ காலபு சத்தய்யா (பத்தாம் பசலி) முதலிய படங்களுக்கும் எம்.எஸ்.வி இசை அமைத்தார்.

கன்னடத்தில் பெங்கில்லி ஹாலுத ஹூவு, மக்கள் சைன்யா, இரடு ரேகலு (இரு கோடுகள்), முகிலே மல்லிகை ஆகிய படங்களுக்கும் இசை அமைத்தார் எம்.எஸ். விஸ்வநாதன்.

மொழிகளை மீறிய இசை என்பதை விட, மொழியின் தன்மைகளைத் தழுவிச் செல்லும் இசை, மொழியை மேலும் கோடிட்டுக் காட்டும் இசை என்றுதான் அவருடைய பணியைச் சொல்ல வேண்டும்.

ஒரு முறை கே. சங்கர் கன்னடத்தில் ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தார்.

அந்த படத்திற்கான பாடல் கட்டங்கள் தமிழ்க் கவிஞர்களுக்கு சொல்லப்பட்டன.

அப்படி பல தமிழ்க் கவிஞர்க எழுதிய பாடல்களுக்கு எம்.எஸ்.வி இசை அமைத்தார். இந்த வழியில் அமைந்த மெட்டுக்களுக்கு கன்னட கவிஞர்கள் பிறகு வந்து எழுதினார்கள்.

மெட்ட்குக்கள், மொழியோடும், உணர்வோடும் ஒட்டி வரவேண்டும் என்பதற்கு அத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அந்த கன்னடப்படம் பிறகு தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட போது, தமிழில் பாடல்கள் எழுதிய கவிஞர்களுக்கு, கன்னட உதட்டசைபிற்கு ஏற்ப எழுதும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

அப்படிச் செய்தவர்களில் நானும் ஒருவன்...இத்தகைய நேரடி அனுபவங்கள்.....
Back to top
View user's profile Send private message
raghavankannan



Joined: 05 Jan 2007
Posts: 57

PostPosted: Fri Dec 28, 2007 7:49 am    Post subject: Reply with quote

இனி எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடன் மற்ற பாடகர்களின் பங்களிப்பைப் பற்றிய தொகுப்பு தொடர்கிறது.

ஆசாரமான சங்கீததின் கோட்டை என்று கருதப்படுகிற இடமான சென்னை வித்வத் சபையில்தான், கனவான்களுடைய கவனத்தைத் திரை இசையின் பக்கம் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் திருப்பி இருந்தார். (வித்வத் சபையின் 1988ம் ஆண்டு மலரைப் பார்த்துக் கொள்ளலாம்).

யு.ஆர். ஜீவரத்தினம்:

அபிமன்யுவில் "புது வசந்தமாமே என் வாழ்விலே" என்று ஜீவரத்தினம் பாடி நடித்தார். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையில், நாயுடுவின் உதவியாளராக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதன் (பின்னாளைய "மெல்லிசை மன்னர்") மெட்டமைத்த முதல் பாடல் இது. ஜீவரத்தினமும், திருச்சி லோகநாதனும் ஒரு முறை பாடுவார்கள். வேறுபட்ட சூழ்நிலைகளில் வேறு சரணங்களுடன் ஒரு முறை ஜீவரத்தினமும் ஒரு முறை திருச்சி லோகநாதனும் பாடும் பாடல் இது.



டி.ஆர். மகாலிங்கம்:

திரைப்படத்துறையை விட்டு நீங்கி வனவாசம் மேற்கொண்டிருந்தார் மகாலிங்கம். அவரை கண்ணதாசன் பிக்ஸர்ஸ் முதல் படமான மாலையிட்ட மங்கையின் கதாநாயக வேட்த்திற்கு ஒப்பந்தம் செய்தார் கண்ணதாசன். நம்முடைய திறமையைக் காட்டுவதற்கு சொந்தத்தில் படம் எடுப்பதுதான் வழி என்று முடிவு கட்டி, மாலையிட்ட மங்கை என்ற படத்தை எடுத்தேன், ஆசை தீர அந்தப் படத்திற்குப் பதினேழு பாடல்கள் எழுதினேன் என்பார் கண்ணதாசன்.

முன்கூட்டியே அமைக்கப்பட்ட மெட்டு என்ற தளையிலிருந்து விடுபட்டு, தான் பாடல் எழுதிய முதல் படம் மாலையிட்ட மங்கைதான் என்று கண்ணதாசன் குறிப்பிட்டு இருந்தார். படத்தில் மகாலிங்கம் பாடிய "எங்கள் திராவிட பொன்னாடே", "செந்தமிழ் தேன் மொழியாள்", "திங்கள் முடிசூடும் மலை", "நான் அன்றி யார் வருவார்" ஆகிய நான்கு பாடல்களும் ஹிட் ஆகியது.


சந்தத்திலிருந்து பிசகாமல் கவிதை மணம் வீசும் வரிகள், பழமை மாறாத புதிய மெட்டுக்கள், இனிய இசை சேர்ப்பு, எந்த ஸ்தாயிலும் அனாயசமாக சஞசரித்த மகாலிங்கத்தின் வளமான, தனித்துவம் உள்ள சாரீரம்.. இவை பாடல்களின் வெற்றிக்கு வழி வகுத்தன.

விஸவநாதன்-ராமமூர்த்தியின் வித்தியாசமான அணுகுமுறைக்கு ஒரு சான்று. "நான் அன்றி யார் வருவார்" என்ற பாடல். மகாலிங்கம் மேல் ஸ்தாயி சஞ்சாரங்களில் நன்றாகப் பாடுவார் என்று அவருக்கு ஹைபிட்சில் பாடல்கள் அமைப்பார்கள். "நான் அன்றி யார் வருவார்" பாடலில் கீழ் ஸ்தாயில் காதுக்கு இதம்மாக மகாலிங்கத்தை இசை இரட்டையர்கள் பாட வைத்து புதுமை செய்தார்கள். பாடலில் உடன் பாடியவர் ஏ.பி.கோமளா.

இசையும் ஓரளவிற்கு வலுவான கதையும் மாலையிட்ட மங்கை அளித்த வெற்றி, மகாலிங்கத்தின் வனவாசத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

அமுத வல்லியில் இடம் பெற்றது "ஆடை கட்டி வந்த நிலவோ (1959)" பி. சுசீலாவுடன் மகாலிங்கம் பாடிய காதல் கீதம். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அட்சரம் தப்பாத சந்தத்தமிழ், விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் ஜனரஞ்சகமான மெட்டில் அமரும்போது அற்புதமான மெல்லிசைப் பாடல் ஜனித்து விடாதா என்ன? அதுவும் கைவசம் இரண்டு அற்புதமான பாடகர்கள் இருக்கும்போது.

தொடரும்:
Back to top
View user's profile Send private message
raghavankannan



Joined: 05 Jan 2007
Posts: 57

PostPosted: Sat Dec 29, 2007 7:03 am    Post subject: Reply with quote

தொடர்ச்சி::

எஸ்.எம். சுப்பையா நாயுடு: மெல்லிசை மன்னரின் முதல் பாடலை திரையில் ஒலிக்கச் செய்தவர்:

ஜுபிடரின் அபிமன்யுவில் ஒரு கட்டம். அபிமன்யுவும், வத்சலாவும் காதல் எழுச்சியில் பாடுவதாக ஒரு காட்சி. சுப்பையா நாயுடுவிற்கு சரியான மெட்டு அமையவில்லை. ஸ்டுடியோவில் தன் உதவியாளராக இருந்த துருதுருப்பான பையன் போட்ட மெட்டை எதேச்சயாக கேட்டு, அதை பயன் படுத்திக் கொண்டார். அந்தப் பாடல் ஜீவரத்தினமும், திருச்சி லோகநாதனும் இசைத்த "புது வசந்தமாமே வாழ்விலே". கோவை அலுவலகத்தில் மாதச் சம்பளத்தில் இருந்தவர்களை எல்லாம் நீக்கி விட்டு ஜூபிடர் பிக்சர்ஸ் சென்னைக்கு குடி பெயர்ந்த போதுதான், தன் உதவியாளனின் திறமையப் பற்றி முதலாளிகளுக்குத் தெரிவித்தார் சுப்பையா நாயுடு. "புது வசந்தமாமே" மாதிரி ஹிட் பாட்டுக்களை மெட்டமைச்சவன் இந்தப் பையன். இவனையும் சென்னைக்கு கூட்டிட்டுப் போங்க என்றார். அப்படி சுப்பையா நாயுடுவின் சிபாரிசால் ஜுபிடருடன் சென்னைக்கு வந்த பையன், பின்னளைய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.


