"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

A Handful of Piano Picks - Part 14

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Tue Apr 15, 2008 10:42 am    Post subject: A Handful of Piano Picks - Part 14 Reply with quote

A Handful of Piano Picks - Part 14

"கண்ணிரண்டும் மின்ன மின்ன" - ஆண்டவன் கட்டளை

மெல்லிசை மன்னர்களின் இசை வீரியத்தை உணர்த்த ஒரு அருமையான பாடல். பாடல் துவக்கம் 'முரட்டுத்' தனமான வயலின் ஆர்கெஸ்ட்ரேஷனைக் கொண்டிருக்கும். என்ன அருமையான எடுப்பு !!! அக்கார்டியன் அழகாக எடுக்க பியானோ துவங்கும் - திஸ்ர நடையில். இந்த திஸ்ர-பியானோ பாடல்கள் வரிசையில் மெல்லிசை மன்னர்(கள்) காட்டிய வேறுபாடுகளையும், அந்த வேறுபாடுகளின் அதிசயங்களையும் அளப்பது அரிதாகும்!

பல்லவியின் இடை இடையே வரும் வயலின் அரேஞ்மெண்ட் எத்தனை அற்புதம் !!!

கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன


பெண்ணழகு போவதெங்கே சொல்லமா (இங்கு ஒரு வயலின் ஃபில்லிங் வரும் பாருங்கள்.. !!!)

என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா

இடையிசையில் ஒரு அரிய Chord Progression ஐ மிக எளிதாகப் புகுத்தியிருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள்.

இளையராஜா அவர்களின் இசையில் "இளமைக் காலங்கள்" படத்தில் "பாட வந்ததோர் ராகம்" பாடலில் ஒரு Progression இருக்கும். குறிப்பாக "கள்ளூறும்...." எனுமிடத்தில், G# ஸ்கேலில் Progression இவ்வாறு அமைந்திருக்கும்:

G# Minor - G Aug - B Major - B 5th

ஆனால் இந்த Minor-Aug-Major-5th Progression தமிழ்த் திரையில் முதன் முதலில் பிரையோகம் செய்யப்பட்டது இந்த "கண்ணிரண்டும்.." பாடலில் தான். முதல் இடையிசையின் துவக்கத்தில் இந்த Progression பியானோவில் அமைக்கப்பட்டிருக்கும். சில மாதங்களுக்கு முன் முதன்முறை இப்பாடலைக் கேட்கும் போது அளவற்ற மகிழ்ச்சி இந்த Progression ஐக் கேட்டு விட்டு - எப்படி எண்ணற்ற இசைப் பரிமாணங்களுக்கு முன்னோடிகளாக இருக்க முடியும் என்ற வியப்பின் காரணத்தினால்!

இப்படி பியானோ ரிதத்துடன் படு ஜோராகத் துவங்கும் பாடலில் சரணம் தபேலாவாக மாறுவது அத்தனை அழகு. இசையில் ஏதாவது 'எடக்கு முடக்காக' செய்வதே இவர்களுக்கு வேலையாகி விட்டது! Smile

இந்த பாடலில் Latin இசையின் சாயம் இருப்பது மற்றுமொரு அழகு.


விடிய விடிய சொல்லித் தருவேன் - போக்கிரி ராஜா

80 களில் மெல்லிசை மன்னரின் இசையில் பூத்த அற்புத மெலடி! பியானோ அவ்வளவு அழகாகப் பயன் படுத்தப் பட்டிருக்கும் இப்பாடல், உன்னதக் கூட்டணியான எம்.எஸ்.வி - எஸ்.பி.பி யின் மற்றுமொரு முத்திரைப் பாடல்.

பியானோ, வேண்டும் என்கிற வேளைகளில் முன் வந்து தன் இருப்பைக் காட்டிவிட்டு மற்ற நேரங்களில் பின்னணியில் குழலுக்கும், குரலுக்கும் மகிழ்ச்சியாக சேவை செய்து கொண்டிருக்கும்.

மெல்லிய வயலின்கள், பியானோ கொண்டு மிக இனிமையாகத் தொடங்கும் முன்னிசை. 80 களில் மெல்லிசை மன்னர் பாடல்களில் Base Guitar மிகவும் பிரதானமாகப் பயன் படுத்தப் பட்டிருக்கும். இப்பாடலும் அதற்கு விதி விலக்கல்ல. குழல் வந்து, பின் கிட்டார் கொண்டு அழகாக முடிய பல்லவி துவங்கும்:

விடிய விடிய சொல்லித் தருவேன் (பியானோ பிட்)
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் எனென்னவோ என் எண்ணங்கள்!


