"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Silirkka Vaikkum Sindhu Bhairavi!

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Wed Jan 23, 2008 1:36 pm    Post subject: Silirkka Vaikkum Sindhu Bhairavi! Reply with quote

சிலிர்க்க வைக்கும் சிந்துபைரவி

இந்திய இசையில் 'சிந்துபைரவி' ராகம் ஒரு தனிச்சிறப்புடைய ராகம் என்றுதான் கூற வேண்டும். இந்த ராகத்தின் அடிப்படையில் பல காலங்களில் பல இசைக் கலைஞர்களால் அமைக்கப்பட்ட பாடல்களின் விதங்களையும், வேறுபாடுகளையும் பார்க்கையில் இதன் தனிச் சிறப்பு நம்மை சிலிர்ப்படைய வைக்கிறது என்பது உண்மையே!

சிவரஞ்சனி போன்ற ராகத்தில் 'ஜாஸ்' இசை அமைத்தும், கரஹரப்ரியா போன்ற கனமான ராகத்தில் அட்டகாசமான 'Fusion' இசை அமைத்தும், அரிய ராகங்களில் ஒன்றான 'த்விஜாவந்தியில்' அநாயாசமாக 'டூயட்' பாடலமைத்தும் தன் மெல்லிசை ராஜ்ஜியத்தை இனிதே நடத்திக் கொண்டிருக்கும் மெல்லிசை மன்னருக்கு, 'variety' யைத் தன்னிடத்தே வெகுவாகக் கொண்டிருக்கும் 'சிந்துபைரவி' போன்ற ராகத்தை எடுத்தாள்வது திருநெல்வேலி அல்வாவை ரசித்துண்பது போன்றது!

முதல் மூன்று பாடல்கள் வாழ்க்கைத் தத்துவங்களைக் கொண்டு, 'இறை பக்தி' யை இனிதே உணர்த்தும் பாடல்கள்...


1. ஆறு மனமே ஆறு
படம்: ஆண்டவன் கட்டளை

முன்னிசையின் அருமையான வயலின், சந்தூர் மனதிற்கு அமைதியை அளிப்பதாக இருக்கும். கதையின் இறுக்கம் நிறைந்த இடங்களில் சுலபமாக அந்த கனத்தை இயக்குனரிடமிருந்து வாங்கி அதை மிக எளிய ஆனால் உயர்வான வகையில் அளிக்கும் பெருஞ்சிறப்பு மெல்லிசை மன்னர்களைச் சார்ந்தது. இப்பாடல் அதற்கு சிறந்த உதாரணம்... இந்த ராகத்திற்கும்!


2. அல்லா அல்லா
படம்: முகமது பின் துக்ளக்

பாடல் முன்னிசை மசூதிகளிலிருந்து வரும் இசை போல் துவங்கும். மெல்லிசை மன்னரின் தெய்வீகக் குரலில் "நீ இல்லாத இடமே இல்லை; நீதானே உலகின் எல்லை" என்று பாடல் துவங்க, பின்னணியில் கோரஸ் "அல்லா அல்லா" என்று பின் பாட்டு பாடும். இப்பாடலை மெல்லிசை மன்னர் தான் பாட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தவர் சோ அவர்கள் என்பதை அறியும் போது அவரின் தொலை நோக்கு சிந்தனையை அறியலாம். இஸ்லாமியர்களுக்கு மட்டும் இல்லாமல், இசை ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு விருப்பப்பாடலாக சிந்துபைரவியில் அமைந்த ஒரு அற்புத மெட்டு இப்பாடல்!


3. ராமன் எத்தனை ராமனடி
லக்ஷ்மி கல்யாணம்

பி.சுசீலா அவர்களின் தேன் குரலில் ஒரு உருக்கமான பக்திப் பாடல். பாடலின் இறுதியில் பலவித 'ராமனை' பற்றி அழகாகப் பாடுவதும், 'ராம் ராம்' என்று பரவசத்தில் பாடும் வரிகளும் கேட்பவர்களை உண்மையிலேயே பரவசமடையச் செய்யும்!