திருடாதே பாடல்கள் அமைக்கப்பட்ட போது ஒரு நிகழ்ச்சி. முந்தைய தயாரிப்பில் ஒலிப்பதிவாகி விட்டுப்போன ஒரு பாடலை திருடாதேவில் சேர்க்க அதன் தயாரிப்பாளர்கள் விரும்பினார்கள். பாடல் பி.பி.சீனிவாசனும் பி.சுசீலாவும் பாடிய "என்னருகே நீ இருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்"

அந்த பாடலைப் போட்டது யார் என்று கேட்டார் சுப்பையா. விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்றார்கள். "அட நம்ம பையன் விஸ்வநாதன் போட்டதா....படத்தில் வச்சிகிட்டா போச்சு" என்று அனுமதி தந்தார் சுப்பையா.

கண்ணதாசனின் முதல் பாடலுக்கு இசை அமைத்தவர் சுப்பையா நாயுடு என்பதையும் எம்.எஸ்,விஸ்வநாதனின் குருவாக இருந்து அவரது முதல் பாடலை திரை ஏறச் செய்தவர் என்பதை நினைவில் கொண்டு , கண்ணதாசனும், விஸ்வநாதனும் 1975-ல் விழா எடுத்து சுப்பையா நாயுடுவிற்கு பொற்கிழி அளித்து கெளரவித்தார்கள். அந்த விழாவிற்கு மக்கள் திலகமும், நடிகர் திலகமும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

பிள்ளை இல்லாத சுப்பையா தம்பதியை விஸ்வநாதன் தன் வீட்டில் வைத்து பாதுகாத்தார். மே 1979ல் சுப்பையா நாயுடு மரணம் அடைந்த போது. அந்திம சடங்குகளை செய்தவரும் விஸ்வநாதன் தான்.


தொடர்கிறது...
Back to top
View user's profile Send private message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Sat Dec 29, 2007 7:03 pm    Post subject: Articles &Writings by Fans Reply with quote

Dear Mr. Ram and other core team members,
Thank you all for a year book from MSVTimes.com to assemble important pieces of information presented through the site. It is easier to preach than to practice. Therefore I intend coming out with further suggestion and support to this idea. While all our contributors are sincere in their efforts occasionally scope for corrections do creep both for grammar and usages besides spellings.

When an ensemble like our site comes out with documentation it should be grammatically clean and perfect. I DO NOT MEAN ENGLISH ALONE. If our friends are agreeable, I can help reading for such minor amendments that would enhance the stature of write-ups.
How to go about it.
THESE ARE DAYS OF TECHNOLOGY AND ONE HAS TO AVAIL OF THE FACILITY TO COME OUT IN GLORIOUS PRESENTATION.
All can contribute their items to a to-be identified Editorial team.
All should make CDs on a mothly or periodic basis [whatever they feel worthy of appearing in the year book].
The EDITORIAL TEAM ALONE CAN CHOOSE THE WRITE-UPs To appear in a Yearbook. [The purpose of CDs is to documrnt a write-up instead of hurrying through for a year book.]
Once some items are chosen, the editorial team can go for embellishments by avoiding mistakes of any kind by thorough proof checking. [This has to be a periodic exercise to bestow the best possible leisurey attention by verifying the hard copies]
All proof-read copies may be finally sent for PRINTING / CD replication.
If properly done errors from Printing houses can be outright prevented.
All leading institutions rely on providing the CD from which the printer makes the pages by only aligning the matter without setting the words.
PROOF READING SHOULD BE DONE ONLY ON HARD COPIES SINCE PAPER IS THE BEST MEDIUM FOR SPOTTING ERRORS.
Only after PROOF READING / corrections THE FINAL CD SHOULD BE ASSEMBLED USING CUT AND PASTE TECHNIQUE.
So the line spacing / font size etc can be done on the final CD without having to correct or edit every piece.
My only intention is to indicate that any publication from ourside should be flawless as the very stature of MSV's delightful music.
Thank you
Warm regards Prof.K.Raman Navi Mumbai.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Sat Dec 29, 2007 7:08 pm    Post subject: Re: Articles &Writings by Fans Reply with quote

[quote="madhuraman"]Dear Mr. Ram and other core team members,
Thank you all for a year book from MSVTimes.com to assemble important pieces of information presented through the site. It is easier to preach than to practice. Therefore I intend coming out with further suggestion and support to this idea. While all our contributors are sincere in their efforts occasionally scope for corrections do creep both for grammar and usages besides spellings.

When an ensemble like our site comes out with documentation it should be grammatically clean and perfect. I DO NOT MEAN ENGLISH ALONE. If our friends are agreeable, I can help reading for such minor amendments that would enhance the stature of write-ups.
How to go about it.
THESE ARE DAYS OF TECHNOLOGY AND ONE HAS TO AVAIL OF THE FACILITY TO COME OUT IN GLORIOUS PRESENTATION.
All can contribute their items to a to-be identified Editorial team.
All should make CDs on a mothly or periodic basis [whatever they feel worthy of appearing in the year book].
The EDITORIAL TEAM ALONE CAN CHOOSE THE WRITE-UPs To appear in a Yearbook. [The purpose of CDs is to documrnt a write-up instead of hurrying through for a year book.]
Once some items are chosen, the editorial team can go for embellishments by avoiding mistakes of any kind by thorough proof checking. [This has to be a periodic exercise to bestow the best possible leisurely attention by verifying the hard copies]
All proof-read copies may be finally sent for PRINTING / CD replication.
If properly done, errors from Printing houses can be outright prevented.
All leading institutions rely on providing the CD from which the printer makes the pages by only aligning the matter without setting the words.
PROOF READING SHOULD BE DONE ONLY ON HARD COPIES SINCE PAPER IS THE BEST MEDIUM FOR SPOTTING ERRORS.
Only after PROOF READING / corrections THE FINAL CD SHOULD BE ASSEMBLED USING CUT AND PASTE TECHNIQUE.
So the line spacing / font size etc can be done on the final CD without having to correct or edit every piece.
My only intention is to indicate that any publication from our side should be flawless as the very stature of MSV's delightful music.
Thank you
Warm regards Prof.K.Raman Navi Mumbai.[/quote]
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
raghavankannan



Joined: 05 Jan 2007
Posts: 57

PostPosted: Sat Dec 29, 2007 10:45 pm    Post subject: Reply with quote

தொடர்ச்சி....

பி.பானுமதி:

விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையில் 1956ல் வெளி வந்த படம் "தெனாலிராமன்". இதில் பானுமதியின் குரலில் ஒலிக்கும் "விண்ணலகில் மின்னிவரும்" இரட்டையிரின் மெலடிக்கு எடுத்துக் காட்டு. எந்தப் பாணியில் இசை அமைத்தாலும் இனிமையே முதல் நோக்கமாக செயல் பட்டிருக்கிறார்கள்.

எம்.எல்.வசந்தகுமாரி:

விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் 1954ல் வந்த படம் வைரமாலை. இதில் திருச்சி லோகநாதனுடன் ஒரு அழகான இரு குரலிசைப் பாடலை எம்.எல். வசந்தகுமாரி பாடியிருக்கிறார். திஸ்ர நடையின் துள்ளலுடன் காதலர்களின் உள்ளங்கள் துள்ளிக் குதிக்கும் இந்தக் "கூவாமல் கூவும் கோகிலம்" கண்ணதாசனின் வரிகளில் உருவான ஒரு நல்ல டூயட்.

கண்ணதாசனின் கதை வசனத்திலும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை அமைப்பிலும் உருவான படம் "மன்னாதி மன்னன்" (1960). இதில் டி.எம். சொளந்தரராஜனும்-வசந்தகுமாரியும் சேர்ந்து பாடும் "ஆடாத மனமும் உண்டோ" லதாங்கி ராகத்தைப் படம் பிடிக்கிறது. மருதகாசியின் வார்த்தைகளில் சங்கீதத்தின் ரீங்காரம் உண்டு. மெல்லிசை மன்னர்களின் இசை அமைப்பில், பாரம்பரிய இசையின் செறிவு மட்டுமல்லாமல், வார்த்தைகளை காயப் படுத்தாமல், பொருளுக்கு அழுத்தம் கொடுக்கும் அழகு, சொளந்தரராஜனும், வசந்தகுமாரியும் சுருதி சுத்தமாக தங்கள் பாணியில் இசைக்கும் பாட்டு இப்படி பல உண்மைக் கலைஞ்சர்களின் உயிரோட்டம் கொண்ட பாட்டு.