முதல் இடையிசையில் வரும் சித்தாரில் தான் என்ன இனிமை ! தேன் சொட்டும் பலாவாக அவ்விசை முடிய, அதை ஆசையாகப் பருகும் விதமாக சுசிலா அவர்கள் தன் குரலில் அழகாக சரணத்தைத் தொடங்குவார்... "மாலையில் மல்லிகை" என்று.

பியானோவும் தபேலாவும் ஒன்றோடொன்று பிணைந்து, இணையில்லா சுகமளிக்கும்!

"சொல்லித்தர நானிருப்பேன் ராஜாத்தி" எனும் போது, சிரிது நேரம் அமைதி காத்து வரும் பியானோவும் Base Guitarரும் பளிச்சென விழித்துக் கொள்ளும் விதம் கொள்ளை இன்பம்! இவ்விடத்திலும் மற்றும் இரண்டாம் சரணத்தில் - "வெட்டி எடுக்காத தங்கமோ" என்று தொடங்கும் இடங்களிலும் - எஸ்.பி.பி யின் குரல் நம்மைச் சிலிர்ப்படையச் செய்யும்!

இப்பாடலில் இன்னொரு சிறப்பம்சம் - பாடலில் மூன்று சரணம் இருக்கும். முதல் இடையிசை சித்தார். இரண்டாம் இடையிசை சந்தூரில் துவங்கி, குழலில் அழகாக முடியும். மூன்றாம் இடையிசையில் வயலின் சந்தூருடன் - பாடகர்-பாடகி குரல்களில் 'Parts Singing' அற்புதக் கற்பனை!

இப்பாடல் எனக்கு மிகவும் பிடிக்க ஒரு காரணமுண்டு. சிறு வயதில் என் தந்தை இப்பாடலை மட்டும் எனக்காக மணிக்கணக்காகப் பாடி என்னை உறங்கச் செய்வார் என்று நான் அறிந்தேன்! மெல்லிசை மன்னர் இசையை சிறு வயது முதலே என்னுள் விதைத்ததை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்!

"உலகின் எந்த இசை வடிவத்திலும் இவருக்கு 'பயிற்சி' தேவையில்லை! தன் கண்களை மூடிக்கொண்டால் 'உள்ளிருந்து' Scan செய்யப்பட்டது போல் அவ்விசை இவருக்கு வந்துவிடும்!" என்று மறைந்த இசை மேதை விஸ்வேஷ்வரன் அவர்கள் மெல்லிசை மன்னரைப் பற்றிக் கூறியது வானுயர்ந்த வார்த்தைகள் !

(தொடரும்)

A Handful of Piano Picks - Listing
Part 1 - Ennai Theriyuma
Part 2 - Kaatru Vandhaal
Part 3 - VannakkiLi
Part 4 - Oh Little Flower
Part 5 - Naan Nandri Solven
Part 6 - Thairiyamaaga Chol Nee
Part 7 - Maanicka Thottil
Part 8 - Collection of Piano Songs
Part 9 - Jazz Piano1 - Varavendum Oru Pozhuthu
Part 10 - Jazz Piano2 - Viswanathan Velai VeNdum
Part 11 - Jazz Piano3 - Enna Vegam Nillu Bama
Part 12 - Rock and Roll - Aadavarellam, Malarendra Mugamadhu
Part 13 - Unnai Ondru Ketpaen
Part 14 - Kannirendum Minna, Vidiya Vidiya
Part 15 - "Periya Idathu PaNN" - Kannenna Kannenna Kalanguthu
Part 16 - "Paal Thamizh Paal"
Part 17 - Chella KiLigaLaam
Part 18 - An Ensemble of Jazz Rhythms(1) - Thottu Kaattavaa
Part 19 - An Ensemble of Jazz Rhythms(2) - Hey..Naadodi (Anbe Vaa)
Part 20 - Piano Thisram - Jillendru, Manamedai, Senthamizh Paadum, Pillai Thamizh Paadukiren, Ninaithathai Nadathiye
Part 21 - "Rocking Piano" - Adadaa enna azagu, Allippanthal, Yaaro aada therinthavar
Part 22 - MSV-SPB Mesmerism
Part 23 - Avan Ninaithaana
Part 24 - "Expressions" - Athanin MuthangaL, Piano Fillers in different songs
Part 25 - Layam - An analysis on different beat patterns in Tamil Film Music
Part 26 - The Finale - Top 3 Piano songs of MSV
_________________
Ramkumar


