"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics: Margazhi paniyil - Muthaana muthallavo

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Mon Mar 03, 2008 7:41 pm    Post subject: Lyrics: Margazhi paniyil - Muthaana muthallavo Reply with quote

படம்: முத்தான முத்தல்லவோ பாடியவர்: எஸ்.பி.பி.
இசை: மெல்லிசை மன்னர்


மார்கழி பனியில் மயங்கிய நிலவில்
ஊர்வசி வந்தாள் எனைத்தேடி
கார்குழல் தடவி, கனி இதழ் பருகி
காதலை வளர்த்தேன் இசை பாடி

வானத்தில் ஆயிரம் தாரகை பூக்கள் வேடிக்கை பார்க்கையிலே
கானத்தில் நாங்கள் கலந்திருந்தோம் இனி வேறென்ன வாழ்கையிலே
இனி வேறென்ன வாழ்க்கையிலே
(மார்கழி)

மானொரு கண்ணில் மீனொரு கண்ணில் நீந்தி வர
மாங்கனி தன்னை பூங்கொடி என்று ஏந்திவர
ஆசை நாடகம் ஆடி பார்க்கவும்
ஓசை கேட்குமோ, பேசக்கூடுமோ
(மார்கழி)

கோமகள் என்னும் பூமகள் நெஞ்சில் சாய்ந்துவர
தாமரை பொய்கை போலொரு வைகை பாய்ந்துவர
தேவலோகமும் தெய்வகீதமும்
ராஜயோகமும் சேர்ந்து வந்ததோ
கார்குழல் தடவி, கனி இதழ் பருகி
காதலை வளர்த்தேன் இசை பாடி

இந்தப்பாடலின் இசையும், பாடல் வரிகளும், எஸ்.பி.பி. அவர்களின் குரலும் கேட்பவர்கள் மனதில் ஒரு வித மயக்கத்தை ஏற்படுத்தும். கவிஞர்களின் கற்பனைக்கும், பேராசைக்கும் ஒரு எல்லையே இல்லை என்பதை கூறும் பல பாடல்களில் இதுவும் ஒன்று.

மார்கழி பனியும், மயங்கிய நிலவும் நாம் தனிமையாக இருந்தாலே ஒரு இனிமையை ஏற்படுத்தும். இதில் கவிஞர் 'ஊர்வசி வந்தாள் எனைத்தேடி' என்று எழுதி இருப்பது என்ன ஒரு அழகான கற்பனை!!!!

நிஜ வாழ்கையிலே காதல் கொண்ட பல பேருக்கு காதலை வெளிப்படுத்தவும், வளர்க்கவும் திரை இசை பாடல்கள் உதவுவதை சொல்வது போல இந்தப்பாடலில் கவிஞரின் அவர்கள் 'காதலை வளர்த்தேன் இசைபாடி' என்று எழுதி இருப்பது மிகவும் பொருத்தம். தேவலோகத்து ஊர்வசியுடன் இவர் காதலை வளர்ப்பது போல் வரிகள் இருப்பதால், மெல்லிசை மன்னரும் இந்த பாடலின் வரிகளை தேவகானமாகவே இசைத்துள்ளார்.

"தேவலோகமும், தெய்வகீதமும், ராஜயோகமும் சேர்ந்து வந்ததோ"

தேவலோகத்து ஊர்வசி இவரை தேடி வந்தது இவருக்கு எப்படி இருந்தது என்பதையும் கவிஞர் இந்த வரிகளில் எழுதி இருப்பது மிகவும் ரசிக்கும்படி உள்ளது.

இந்தப்பாடலில் இரண்டாவது சரணத்துக்கு முன், இந்த பாடலின் பல்லவியை trumpet-l இசைதிருப்பதும், மேலும் சரணங்களுக்கு முன் வரும் அந்த வயலின் ஒலியும் மனதை தாலாட்டும்.

இந்த பாடல் முடியும் அழகை நான் ஒவ்வொரு முறை இந்த பாடலை கேட்கும்போதும் மிகவும் ரசிப்பேன். பொதுவாக பல பாடல்கள் முடியும்போது, அந்த பாடலின் பல்லவியிலோ அல்லது அந்த பாடலின் மெட்டையே ராகமாக இசைத்தோ முடிப்பார்கள். ஆனால் இந்த பாடல் முடிக்கப்படிருக்கும் விதமே வேறு. பாடல் முடியும் போது பல்லவியின் முதல் இரண்டு வரிகளை பாடாமல், அடுத்த இரண்டு வரிகளை பாடி முடிப்பது போல மெல்லிசை மன்னர் அமைத்திருப்பது, இந்த பாடலுக்கு ஒரு தனி அழகை தருகிறது. அதை எஸ்.பி.பி. அவர்கள் பாடி இருப்பது, குறிப்பாக 'இசை பாடி .....ஹா .......இசை பாடி' என்று முடித்து, நம்மை இந்த பாடலை கேட்பதை முடிக்க விடாமல் மீண்டும் கேட்க தூண்டுகிறார்.

இந்த பாடலை இசைக்காகவும், பாடலின் வரிகளுக்காகவும் ஒருமுறை கேட்ட பின், எஸ்.பி.பி. அவர்கள் இந்தப் பாடலில் வரும் ஒவ்வொரு வார்த்தையையும் மயக்கத்துடன் கூடிய கொஞ்சும் குரலில் பாடி இருப்பதற்காகவே இன்னொரு முறை கண்டிப்பாக கேட்பேன்.
Back to top
View user's profile Send private message
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Sat Mar 08, 2008 1:01 pm    Post subject: Reply with quote

Wow... that was another wonderful analysis for a wonderful song Ms.Meenakshi. Great going...

This is one of my most favorite song of MSV-SPB combo.

Intha song kekumbothu enaku yerpadara feelings appadiye azhaga ezhuthiyirukeenga...
ennala ivlo azhaga express panniruka mudiyathu...
thanks a lot...

particularly the interlude music, song ending ellam...
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group