"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

A Handful of Piano Picks (20) - Piano-Thisram

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Wed Jul 16, 2008 12:22 am    Post subject: A Handful of Piano Picks (20) - Piano-Thisram Reply with quote

A Handful of Piano Picks - Part 20

திஸ்ர நடையில் அமைந்த பியானோ பாடல்கள்

நமது பியானோ தொடரில் பல வகை வகையான பியானோ பாடல்களைப் பார்த்தோம். தொடரின் தொடக்கத்தில் திஸ்ர நடையில் (மூன்று மூன்றாக வரும் நடையில்) அமைந்த பாடல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில அற்புதப் பாடல்கள், இதோ:


1) ஜில்லென்று காற்று வந்ததோ (நில் கவனி காதலி)

கவியரசர் வரிகளில் மெல்லிசை மன்னரின் இசையில் 1969 ஆம் ஆண்டு வெளியான ஒரு அருமையான பாடல் இது. பாடலின் முன்னிசையில் தொடங்கி பாடல் முழுவதிலும் வரும் அக்கார்டியன் மிக அருமையான முறையில் அமைந்திருக்கும். டி.எம்.எஸ் இப்பாடலுக்காக தனது கம்பீரக்குரலை கொஞ்சம் சாந்தப் படுத்தி காதல் வசப்படுத்தி மாற்றியிருப்பதை நன்கு அறியலாம். இது தான் இவரது குரலின் மகிமை என்பதைக் கூறித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. டி.எம்.எஸ் பல்லவியை முடிக்குமிடத்தில் பியானோ ரிதமும் ட்ரம்ஸும் அழத்தமான தீர்மானத்துக்கு வர, சுசீலா தன் தீங்குரலில் தொடங்குவார். இப்போது பின்னணியில் வயலின் ஆர்கெஸ்ட்ரேஷனுடன்! உடன் குறுக்கே நெடுக்கே ஓடி விளையாடுவது அக்கார்டியன்.. முதல் இடையிசை கிட்டாரிலும் இரண்டாவது ட்ரம்பெட்டிலும் அமைத்து அசத்தியிருப்பார். இரண்டாம் சரணத்தில் "மை ஏந்தும் பார்வை கொண்ட பெண்ணை" என்று தொடங்குமிடத்தில் கேட்பவர்களை ஆச்சர்யத்தில் தள்ளும் விதமாக தபேலாவை அமைத்திருப்பார். மெல்லிசை மன்னரின் பாடலில் ஒருவர் எதிர்பார்க்கும் அனைத்தும் மிகச்சிறப்பான முறையில் அமைந்திருப்பது இப்பாடலின் அழகு!


2) மணமேடை மலர்களுடன் தீபம் (ஞான ஒளி)

இத்தொடர் மூலமாக மெல்லிசை மன்னரின் பல பாடல்கள் என் விருப்பப் பட்டியலில் குடிபுகுந்துள்ளது. அதில் இப்பாடலும் ஒரு முக்கியமான ஒன்று. இப்பாடலில் எந்த சிறப்பை எடுத்துரைப்பது என்று தெரியவில்லை. பாடல் துவக்கம் முதல் மிக அழகாக வரும் BASS கிட்டாரைப் பற்றிக் கூறுவதா, இல்லை பல்லவி முடியும் இடங்களில் பளிச் பளிச்சென வரும் LEAD கிட்டாரைப் பற்றிக் கூறுவதா, இல்லை கிறித்தவ மணி பாடல் முழுவதும் பொருத்தமாக வரும் அழகைக் கூறுவதா? மணியோசையைப் பாடல்களில் மிகப் பாந்தமாக அமைத்த இசை வித்தகர் மெல்லிசை மன்னர் தான் என்பது என் ஆணித்தனமான அபிப்பிராயம்..... மணியைசை கொண்டே ஒரு தொடர் நாம் எழுத வேண்டும். பாடலில் முழுவதிலும் அழகழகான வேரியேஷன்ஸ். பாடலின் அரேஞ்மெண்ட்டே (பியானோ கார்ட்ஸ், வயலின் ஆர்கெஸ்ட்ரேஷன்) அனைத்தும் கிறித்தவப் பின்னணியை அற்புதமாக உணர்த்தும். இடையிசையின் போது சிவாஜியும், மேஜரும் ஓடி வரும் போது வரும் வயலின் இடங்கள், சரணத்தில் "நான் உறவு உனது அடிமை" எனும் இடத்தில் வரும் மெட்டும் மனதைத் தொடும்
இடங்கள். இப்படிப்பட்ட ஒரு பாடல் சூழலுக்கு இப்படி ஒரு அற்புதமான பாடலை மெல்லிசை மன்னரைத் தவிற எவராவது நினைத்துக் கூடப்பார்க்க இயலுமா என்பது பெரும் சந்தேகமே!


3) செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று (வைர நெஞ்சம்)

ஒரு முழுநீள பியானோ பாடலாக இல்லாவிட்டாலும் பியானோ பின்னணியில் தூவப்பட்ட விதம் அருமையாக அமைந்த பாடல். முன்னிசை பாங்கூஸ், பியானோ, கிட்டாருடன் வயலின் ஆர்கெஸ்ட்ரேஷனுடன் கம்பீரமாய்த் தொடங்கும் பாடல். பல்லவி தொடங்கியவுடன் பின்னணியில் கார்ட்ஸுக்காக மட்டும் வரும் விதமாக பியானோ அமைந்திருக்கும். இரண்டாம் முறை பல்லவி தொடங்கும் போது குழல் அருமையாக எடுத்துக் கொடுக்கும். அதே போல் "தென் மலை மேகம்" என்று டி.எம்.எஸ் தொடங்கும்முன் வயலின் அழகாக எடுத்துக் கொடுப்பது இன்னும் அழகு. சரணத்திற்கு முன் சுசீலாவின் ஹம்மிங், சரணத்தின் போது வரும் தபேலா, சரணம் முடிகையில் வரும் சித்தார் அனைத்தும் இனிமையில் திளைத்திருப்பதாகும். ஒரு வாத்தியத்தை எந்த அளவில் உபயோகம் செய்தாலும் அதில் சிறந்த கருத்தையும் காரணத்தையும் உள்ளடக்கும் திறனை மெல்லிசை மன்னரின் பாடல்களில் காணலாம். பியானோ உபயோகம் குறைவென்றாலும் அது வரும் இடங்கள் நிறைவானதாக இருக்கும் இப்பாடல் மெல்லிசை மன்னர் கைவண்ணத்தில் ஒரு அருமையான மெலடி!


4) பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் (ஊருக்கு உழைப்பவன்)

பியானோ ரிதத்தில் அமைந்த மற்றொரு இனிய மெலடி. பாடலில் குறிப்பிடத்தக்கது மேலும் கீழுமாக பொங்கி வரும் சங்கதிகள். பல்லவியை இரண்டாம் முறை பாடும் போது வயலின்கள் சேர்வது மெல்லிசை மன்னரின் பாணி. பல்லவி முடியும் இடத்தில் "நா..ஆ..ன் பாடுகிறே..ஏ..ஏ..ன்" என்று அருமையான சங்கதி விழுவது மெல்லிசை மன்னரின் முத்திரை! முதல் இடையிசையில் குழல் பயணிக்கும் இடங்கள் அருமை, குழல் முடிகையில் வயலினில் வரும் அற்புத இறக்கமும் அதைத் தொடர்ந்து வரும் சரணமும் மனதை வருடுவதாக அமைந்திருக்கும். பியானோ ரிதத்தில் அமைந்த ஒரு மிக அற்புதமான இனிய பாடல் இப்பாடல்.

(குறிப்பு: இப்பாடலில் ஜேசுதாஸ் அவர்களின் உச்சரிப்பில் எனக்கு ஒரு சிறு சந்தேகம். அவர் பல்லவியில் "பிள்ளைத்த தமிழ் பாடுகிறேன், பிள்ளைக்காக பாடுகிறேன்" எனும் போது "பிள்ளை"யில் "ள"கரம், "ல"வுக்கும்
"ள"வுக்கும் இடையே ஒரு தெளிவில்லாமல் இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. பாடலில் வேறு சில இடங்களிலும், வேறு சில பாடல்களிலும் கூட நான் இதை கவனித்திருக்கிறேன். எனக்கு மட்டும் தான் இப்படித் தோன்றுகிறதா இல்லை அனைவருக்கும் இப்படித்தானா என்பது எனக்குத் தெரியவில்லை!)


5) நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் (நம் நாடு)

மெல்லிசை மன்னர் - வாத்தியார் பாடல்கள் வரிசையில் மற்றுமொரு முத்திரை இப்பாடல்! பாடல் முன்னிசையில் ஒரு முரட்டு ஆர்க்கெஸ்ட்ரேஷன் நம்மை வந்து மிரட்டும். வயலின், ட்ரம்பெட், ப்ராஸ், ட்ரம்ஸ், பாங்கூஸ், கோரஸ், குழல் என்று ஜாஸ் முறையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு துவங்கும் பாடல். இசையில் கம்பீரம், புது வழி வகுக்கும் புதுமைகள் என்று முன்னிசையில் இசை வேள்வி நிகழ்த்தியிருப்பார் நம் இசை வேந்தர்! முன்னிசையின் கம்பீரம் துளியும் குறையாத விதமாக டி.எம்.எஸ் அவர்களின் குரல், பியானோ ரிதம் பின்னணியில் பல்லவியைத் தொடங்கும். "என்னிடம் மயக்கம், கொண்டவர் பழக்கம்" எனும் போது பின்னணியில் வரும் ப்ராஸ் அருமை. "இன்னும் என்றும் தேவை என்று சொல்லடி தங்கம்" என்று முடிந்து எல்.ஆர்.ஈஸ்வரி "தங்கம் தங்கம்" என்று தொடங்கும் இடத்தில் பாடல் சுத்தமாக மாறிவிடும். முரட்டுத் தனம் குன்றி இனிய காதல் டூயட்'ஆக மாறிவிடும். முதல் இடையிசை ஜாஸ் முறையில் அமைந்திருக்கும். பாடலில் தான் எத்தனை விதமான உணர்வுகள், எத்தனை விதமான நடைகள், இசை வகைகள்! "எப்படி இது போன்ற பாடல்களை அவரால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது?!" என்று என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

சரி, இந்த பியானோ-திஸ்ர நடையில் என்னென்ன பாடல்களைப் பார்த்தோம் என்று ஒரு சிறிய நினைவு கூறல்:

என்னைத் தெரியுமா, காற்று வந்தால் தலை சாயும், வண்ணக்கிளி சொன்ன மொழி, ஓ.. லிட்டில் ஃப்ளவர், நான் நன்றி சொல்வேன், தைரியமாகச் சொல் நீ, மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க, அதோ அந்த பறவை போல, மெழுகுவத்தி எறிகின்றது, எல்லோரும் நலம் வாழ, மனிதன் என்பவன், கண் போன போக்கிலே (Waltz), கண்ணிரண்டும் மின்ன மின்ன, கண்ணென்ன கண்ணென்ன கலங்குது - இதோ இப்போது இந்த ஐந்து பாடல்கள்.

ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம், விதம், வடிவம் - ஒவ்வொன்றிலும் எத்தனை புதுமைகள், எத்தனை உணர்வுகள். ஒரே பியானோ- திஸ்ர நடையில் அமைந்த இத்தனை பாடல்கள் இருப்பினும், துளியாவது சலிப்புத்தட்டுகிறதா பாருங்கள். இசையில் மெல்லிசை மன்னர் எடுத்தது "விஸ்வ"ரூபம் என்பதை ஆதாரப்பூர்வமாக நாம் பார்த்துவிட்டோம்.

மெல்லிசை மன்னரின் ஒவ்வொரு பாடல்களும் உலகில் ஜெனித்த ஒவ்வொரு உயிர் போன்றது. ஒவ்வொன்றும் குணத்தில் தனித்து நிற்கின்றது.

வேறுபட்டிருப்பினும் வாழ்வின் அடிப்படையாக இறையரசன் உயிரை வைத்தான்.
வேறுபட்டிருப்பினும் பாடல்கள் அடிப்படையாக இசையரசன் இனிமையை வைத்தான்!


