"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Mayakkama - Vishwa Thulasi

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Rare Songs of MSV
View previous topic :: View next topic  
Author Message
ravikumar



Joined: 12 Dec 2007
Posts: 25

PostPosted: Tue Mar 25, 2008 10:35 pm    Post subject: Mayakkama - Vishwa Thulasi Reply with quote

படம் : விஸ்வதுளசி -- பாடல் : மயக்கமா? அந்தி மயக்கமா?

தமிழ் திரைப்படங்களில் வெகு நாளாக அலசப்பட்டு வரும் முக்கோன காதல் கதை ஒன்று, புதிய சாயத்துடன், 2004ம் ஆண்டு வெளியானது. மற்ற படங்களிலிருந்து வித்தியாசப்பட்ட இந்த படம் நடுத்தர வயது காதலை, அதுவும் 60களில் எழுந்த காதலை, வெளிப்படுத்துவதாக அமைந்தது. யதார்த்தமான நடிகர், நடிகைகளும் / கதாபாத்திரங்களும் கொண்ட இந்தப் படம் வெளியானதே பலருக்கு தெரியாது.

படத்தின் இயக்குனர் அமெரிக்காவில் வசித்ததாலும், இது அவரின் முதல் படம் என்பதாலும் வழக்கமான திரைப்பட மசாலாக்கள் எதுவும் இதில் இல்லை. தமிழ் மொழி மீதும், இசை மீதும் உள்ள பற்றினால், அழகான பாடல்களை, தமிழ் திரையிசையின் ஜாம்பவான்களான எம்.எஸ்.வி, இளையராஜாவின் இசையில் அவரே இயற்றினார். பாடல் வரிகளும், இசையும், கதையின் காலத்திற்கேற்ப அமைந்து இனித்தன.

இதில் எம்.எஸ்.வியின் இசையில் உருவான அமைதியான, அருமையான காதல் பாடல் ‘மயக்கமா? அந்தி மயக்கமா?’ பாடல்.

‘பார்த்தேன் ..சிரித்தேன்..பக்கம் வரத் துடித்தேன்’ என்று தேனில் முடியும் தேனான பாடலின் தாக்கத்தால் அமைந்தது இந்த பாடல்.

வடு மாங்காய், தயிர் சாத துணையோடும், சின்ன வீடாக பிடிக்குமா அல்லது பெரிய வீடாக பிடிக்குமா என்றெல்லாம் மறைமுகமாக(!) காதலை வெளிப்படுத்தாமல் நேரிடையாக காதலை வெளிப்படுத்தியதால் இந்த பாடல் அதிகமாக வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ஒலிக்க வில்லை என்று நினைக்கிறேன்.

‘குடி தேன்..இனி எங்கள் குடி தேன் என
படித் தேன் பார்வையில் குடித்தேன்’

‘மலைத் தேன் இவரென மலைத்தேன்’

என்ற கண்ணதாசனின் நுணுக்கமான வார்த்தை ஜால வரிகளுக்கு, அர்த்தம் பிசகாமல் இசையலங்காரம் செய்த கரங்களுக்கு, பல ஆண்டுகள் கழித்து அதே போன்ற வாய்ப்பு.

யாருடைய வரிகள் என்று பாராமல் என்ன வரிகள் என்று மட்டுமே பார்க்கும் மன்னர் (இதற்கு ஒரு சான்று இப்பாடலின் அலசலுக்கு முடிவில்) மிகவும் லயித்து படைத்த அருமையான ஒரு பாடல்.

Xylaphone மற்றும் கிட்டாரின் துணையோடு வரும் எளிய, அமைதியான தொடக்க இசை, காதலர்களின் தனிமையை அழகாக எடுத்துக் காட்டி, அதிகம் நீடிக்காமல் ‘மயக்கமா’ என ஸ்ரீநிவாஸின் குரலுக்கு வழி நடத்தும்.

‘மயக்கமா? அந்தி மயக்கமா? அழகே..
அந்த மயக்கமா?’

இதில் ‘அழகே’ என்ற வார்த்தைதான் எவ்வளவு அழகு பெறுகிறது!
‘அந்த மயக்கமா?’ இதில் ‘அந்த’ என்ற அந்த வார்தைக்கு எத்தனை அர்த்தம். கண்ணதாசன் இல்லாத குறையை மன்னர் நிரப்பி விட்டார்!

இடையிசையில் வரும் புல்லாங்குழல் கவிதை பாடி குதுகலிக்கும். ஹிந்துஸ்தானி வாத்தியத்தின் (சாரங்கி?) நேர்த்தி, பாடல் காட்சியின் தொண்மையை (1960களில் வருவதாக) உணர்த்தி, காதலர்களின் நெருக்கத்தை விளக்குவது போல் இழையும். இடையிசை முடிந்து பாடல் தொடங்கும் போது, ஒரு வினாடி அமைதி..இந்த இடத்தில் தபேலாவின் துணையோடு சரணத்திற்கு தாவும் உத்தியில் மன்னரின் ஐம்பது வருட சாகசம் விளங்கும்.

