"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

'Pudhumai-Iyakkunar' SREEDHAR

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Tamil Film History, TFM Composers, Directors, Actors, Movies & Music (General Topics)
View previous topic :: View next topic  
Author Message
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Tue Feb 27, 2007 6:49 pm    Post subject: 'Pudhumai-Iyakkunar' SREEDHAR Reply with quote

இயக்குனர் ஸ்ரீதர்

தமிழ்திரைப்பட உலகை புரட்டிப்போட்ட ஒரு பெயர். கதாநாயகர்களுக்காக படம் பார்க்க மக்கள் திரையரங்குகளுக்கு வந்த நிலையை மாற்றி, ஒரு இயக்குனருக்காக மக்கள் திரைப்பட கொட்டகைகளுக்கு படையெடுக்க வைத்த ஒரு மகத்தான பெயர்.பின்னாளில் பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்னம் என இயக்குநரின் பெயரில் படம் சொல்லப்பட முதன்முதலில் பிள்ளையார் சுழியிட்ட பெயர்.

அதுவரை நீண்ட வசனங்கள் மூலமாகவும், அதற்கு முன்னர் ஏராளமான பாடல்கள் மூலமாகவும் படத்தின் கதை சொல்லப்பட்ட நிலையை மாற்றி காமிரா வழியாக கதையைச்சொல்ல வைத்தவர் ஸ்ரீதர். எப்படி கேமரா கோணம் அமைப்பது, எப்படி காட்சிக்குத் தேவையான லைட்டிங் செட் பண்ணுவது என்பதெல்லாம் அவர் படமெடுக்கத்துவங்கிய காலத்துக்குப்பின் தான் பேசப்பட்டன.

அதற்கு முன்னர் பராசக்தி போன்ற புரட்சிப்படங்களும், மலைக்கள்ளன், நாடோடி மன்னன் போன்ற வித்தியாசமான படங்களும், சந்திரலேகா போன்ற பிரம்மாண்டமான படங்களும் வந்திருந்தபோதிலும், ஒரு படத்தை கவிதையாக வடிக்க முடியும் என்று ஒரு புதிய சித்தாந்தத்தை துவக்கியவர் 'புதுமை இயக்குனர்' ஸ்ரீதர்தான் என்றால் அது மிகையல்ல. அமரதீபம் போன்ற படங்களுக்கு வசன்ம் எழுதுபவராக தன்னுடைய வாழ்க்கையைத் துவங்கிய போதிலும் அவரை முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான திரைப்படவாதியாக அடையாளம் காட்டியது, அவரது கதை வசனம் மற்றும் இயக்கத்தில் முதன்முதலாக வந்த "கல்யாண்ப்பரிசு" தான்.

"கல்யாண்ப்பரிசு" ஒரு மாபெரும் வெள்ளிவிழாப்படமாக அமைந்தது என்பது மட்டும் அதற்குப்பெருமையல்ல. அது பல படங்கள் செய்யக்கூடிய சாதனைதான். ஆனால் கல்யாண்ப்பரிசு படத்தை மக்கள் வேறு விதமாகக் கண்டார்கள். அது ஏதோ தங்கள் வாழ்க்கையில் ஒன்றிவிட்ட ஒரு கதையாக நிகழ்ச்சியாக அவர்கள் மனதில் படிந்தது. குறிப்பாக பெண்கள் மனத்தில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. டீக்கடைகளிலும், முடி வெட்டும் கடைகளிலும் அதுவே தலைப்புச்செய்தியாக பேசப்பட்டது.

கோயில்களிலும் குளக்கரைகளிலும் சந்தித்துக்கொள்ளும் பெண்களுக்கு வேறு பேச்சில்லாமல் போனது. 'கல்யாணப்பரிசு படத்தை பார்த்தாயா' என்று கேட்பதற்கு பதில், 'நான் இத்தனை முறை பார்த்தேன், நீ எத்தனை முறை பார்த்தாய்' என்று கேட்டுக்கொள்வது வாடிக்கையாகிப்போனது.

அந்த ஆண்டு தமிழகத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு 'வசந்தி' என்றும் ஆண்குழந்தைகளுக்கு 'பாஸ்கர்' என்றும் பெயர் வைப்பதை பெருமையாக கொள்ளுமளவுக்கு அந்தப்படம் மக்கள் மனத்தில் ஒன்றிப்போனது.

