"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Ponaal pogattum poda - Paalum Pozhamum

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Mon Feb 18, 2008 9:41 pm    Post subject: Lyrics - Ponaal pogattum poda - Paalum Pozhamum Reply with quote

படம்: பாலும் பழமும் பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.எஸ். இசை: விஸ்வநாதன் & ராமமுர்த்தி

போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா
போனால் போகட்டும் போடா

வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம், வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும், போனால் போகட்டும் போடா
(போனால் போகட்டும் போடா)

இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா
உறவை சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா
கூக்குரலாலே கிடைக்காது, இது கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது
அந்த கோட்டையில் நுழைந்தால் திரும்பாது, போனால் போகட்டும் போடா
(போனால் போகட்டும் போடா)

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன், இதற்கொரு மருந்தை கண்டேனா
இருந்தால் அவளை தன்னந்தனியே எரியும் நெருப்பில் விடுவேனா
நமக்கும் மேலே ஒருவனடா, அவன் நாலும் தெரிந்த தலைவனடா
தினம் நாடகம் ஆடும் கலைஞனடா, போனால் போகட்டும் போடா
(போனால் போகட்டும் போடா)

கண்ணதாசன் அவர்களால் "உயிரை துறந்தவர்களுக்காக, உயிரை விட துடிப்பவர்களுக்கு ஆறுதலாக எழுதப்பட்ட உயிர் துடிப்பான கவிதை"

இந்த உயிரோட்டமுள்ள வரிகளுக்கு இசை வடிவம் கொடுத்து நம் எல்லோர் மனதிலும் இந்த பாடலை நடமடா வைத்திருக்கிறார்கள் விஸ்வநாதன், ராமமுர்த்தி இருவரும். இந்த பாடல் வரிகளுக்காகவும், இசைக்காகவும் உயிரையே கொடுக்கலாமா என்று எண்ண தோன்றும்.

1960-ல் வெளிவந்த ஒரு அற்புதமான படைப்பு 'பாலும் பழமும்'. கதைக்காக, நடிப்புக்காக, இசைக்காக, பாடல் வரிகளுக்காக.....என்று இந்த படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். விஸ்வநாதன், ராமமுர்த்தி அவர்கள் இசையில், கண்ணதாசன் அவர்கள் எழுத்தில் அனைத்து பாடல்களும் அருமையிலும் அருமை.

இந்த படத்தில் மருத்துவராக வரும் சிவாஜி அவர்கள் தான் காதலித்து மணம் செய்தவள், அவரிடம் சொல்லாமல் பிரிந்துவிட்ட பின்பு, இறந்துவிட்டாள் என்று தவறான செய்தி கிடைத்தவுடன் இடுகாட்டில் பாடுவதாக வரும் பாடல் இது.

இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளுக்கும் ஒரு விமர்சின கட்டுரையே எழுதலாம். அவ்வளவு அழமான அர்த்தங்களைக்கொண்ட வரிகள். இறந்தவர்களை நினைத்து வருந்தும் அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் பாடல். படத்தில் மனைவி இறந்த செய்தியை கேட்டவுடன் சிவாஜி அவர்கள் கண்ணீர் விட்டு புலம்புவார். மன துக்கத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் சொன்ன வார்த்தைகளையே தங்களையும் அறியாமல் திரும்ப திரும்ப சொல்லுவார்கள். சிவாஜியும் இந்த காட்சியில்

"போனால் போகட்டுமே, யாருக்கென்ன, கவலை இல்லை, போனால் போகட்டும்"

என்று திரும்ப திரும்ப புலம்புவார். அவர் புலம்பும்போதே இந்த பாடலை மெல்லிசை மன்னர் அவர்கள் சோக ராகத்தில் துவக்குவார். கண்ணதாசன் அவர்களும், சிவாஜி அவர்கள் புலம்பிய அந்த வரிகளையே பாடலின் முதல் வரியாக எழுத, டி.எம்.எஸ். அவர்கள் அதை நம் மனம் உருகும் வண்ணம் பாடத் துவங்குவார். அந்த கால கட்டத்தில் டி.எம்.எஸ் அவர்களின் குரலில், பாடல் காட்சிகளுக்கு ஏற்ப நிறைய மாறுதல் இருக்கும். இந்த சோக கீதத்திலும் அவர் குரல் நம்மை சொக்க வைக்கும்.