‘பொன் மாலை தேன் மயக்கத்தில் மறைத்தேன்
அன்பை விளைத்தேன்..
ஆசையை வளர்த்தேன்’

மீண்டும் சாரங்கியின் குழைவு.

தொடரும் சரனத்தில் ‘அதை சொல்லத்தான் தோழனை அழைத்தேன்..என்று மூன்று முறை வரும் வரி - ஒவ்வொரு முறையும் வித்தியாசமான பாவத்தில். அற்புதம்.

ஒவ்வொரு சரனத்திலும் பெண் குரல் முடிந்து ஆண் குரல் தொடங்கும் போது வரும் சந்தூர், பாடலின் நடையோடு தொடர்ந்து ஒலிக்கும், அக்கார்டியன்/ஆர்கன், தபேலா இசை என ஆரவாரமில்லாத அரவணைக்கும் இசை. பாடலை பாடிய ஸ்ரீநிவாஸ் மற்றும் சுஜாதா இருவரும் மிக அழகாக பாடியுள்ளனர்.

முழுப் பாடல் இதோ.

ஆண் :
மயக்கமா? அந்தி மயக்கமா? அழகே
அந்த மயக்கமா?

மயக்கமா? அந்தி மயக்கமா? அழகே
அந்த மயக்கமா?

பெண்:
மயக்கமே! அந்தி மயக்கமே! அன்பே
அந்த மயக்கமே!

மயக்கமே! அந்தி மயக்கமே! அன்பே
அந்த மயக்கமே!

ஆண் :
மயக்கமா? அந்தி மயக்கமா? அழகே
அந்த மயக்கமா?


பெண்:
பொன் மாலை தேன் மயக்கத்தில் மறைத்தேன்..
அன்பை விளைத்தேன்..
ஆசையை வளர்த்தேன்..
பொன் மாலை தேன் மயக்கத்தில் மறைத்தேன்..
அன்பை விளைத்தேன்..
ஆசையை வளர்த்தேன்..
காதலை நாணத்தில் குழைத்தேன்.. அதை
சொல்லத்தான் தோழனை அழைத்தேன்..
காதலை நாணத்தில் குழைத்தேன்.. அதை
சொல்லத்தான் தோழனை அழைத்தேன்..அதை
சொல்லத்தான் தோழனை அழைத்தேன்..

ஆண் :

மென்கலை தேன் மயக்கத்தில் திளைத்தேன்..
அழகே களித்தேன்..
உயிரை தொலைத்தேன்..
காதலை உள்ளத்தில் நிறைத்தேன்.. அதை
சொல்லத்தான் தோழியை அழைத்தேன்..
காதலை உள்ளத்தில் நிறைத்தேன்.. அதை
சொல்லத்தான் தோழியை அழைத்தேன்..அதை
சொல்லத்தான் தோழியை அழைத்தேன்.

மயக்கமா? அந்தி மயக்கமா? அழகே
அந்த மயக்கமா?

பெண்:
வெண் ,மாலை மெல்ல தழுவிட திகைத்தேன்.,
அன்பே நெகிழ்ந்தேன்..
மெல்லத்தான் குழைந்தேன்..
என் மனதில் நானின்று தான் மகிழ்ந்தேன்.. அதை
சொல்லத்தான் தோழனை அழைத்தேன்..அதை
என் மனதில் நானின்று தான் மகிழ்ந்தேன்.. அதை
சொல்லத்தான் தோழனைஅழைத்தேன்..அதை
சொல்லத்தான் தோழனை அழைத்தேன்.

ஆண்:
உன் வளை மெல்ல நழுவிட வளைத்தேன்..
அன்பே வளைந்தேன்..
மெல்லத்தான் நிறைந்தேன்..
என் வயதினில் நானின்று தான் வாழ்ந்தேன்,, அதை
சொல்லத்தான் தோழியை அழைத்தேன்.
என் வயதினில் நானின்று தான் வாழ்ந்தேன்,, அதை
சொல்லத்தான் தோழியை அழைத்தேன்., அதை
சொல்லத்தான் தோழியை அழைத்தேன்.


ஆண் / பெண்

மயக்கமே! அந்தி மயக்கமே! அன்பே
அந்த மயக்கமே!


மன்னரின், இசைஞானியின் ரசிகர்கள் பலருமே அறிந்திராத இந்த படத்திற்கு, 2005 ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலக பட விழாவில், இசைக்கான தங்க ரெமி அவார்டு கிடைத்தது மட்டுமே பெரிய ஆறுதல். திரை அரங்குகளில் இந்த படம் ஒடியதா என்று கூட தெரியவில்லை. படத்தின் ‘publicity’ சரியாக அமையாததும் இதற்கு ஒரு காரணம்.

நல்ல இசையை இழந்தது ரசிகர்களே தவிர, இசையமைப்பாளர்கள் இல்லை.