பி.லீலா:

ஐம்பதுகளின் திரை இசை எங்கும் விரவியிருக்கும் லீலாவின் பாட்டிற்கு மகுடம் போல அமைந்த படம் "தங்கப்பதுமை" (1959). கணவனின் பார்வையை மீட்கும் பத்தினியின் கதை. தேவியை நோக்கி உணர்ச்சிக் கொந்தளிப்பாக ஒலிக்கும் பத்மினியின் பின்னனிக் குரலாக லீலா பாடினார். "நான் ரொம்ப உழைச்சுப் பாடின பாட்டு தங்கப்பதுமையில் வரும் 'வாய் திறந்து சொல்லம்மா' தான். படச்சூழ்நிலையை சொல்லிட்டாங்க. சோகமான காட்சி. ரொம்ப உருக்கமாக பாடனும்னு சொல்லிட்டார் விஸ்வநாதன். காலை 9 மணிக்கு ஆரம்பிச்சு ராத்திரி 9 மணிக்குத்தான் ரிகார்டிங் முடிஞ்சது. உச்ச கட்ட சோக உணர்ச்சியை வர வழைத்துக்கொண்டு ரொம்ப சிரமப்பட்டு பாடினேன். சில சமயம் பாடும்போது தொண்டை அடைச்சுக்கும், சில சமயம் பாட்டில் தொய்வு ஏற்படும்... என்னம்மா இதுன்னு விஸ்வநாதன் கேட்டார்."காலையிலிருந்து உணர்ச்சியோடு பாடிட்டிருக்கிறேன்.. கொஞ்சம் களைப்பாக இருக்கு என்றேன். எப்படியோ எல்லோரும் ஒத்துக்கிற மாதிரி பாடிட்டேன்.. பத்மினியோட பிரமாதமான நடிப்போட அந்தப் பாடலைக் கேட்கும்போது யாருக்கும் அழுமை வராமல் இருக்காது.

தங்கப்பதுமை ஆண்டில் லீலாவிற்கு கிடைத்த இன்னொரு வெற்றிப் படம், பாகப்பிரிவினை. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் டி.எம்.எஸ்-லீலா மூன்று பாடல்கள் பாடினார்கள். மண்ணின் மணம் நெஞ்சம் வரும் வரை பாடும் பாடல் "தாழையாம் பூ முடிச்சு", புள்ளையாரு கோவிலுக்கு, தேரோடும் எங்கள் சீரான மதுரையிலே என்று மூன்று வெற்றிப் பாடல்கள்.

எ.ஸ்.பாலசந்தர்:

விஸ்வநாதன்-கலை இயக்குநர் கங்கா தயாரிப்பில் உருவான இசைக் காவியம். கலைக்கோயில் (1964). இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி. இயக்கம் Sridhar.
வீணையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் பாலசந்தர் பிண்ணனி இசையாக வீணை வாசிக்க வேண்டும் என்று இயக்குநரும் இசை அமைப்பளரும் விரும்பினார்கள். வீணையின் நாயகனான நான் கதாநாயகனுக்கு பின்னனி வாசிப்பதா என்று எண்ணிய பாலசந்தர் சம்மதிக்க வில்லை. படத்திற்கான வீணை இசையை சிட்டிபாபு வாசித்தார்.


டி.எஸ். பகவதி:

மருது சகோதரர்களின் சரித்திரத்தை கண்ணதாசன் திருக்காவியமாக எடுத்தப் படம் சிவகங்கை சீமை. அதில் நாட்டுப்புறப் பாடல் போல மண்ணின் மணத்தோடு அமைந்த ஒரு தாலாட்டுப் பாடல்.

தென்றல் வந்து வீசாதோ
தென்பாங்கு பாடதோ
செல்வமகன் கண்களிலே
நின்று விளையாடாதோ
சிந்துகவி பாடாதோ

இந்தப் பாடலுக்கு விஸ்வநாதன் அமைச்ச இசையில் "தென்பாண்டி நாட்டின் மண் வாசனையைக் கண்டேன் என்று கண்ணதாசன் பாரட்டினார். அத்தகைய பாடலை பகவதியைப் பாட வைத்தார்கள் என்றால் அது பகவதி தமிழுக்கும் இசைக்கும் பாடலின் உணர்வுக்கும் மணம் சேர்ப்பார் என்பதனால்தான்.

கே.வி. மகாதேவன்:

மாடர்ன் தியேட்டர்ஸில் மகாதேவன் பணியாற்றும் போது பின்னனிப் பாடகராகலாம் என்ற எண்ணத்தில் அங்கே ஒருவர் வந்தார். அவரது குரலை டெஸ்ட் செய்வதற்காக அவரை ஸ்டுடியோ அதிபர் சுந்தரம், மகாதேவனிடம் அனுப்பி வைத்தார். வந்தவரிடம் சிறிது நேரம் பேசிய பின், அவருக்கு வழிச் செலவிற்கு இரண்டு ரூபாயும் ஒரு சட்டையும் கொடுத்தனுப்பினார் மகாதேவன். அப்படி அனுப்பப்பட்டவர் பின்னளில் மெல்லிசை மன்னரான எம்.எஸ்.விஸ்வநாதன்.

ஏ.எம்.ராஜா:

ராஜாவின் இயல்பான மெல்லிசைப் பாணியில் அமைந்த தேன்நிலவு பாடல்கள் அனைத்தும் ஹிட்டானாலும் படம் தோல்வி அடைந்தது. தேன் நிலவுடன் sridhar-raja உறவு முறிந்து விட்டது. தேன் நிலவின் பின்னனி இசையைக்கூடா ராஜா அமைக்க விரும்பவில்லையாம். எம்.ஜி.ஆர் போன்றவர்களின் தலையீட்டால் ராஜா செய்து முடித்தாராம். நெஞ்சில் ஓர் ஆலயத்திற்கு இசை அமைக்க sridhar ராஜவிற்கு முன்னமேயே செக் கொடுத்திருந்தார். அதை திருப்பி அனுப்பினாரம் ராஜா.

நெஞ்சில் ஓர் ஆலயத்திற்கு இசை அமைக்கும்படி விஸ்வநாதன்-ராமமூர்த்தியைக் கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக் கொள்வதற்கு முன், ராஜாவின் வீட்டுக்குச் சென்று அவரது அனுமதியைப் பெற்றார் விஸ்வநாதன். ""இதோ இப்படி வந்து இங்கேதான் உட்காந்தாரு" என்று நினைவு கூறுகிறார் ஜிக்கி. "நான் படத்தைப் பண்ணலைன்னு விட்டுட்டேன். இனிமே யார் பண்ணினாலும் எனக்கு கவலை இல்லை என்று விஸ்வநாதனிடம் கூறினார் ராஜா.


தொடரும்...
Back to top
View user's profile Send private message
raghavankannan



Joined: 05 Jan 2007
Posts: 57

PostPosted: Sun Dec 30, 2007 7:54 am    Post subject: Reply with quote

தொடர்ச்சி:::

டி.எம்.செளந்தரராஜன்::

ஐம்பதுகளில் டி.எம்.எஸின் வாய்ப்பு தூவானம்தான். அதைத் தொடர்ந்து வந்தது தூர் வாரிய காவிரியில் வந்த புது வெள்ளம்..1952ல் இசைப் பதியம் போடத் தொடங்கிய விஸ்வநாதன்-ராமமூர்த்தி தென்றலுக்கு ஸ்வரம் பிடிக்க ஆரம்பித்த காலம் அது. மெட்டுச்சிறையிலிருந்து பாடல் வரிகளை விடுவிக்க, 1957ல் மாலையிட்ட மங்கை எடுத்து, கவிதை தூரிகையை தீட்டிக் கொண்டு கண்ணதாசன் செயல்பட்ட வேளை அது. "பா" வரிசைப் படங்களை உணர்ச்சிப் பிரவாகமான சிவாஜி கனேசனுக்காக, பீம்சிங் தொடுத்து வந்த பருவம் அது... பாசமலர், பாவமன்னிப்பு, பாலும் பழமும் (1961) பார்த்தால் பசி தீரும், பார் மகளே பார் (1963) பச்சை விளக்கு (1964), ஆலயமணி, நிச்சய தாம்பூலம் (1962), பணத்தோட்டம் (1963), தெய்வத்தாய், புதிய பறவை, ஆண்டவன் கட்டளை, படகோட்டி, கர்ணன் (1964) ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை (1965) என்று மெல்லிசை மன்னர்களின் இசையில் டி.எம்.எஸ் இனிமையாக கானங்களைப் பொழிந்தார்.

தனியாகப் பிரிந்தவுடன் எம்.எஸ்.வியின் இசைப் பாணி சற்றே வடமேற்கை நோக்கி நகர்ந்த போது "யார் அந்த நிலவு" என்று டி.எம்.எஸ் ஈடு கொடுத்தார்.