பாடலின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை வரும் இசை நம் மனதிலும் ஒரு மயான அமைதியை ஏற்படுத்தும். குறிப்பாக மெல்லிசை மன்னர் அவர்கள் பாடலின் இடையே பாடும் அந்த சோக ராகம் நம்மை கண்ணீர் சிந்த வைக்கும்.

பாடலின் துவக்கத்தில் ஆரம்பித்த இந்த 'போனால் போகட்டும் வரிகள்' ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் வருவது இந்த சோக கீதத்திற்கு ஒரு தனி அழகை சேர்க்கிறது. இந்த பாடல் முடியும்போதும் இதே வரிகள் திரும்ப திரும்ப வந்து அந்த புலம்பலை இன்னும் அழகு செய்யும்.

சில நேரங்களில் மனம் வருதப்படும்போது இந்த பாடல் நினைவுக்கு வந்து 'சரி போனால் போகட்டும் போடா' என்று சமாதானம் செய்து கொள்ள தோன்றும்.

கண்ணதாசன் அவர்களின் தத்துவ பாடல்கள் அனைத்துமே அழ்ந்த அர்த்தங்களை கொண்ட ஒரு சோகமான கவிதை மாலைதான். இந்த பாடலும் அந்த மாலையில் ஒரு மலர்தான்.
Back to top
View user's profile Send private message
s ramaswamy



Joined: 09 May 2007
Posts: 38

PostPosted: Mon Feb 18, 2008 10:50 pm    Post subject: Reply with quote

Hi,

Neengal sonna madhiri oru arputhamana thirai kaaviyam paalum pazhamum. Antha padathil ellap paadalgalum arumai. Intha Ponaal Pogattam arumayilum arumai. Enna maadhiri TMS paadiyirukkiraar. Ovvuru thadavai ponaal pogattum poda endru varuginra nerathil ovvuru vidamaga paadiyiruppar! Athu thaan TMS.

KDasanin intha paadalai patri Prof Ramanujam (one time mayor of Mumbai and president of Shanmukhananda Sabha) Times of India vil ezhudiyirunthaar (KD kaalamana nerathil). Intha paadalai patri miga arumaiyaga kuruppittirunthar antha katturayil (TOI Edit Page top).

Oru Tamizh thiraippadapaadal patriyum, paadalasiriyar patriyum oru periya vadukku (north Indian) paperil (TOI was then published only from Mumbai and Delhi) vandadu athuve mudal thadavayaga irukka vendum. Athuve kadaisi Muraiyum (Idhu varai).
Back to top
View user's profile Send private message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Tue Feb 19, 2008 9:07 am    Post subject: Reply with quote

அன்புள்ள மீனாட்ஷி,

'போனால் போகட்டும் போடா' பற்றிய உங்கள் எழுத்து அபாரம்.
கிட்டத்தட்ட இந்த சூழ்நிலையில் இருக்கும் எங்கள் குடும்பத்திற்கு நிஜமாகவே இப்பாடல் ஒரு சுமைதாங்கி. தினமும் என் காலை நடையின்போது என் ஐப்பாடில் தவறாது கேட்கிறேன் இப்பாடலை !

கண்ணதாசன் - மெல்லிசைமன்னர்கள் தந்துகொண்டிருக்கும் ஆறுதலுக்கு நாம் எவ்வாறு கைமாறு செய்யப்போகிறோம் ?

ராம்கி.
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Tue Feb 19, 2008 4:49 pm    Post subject: Reply with quote

ராம்கி அவர்களுக்கு

நீங்களும் உங்கள் குடும்பமும் ஆறுதல் பெற நானும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

இசைக்கும், காலத்துக்கும் எதையும் ஆற்றும் தன்மை உண்டு.
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Wed Feb 20, 2008 3:25 am    Post subject: Reply with quote

Dear Ramki,Sir!

Hope everything is alright with you & your family!

Our wishes & prayers are always with you!

Lend your ears to PONNOOSAL as often as you can, you will attain peace & confidence! Thanks for introducing it to us.
Day doesn't go by for me ever since I am introduced to this devotional - I am addicted to annam paalikkum.... -depicting the mood of devotion, passion, elevates confidence, mental peace- all tracks are anti-depressant, tunes strengthens mind & relieves tension!
love, Vinatha.




Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group