Last edited by Ram on Wed Jun 17, 2009 4:22 pm; edited 1 time in total
Back to top
View user's profile Send private message Send e-mail
ravikumar



Joined: 12 Dec 2007
Posts: 25

PostPosted: Wed Apr 16, 2008 3:34 am    Post subject: Vidiya Vidiya Solli tharuven... Reply with quote

ராம்,

இப்பாடலை பற்றிய உங்களது விவரிப்பு மிக அருமை. நீங்க்ள் சொன்னது போல், பியானோ தேவையான இடங்களில் மட்டுமே, துணை வாத்தியம் போல ஒலித்து இருந்தாலும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.

பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கும் வயலினோடு இழையும் பியானோ, பாடகர்களின் குரல் ஒலிக்க துவங்கியதும், மிக சன்னமாக அவர்களை வழி நடத்தி செல்வது அழகு.

இந்த பாடலில் எம்.எஸ்.வியின் முத்திரை தபேலா விளையாடி இருக்கும். சாதாரணமாக் எல்லா பாடல்களிலும் தபேலா ஒரே தாள கதியில் தான் ஒலிக்கும். ஆனால், இவரின் சில பாடல்களில், தபேலா ஒரு க்ட்டுக்குள் இல்லாமல் பாடலின் எற்ற இற்க்கங்களுக்கு, பாடலின் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஒலித்து இருக்கும். அதற்கு இந்த பாடலும் ஒரு உதாரணம்.

நீங்கள் சொன்னது போல் ஒவ்வொரு இடையிசையும் ஒரு கவிதை. அதிலும் மூன்றாவது இடையிசை, பாடகர்களின் ஹம்மிங், கீ-போர்டு, சந்தூர், கிட்டார், குழல் என ஒரு இசை சங்கமம் உண்டானது போலிருக்கும்.

இன்னொரு அழகு, எஸ்.பி.பி. பாடலின் கடைசி சரணம் முடியும் போது,
'விடிய..விடிய' என்று சொல்லி மீண்டும் 'விடிய.. விடிய' என்று பாடும் போது, ஆஹா என்ன ஒரு கற்பனை.

நாயகன், நாயகியின் காதல் என்னும் மெல்லிய் உணர்வை இதை விட அழகாக, யாராலும் எழுதவும் இசையமைக்கவும் முடியாது.

இப்பாடலின் சிறப்பை 'விடிய விடிய' பேசினாலும் முழுதாக விளக்க் முடியாது.

I thank you very much for writing about one of my all time favorites.
_________________
Ravikumar
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Wed Apr 16, 2008 11:36 am    Post subject: Reply with quote

WOW, Ram!! You are too much, my friend! Very Happy yenna yennamo you write & amaze us.

Kannu rendum minna minna.... carries carnatic raga keervani ambience - true raga bhaavam to my ears when it starts! (remember anubhavam pudhumai avalidam kanden.... ) You seem to know practical WCM - chord progression. That chord progression gives me that Raga keervani ambience.

This is the rt way to approach it. Regular, novice people who runs around listen to few keerthanais or slogams can also understand and you bridge the gap.

Thanks for the info.


The composer has the elegance, taste and refinement in creating a melodic, fashionable music. Adhaan podara! Smile


Mr.HIP!!

Vinatha.
Back to top
View user's profile Send private message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Thu Apr 17, 2008 6:57 am    Post subject: Reply with quote

Hey my Ram is back Very Happy Just superb post. Yes. Vidiya vidiya is a lovely melody of the 80s . Just saw the movie few days back & surprised by the sheer delightful piano & violin work ! Amazing man , the Master !
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Fri Apr 18, 2008 3:38 pm    Post subject: Reply with quote

Dear Ram,

As usual it is an excellent analysis of the songs KAANIRENDUM MINNA MINNA of our master and VIDIYA VIDIYA .

The way you have written did prompt me listen to both the numbers (though I have enjoyed this many times) and could listen to
every piece of orchestration you have narrrated. What an amazing songs !

I am very happy about your recalling your infant days and my rendering of VIDIYA VIDIYA song. Especially the way SPB sings INNUM ENNENNAVO EN ENNANGAL (of course as taught by MM).