தமிழ் திரை உலகின் இரு துருவ நட்சத்திரங்களுடன் டி.எம்.எஸ்.ஸின் குரல், கச்சிதமாக ஒத்துப்போனது, தெய்வாதீனமாக கூட இருக்கலாம். ஆனால் அந்த நிலையை அவர் தக்க வைத்துக் கொண்டது அதிர்ஷ்டத்தால் அல்ல. சாதாரணமாகவே, எந்த பின்னனிப் பாடகரும் குரலில் உணர்ச்சி காட்டுவது அவசியம். ஆனால் டி.எம்.எஸ்ஸோ பின்னனிப் பாடகர் என்ற நிலையையும் கடந்து உணர்ச்சிப் பிரவாகமாக பரிணமித்து பாட்டு நடிகராகவே ஆகி விட்டார் "எங்கே நிம்மதி (புதிய பறவை) அந்த நாள் ஞாபகம் (உயர்ந்த மனிதன்). தேவனே என்னைப் பாருங்கள் (ஞான ஒளி) ஹு இஸ் தி பிளாக் ஷிப் (பைலட் பிரேம்நாத்), கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் (சிரித்து வாழ வேண்டும்), நீ என்னென்ன சொன்னாலும் கவிதை (நேற்று இன்று நாளை), ஒன்றும் அறியாத பெண்ணோ (இதயக்கனி) பூ மழை தூவி(நினைத்ததை முடிப்பவன்) கனவுகளே ஆயிரம் கனவுகளே (நீதிக்கு தலை வணங்கு), தாயகத்தின் சுதந்திரமே (மதுரை மீட்ட சுந்தர பாண்டியன், செல்லக்கிளிகளாம் (எங்க மாமா), சொந்தம் எப்போதும் தொடர் கதை தான்(பிராப்தம்), அடி என்னடி ராக்கம்மா (பட்டிக்காடா பட்டினமா), சக்கைப் போடு போடு ராஜா(பாரத விலாஸ்), இனியவளே (சிவகாமியின் செல்வன்), மனிதன் நினைப்பதுடு (அவன் தான் மனிதன்)...இப்படி நாட்டுப்புறம், நாகரீகம், ஹாஸ்யம் முதல் தத்துவம் வரை எதைக் கொடுத்தாலும் மெல்லிசை மன்னரின் இசையில் முழு ஈடுபாடோடு பாடக் கூடியவர் என்று நிருபித்தார் டி.எம்.எஸ்.

சிவாஜி-எம்.எம்.வி-கண்ணதாசன்-டி.எம்.எஸ்-சுசீலா போன்ற பழைய காம்பினேஷன்கள் தொய்வும் தேய்மானமும் கருத்து வறட்சியும் காட்டத் தொடங்கிய கால கட்டம் எழுபதில் தொடங்கியது.

அப்போதும் கூட, சில பொழுதுகளில் பழைய சொளந்தர்யங்கள் வந்து கொண்டிருந்தன..உதாரணமாக (பாட்டும் பரதமும்-1975)
தெய்வத்தின் தேரெடுத்து
தேவியைத் தேடு
தேவிக்கு தூது சொல்ல
தென்றலே ஓடு

எம்.எஸ்.விஸ்வநாதன் அடிக்கடி பயன்படுத்திய ஆஹிர் பைரவ் ராகம் (கர்நாடக இசையின் சக்ர வாகம்) (இதில் தான் "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது" என்ற பாடலும் ஒலித்தது).

காதல் ராகம் சக்தி வாய்ந்தது. அதில் சோகமும் சேரும் போது மகாசக்தி. சிவாஜி கனேசன் சித்தரித்த உணர்ச்சிமயமான காதலன் வேடத்திற்கு சொளந்தரராஜனின் கனபரிமாணமும் உயர்ந்த ஸ்ருதியும் கொண்ட குரலில் கிடைத்த வலிமை அசாத்தியமானது. இந்தப் பாடலைப் பாடும் போது டி.எம்.எஸ்.ஸுக்கு வயது 51.

அதே 1975 மே மாதம் படப்பிடிப்பு என்று கவிஞரிடம் மீண்டும் மீண்டும் சொல்லி பாட்டு கேட்டார் தயாரிப்பாளர். மே என்று ஒவ்வொரு வரியும் முடியும்படி கவிஞர் பாடல் எழுதினார்.

அன்பு நடமாடும் கலைக்கூடமே
ஆசை மழை மேகமே (அவன் தான் மனிதன்)

இந்தப் பாடலுக்கு விஸ்வநாதன் அமைத்த மெட்டு ஒரு அழகான சூழலை நிறுவுகிறது. அவருக்கு பயன்பட்ட ராகம், வாஸந்தி. மோகனத்தில் தைவதத்தை சின்னதாக பிடித்தால் உருவாகும் இந்த ராகத்தில் ஒரு தனி அழகு, ஈர்ப்பு. அதிகமாக பயன்படுத்தப்படாத ராகம் என்பதால் கேட்பதற்கும் புதுமை, மெதுவான காலப்பிரமாணமும் "மே"என்று கடைசி எழுத்தில் அமைந்த கார்வையும் நல்ல 'மூட்' அமைக்கும். அதற்குள் புகுந்து விளையாடும் குரல்கள் சொளந்தரராஜன்-சுசீலா.

அதே காலக்கட்டத்தில் டி.எம்.எஸ்.ஸின் குரலில் வந்த இன்னும் சில அழகான வரவுகள்.

காதலின் பொன்வீதியில் (பூக்காரி)
ஆகாயப் பந்த்லிலே (பொன்னூஞ்சல்)
சுமைதாங்கி சாய்ந்தால் ( தங்கப்பதக்கம்)
பொன்னுக்கென்ன அழகு (என் மகன்)
மல்லிகை முல்லை (அண்ணன் ஒரு கோயில்)
வணக்கம் பல முறை சொன்னேன் (அவன் ஒரு சரித்திரம்)
அலங்காரம் களையாத சிலை ஒன்று கண்டேன் (ரோஜாவின் ராஜா)
கம்பீரமும் ஈரமும் ஒரே குரலில் அழகாக ஒலிக்கும் பாடல்கள் இவை.

பல நல்ல பின்னனிப் பாடகர்கள் இருந்தாலும், ஒரு சிலரின் பாட்டில் தமிழ் சிறப்பு பெறுகிறது. அப்படிப்பட்டவர்களின் முக்கியமானவர் டி.எம்.எஸ்..திரை இசைக் கடலின் கரை கண்ட எம்.எஸ். விஸ்வநாதன் ஒரு முறை சொன்னது. அது உண்மைதான்.
(டி.எம்.எஸ்.ஸைப் பற்றி இங்கே கொடுத்திருப்பது ஒரு சிறிய தொகுப்பே, மெல்லிசை மன்னரது திறமைகளைப்பற்றிய டி.எம்.எஸ்.ஸின் கருத்து விரிவாக பிரிதொரு பகுதியில் தொடர்கிறேன்.)

தொட்ரும்...
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Mon Dec 31, 2007 12:35 am    Post subject: Reply with quote

Dear Raghavan Sir,

Great amount of information is shared in this thread... Credits to YOU !!!

Dear Professor,

Your "Perfect" approach for evolving this site into an "Editorial" phase is definitely commendable... We can surely discuss this with the Core Crew and how this can be formalized and implemented..

Yes, we have got an amazing set of information here as of now and we anticipate a definite growth in future interms of the content and value of information. Now we have need to assimilate, organize and present it in a better way so that the information shared here and hence the Legacy of the Golden Era of Tamil Films, is carried forward for the future..

The Core Crew is planning to have some discussions in the next few months on the next steps and phase of this website. Am sure this is going to be one of the important agenda items for us...