(தொடரும்)

A Handful of Piano Picks - Listing
Part 1 - Ennai Theriyuma
Part 2 - Kaatru Vandhaal
Part 3 - VannakkiLi
Part 4 - Oh Little Flower
Part 5 - Naan Nandri Solven
Part 6 - Thairiyamaaga Chol Nee
Part 7 - Maanicka Thottil
Part 8 - Collection of Piano Songs
Part 9 - Jazz Piano1 - Varavendum Oru Pozhuthu
Part 10 - Jazz Piano2 - Viswanathan Velai VeNdum
Part 11 - Jazz Piano3 - Enna Vegam Nillu Bama
Part 12 - Rock and Roll - Aadavarellam, Malarendra Mugamadhu
Part 13 - Unnai Ondru Ketpaen
Part 14 - Kannirendum Minna, Vidiya Vidiya
Part 15 - "Periya Idathu PaNN" - Kannenna Kannenna Kalanguthu
Part 16 - "Paal Thamizh Paal"
Part 17 - Chella KiLigaLaam
Part 18 - An Ensemble of Jazz Rhythms(1) - Thottu Kaattavaa
Part 19 - An Ensemble of Jazz Rhythms(2) - Hey..Naadodi (Anbe Vaa)
Part 20 - Piano Thisram - Jillendru, Manamedai, Senthamizh Paadum, Pillai Thamizh Paadukiren, Ninaithathai Nadathiye
Part 21 - "Rocking Piano" - Adadaa enna azagu, Allippanthal, Yaaro aada therinthavar
Part 22 - MSV-SPB Mesmerism
Part 23 - Avan Ninaithaana
Part 24 - "Expressions" - Athanin MuthangaL, Piano Fillers in different songs
Part 25 - Layam - An analysis on different beat patterns in Tamil Film Music
Part 26 - The Finale - Top 3 Piano songs of MSV
_________________
Ramkumar


Last edited by Ram on Wed Jun 17, 2009 4:26 pm; edited 2 times in total
Back to top
View user's profile Send private message Send e-mail
tvsankar



Joined: 24 Jan 2007
Posts: 229

PostPosted: Wed Jul 16, 2008 1:20 am    Post subject: Reply with quote

Dear Ram,
Thanks for the songs and the wrtings....
Thalam patri edhuvum theiryadhu... But MSV in inimaiyana
isaiyai theiryum....

Jilenru katru vandhadho

Strong ana coffee ai pola - MSV in Strong Touch with HIS soft corner.....
Maiyendhum parvai konda pennai - thalathai gavanithu padum TMS in da da da - azhagu.
meiyodu mei anaika kudadho - nice harmony and beautiful modulation....

ovvoru padalaiyum oru pakkathuku sollalamae??
Yen simple aga solli viteergal Ram....

With Love,
Usha Sankar.
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Wed Jul 16, 2008 3:47 am    Post subject: Reply with quote

tvsankar wrote:
Dear Ram,
Thanks for the songs and the wrtings....
Thalam patri edhuvum theiryadhu... But MSV in inimaiyana
isaiyai theiryum....

Jilenru katru vandhadho

Strong ana coffee ai pola - MSV in Strong Touch with HIS soft corner.....
Maiyendhum parvai konda pennai - thalathai gavanithu padum TMS in da da da - azhagu.
meiyodu mei anaika kudadho - nice harmony and beautiful modulation....

ovvoru padalaiyum oru pakkathuku sollalamae??
Yen simple aga solli viteergal Ram....

With Love,
Usha Sankar.


Dear Usha'kka..

It was really great to see your post after a long time. Thanks for your reply. Vacation from work is accepted, but vacation from our club is not accepted, it will make many people unhappy Very Happy

The "problem" with MSV's music is how much ever we write, it is insufficient. Even I had mentioned in my earlier write-ups, that what we write is not even 1/1000th of the song itself! The quest for his music will never be fulfilled!

Once again, it is great to see you back in action..!!

Cheers. Very Happy
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Wed Jul 16, 2008 6:53 am    Post subject: Articles and writings - Reply with quote

Dear Usha mam,
That, you are back is a nice change. With more people around, the tendency to be more active also gets toned up. What a coincidence, an old timer's return with the observation on 'JIL ENRU KAATRU VANDHADHO'. Certainly it was a cool breeze.[I mean your posting a reply]. Please be in the forum as you did in 2007.