Similarly the thaalam in the line SOLLITHTHARA NANIRUKKEN RAASAATHIYE -
(something similar to THEROTTAM song, Very difficult to give
Thalam unless one has good Thala knowledge - as Sampath had written)

Pl continue to mesmerise us with your writing on the mesmerising piano numbers of Mellisai Mannar !

Ramki.

_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
tvvraghavan



Joined: 15 Dec 2006
Posts: 175

PostPosted: Sat Apr 19, 2008 9:28 am    Post subject: Reply with quote

DEAR RAM,
AS USUAL AN EXCELLENT WRITE-UP MAN !!! VIDIYA VIDIYA IS SUCH A SIMPLE NUMBER , STUNNINGLY ORCHESTRATED BY OUR MASTER THAT GIVES A POIGNANT EFFECT ON THE LISTENERS !!

THIS IS ONE OF THOSE SONGS THAT HAD IMPACTED ME AS A KID WITH ITS MELODY AND THE RENDITION OF SPB WITH A SMALL LAUGHTER IN THE MUCH ACCLAIMED "SOLLI THARA NAAN IRUKKEN..." BRINGS IMMENSE HAPPINESS.

ONE CAN OBSERVE THE SUBTLE KEYBOARD SURFING THROUGH THE WHOLE SONG WITH THE PIANO CHORDS. THE SANTOOR (BY VISWESH UNCLE ???) IN THE INTERLUDE GIVES U SUCH A PLEASANT FEELING.

HAVE READ IN SOME WEBSITES THAT MOST OF OUR MASTER'S SONGS HAVE REPETITIVE INTERLUDES.... THIS IS JUST ONE OF THOSE MANY SONGS THAT HAS AN AMAZING PRELUDE WITH UNIQUE, NON-REPETITIVE AND ENCHANTING INTERLUDES WITH DIFFERENT PRESENTATION OF THE CHARANAMS AND A SMALL POSTLUDE ENDING WITH THE PIANO !!!

SO TO ALL THOSE WITH SUCH MISCONCEPTION, PLEASE DONT POST WRONG INFORMATION........!!! Surprised

"KANNIRENDUM MINNA MINNA..." - OH !!! MY GOD..... THE VIOLIN FILLING IN "PENNAZHAGHU POVATHENGHEY..." IS SOMETHING ME AND VAIDHY UNCLE HAVE ALWAYS ENJOYED AND WONDERED !!

THANKS FOR THE NOTE ON CHORD PROGRESSION ..SOMETHING THAT I AM NOTICING FOR THE FIRST TIME IN THIS SONG.... BUT TRACES OF LATIN MUSIC IS SOMETHING THAT AM STILL UNABLE TO COMPREHEND... !! Sad

DO YOU FIND THEM IN THE USAGE OF ACCORDION ?? IF AM WRONG LET ME KNOW THE EXACT PLACE WHERE YOU FIND IT....Smile

THE STYLISH SINGING OF L.R.E MAKES THE SONG MORE AND MORE ROMANTIC !!!

THE HUMMING , VIOLINS , ACCORDION IN THE POSTLUDE TAKES US TO A DIFFERENT PLANE !!!

THANKS FOR THE WRITE-UP....EXPECTING MORE N MORE SUCH !!

MSV RULES !!!
VENKAT
Back to top
View user's profile Send private message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Sat Apr 19, 2008 12:48 pm    Post subject: VIDIYA VIDIYA and KANNIRANDUM Reply with quote

Dear Mr.Venkat,
You have added pep to these numbers in your own way interpreting how you are fabulously impacted by these pieces. As regards 'Repetitive interludes' in MSV songs certain clarifications may help the comprehension better. Well, it was the culture in movie songs to repeat the interludes between successive charanams and pallavi . IT WAS THE STYLE IN ALL INDIAN FILMS. Most probably, it was advantageous to stick to one pattern for a song considering the elaborate rehearsals and the need to play the entire song if errors crept in. It was only in the larger interests of serving the requirement in time. All MDs had stuck to this style until facilities started improving. In fact It was also MSV who changed this pattern whenever a variety was needed. Look at Karnan or Kadhalikka Neramillai songs you will understand that this innovation was also MSV's and other MDs of later arrival have after all been served by higher technology better, rather than by any superior innovation. To me,
MSV has left nothing for others to innovate.
Warm regards. Prof.K.Raman Madurai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Sat Apr 19, 2008 1:34 pm    Post subject: Reply with quote