It is really great to get these great ideas from your experience !!!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Mon Dec 31, 2007 6:59 pm    Post subject: Articles &Writings by Fans Reply with quote

[color=darkblue][size=18]Dear Mr.Ram,
Now that we are on the eve of NEW YEAR 2008, it is opportune to organize our efforts for the coming year from 1-1-2008 earmarking good pieces that can be seriously considered for YEAR BOOK compilation. Any article / item distinct for its unique message should be individually kept aloof helping us to review the process later. I trust we are at the right stage for this effort. May GOD bless us in this endeavour.
Warm regards Prof. K.Raman NAVI MUMBAI. [/size][/color]
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
raghavankannan



Joined: 05 Jan 2007
Posts: 57

PostPosted: Tue Jan 01, 2008 3:55 pm    Post subject: Reply with quote

தொடர்ச்சி:: இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்:

கே. ஜமுனாராணி:

டி.ஆர். ராமன்னாவின் இயக்கத்தில் 'குலேபகாவலி (1955)' உருவாகி வந்த நேரம். அதில் 'ஆசையும் என் நேசமும்' என்றொரு பாடல். குடித்ததனால் ஏற்பட்ட விக்கலும், ஹம்மிங்கும் கலந்த பாடல் அது. இதை அறிந்ததும், கண்ணதாசன் உடனே சிபாரிசு செய்த பெயர் 'ஜமுனாராணி'. (இசை மெல்லிசை மன்னர்கள்)

வாத்ஸ்யாயனப் பாடல்கள், ஜமுனாராணியின் குளிர்ந்த குரலில் வார்ப்பெடுக்கப்பட்ட இந்தக் காலகட்டத்தில் ஒரு சவால் வந்தது. அதில் வெற்றி அடைந்தார் ஜமுனாராணி. படம் 'மகாதேவி (1957)'. இயக்குநர், பழம்பெரும் டைரக்டரான சுந்தர் ராவ் நட்கர்னி "காமுகர் நெஞ்சில் நீதியில்லை..அவர்க்கு தாய் என்றும் தாரம் என்றும் பேதமில்லை" என்று சாவித்திரிக்காக மிகவும் உருக்கமாக பாட வேண்டிய பாடல். ஜமுனராணி இந்தப் பாடலை நன்றாகப் பாடுவார் என்கிறார் கண்ணதாசன். 'கவர்ச்சிப் பாடல்களைப் பாடுபவரால் எப்படி உணர்ச்சிப் பாடலை நன்றாகப் பாட முடியும் எண்கிறார் இசை அமைப்பாளர், விஸ்வநாதன். கவிஞருக்கு கோபம் வந்து விட்டது. ' ஒரு பின்னனிப் பாடகியைப் போடுன்னு நான் சொன்னா, வேணும்னு சொல்றேனா, எனக்கு அவ திறமை தெரியாதா?' என்கிறார் அவர். ' அவ சரியா பாடலைன்னா நஷ்டமான கால்ஷீட்டின் செலவை நான் தருகிறேனே' என்கிறார் கண்ணதாசன். இது போன்ற விஷயங்களில், எம்.ஜி.ஆரின் கருத்தைக் கேட்டறிய வேண்டிய நிலை. இந்தத் தேர்வில் நீ தேறினால்தான் உனக்கு உருக்கமான பாட்டு கிடைக்கும் என்று சொல்லி விடுகிறார் கண்ணதாசன். மெட்டின் உருவத்தை ஜமுனாராணிக்கு ராமமூர்த்தி தொட்டுக் காட்டுகிறார். பயிற்சி முடிந்ததும் பாடல் நன்றாக வந்திருக்கிறது என்று எம்.எஸ்.விஸ்வநாதனிடம் தெரிவித்தார் டைரக்டர் நட்கர்னி. பாடலைக் கேட்டதும் எம்.எஸ்.வி. நல்லாப் பாடியிருக்கே. உன்னைத் தவறாக எடை போட்டுட்டேன். உன் பாட்டில் உணர்ச்சி இருக்கு, ஆனா, வார்த்தை எல்லாம் இன்னும் தெளிவாக ஒலிக்கணும் என்றார் விஸ்வநாதன். விஸ்வநாதன் சொல்லிக்கொடுத்த மாதிரியே உணர்ச்சியும் தெளிவான உச்சரிப்பும் ஓங்கி நிற்கும்படி ஜமுனாராணி பாடியவுடன் டேக் 'ஓகே' ஆனது.

நட்சத்திர இசை அமைப்பாளர்களின் குணச் சித்திரத்தை இப்படிக் குறிக்கிறார் ஜமுனாராணி.
ராமநாத ஐயரைப் பொறுத்தவரை, அவர் சொல்கிற சங்கதிகள் நம் குரலில் வந்தே தீர வேண்டும். அந்த சங்கதிகள் வராமல் விட மாட்டார்.

கே.வி. மகாதேவனோ, மெட்டின் உருவத்தை நமக்கு கோடி காட்டிவிட்டு, உன் கற்பனைக்கு ஏத்த மாதிரி உணர்ச்சியுடன் பாடி, வேண்டிய சங்கதிகளை நீயே போட்டுக்கொள் என்று பாடகருக்கு சுதந்திரம் கொடுப்பார்.

விஸ்வநாதன்னா, அவங்க எப்படி சொல்லிக் கொடுக்கிறார்களோ, அப்படித்தான் பாடணும். நாம ஏதாவது சங்கதி போட்டா "பெரிய பாடகின்னு நினைப்பா, சொல்லிக் கொடுத்தைப் பாடு போதும்" என்பார். உணர்ச்சியுடன் பாட வேண்டும், பாட்டின் ஒவ்வொரு சொல்லும் மிகவும் தெளிவாக ஒலிக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். அப்படி பாடலைன்னா ஒலிப்பதிவு கூடத்திலேயே மானம் போய் விடும். பாடத் தெரியாதவங்க பிளேபாக் சிங்கர்ன்னு ஏன் பாட வருகிறீர்கள் என்று விஸ்வநாதன் கேட்டு விடுவார். அதனால் பயத்தோடு பாடுவோம்.


P.B. SRINIVAS

விஸ்வநாதன்-ராமமூர்த்தியோடு "நீயோ நானோ யார் நிலவே" (மன்னாதிமன்னன்) இனிமையும் நளினமும் இசை நேர்த்திகளும் கொண்ட பி.பி.எஸ்ஸின் பிரத்யேகமான குரல் தமிழ் சினிமாவில் அதிகம் பயன் பட்டுக் கொண்டிருந்த வேளையில், ஏ.வி.எம்.மின் பாவ மன்னிப்பு (1961) வந்தது. ஜெமினி கணேசன் காதலியை நினைத்துப் பாடுவது போல் ஒரு கட்டம். அந்தப் பாடலை பி.பி.எஸ். பாடினால் நன்றாக அமையும் என்று இசை அமைப்பாளர் விஸ்வநாதன் கருதினார். ஜெமினி கணேசனுக்கு பொருத்தமான பின்னனி பாடகர் ஏ.எம். ராஜாதான் என்ற கருத்து வலுவாக இருந்ததால், தயாரிப்பாளர் மெய்யப்பச் செட்டியாரிடம், இயக்குநர் பீம்சிங்கும், விஸ்வநாதனும் பி.பி.எஸ்ஸை பாட வைக்க அனுமதி கேட்டனர். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் செட்டியார். பாவமன்னிப்பு வெள்ளி விழா கண்டது. கண்ணதாசன் பாட்டு, விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை, பி.பி.எஸ் குரல், விளைவு 'காலங்களில் அவள் வசந்தம்' இந்த ஒரு பாட்டு என் தலை எழுத்தை மாற்றியது என்பார் பி.பி.எஸ். போரட்டமாக இருந்த பாடகரின் வாழ்க்கையில் வசந்தோற்சவத்தை வரவழைத்தப் பாடல் அது. இதன் மூலம் காதல் மன்னனின் நூற்றுக்கணக்கான காதல் கீதங்களை இசைக்கும் நாதக் குழலானார் பி.பி.எஸ். அது மட்டுமல்ல விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர் திரை இசைக்கு எழுப்பிய மெல்லிசை மணிமண்டபத்தின் ஒரு சங்கீத தூணாக பரிமணித்தார் பி.பி.எஸ்,

பாத்தி பாத்தியாக செழித்து தலை சாய்த்து நிற்கும் நெற்கதிர்கள் போல் படம் பாடமாக ஒலிக்கும் மணி மணியான பாடல்கள்.