படம் முடிந்தபின்னரும் கூட தியேட்டர் இருக்கையை விட்டு எழுந்திருக்காமல், 'காதலிலே தோல்வியுற்றான்' என்று பாடிக்கொண்டே அடிவானத்தை நோக்கிச்சென்ற பாஸ்கர் என்னவானான் என்று பிரம்மை பிடித்துப்போய் உட்கார்ந்திருந்த ரசிகர்கள் ஏராளம்.

1959 ல், ஒரு புறம் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிம்ம கர்ஜனைக்கும், மறுபுறம் நாடோடி மன்னனின் மின்னல் வெட்டும் வாள்வீச்சுக்கும் நடுவே இந்த 21 வயது இளைஞர் இயக்குனராக விஸ்வரூபம் எடுத்தபோது பார்த்த கண்கள் பிரமித்தன.

கல்யாணப்பரிசு படத்தின் கதையை அதன் தயாரிப்பாளர் மற்றும் அன்றைய திரையுலக ஜாம்பவான்களுக்கு நடுவில் சின்னஞ்சிறு பையனாக இவர் கதை சொன்னபோது அதிசயித்தவர்கள் அதன் முடிவை இவர் சொன்னபோது அதிர்ச்சி அடைந்தனர். காரணம் முடிவு அன்றைய திரைப்பட இலக்கணத்துக்கு மாறுபட்டிருந்தது. கதாநாயகன் கதாநாயகியின் கழுத்தில் தாலி கட்டும்போது "வணக்கம்" போட்டே பழகியவர்கள் அவர்கள்.

"என்னது? கதாநாயகியின் கழுத்தில் கதாநாயகன் தாலி கட்டவில்லையா..??. கதாநாயகிக்கு வேறொருவன் தாலி கட்டுகிறானா..?. கதாநாயகன் ஏமாற்றத்தோடு செல்கிறானா..?? இது என்ன முடிவு..??. நிச்சயம் இந்த இளைஞர் தன் முதல் படத்திலேயே தோலிவியைத்தான் சந்திக்கப் போகிறார்"

என்று அனைவரும் ஆரூட்ம் சொன்னார்கள்.

அவர்களின் ஆரூடங்களைப் பொய்யாக்கி விட்டு "கல்யாணப்பரிசு" மாபெரும் வெற்றியடைந்தது. மற்ற இயக்குனர்களுக்கு இந்த இளம் இயக்குனர் சிம்ம சொப்பனமானார்.

எந்தப்பக்கம் திரும்பினாலும்

'வாடிக்கை மறந்ததும் ஏனோ'
'ஆசையாலே மனம்.. அஞ்சுது கொஞ்சுது தினம்'
'காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்தி'

இப்படி அப்படத்தின் பாடல்களே ஒலித்தன.

பட்டுக்கோட்டையார், ஏ.எம்.ராஜா, ஸ்ரீதர் கூட்டணியில் இப்படம் திரையிடப்பட்ட அரங்குகள் எல்லாம் 'பாடல் பெற்ற தலங்கள்' ஆனது.

1960 முதல் இன்று வரையில் ஒவ்வொரு தீபாவளியன்றும் வானொலியில் ஒலிபரப்பப்படும் முதல் பாடல் பி.சுசீலாவின் இனிய குரலில், ராஜாவின் இசையில் பட்டுக்கோட்டையாரின் சாகாவரம் பெற்ற 'உன்னைக்கண்டு நானாட... என்னைக்கண்டு நீயாட' என்னும் கல்யாணப்பரிசு பாடலே என்பது இப்படத்தின் பிரத்தியேக சிறப்பு.