---------------------------------------------------------------------------------

மன்னரின் இசை நாட்டத்தை, அவருக்கு இசையை தவிர வெளியுலக தொடர்பு அவ்வளவு கிடையாது என்பதை விளக்க கவிஞர் கண்ணதாசன் கூறிய நிகழ்ச்சி :

‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ பாடல் பதிவின் போது, பக்கத்து அறையில் வேறு பாடல் பதிவிற்கு வந்திருந்த கவிஞரிடம் ஒடினாராம் எம்.எஸ்.வி. ‘என்ணண்ணே இப்படி எழுதி இருக்கீங்க? ‘சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து’ .. மெட்டமைக்கும் போது ‘பாட்டி செத்து’ ன்னு வருது. மாத்தி எழுதுங்கண்ணே’ என்றாராம். அதற்கு கவிஞர் ‘இது நான் எழுதிய பாட்டு இல்லை, பாரதியாரின் பாடல்’ என்றாராம். அதற்கு மன்னர், ‘சரி அவர் எந்த ஸ்டுடியோவில் இருப்பார்? இதை மாத்தி எழுதனும்’ என்றாராம் மிக சிரத்தையாக.

பாடல் வரிகள் இசையால் சிதைந்து அர்த்தமற்றதாகி விட கூடாது என்பதில் தான் மன்னருக்கு எத்தனை கவனம்.

ஆனால் இப்போது,

‘இயற்கையின் மொழிகள் புரிந்து விடின்..மனிதரின் மொழிகள் தேவையில்லை..
இதயத்தின் மொழிகள் புரிந்து விடின்..மனிதர்க்கு மொழியே தேவையில்லை!


என்று வைரமுத்து அற்புதமாக சொன்னது போன்ற உன்னத நிலையை எட்டி கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.
_________________
Ravikumar
Back to top
View user's profile Send private message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Wed Mar 26, 2008 1:51 pm    Post subject: Reply with quote

Dear Ravikumar,

Thank you very much for your wonderful writeup of really a gem of a song come from Kalaivaani thro MSV's fingers !

Our family went and saw this picuture in a not-so-good-theatre after a few days release of this movie. It was a very good picuture and songs were really great. All the songs were tuned and recorded by Sri MSV and rerecording alone was done by MSV and IR. In fact I had been to this rerecording one day.

About 15 songs written by the producer of the film, a US citizen, were tuned and recorded by MSV and looking at the wonderful songs, the producer decided a make a film using some of the songs. That is the background of this movie, as informed by Sri MSV himself.

Unfortunately, nobody telecasts or broadcasts these songs ! I See the cruelty of fate !

I have been wanting to buy the Audio CD of these songs, but it is not available in the market.

I had even requested Sri MSV to give a copy of the entire set of songs tuned originally, but, you know, he can only create and forget about it the next moment.

IF anybody has a copy of these, by any chance, pl send to me so that we will arrange to post in the site.

Keep writing about these sort of unknown crowns of MSV.

RAMKI
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Wed Mar 26, 2008 2:27 pm    Post subject: Reply with quote

Dear Mr. Ravikumar,

Thanks for the note about the movie's background & the songs. Indeed, the movie / songs were not publicised the way its being done today but when 2 champion composers join hands, promotion becomes secondary no ! Very Happy


Dear Mr. Ramky,

Here is the link for 7 songs :

http://www.raaga.com/channels/tamil/movie/T0000652.html


I have listened to them earlier & reminds me the MSV of the 70s.

Is this the 3rd movie the 2 legends did together ?
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Wed Mar 26, 2008 5:26 pm    Post subject: Reply with quote

Dear Ravikumar...

Great Analysis.... A beautiful melody with cute instumentation.

Sumathi Ram - the Director & Lyricist of the movie gave the following statement after the movie released in one of her interviews:

"MSV Avargal Vaarthai KaappaaLar !!!" How true this statement ?!

As my dad said, we watched this movie in the theatre... the irony was the strength of audience in the theatre - It was just 10-15 (including us) in the whole theatre !!!

And dear Balaji,

This is the fourth film MSV & IR together:

1) Mella Thiranthathu Kadhavu
2) Senthamizh Paattu
3) Senthamizh Selvan
4) Viswa Thulasi
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
ravikumar



Joined: 12 Dec 2007
Posts: 25

PostPosted: Thu Mar 27, 2008 8:07 am    Post subject: Thanks. Reply with quote

Thanks M/s Ramki, Balaji & Ram !

It is nice to learn about the background of this movie, and all the songs are
tuned by MSV. Some of the web-sites claim it differently'Crying or Very sad'


But I could smell the flavor of MSV on this song, Kannama and Aaya Kalaigalin songs.

Kannama is another (in fact all the songs are) classic in this movie. Especially the
way SPB is made to sing 'manam..thannil'

Thanks again.
_________________
Ravikumar
Back to top
View user's profile Send private message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Fri Mar 28, 2008 9:08 am    Post subject: Reply with quote

Mr. Ravikumar,

Unless Mella thirandhadhu kathavu ( tunes set by MM & orchestration by IR ), in Vishwa Thulasi, each one has separately composed & orchestrated 4 songs I think. So, its easily identifiable !
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Rare Songs of MSV All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group