காத்திருந்த கண்கள்-1962,
கண்படுமே பிறர் கண் படுமே,
காற்று வந்தால் தலை சாயும்,
துள்ளித் திரிந்த பெண்ணொன்று,
வளர்ந்த கலை மறந்து விட்டாள்

போலீஸ்கார்ன் மகள்-1962
ஆண்டொன்று போனால் ,
இந்த மன்றத்தில் ஓடி வரும்,
பொன்னென்பேன்,
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

சுமைதாங்கி-1962
ராதா..ராதா..,
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்,
மாம்பழத்து வண்டு,
மயக்கமா கலக்கமா

பாசம்-1963
மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்,
பால் வண்ணம் பருவம் கண்டு

காதலிக்க நேரமில்லை:1964
அனுபவம் புதுமை,
உங்க பொன்னன கைகள்,
மாடி மேல மாடி கட்டி,
நாளாம் நாளாம் திருநாளாம்

வாழ்க்கைப் படகு:1965
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ, கண்களே..கண்களே,
சின்ன சின்ன கண்ணனுக்கு

பாசமலர்-1961
யார் யார் யார் அவர் யாரோ

திருடாதே 1961
என்னருகில் நீ இருந்தால்

பாதகாணிக்கை:1962
பூஜைக்கு வந்த மலரே வா

வீரத்திருமகன்:1962
ரோஜா மலரே ராஜகுமாரி,
பாடாத பாட்டெல்லாம்

பார் மகளே பார் - 1963
மதுரா நகரில் தமிழ்ச் சங்கம்,
அவள் பறந்து போனாளே

வெண்ணிற ஆடை:1964
சித்திரமே சொல்லடி

கொடிமலர்:1966
மெளனமே பார்வையாய்

நெஞ்சில் ஓர் ஆலயம்-1962
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்,

மணப்பந்தல்-1961
உடலுக்கு உயிர் காவல்

ஊட்டி வரை உறவி-1967
ராஜ ராஜஸ்ரீ ராஜன் வந்தான்

நில் கவணி காதலி-1968
எங்கேயோ பார்த்த முகம்

ஒரு தாய் மக்கள்-1971
பாடினாள் ஒரு பாட்டு

தவப்புதல்வன்-1972
சங்கீத குலோ கி பகியா

கங்கா கெளரி-1973
அந்தரங்கம் நான் அறிவேன்

மெலடி-இதமான இனிமை-திரை இசையில் கோலோச்சிய அந்தக் கட்டத்தில் பாட நேர்ந்ததை தமது பேறாக கருதுகிறர் பி.பி.எஸ். எனக்கு பிடித்தது இதமான, மிதமான இனிமையான இசை. அந்த மாதிரி இசை திரையில் அன்றைக்கு ஒலித்தது என்னுடைய அதிர்ஷ்டம். அப்படிப்பட்ட பாடல்களை பாடக் கிடைத்த வாய்ப்பு என் பாக்கியம் என்கிறார் பி.பி.எஸ். விஸ்வநாதன்-ராமமுர்த்தி மெல்லிசையில் பெரும் புரட்சி செய்தார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் பி.பி.எஸ்ஸின் குரலுக்கும், பாணிக்கும் ஏற்ப பல பாடல்கள் அமைத்தது அவரின் வெற்றிக்கு ஒரு காரணம்.

ஒரு உதாரணம்:

"துள்ளித் திரிந்த பெண்ணொன்று பாடல்.

தயாரிப்பாளர்களுக்கு திடீரென்று ஜெமினி கணேசன், சாவித்திரியின் நேரம் கிடைக்கவே, உடனே பாட்டைப் பதிவு செஞ்சு படப்பிடிப்பிற்கு போகனும்னு அவசரப் பட்டாங்க.

சேலம் (மாடர்ன் தியேட்டர்ஸ்) போக, அன்னிக்கு மாலை நான் நீலகிரி எக்ஸ்ப்ரிஸ் ஏறியாகனும்.

வேற யாரையாவது பாட வைக்கலாம்னு தயாரிப்பாளர்கள் பரபரத்தாங்க.

இந்த மெட்டை சீனுவோட குரல் வாகு, பாணி எல்லாத்தையும் மனசுல வச்சுப் போட்டிருக்கேன். வேற யாராவது பாட வைக்கிறதா இருந்தா வேற மெட்டைதான் போடணும்னு சொல்லி விட்டார் எம்.எஸ்.வி.

தயாரிப்பளர்களுக்கு நல்ல மெட்டை கை விட மனசில்லை.

மாலை வரை விஸ்வநாதன் பாடலுக்கான இணைப்பிசையை உருவாக்குவதில் செலவிட்டார்.

பாடாமலே நான் ரயிலேறினேன்.

வேறு குரலை வைத்து பாடலையும் படப்பிடிப்பையும் நிறைவு செய்துட்டாங்க. என்னை அப்புறம் பாட வைச்சு இணைச்சுட்டாங்க.

எனக்காகவே பல பாடல்கள்...நாளாம் நாளாம், நிலவுக்கு என் மேல், மயக்கமா கலக்கமா.. மனிதன் என்பவன்..விஸ்வநாத பரம ரசிகர்... நல்ல சங்கதி குரல்ல விழுந்தா ரெண்டு நாள் ரசிப்பார்...மணப்பந்தல்ல உடலுக்கு உயிர் காவல் பாடினதும்...அண்ணே நாளையிலிருந்து உங்க ரேட்டை ஏத்திடுங்க என்றார்...பாட்டு நல்லா வந்ததுன்னா அவர் முகத்தைப் பார்க்கனுமே..அவ்வளவு சந்தோஷப் படுவார்.
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Fri Jan 04, 2008 10:21 pm    Post subject: Reply with quote

Dear Raghavan sir,

Interesting info on Jamuna Rani and PBS's association with MSV. Its rare too!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
raghavankannan



Joined: 05 Jan 2007
Posts: 57

PostPosted: Fri Jan 11, 2008 9:36 pm    Post subject: Reply with quote

தொடர்ச்சி....

பி.சுசீலா:

ஏதோவொரு கேபிள் சேனல். அடக்கமான பி.சுசீலாவும் , எம்.எஸ். விஸ்வநாதனும் பேசிக் கொண்டிருந்தார்கள். "நீங்க கொடுத்த மெட்டை ஏதோ பாடினேன். அதை அப்படியே பாட என்னால் முடிஞ்சதில்லையே" அமைதியாக, ஆனால் வெளிப்படையாக பேசினார் சுசீலா. "ஏம்மா அப்படிச் சொல்றே, எவ்வளவு பாவத்தோட, இனிமையாகப் பாடினீங்க" அனுசரணையாகப் பேசினார் எம்.எஸ்.வி. பாட வைத்த இசை இயக்குநரும் பாடியவரும் காட்டிய பரஸ்பர மரியாதை, அவர்களது அடக்கம், சுசீலாவின் பாட்டை விட இனிமையாக இருந்தது.

"புதையல்" தந்த வெற்றிகள்:

விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசையில் வந்தது "புதையல்".

கைத்தறி சேலையின் பெருமையை தமிழில் நெய்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அதை நாட்டுப்புற நாதத்தில் வார்த்தெடுத்தார்கள் மெல்லிசை இரட்டையர்கள். கோஷ்டியினருடன் இணைந்து அதை அபூர்வ பாடலாகி விட்டார் சுசீலா.
'தங்க மோகன தாமரையே'
'விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணில்வே'
'ஆசைக்காதலே மறந்து போ'
'நல்ல காலம் வருடுது'
என்று புதையலில் சுசீலாவின் ராகமாலிகை நீள்கிறது.

தாலாட்டும் பட்டுக்கோட்டை:
ஒரு தாலாட்டு..விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசை அமைப்பு. பட்டுக்கோட்டையின் கவித்துவம். கொஞ்சும் இயல்பான வரிகள். சுசீலாவின் உணர்ச்சி ததும்பும் இன் குரல். விளைவு:
"சின்னஞ்சிறு கண்மலர், செம்பவழ வாய்மலர்,
சிந்திடும் மலரே ஆராரோ,
வண்ணத் தமிழ்சோலையே, மாணிக்க மாலையே
ஆரிரோ, அன்பே அராரோ"
நாக்கை அசைத்துப் பாடுவதுதான் தாலட்டு என்பார்கள். அப்போ மனசை அசைத்துப் பாடும் இந்தப் பாட்டிற்கு என்ன பெயர்.

வெற்றிப் பாடல்கள்:
தங்கப் பதுமை: என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன்.
பாகப்பிரிவினை: தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்



லதா மங்கேஷ்கரை அசத்திய சுசீலா:
பாவ மன்னிப்பு, பாசமலர் பாடல்களில் பி.சுசீலாவின் குரலினிமையைக் கேட்டு, தான் அசந்து போனதாக சொன்ன லதா மங்கேஷ்கர், மேலும் ஒரு வார்த்தை சொல்லியிருந்தார்."சுசீலாவின் குரலினிமை மட்டுமல்ல, அந்தப் பாடலின் இசையும் என்னை மிகவும் கவர்ந்தது" என்பது தான் அது. அப்படி என்ன ஸ்பெஷல்?. திரை இசையின் பரிணாம வளர்ச்சியில் மெட்டும் மற்றும் ராகத்தின் ஒட்டு மொத்த பிடியிலிருந்து விடுபட்டு, திரைப்பாடலில் உணர்ச்சி வெளிப்பாட்டிற்கே முதலிடம் என்பது ஓங்கி ஒலித்த காலம் அறுபதுகள் என்று கூறலாம்.