'புதுமையை கொடுத்தால் நிச்சயம் வரவேற்போம்' என்று தமிழக மக்கள் திரண்டெழுந்து கோஷமிட, இந்த புதுமை இயக்குனரின் வெற்றிப்பயணம் ஆரம்பமானது................
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Sun Mar 04, 2007 2:52 pm    Post subject: Reply with quote

"தேன் நிலவு’ நினைவுகள்

அன்றைக்கு டெக்னிக்கல் வசதிகள் இல்லாத காலத்தில் 'தேன் நிலவு' படத்தை எடுக்க புதுமை இயக்குனர் ஸ்ரீதர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை ஸ்ரீதர் வாயிலாகவே கேட்போம். (பழைய சினிமா இதழ் ஒன்றில் நான் படித்தது). ஸ்ரீதர் சொல்கிறார்:

"தேன் நிலவு படத்தை காஷ்மீரில் ஐம்பத்திரண்டு நாடகள் ஷூட் பண்ணினோம். எடுத்த காட்சிகளை உடனே போட்டுப் பார்க்கும் வசதியல்லாம் அப்போது கிடையாது. அதிலும் நாங்கள் இருந்த இடம் ஸ்ரீநகரில் இருந்து வெகு தொலைவில் ஒரு கிராமத்துக்கு அருகில் இருந்தது. அந்த கிராமத்தில் ஒரேயொரு சினிமா தியேட்டர்தான் உண்டு. காஷ்மீரில் கஷ்டப்பட்டு எடுத்த காட்சிகளை சென்னைக்குப் போய் போட்டுப்பார்த்து சரியாக வரவில்லையென்றால் மீண்டும் ஷூட் பண்ணுவது எல்லாம் முடியாத காரியம். அதனால் நாங்கள் காஷ்மீரில் இருக்கும்போதே, எடுத்தவற்றையெல்லாம் அவ்வப்போது போட்டுப் பார்க்க விருமிபினோம்.சரியாக வரவில்லையென்றால் மீண்டும் எடுத்துக்கொள்ளலாமே என்பதனால்.

காஷ்மீரில் அதற்கான வசதிகள் அப்போது இல்லாததால், ஷூட்டிங் எடுத்தவற்றை போட்டுப்பார்க்க ஃபிலிம் ரோலகளை சென்னை அனுப்பித்தான் கழுவி பிரிண்ட் போட்டு வரவேண்டும்.

அப்போதெல்லாம் ஸ்ரீநகரில் இருந்து வாரம் இரண்டுமுறை மட்டும் 'டக்கோட்டா' விமானம் டெல்லிக்குப்போகும். அதில் எங்கள் சித்ராலயா நிர்வாகி ராமகிருஷ்ணன மற்றும் ஒருவரை, நாங்கள் எடுத்த நெகட்டிவ் படச்சுருள்களோடு அனுப்பி வைப்போம். அவர்கள் டெல்லி சென்று, அங்கிருந்து சென்னை செல்லும் விமானத்தை பிடித்து சென்னைசென்று, அங்கு விஜயா லேபட்டரியில் அவற்றை பிரிண்ட் போட்டு மீண்டும் டெல்லி வழியாக ஸ்ரீநகர் வருவார்கள்.

அந்த படப்பிரதிகளை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் நாங்கள் இருந்த இடத்துக்கு அருகிலுள்ள கிராமத்தின் தியேட்டருக்குப்போய் அவர்களிடம் அனுமதி பெற்று, அங்கு வழக்கமான இரவுக்காட்சி முடிந்தபிறகு, இரவு ஒரு மணிக்கு மேல் அங்குள்ள புரொஜக்டரில் திரையிட்டு நான், கோபு, ஜெமினி, வைஜயந்தி (மாலா), நம்பியார், வின்சென்ட், பி.என்சுந்தரம் மற்றும் எங்கள் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பார்ப்போம். மனதுக்கு திருப்தியாக இருக்கும். திருப்தியில்லாத சில காட்சிகளை மீண்டும் எடுத்திருக்கிறோம். இரவு சுமார் மூன்று மணிக்கு மேல் அங்கிருந்து திரும்பி வந்து, படுத்து விட்டு காலை ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் உற்சாகமாக படப்பிடிப்பில் கலந்து கொள்வோம். உண்மையில் 'தேன் நிலவு' படம் முதலில் ரிலீஸான தியேட்டர், காஷ்மீர் கிராமத்திலுள்ள அந்த தியேட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இடத்துக்கு முழுவதும் காரில் போக முடியாது. சிறிது தூரம் நடந்தும் போக வேண்டும். அப்படிப்போகும்போது, தான் ஒரு பெரிய வில்லன் என்ற பந்தா கொஞ்சமும் இல்லாமல் படச்சுருள் பெட்டிகளை நம்பியார் தன்னுடைய தலையிலும், தோளிலும் சுமந்து வந்ததை நான் இப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். நாங்கள் பட்ட கஷ்ட்டத்துக்கு பலன் கிடைத்தது. படம் வெற்றிகரமாக ஓடியது".