Dear Ram ,
Jil enru kaatru vandhadho [ NIL GAVANI KADHALI] was indeed a new wave song for TF [1967-68]. WHAT A BRILLIANT ORCHESTRATION IT WAS . To my knowledge this was a pioneer for its mood that floats much like a heavy column of water set to violently wobble from the swimmers' pounding. Only MSV can create such orchestral consonance that elegantly carries with it the mood of the song, besides making it an item of glorious surprise. What kindles my thought is the sequence in movie making. Songs are composed based on the storyline and the narrations by Director and the core group. There is no way of an MD physically watching the scene for composing a song. Rather he has to see it by visualization and arrange the tune, instrumental play besides embellisments and so on. In a way "Jil enru" was a new style as songs in swimming pools were not a regular feature. The later arrival in AOM "MALAR EDHU" by PS was a further sophistication with nice beats of drum .As you have said all our efforts to describe a song would just be a speck of our responses , as too often we are clueless as to how to narrate a piece, the way we stand influenced. That is why some people pour out adjectives in appreciation of MSV's compositions.
Warm regards Prof.K.Raman Madurai.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Wed Jul 16, 2008 10:20 am    Post subject: Reply with quote

WOW!
What a reinforcer for me this long day!
good work, Ram!
I choose to treat myself SENTHAMIZH PAADUM....tonight!
Forever in love with the passionate musical.
Bhavaa laden singing & Fine romance!

Now I am lost in love.. WANT TO BE ALONE!
good night!
Vinatha.

(will return to go over the rest from the list)
Back to top
View user's profile Send private message
tvsankar



Joined: 24 Jan 2007
Posts: 229

PostPosted: Wed Jul 16, 2008 10:39 am    Post subject: Reply with quote

Daar Ram,
Thanks for the response.....
Unnudaiya kadidham - ennai negizha seidhadhu ......
punniyam seidhu irukiren.......

sila thadangalgalinal ennal ingu vara mudiyavillai.
(Nothing but - en son +2 public. Edho naan exam ezhudhara
madhiri tention.
Next college admission.
Now he joined his course at Chennai.)

Indha Naatkalil ellam en manadhil MSV padalgal sila
vandhu vandhu ponadhu Ram.
MSV in padal - Vayadhaga vayadhaga rombavae strong aga
manadhil utkarandhu kondu irukiradhu Ram..

So indha paravai indha kootil niraiya naal iruka asai padugiradhu Ram...

With Love,
Usha Akka.
Back to top
View user's profile Send private message
tvsankar



Joined: 24 Jan 2007
Posts: 229

PostPosted: Wed Jul 16, 2008 10:43 am    Post subject: Reply with quote

Dear professor ji,
Ungalin kadithathirku ennudiaya nanri Sir....
Nichayam vazhakkam pola varugiren....

naan indha naatkalil ingu illlaiyae thavira,
MSV in padalai vittu naan piriyavilali Sir...
piriya mudiyadhae....

With Love,
Usha Sankar.
Back to top
View user's profile Send private message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Sat Jul 19, 2008 11:47 am    Post subject: Reply with quote

Dear Ushaji,

Extremely happy to see you back . I very well know about your concern and care for your son’s higher studies. God willing, everything should be great for him.
Now, as a pleasant gift to us, can you post some children oriented song ? ( your favourite topic no ! ) . Cheers


Ram, another classy post, enlightening us about 3bit, 3note thala compositions of the Master. I don’t know which one to select . All are my favourites. However, I will pick ‘ Manamedai malargaludan ‘ being an exceptional orchestration . MSV’s fingers while pressing Harmonium must have thought about the story, background, theme …that of a Christian….so even a seductive song reflects the movie’s theme ! I used to share with our friend hubber P.Ramesh that listening to this song instantly gives the feel of a heavy downpour and that chill atmosphere !
That high pitch progressive tune for the charanam is typical MSVish. What a song !
In this Thisra nadai genre, I think … ‘Naan patta kadan ethanayo ’ also will fall .One more I could recollect is ‘ Kannirandum minna minna ’ ( Andavan Kattalai ).

In your Piano series, pls cover ' Odivathu pol idai irukku ' . Dont forget to listen to the 2nd interlude in particular! Smile
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Wed Jul 23, 2008 1:58 pm    Post subject: Reply with quote

Ram

Your observation on the ல aspect is true. Infact KJY had problems initially on other fronts too like..... Therukovile odivaa ( instead of THirukovile odivaa ).. The news is that MSV tried his best on KJY to perfect these letters but in vain. But look, this great man gave innumerable beauties !
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group