கர்னாடக இசையில் அற்புதமான சிந்துபைரவி பாடல்கள் உள்ளன. "பஜ பஜ மானஸ" எங்கிற "ஸ்வாதித் திருநாள்" பாடல், "ராம ராம என ராதா" என்று தொடங்கும் "ப்ரயாகி ரங்கதாஸ்" அவர்களின் பாடல் - போன்றவை குறிப்பிடத்தக்கன. (இந்த "ராம ராம" என்ற பாடலை பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடிக் கேட்பதற்கு அற்புதமாக இருக்கும்). "வெங்கடாசல நிலையம்" (இப்பாடலைத்தான் நான் சிந்துபைரவிக்கு அளவு கோலாக வைத்திருந்தேன்!), "கருணை தெய்வமே கற்பகமே" போன்றவை சிந்துபைரவியில் அமைந்த பிரபலமான கர்னாடக இசைப் பாடல்கள்.

சரி, சிந்துபைரவி என்றால் 'பக்தி' என்று அனைவருக்கும் தோன்ற ஆரம்பித்திருக்க வேண்டும். இந்த உணர்வை முறியடிக்க இதோ மெல்லிசை மன்னர்களது மற்றொரு அருமையான படைப்பு...


4. வாராயென் தோழி வாராயோ
படம்: பாசமலர்

எப்படி கதைக்கு ஏற்றவாறு பாடல்கள் அமைய வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இப்பாடல். தோழிகளின் கேலி, மந்திர ஒலி, கை தட்டல்கள், அண்ணனின் (சிவாஜியின்) மனத்தில் இருக்கும் கனம், மங்கள இசை அனைத்தையும் அழகாக அரவணைத்து, கதைச் சூழலுக்கு ஏற்றவாறு சிந்துபைரவியில் அமைக்கப்பட்ட அற்புதப்பாடல் இது. மெல்லிய ஆர்க்கெஸ்ட்ரேஷன் ராகத்தை மிக அழகாகத் தழுவி விளையாடும். 'காலத்தை வென்று நிற்கும் பாடல்கள்' என்பதற்கு இந்த ஒரு பாடல் போதுமானது!


5. என்னை யாரென்று எண்ணி எண்ணி
பாலும் பழமும்

டி.எம்.எஸ், பி. சுசீலா குரல்களில், உணர்வைத் தொடும் பாடல் ஆகும். இப்பாடலைக் கேட்கும் போது அது மனதை இதமாக வருடுவதை இனிதே அறியலாம். இடையிசையில் ஷெனாய், வயலின் ஆர்கெஸ்ட்ரேஷன், குழல் அனைத்தும் உருகி உருகி இசைத்துவிட டி.எம்.எஸ் சரணத்தை "எந்தன் மனக் கோயில் சிலையாக" என்று தொடங்குவார் - சிந்துபைரவிக்கு அருமையான முன்னுதாரணம் இப்பாடல்.


6.ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
அபூர்வ ராகங்கள்

"ஏழு ஸ்வரங்களுக்குள்" என்ற அற்புதமான பாடலின் இவ்வரிகள் வரும் பகுதி சிந்துபைரவி ஆகும். வாழ்க்கைத் தத்துவங்களை இப்பாடலைத் தாண்டி எந்த கவிதையும் உணர்த்த முடியுமா என்பது சந்தேகமே...

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை;
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்தி விடு மறைந்திடும் பாவம்.
பயணம் நடத்தி விடு மறைந்திடும் பாவம்
(பந்துவராளியில்).

இப்பாடலை 'ராக மாலிகை' என்பதை விட 'ராக மாளிகை' என்று கூறுவதே மிகச் சரியானது!

80'களில் ஒரு வித்தியாசமான சிந்துபைரவி, மெல்லிசை மன்னரின் ஆர்மோனியத்திலிருந்து...


7. நான் பொல்லாதவன்
படம்: பொல்லாதவன்

இப்பாடல் எஸ்.பி.பி யின் அருமையான ஹம்மிங்குடன் தொடங்கும். இது கவிஞருக்கு ஒரு சவாலான சிச்சுவேஷனாகும். கதாப்பாத்திரத்துக்கும், 'ரஜினி' க்கும் ஏற்றவாறு பாடல் இருக்க வேண்டும், கதையின் உள்ள சோகத்தையும் உணர்த்த வேண்டும். விளைவு? ஒரு அருமையான பாடல். இடையிசையில் வரும் ட்ரம்பெட் படு ஸ்டைலாகும். சிந்துபைரவியில் ஒரு துள்ளல் பாடல்!