மெல்லிசைப் பாட்டின் வரைமுறைகள்;
ஆரம்பத்திலிருந்தே கே.வி. மகாதேவன் எழுதப்பட்ட பாடலுக்குத்தான் மெட்டமைத்து வந்தார் என்பது உண்மைதான். அறுபதுகளிலும் பல பாடல்கள் மெட்டமைக்கப்பட்டபின் எழுத்ப்பட்டன என்பதும் உண்மைதான். மீட்டர்..மெட்டு..முதலில் வந்ததா..மேட்டர்..பாடல் வரிகள்..முதலில் வந்ததா என்று கண்டுபிடிக்க முடியாத வகையில் இசை அமைப்போம் என்று விஸ்வநான் கூறுவதுண்டு. ஆனால், பாடலின் இனிமை, பாடல் வரியில் பொருட்செறிவு, பாடும் முறையில் உணர்ச்சி வெளிப்பாடு என்பதுதான் தாரக மந்திரம்.

தன்னை மறந்த "தான்"
இந்தத் தான் பிரயோகம் கவிஞர் கண்ணதாசனின் மனதில் பதிந்து விட்டது. முதல் ஸ்பரிசத்தால் பெண்ணின் உணர்வில் ஏற்படும் இன்ப-துன்ப போராட்டங்களையும் இளமையின் ஸ்புரணங்களையும் குறிப்ப்பதாக பாவமன்னிப்பில் ஒரு சம்பிரதாயமான கட்டம். அங்கேதான் "தான்" பிரயோகங்களைத் தாரளமாகப் பொழிந்தார். சிந்தினார் கவிஞர். கொஞசம் தான் தோன்றித்தனமாகத் தொனித்திருக்கலாம். என்ன பொத்தான் பாட்டு இது என்று முதலில் விஸ்வநாதன் கேட்டாராம். ஆனால் மொழியைக்கொண்டு மொழியின் வரம்புகளை கடக்கும் வழியை அறிந்தவர் கவிஞர்.
அத்தான்..என்னத்தான்..அவர்
என்னைத்தான்..எப்படி சொல்வேனடி..அவர்
கையைத்தான் கொண்டு மெல்லத்தான்..வந்து
கண்ணைத்தான்...எப்படி சொல்வேனடி... என்று பல்லவியில் ஒரு 'தான்' அடுத்ததற்கு இட்டுச் சொல்வது போல், எல்லாம் சொல்லில் அடங்காததாகி, 'எப்படி சொல்வேனடி' என்பதில் முடிகிறதல்லவா, இந்தப் பாடல் வரிகளில் கற்பனை செய்யப்பட்ட சிலிர்ப்புகளை, கால்புள்ளி, அரைபுள்ளி, தொடர்புள்ளிகள் எல்லாம் தொனிக்கும்படி எவ்வளவு சிரத்தையாக மெட்டமைத்து இருக்கிறார்கள் இரட்டையர்கள்! வயலின்களிண் முதல் வரவேற்பு, அதைத் தொடரும் அகார்டியனின் செழுமையான மெல்லோசைகள், சரணங்களில் அன்றி தலை காட்டாத தாள வாத்தியங்கள்...என்று சுகமான சூழல் கிடைத்து விடுகிறது. மெட்டென்பது ஒவ்வொரு வார்த்தையின் அபிப்பிராயத்தை வெளிக்கொணருகின்ற வித்தை என்ற உணர்வு மேலோங்கி இருந்த காலமாதலால், பாடல வரிகள், மெட்டு, வாத்திய இசைசேர்ப்பு என்பதெல்லம் பாடும் குரஃல் என்ற மைய வட்டத்தை சுற்றித்தான் சஞ்சரித்தன. இந்த நிலையில், தன்னிடமிருந்து எதிர் பார்க்கப்பட்ட செளந்தர்யங்களை சுசீலாவால் கொடுக்க முடிந்தது.

அகார்டியனின் இனிமையை நாம் கேட்ககூடிய ஒரு சில பாடல்களில் இதுவொன்று. இன்று ஸ்டீரியோ, டீ.டீ.எஸ், காம்ப்பாக்ட், டிஸ்க், டால்பி என்பதாக இசையின் எந்திர தொழில் நுட்பம் வளர்கிறதே ஒழிய, அக்கூஸ்டி..மின்னணுயியல் கலவாத இயற்கை முறையில் ஓசைகள் எழுப்பும் வாத்தியங்களின் பயன்பாடு குறைந்து வருகிறது. இந்த அக்கார்டியனை எங்கு கொண்டு புதைத்தார்கள். எல்லாம் கீ போர்டில் தான். இப்போது கீ போர்டு வாசிப்பு கூட குறைந்து வருகிறது. சில ஸ்வரங்களை தாளில் எழுதி, கீ போர்ட்..சிந்தஸைஸர் வாத்தியத்திற்குள் செலுத்திய பிறகு, ஒரே பட்டனைத் தட்டி விட்டால் இசை கிடைத்து விடுகிறது. தேவையான வாத்தியத்தின் ஒலியையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

பாவமன்னிப்பில் இன்னொரு பாட்டில் இசை அமைப்பாளர் விஸ்வநாதனின் குரல் சுசீலாவுடன் சேர்ந்து ஒலிக்கிறது. ஹம்மிங் தான். ஆனால் டம்மி அல்ல. பள்ளி அறை பாட்டுத்தான். ஆனால் கெளரவமான பாடல் வரிகள். மெட்டும் அப்படித்தான்.

'அத்தை மடி மெத்தை அடி'யில் சந்தோஷமான தாலாட்டு. 'மன்னவனே அழலாமா' வில் பரிவு. 'பக்கத்து வீட்டு பருவ மச்சான்'...சிருங்காரம். 'ஆயிரம் இரவுகள் வருவதுண்டு' எதிர்பார்ப்பு..விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் அற்புதமான இசை அமைப்பில் சுசீலாவின் குரல் ஜாலம் செய்தபோது ரசிகர்கள் மெய்மறந்தார்கள். 1963ல் தீபாவளியில் வெளிவந்த ''கற்பகம்" பரபரப்பான வெற்றியைக் கண்டது. அறிமுக நாயகியான கே.ஆர். விஜயாவிற்கும் அனைத்துப் பாடல்களை எழுதிய வாலிக்கும் அபரிமிதமான வரவேற்பை பெற்றுத் தந்தது. இசையும் குரலும் அதற்கு ஒரு முக்கிய காரணம்.

'பக்கத்து வீட்டு பருவ மச்சான்' சிருங்காரத்தில் புரளும் பாடல். சுசீலாவிடம் பேசிக் கொண்டிருந்த போது அதை ஒதுக்கினார். 'மன்னவனே அழலாமா'வைக் குறிப்பிட்டுச் சொன்னார். 'நிறைய பேர் விரும்பறாங்க'.
எடுப்பான பல்லவி, சொல்லவரும் கருத்தும், கதையின் தேவைக்கு ஏற்ப, உணர்வுப்பூர்வமானது. கண்ணீரைத் துடைக்க வந்தவளே, கண்ணீரின் விளிம்பில் நிற்கும் இந்தப் பாடலில் 'மன்னவா..மன்னவா..மன்னவா' என்று கருணை ரசத்தை பெருக்குவது விஸ்வநாதனுக்குரிய போக்கு. பாடலின் ஒரு சொல்லை எடுத்து உணர்ச்சியைக் கூட்டுவது அவருக்கு கை வந்த கலை.ஒரு இழயை எடுத்து உணர்வைப் பின்னிவிடக் கூடியவர். இந்தப் பாட்டில் என்ன செய்திருக்கிறார் சுசீலா? ஒரு சிவாஜியோ சாவித்திரியோ முகத்தில் காட்டக்கூடிய பாவத்தை குரலில் காட்டியிருக்கிறார். விபத்தில் இறந்த்தவளின் இடத்தில் இன்னொருத்தி வருகிறாள். அவளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று மறைந்தவள் ஆவியாகப் பாடுகிறாள். இவ்வளவு தான் சிச்சுவேஷன். ஆனால் இன்று நாம் பாடலை கேட்கும் போது ஸ்தூலமான காரணிகள் நம் நினைவுக்கு வராமல், அவரவர் மனோபாவத்திற்கு ஏற்ப அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். அதற்கு சொல்லும் மெட்டும் இடம் கொடுக்கின்றன.