இவ்வாறு ஸ்ரீதர் சொல்லியிருந்தார்..

எந்த வித வசதியும் இல்லாத அந்த நாட்களில் நல்ல படங்களை நமக்கு தர வேண்டும் என்று அவர்கள் பட்ட கஷ்ட்டங்களைப் பார்த்தீர்களா?. ஆனால் இன்றைக்கு இத்தனை டெக்னிக்கல் முன்னேற்றங்களை கையில் வைத்துக்கொண்டு......., (வேண்டாம், எதுக்கு வம்பு.....)
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Sun Mar 04, 2007 7:39 pm    Post subject: MASTER DIRECTOR SREEDHAR! Reply with quote

Dear Sharadha,

Aha! Enna oru topic, ithanai naatkalaga yengikkondirundha enakku! Sreedhar is my most favourite director and his movies are very unique and very strong in conveying messages. In my opinion this era of Sreedhar in TFW must be etched in golden letters!!! He was probably the only gutsy director who took up challenging tasks and one was the immemorable "Nenjam Marapathillai". Also the combination of MSV & Sreedhar, just unbelievable and absolutely unbeatable. Sreedhar's niece was my school mate and am still in touch with her. During my recent talk with her, I came to know that he has been ailing for a long time. I would like to request all members of our forum to Pray for his well being. TFW will never forget his contributions and his creations. Long live Sreedhar and his immortal works!!!

Cheers
vaidy
_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Sun Jul 29, 2007 11:53 am    Post subject: 'Pudhumai-Iyakkunar' Sreedhar Reply with quote

Dear friends
Sridar has held the industry mesmerised for years by his trend setting themes and approach. He has been perhaps the youngest to handle responsible portfolio of Story-Dialogue writing [19 yrs] and film direction at 21. Certainly he cast a spell over the audience by resorting to apt strategies. He not only cut short dialogues in his movies, but also downsized any undue importance to star value. As a FD he made people realize that the technicians and FD are indded the key elements in a movie and not the persons appearing on the celluloid. From Kalyaana Parisu on, he has churned high quality,low budget, silverjubilee box office hits, Kalyana Parisu, Nenjil ore aalayam, Nenjam marappadhillai, Sumai thangi, Policekaaran magal, Thane nilavu, Kadhalikka neramillai, OOty varai uravu, Vennira aadai, Avalukkenru oru manam, Nenjirukkum varai most of these were lowbudget products but achieved stardom for the artistes. He absolved himself of the need to pamper the actors through dialogues by avoiding wellknown stars in his movies. He created a niche for his style of functioning.His highbudget movie was Sivandha mann shot in Paris &Switzerland- afirst of its kind in TF. Hewas the first ever TFD to have exercised telling camera angles to captivate the attention of viewers in a visual medium. He has had the distinction of according top-priority to songs by placement and picturisation. MSV has had the occasions to show his calibrein CVS movies with no star value. All the songs and movies are immortal. Hewas also the lone director to have given importance to technicians by prominently announcing their names on posters. Only later other banners adopted this culture. Truly CVS was a magnificent pioneer of TF industry. More of it can be discussed in the days ahead for our youngsters to realize technology has not contributed to mental quality.
with regards. Prof.K.Raman Nvi mumbai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
P. Sankar



Joined: 03 Feb 2007
Posts: 142

PostPosted: Fri Aug 03, 2007 9:35 am    Post subject: Reply with quote

While watching the song "Sonnathu Nee Thaana" from "Nenjil Or Aalayam" again, please see it carefully to notice a scene where the camera is handled with international standards.

Camera will show Devika in a close-up shot; then go up and move backwards well behind the bed where Muthuraman is seated; cover both Muthuraman and Devika from that angle and then suddenly low down below the bed; move forwards underneath the bed towards Devika; and then astonishingly come up again as a top angle. All in a same continuity shot. ASTONISHING!!! I believe the camera is by A.Vincent. Such a brilliant handling of camera for a pathos song by Sridhar. True that he is a class director, by all means.