பிற இசையமைப்பாளர்களின் 'சிந்துபைரவி'

மெல்லிசை மன்னரின் இன்னும் சில சிந்துபைரவி அற்புதங்களைப் பார்ப்பதற்கு முன், மற்ற இசை அமைப்பாளர்களின் இசையில் வந்த பாடல்களைப் பார்ப்போம்.

பிற இசையமைப்பாளர்கள் இசையில் பாட கொஞ்சமும் சங்கோஜப் படாதவர் மெல்லிசை மன்னர். பரத்வாஜ் இசையில் 'காதல் மன்னன்' படத்தில் 'மெட்டுத் தேடி தவிக்குது ஒரு பாட்டு' மெல்லிசை மன்னர் குரலில் அமைந்த பாடல் ஆகும். அருமையான மெலடியைக் கேட்கும் போது இதை மெல்லிசை மன்னரின் மெட்டு என்று தான் கூற வேண்டும். பாடலில் வரும் ஆர்மோனியம் இவர் கை விரல்களின் விளையாட்டு ஆகும். இவர் விரல்கள் சரஸ்வதி தேவியின் நிரந்தரக் குடியிருப்பு என்பதை நன்குணர்த்தும் பாடல் இது.

மாமா K.V.மகாதேவன் அவர்கள் Classical மற்றும் Folk இசைக்கு சிந்துபைரவியை எடுத்திருக்கிறார்.

மாமாவின் Classical பாடல்கள்:

"ஒன்றானவன் இரண்டானவன்" - திருவிளையாடல்
"சித்தமெல்லாம் எனக்கு சிவ மயமே" - திருவருட்செல்வர்

மாமாவின் Folk பாடல்கள் (சிந்துபைரவியில்):

"எலந்த பயம்" - பணமா பாசமா (நாட்டுப்புற/தெம்மாங்கு பாடல்களில் இப்பாடல் பெரும் புரட்சி!)
"தில்லாண்டோங்கிரி டப்பாங்குத்து" - தில்லானா மோகனாம்பாள்

(தில்லானா மோகனாம்பாள் படத்தில் 'ஜில் ஜில் ரமாமணி' நாயனம் வாசிக்கும் பகுதியும் சிந்துபைரவி ராகமே!)


ஜி.ராமநாதன் இசையில் "நான் பெற்ற செல்வம்" படத்தில் "வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்" அருமையான 'சிந்துபைரவி' பாடல். தமிழ்த்திரையில் ராகங்களை எளிமையான வகையில் முற்போக்கு சிந்தனை கொண்டு அழகாக வழங்கும் முறையைத் துவக்கிவைத்த பெருமை ஜி.ராமநாதன் என்னும் இசை மேதைக்கே சாரும். அதையும் தாண்டி 'மெல்லிசை' வடிவில் உணர்வின் அடிப்படையில் பாடல்களை அமைத்து திரை இசையை இமயத்திற்குக் கொண்டு சென்ற பெருமை மெல்லிசை மன்னர்களுக்கே சாரும்!


இளையராஜா அவர்களின் இசையில் வந்த சிந்துபைரவி ராகப் பாடல்களின் பட்டியல்:

- நானொரு சிந்து (படம்:சிந்துபைரவி)
- ஒரு நாளும் உனை மறவாத (எஜமான்)
- முத்து மணி மாலை (சின்ன கவுண்டர்)
- ஆசை அதிகம் வெச்சு (மறுபடியும்)
- ஆட்டமா சதிராட்டமா (கேப்டன் பிரபாகரன்)
- பூங்காற்று புதிதானது (மூன்றாம் பிறை)
- என்னம்மா கண்ணு (மிஸ்டர் பாரத்)
- ஆசை நூறு வகை (அடுத்த வாரிசு)
- கல்யாண மாலை (புதுப்புது அர்த்தங்கள்)
- வளையோசை (சத்யா)
- செண்பகமே (எங்க ஊறு பாட்டுக்காரன்)
- மணியோசை கேட்கும் நேரம் (பயணங்கள் முடிவதில்லை)