சிங்கப்பூர் கப்பலில் இருந்தோம். காதல் பாட்டுப் பாட காலம் வருகிறது. கப்பல் ஜோடி உதகையில் இருக்கிறது. சிங்கப்பூரின் கசப்பான நினைவுகளின் மையமாக ஒரு பாடல் தான். நவீன ஓட்டலின் நடனக்காரியின் பாடல். அதில் ஒரு மர்மமும் சோகமும் வேறு படர்ந்த்திருக்கிறதா...ஒரு புதுமையான ரசக்கலவை ஏற்படுகிறது. இந்த இரவைக் கேள் அது சொல்லும்..அந்த நிலவைக் கேள் அது சொல்லும்..உன்றன் மனதைக் கேள் அது சொல்லும்..நான் மறுபடி பிறந்த்ததை சொல்லும்.. ஒரு அரிய ஓவியத்தை திறந்து காட்டி பின்னர் அதை மூடுவது போல் விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடலை இதழ் விரித்து மூடிக்

கொள்ளும் மலராக அமைத்திருக்கிறார்கள். கிராண்ட் ஓபனிங். பாங்கோஸ் என்ற நாள வாத்தியத்தின் மேளதாளம். கிளப் டான்ஸ் பாடலுக்குரிய வெஸ்டர்ன் ஹம்மிங்..ஆஹா..ஆஹா..என்று தொடக்கப் பிரகடனம்..களையோடு தொடங்கி சுவை இழக்காமல் நிறைவடையும் பாடல்.

இளமையான ஜோடிகள், காதலும் களிப்பும் ஆள்மாறாட்டமும் நிறைந்த கதை. படத்தில் வரும் ஆசாமிகளும் நாகேஷ், பாலையா மாதிரி குஷி கிளப்பும் பேர் வழிகள். அது தான் காதலிக்க நேரமில்லை. மெரினா பீச்சில் 'என்றன் பார்வை உன்றன் பார்வை' என்றுதான் படமே தொடங்கும். கப்பல் காரில் முத்துராமன், சல்வார் கமிஸில் காஞ்சனா.. மெட்டும் இணை இசையும் மெல்லிசைக் கோலம்.

காதலிக்க நேரமில்லையில் ஒரு அழகான பண்பட்ட பாடல், நாளாம் நாளாம் திருநாளாம். சுசீலா-பி.பி.எஸ். விஸ்வநாதனுக்கும் பிடித்த பாடல் என்று கேள்விப் பட்டதுண்டு. பிடிக்காமல் எப்படி இருக்கும். அழகான வர்ண மெட்டு, அசத்தும் இணைப்பு இசை, பாடலுக்கான காட்சி அமைப்பும் படபிடிப்பும் மகிழ்ச்சிகரமான சூழ்நிலையை கண்ணில் ஆடச் செய்வது போலிருக்கும்.

பிரமாண்டமான புராணப் படம் 'கர்ணன்'. பாடல்களில் இந்துஸ்தானி ராகங்களைக் காட்டினார் விஸ்வநாதன். சுசீலாவின் குரலில் இனிமையை படம் வரைந்தாற் போல ஒலிக்கிறது. "கண்ணுக்கு குலம் ஏது" பஹாடி ராகத்தில் அழகான மெட்டு.

அவள் இளவரசி. அவன் அடிமை. அவள் இதயம் அவனுக்கு அடிமை. போதாக்குறைக்கு அடிமைகளுக்கு விடுதலை தேடும் புரட்சிக்காரன். இந்த நிலையில் ஒரு தலைக் காதலில் அவளது உஷ்ணப் பெருமூச்சு காற்றை நிறைக்கிறது. படம் ஆயிரத்தில் ஒருவன். பாடல் உன்னை நான் சந்த்திதேன்.. சோக ராகமான சுபபந்துவராளியில் அமைந்த மெட்டு. ஓ..ஓ..என்று புயல் காற்றைப் போல ஒலிக்கும் கோரஸ் குரல்கள் இவற்றுடன் காதலின் சுமையை நாதப் படம் பிடித்திருக்கிறார் சுசீலா.

திரைப்பாடல் என்றால் பொதுவாக துச்சமாகத்தான் நினைட்தார் என்று அவரை அறிந்த பலர் குறித்திருக்கிறார்கள் (பாவேந்தர் பாரதிதாசன்). பாரதிதாசனின் தமிழ் பாவான "தமிழுக்கும் அமுதென்று பேர்" 1965ல் வெளிவந்த பஞ்சவர்ணகிளியில் இடம் பெற்றிருந்தது. படம் என்னவோ சுமாரான ரகம். ஆனால் விஸ்வநாதனின் இசையில் பாடல்கள் எல்லாம் இன்றுவரை நினைவு கொள்ளப்படுகிறது. கொஞ்சம் விவகாரமான சொற் பிரயோகங்களை எல்லாம் வழிக்கு கொண்டு வந்து 'தமிழுக்கும் அமுதென்று பேர்' பாடலுக்கு செஞ்சுருட்டியின் மெல்லிசைப் பாங்கான அழகான மெட்டமைத்தார் விஸ்வநாதன்.

ராகம் தந்தார் மகாதேவன். விரகதாபத்தை ஸ்வரம் பிடித்தார் விஸ்வநாதன். ஏ.வி.எம்.மின் உயர்ந்த மனிதன் (1968). நிலா அவளை தகிக்கிறது. இன்று போய் நாளை வா என்று நிலாவிடம் கூறுகிறாள். பனிபடர்ந்த இரவு..பால் நிலா..பாவை தாபம் தென்றல் (தீ)

பால்போலவே..வான்மீதிலே..யார்காணவே..நீ காய்கிறாய்..என்று வருவதை தொகையறாவாக (தாளத்தில் வராத வரிகள்) கொண்டு நெடில் அட்சரங்களை கோர்வையாக நீட்டி விரகஜுரத்தின் டெம்பரேச்சரை ஏற்றி விட்டிருக்கிறார் விஸ்வநாதன்.
பாடல் பதிவான சில நாட்களுக்குப் பிறகு வேறொரு பாடலுக்காக ஏ.வி.எம். சென்றிருக்கிறார் சுசீலா. அதற்குள் பாடலை படம் எடுத்திருந்தார்கள். மெய்யப்ப செட்டியார், இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு, விஸ்வநாதனுடன் ரஷ் பார்த்தார் சுசீலா. இந்தப் பாடலுக்கு உனக்கு விருது கிடைக்கும் பார் என்றார்கள் (சுசீலா சொன்ன தகவல்). சுசீலா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தேசிய விருது வந்தே விட்டது.

இளமை துள்ளலுடன் பல நல்ல பாடல்களை சுசீலா பதிவு செய்தபடியே தனது பயணத்தை தொடர்ந்தார்.
தங்கத்திலே ஒரு குறை இருந்தால் (பாகப்பிரிவினை)
என் வாழ்வில் புது பாதை கண்டேன் (தங்கப்பதுமை)
ஆண்டவனே உன் பாதன்களில் (ஒளிவிளக்கு)
ஆலயமணியின் ஓசையில் நான் கேட்டே-பாலும்பழமும்
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு (சவாலே சமாளி-1971-இரண்டாவது தேசிய விருதைக் கொண்டு வந்த படம்).
'மலர் எது என் கண்கள்தான்' (அவளுக்கென்று ஓர் மனம்)..'
இன்று வந்த இந்த மயக்கம் (காசேதான் கடவுளடா),
விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும் - சூதாட்டம்
..வசந்ததில் ஓர் நாள்-மூன்று தெய்வங்கள்.
மணமெடை மலர்களுடன் தீபம் (ஞானஒளி),
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு (காவியத்தலைவி) தாயின் முகம் இங்கு நிழலாடுது (தங்கைக்காக),
என் ராஜாவின் ரோஜாமுகம் (சிவகாமியின் செல்வன்) ஆகாயப்பந்தலிலே (பொன்னூஞ்சல்)
மதனமாளிகையில் (ராஜபார்ட் ரங்கதுரை)
கல்யான வளையோசை கொண்டு (உரிமைக்குரல்) இனியவளே (சிவகாமியின் செல்வன்)
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து (நினைத்ததை முடிப்பவன்) அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன் (ரோஜாவின் ராஜா)
போன்ற செறிவான மெட்டுக்கள், இனிமை, இளமை, துள்ளல் நிறைந்த சுசீலாவின் குரலில் ஒலித்த போது அவை ஜெயிக்கவே செய்தன.

டி.ஆர்.பாப்பா::

ஜப்பானில் குண்டு மழை பொழியுமோ என்ற அச்சத்தில் சென்னையை விட்டு மக்கள் வெளியேறிக் கொண்டிருந்த 1941ல் ஜுபிடர் பிக்ஸர்ஸ் சென்னையில் திரைப்பட தயாரிப்பு தொடங்கியிருந்தது. இப்படி சென்னையில் எடுக்கப்பட்ட படங்
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2, 3  Next
Page 2 of 3

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group