P. Sankar _ Tirunelveli.
Back to top
View user's profile Send private message Send e-mail
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Fri Aug 03, 2007 8:19 pm    Post subject: 'Pudhumai-Iyakkunar' Sreedhar Reply with quote

Dear Mr Sankar
Glad to note that you have touched upon a very sensible and sensitive topic- Camera angle in Nenjil ore aalayam. Quite a few cinematographers have been awe-inspired by the camera angles for this song in something like an 8x8 room. Actually as per PN Sundaram's narration, at least two cameras were run [at tandem?] and brilliantly edited to give the feel of continuity. Incidentally PNS was the first assistant of A.Vincent-- the aasthana cinematographer of CV Sridar till 1964, Kadhalikka neramillai being their last work as a team. Now on to the continuity in shots.What is absolutely important for visual continuity is, setting the perfect light values for different shots done by independent cameras. Time and again I have been pinpointing to the younger generation that technology without technique serves no end. For all I know, Vincent was among the best then in these skills,especially for linking shots indoors to outdoors and vice-versa. To be honest, all works of Vincent were fresh and captivating for clarity, aesthetic angles and unobtrusive presentation. Above all, he was capable of translating concept into a reality. Quite a number of situations can be recalled from various movies done by Vincent-Sundaram [as a pairof cinematographers] as evidence of artistic wizardy of these people. Like MSV, Vincent has the fine sense of merging shots through conducive lighting. More of it later.
Warm regards Prof.K.Raman Navi Mumbai.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
P. Sankar



Joined: 03 Feb 2007
Posts: 142

PostPosted: Fri Aug 03, 2007 11:39 pm    Post subject: Reply with quote

Technology without technique serves no end..

Prof.Raman, Sir, Great words. This holds true in all spheres of life.
Lucky guys....I am refering to your students....

P. Sankar..Tirunelveli..
Back to top
View user's profile Send private message Send e-mail
Baskar CS



Joined: 19 May 2007
Posts: 203

PostPosted: Mon Aug 06, 2007 9:50 am    Post subject: Reply with quote

when it comes to sridhar immly my mind goes to avulakkendru ore manam where gemini outside the swimming pool looks at bharathi thru his sun galsses and the same is shown to us plus the swimming pool effect where we feel that we have gone in to the water to look at the inside of the pool

what a picturisation and what a creativity . by the way who did the photography --
Back to top
View user's profile Send private message
irenehastings
Guest





PostPosted: Mon Aug 06, 2007 11:53 am    Post subject: Reply with quote

Baskar CS wrote:
when it comes to sridhar immly my mind goes to avulakkendru ore manam where gemini outside the swimming pool looks at bharathi thru his sun galsses and the same is shown to us plus the swimming pool effect where we feel that we have gone in to the water to look at the inside of the pool

what a picturisation and what a creativity . by the way who did the photography --


The Director of Cinematography for the Sreedhar's movie "Avalukendru Ore Manam" was U.Rajagopal. (I hope he done with Sreedhar for 'Vaira Nenjam' also). I also enjoyed the shot, you mentioned. But it is the creativity of the director.
Back to top
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Sat Aug 11, 2007 7:11 am    Post subject: "Pudhumai-Iyakkunar" Sreedhar Reply with quote

Dear Irene,
I thank you for the thread on the swimming pool shot in Avalukkenru oru manam. Well , it was almost a patented shot in most Sridhar movies. The picturesque effect was originally done in Nenjil ore aalayam depicting a live character and a mirror image of Devika and Muthuraman. It was expanded as a person and an image in that scintilating song Anubhavam pudhumai in Kaadhalikka neramillai. Aso, Muthuraman in the rear view mirror and Kanchana as live image in the same movie for the song Enna paarvai undhan paarvai .[A.Vincent- PNSundaram -WORK] A further expansion of this technique was seen in Vennira aadai for the song Nee enbadhenna , where a live being , a mirror image and a larger than life shadow were brought out as any two pairs in quick sequence [G.Balakrishna and N.Balakrishnan -cinematography]. Whoever started this presentation, it was well availed of as a technique to enhance the viewing pleasure. So, once again technique can not be side-lined by technology.
Warm regards Prof. K.Raman Navi Mumbai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Tamil Film History, TFM Composers, Directors, Actors, Movies & Music (General Topics) All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group