இசையமைப்பாளர் தேவாவால் பிரபலப்படுத்தப்பட்டது "கானா" இசை. "கானா" பாடல் என்பதற்கு தேவாவின் விளக்கம்: "கானா என்பது சென்னையைச் சார்ந்த இசையாகும். நாள் தோறும் கஷ்டப்பட்டு உழைக்கும் மீனவர்கள், கூலி வேலை செய்பவர்கள் தங்கள் கஷ்டங்களை மறந்து பாடப்படும் இசை தான் இந்த "கானா" இசை." (பின்னாட்களில் இந்த இசை மருவி குத்துப் பாட்டு, கூத்துப் பாட்டு என்று மாறிவிட்டது என்பது வேறுகதை)

இவரது இசையில் "கவலைப்படாதே சகோதரா", "அண்ணாநகரு ஆண்டாளு" என்று தொடங்கி சிந்துபைரவி-கானாவில் ஒரு பெரிய பட்டியலே சொல்லலாம். ஹீரோ அறிமுகப்பாடல்களான "நான் ஆட்டோக்காரன்", "வந்தேண்டா பால்காரன்", "அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான்தாண்டா" மற்றும் "பொற்காலம்" படத்தின் "தஞ்சாவூறு மண்ணு எடுத்து" பாடல் - என்று அனைத்தும் சிந்துபைரவியே.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் "சாமி" படத்தின் "இதுதானா" என்ற பாடல் இவரது 'வழக்கமான' இசையாக இல்லாமல் சிந்துபைரவியில் அமைந்த பாடலாகும்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில்...

- மார்கழித் திங்கள் அல்லவா (சங்கமம்) (சில இடங்களில் 'தோடி' தழுவல்கள் இருக்கும்)
- எங்கே எனது கவிதை (கண்டுகொண்டேன்)

போன்றவை சிந்துபைரவி மெட்டுக்களாகும்.

ரகுமான் இசையில் 2006 ஆம் ஆண்டு இந்தியில் "ரங் தே பஸந்தி" (Rang De Basanthi) படத்தில் டைட்டில் இசை பஞ்சாபியர்களின் இசையான "பாங்ரா" இசை முறையில் சிந்துபைரவி ராகத்தில் அமைக்கப்பட்டதாகும். ஆனால் இதே 'பாங்ரா-சிந்துபைரவி'யை முதன் முதலாக தமிழ்த் திரை 1968'ல் கண்டது. என்ன பாடல்?....

மெல்லிசை மன்னரின் கைவண்ணத்தில்...

8. ஆடலுடன் பாடலைக் கேட்டு
படம்: குடியிருந்த கோவில்

அக்காலக் கட்டத்தில் இப்பாடல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்க வேண்டும்... துள்ளல் இசை. எனது உறவினர் ஒருவர் MKT, PUசின்னப்பா கால ரசிகர்... ஆனால் இப்பாடலைக் கேட்டால் அவர் எழுந்து ஆட ஆரம்பித்துவிடுவார். இப்பாடலின் சிந்துபைரவி பிரயோகத்தைப் புகழ்ந்து தள்ளி விடுவார். உண்மையில் இப்பாடல் ஒரு இசை விந்தையாகும்!


9. எங்கேயும் எப்போதும்
நினைத்தாலே இனிக்கும்

இசையை விருந்தாகப் படைக்கப்பட்ட படத்திலிருந்து ஒரு அற்புதப்பாடல். பாடலின் ரிதம், முன்னிசையின் ட்ரம்பெட், எலெக்ட்ரிக் கிட்டார் என்று பட்டையைக் கிளப்பும் இசையின் அடிப்படை ராகம் சிந்துபைரவி! "கத்தாழங்காட்டுக்குள்ளே விரகொடிக்கப் போனாளாம்" என்ற பாடலை மாற்றி எப்படி இப்பாடல் உருவானது என்ற கதயை மெல்லிசை மன்னரே கூறுவது அருமை!


ரொம்ப சிரமப்பட்டு கடைசி நான் காத்த பாடல்...

10. உனக்கென்ன மேலே நின்றாய்
சிம்லா ஸ்பெஷல்

ஒரு ராகத்தை அதனுள் இருக்கும் 'இனிமை' குன்றாமல் வெஸ்டேர்ன் இசையாக இப்பாடலுக்கு மேலாகக் கொடுக்க இயலாது! அருமையான கிட்டார், ரிதத்திற்கு ட்ரம்ஸ், தவில் கொண்டு 'புதுமை'யை வாரி வாரி இழைக்கப்பட்ட பாடல் இது. இப்படத்தை 'சிம்லா ஸ்பெஷல்' என்பதற்கு பதிலாக இப்பாடலின் காரணத்தால் 'சிந்துபைரவி ஸ்பெஷல்' என்று வைத்திருக்கலாம்!