I will second Professor. Otherwise, why the same MSV who gave 3 different interludes for Avalukkenna azagiya mugam , presented with the repeat Violin interlude for Poga poga thorium. Or for that matter, Enge nimmadhi has 3 diff. ludes while Partha nyabagam illayo has repeats of 1st and 3rd. IMO, it was MSV who changed the simple musical arrangements to orchestration oriented ludes arrangement. Again, as Prof. rightly pointed out, with very limited technology he delivered . One has to run the whole song if someone makes a small mistake.
Oh now I recollect even …Oru pennai parthu versus Vannakili sonna mozi . So, in the same movie, you can see both type of structuring !
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Sat Apr 19, 2008 5:34 pm    Post subject: Reply with quote

Dear All,

Thanks for your replies and wonderful discussions...

These two songs are gem of melodies.... completely different styles in the presentation. Amazing numbers these!

Dear Venkat,

Your write-up on these songs, from your part, is beautiful. Please take more of your favourites and present it to all of us please...

As far as the Latin Music - there is a Genre in the Spanish-Latin culture that you may be aware of - "SALSA" - which is a Peppy, Rhythm Oriented, Jubiliant & Fun Music.

But the slow and melodic form of this music is what my take. Really soulful melodies, with a sober (or) solitude themes.

Best reference I can make for you is from the film of Denzel Washington - "Man on Fire", a film that deals with Spanish gangsters in Latin American world. The end credits section will have a solo male theme in Spanish - a beautiful melody, which you can easily correlate to "Kannirendum". I wish I could send the track to you somehow - you'll love it!

Incidentally - the "Man on Fire" theme is also based on "Keervani" raag !!! (Kannirendum is also Keervani, as Vinatha pointed out)

Music has no language - How true !!!

And our Master proves this truth in each of his numbers !!!
_________________
Ramkumar


Last edited by Ram on Sat Apr 19, 2008 5:43 pm; edited 3 times in total
Back to top
View user's profile Send private message Send e-mail
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Sat Apr 19, 2008 5:38 pm    Post subject: rRepeat ludes' interludes Reply with quote

Dear friends,
Pardon my reopening the topic again. Only those who have not had the glimpse of TFM over the last 50+ years would wrongly ascribe opininons on MSV's works. They should basically understand that essentially comparisons should be on COMPARABLES and should not be indulged in with skewed values. Because such people are only familiar with the current styles and have just heard a few songs of MSV, might believe that MSV stuck to repeat interludes. It is both unfounded and ill-conceived. Also, a common belief is that what is 'marketed' to-day is the latest. Any 'latest' is just a repeat of the past. If honourably agreeing to this line of explanation is difficult, kindly consider this and verify the same with your parents and grand parents. All those dress designs for pants, shirts for men and Churidhars and blouses for women including the current short sleeve jackets of women are just reappearances. If one watches the old movies of early 1950s it would be menacingly clear that SHORT SLEEVE WAS THE THEN STYLE. SAME IS THE CASE WITH EVERY OTHER 'INNOVATION'. At best these are innovations to the extent of being brought again to break the prevailing monotony. Abundant evidence can be thrown to show that MSV has been an innovator par excellence and as such does not need any one's endorsement. People start concluding with what they 'think' they know.
It is better to ignore such shallow / ill conceived notions.
Warm regards Prof.K.Raman Madurai.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Sun Apr 20, 2008 10:24 pm    Post subject: HI THERE, IT'S ME AFTER A LOOOOOOOOONG TIME Reply with quote

Dear Ram, Balaji, Venky, Ramki, Ravikumar,

It's been a long silence only from the site but my heart is full of Our Master's beats only! Venky, than k you for taking me on a short nostalgic trip. Great write up on the piano. I just have one point to make - THOSE WHO LISTEN TO OUR MASTER'S MUSIC CAN NEVER LISTEN / DIGEST OTHER'S MUSIC. THOSE WHO LISTEN TO OTHERS CAN NEVER UNDERSTAND MSV'S MELODIES. As Prof. Raman said even for comparison one needs to have a class and when that class is amiss why compare at all??? Just indulge yourself (as Vinatha says it always) totally and drown yourself in absolute melodies of MSV Very Happy . Cha, enna oru veri ayya enakku????

CHEERS
MSV IS MUSIC
VAIDY
_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group