சிறு வயதில் DD தொலைக்காட்சியில் 'தேசிய ஒருமைப்பாடு' பாடல் ஒன்று. யார் இசை என்று தெரியவில்லை. கமல், பாலமுரளி அவர்கள், லதா மங்கேஷ்கர் மற்றும் பல இந்தி நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்ற அந்த இசை இந்தியாவின் பல மாநிலங்களும் அதன் இசை, நடனம் போன்றவையும் அதில் இடம் பெறும். என்னை மிகவும் கவர்ந்த சிந்துபைரவி இசை அது!

இப்படிப் பல வகையான வடிவங்களைக் கொண்ட சிந்துபைரவி, சிலிர்க்க வைக்கத்தானே செய்கிறது ?!?!

ராகங்களில் எனக்கு ஈடுபாடு வருவதற்கு முதல் காரணமாக இருந்தவர் என் தாய், என்பதை இங்கு குறிப்பிட வேண்டியது என் கடமை ஆகும்.

கோவையில் இருக்கும் எனது மணி மாமா, ராணி மன்னி அவர்களுடன் நான் நடத்திய 'ராகங்கள்' வாதம், விவாதம் அனைத்தும் என் வாழ்வில் மறக்க முடியாத இனிய தருணங்கள் ஆகும். அது போன்ற விவாதங்களினால் அவர்களிடமிருந்து பல ராகங்களை நான் கற்றுக் கொண்டேன் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டிய கட்டாயம் உள்ளது!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Wed Jan 23, 2008 2:02 pm    Post subject: Reply with quote

Dear Ram,

An extraordinary post ! Amazing research on Sindhu bairavi . God, I m areading it again again again………That DD theme song is MILE SUR MERA THUMARAA…. Starts with Bhimsen Joshi …. A bit of Balamurali Krishna & finally ends with Lata Mangeshkar ……
Honestly, I have no words to describe the greatness of this post. ….. I tell you , this is a material for those who venture into analysis on this raga….

I would rather place it on top of all the works of yours Very Happy Very Happy

While the Master has given so many beautiful numbers for different situations using this raga, what everyone remembers today is the final song …… Unakenna mele nindraai , set very emotionally at the climax for the movie Simla Special .. & the movie was a 1982 release I think…. Which means the Master was running his 32 year in tfm…..after running the industry like a monarch….it was only Muktha Srinivasan who was a loyal / committed MSV Director….

IMHO, Isainyani IR also had given some memorable numbers using SB.

Wish to add one more SB beauty.... Vadhaname chandra bimbamo ! MKT in Sivakavi a GR masterpiece !

What a post !!!! I request Vaidy to show this post of Ram to the Master ……….

To me, your post is like winning a series against Australia in Australia Very Happy That kind of pleasure & satisfaction one derives !
Back to top
View user's profile Send private message Send e-mail
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Wed Jan 23, 2008 6:15 pm    Post subject: Articles &Writings by Fans -Silirkkavaikkum sindhu bhair Reply with quote

Dear Mr.Ram,
Quite a few things surface from your analysis of songs based on SINDHU BHAIRAVI.

1. My own intellectual inadequacy for such analysis.

2. Your basic taste to relate raagas of songs, and fluctuations thereof [on your reference to semblance of Thodi]

3. Your repertoire of knowledge of Carnatic raagas helps you to cull out raggas even if couched in Gaana styles.

4. An open mind to appreciate compositions purely for their merit and your insatiable thirst for orienting your observations to enjoy the innate beauty of all such compositions.

5. Your willingness to acknowledge all forms of help and persons who helped you in mustering the relevant nuances characteristic to a raaga and its articulations.

My long stint of professional career as a collegiate level teacher dictates me to say that these are traits of respectable nature which woiuld elevate your skills to real high in the days to come. May God Bless You.

With Warm Regards Prof. K.Raman Navi Mumbai.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Wed Jan 23, 2008 7:51 pm    Post subject: Reply with quote

அன்புள்ள ராம்,

உனது "சிலிர்கக வைக்கும் சிந்துபைரவி" பதிப்பு உண்மையிலேயே உள்ளம் சிலிர்க்கவைத்தது. மிக அருமையான அழகான அலசல்.

சிந்துபைரவியை இத்தனை விதங்களில் மெல்லிசைமன்னர் கையாண்டிருக்கிறார் என்று உன் எழுத்துமூலம் அறிய விசுவின் மேதாவிலாசம் விசுவரூபம் எடுத்து மனக்கண்ணுக்குக் காட்சி தருகிறது !

உன் எழுத்தைப் படிக்கப் படிக்க, திடீரென ஒரு ஞானோதயம் -
என்னை ( உன் அம்மாவை, வெங்கட், வைத்தியை ஏன், எம் எஸ் வி யையே கூட) உருக வைத்த ஒரு பாடல் ஒன்று நினைவுக்கு வர அதைப் பாடிப் பார்க்கிறேன் -

ஆஹா - என்ன ஆச்சரியம் - அதுவும் சிந்துபைரவி !!

அந்தப்பாடல் என்னதெரியுமா ?

" வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை
சூழ்த்த மாமலர் கொண்டு துதியாதே
வீழ்த்தவா வினையே நெடுங்காலமே "

என்ற " பொன்னூசல்" பாடல் !

Hats off to

-Mellisai Mannar for His immortal Sindhubairavi presentations
-You for your matchless analytical presentations of them
and
-Professor Raman for his spontaneous analysis of your charecter.


ALL THE BEST


Ramki.

_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Fri Jan 25, 2008 6:03 am    Post subject: Reply with quote

Dear Professor,

Thank you very much for your Best Wishes! Very Happy

And thanks to Balaji and Dad too...

There is another Musical Person, whose Music is very close to my heart... Swami Haridoss and his Sampradaya Bhajans. (Again, it was my dad who introduced that music to me like our Master's Music). There is a great Sindhu Bhairavi song from his collection: "என் மனத்திருப்பவனே, தபோ வனத்திருப்பவனே!"

Also listen to the Sindhu Bhairavi Alaap from MSV's interview (Part 9) from the link below: http://www.msvtimes.com/music/songs/airinterview.html

There is no difference between the above two music forms as far as the PURITY is concerned..... ABSOLUTE MELODIES, OUT OF SPONTANEITY!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
jeyaramg1



Joined: 04 Feb 2007
Posts: 20

PostPosted: Fri Jan 25, 2008 3:27 pm    Post subject: Reply with quote

Ram :

Excellent writing ; I was holding my breadth till I find a mention on Simla special song, which the Master has covered in his AIR interview.

Another Sindhubairavi master piece from the Master is 'Malarum Mangaiyum Oru Jaathi.....' from film ?????? (is it Thenum Paalum) sung by
PS , beautifully? In fact, you will find 'Mile sur mera thumara...' lot inspired from this song.

One more masterpiece on master's voice is 'Ethani Mandharukku.....' from film '.....Kutramillai' or some such title (song acted by VKR)

And , the westren beats mixed 'Kadavul Ninaithan Mana Naal Koduthan....' from Sivaji . Saritha starrer Keel Vaanam Sivakkum'...

And a lot more we can add.

I have always thought 'Naan Polladhavan.....' as a different piece on SubhaPantuVarali. I am not sure though.

Best Regards
Jeyaram G
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Sat Jan 26, 2008 11:40 am    Post subject: Reply with quote

Jeyaram

'Malarum Mangaiyum Oru Jaathi" is from the film "Annaiyum Pithaavum"
and is a great number I long to listen always.

It is intereting to note it is based on the raaga Sindhubhiravi !

I don't know how a human being, however an expert he is, can present a raga in soooo...oo many ways effortlessly, always ! Driving me mad the more I think of that !

MSV and His Music are Divine !!

It would be amazing to listen to the way our Mannar brings out the essence of Sindubhairavi in his swaram in the AIR interview, treasured by you , exactly in 15 seconds ! Myself and Ram would have listened to the swaram atleast a hundered times till date !!

Ramki.
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Sat Jan 26, 2008 5:00 pm    Post subject: Reply with quote

msvramki wrote:
Myself and Ram would have listened to the swaram atleast a hundered times till date !!
YES!!! When my dad played the CD for the first time.... PHEWW, I was just thrown away by the Melody in his Alaap.... From then a hundred times REWIND & PLAY.

His Music is beyond description & words !!!!!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group