"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

A Handful of Piano Picks(26) - "The Finale!"
Goto page 1, 2  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1160

PostPosted: Wed Jun 17, 2009 11:00 am    Post subject: A Handful of Piano Picks(26) - "The Finale!" Reply with quote

A Handful of Piano Picks - Part 26

"The Finale - Top 3 Piano Songs of MSV!"

மெல்லிசை மன்னரின் பியானோ பாடல்களைப் பற்றி ஒரு தொடர் எழுத வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் தான் எனக்கிருந்தது. அந்த எண்ணம் இவ்வளவு தூரம் உருவெடுத்து பயணித்து, ஒவ்வொரு பாடலும் ஒரு அனுபவமாய் மாறி இருப்பதை நினைத்துப் பார்த்தால் அது வியப்பாகத்தான் உள்ளது. மெல்லிசை மன்னரின் நல்லிசைச் சிறப்புதான் இவ்வளவு தூரம் ஈர்த்து, அரிய அனுபவங்களைக் கொடுத்துள்ளது என்பது வெறும் உதட்டளவுச் சொல் அல்ல. மெல்லிசை மன்னரின் ஒரே ஒரு பாடலை மட்டும் எடுத்து அதை ஒரு தொடராக எழுதுவது சாத்தியம் என்ற உண்மையைப் பார்க்கும் போது இத்தொடர் அவரது இசைச் சிறப்பை ஒரு சதவிகிதம் கூட உணர்த்தவில்லை என்று கூறுவதுதான் சரி என்று தோன்றுகிறது!

ஒவ்வொரு பாடலைப் பற்றியும் இன்னும் பக்கம் பக்கமாய் எழுத வேண்டும் என்ற துடிப்பையும் தாண்டி, தொடரை முடிப்பதென்பது ஒரு பெரும் சவாலாகத்தான் உள்ளது. பல பாடல்களைப் பற்றிப் பார்த்து விட்டு கடைசி மூன்று (Top 3) பாடல்களை மட்டும் வரிசைப் படுத்துவது ஏதோ மற்ற பாடல்களைக் கீழ்நோக்கும் விதமாய் அல்ல. அப்படிச் செய்தால் அது முறையும் இல்லை. ஆனால் பின்வரும் மூன்று பாடல்கள் 'Out-of-the-World' என்ற அடைமொழிக்கு வாழும் உதாரணங்களாக இருப்பதால் அவற்றிக்குத் தனி மரியாதை செலுத்துவது சற்றும் தவறில்லை என்று தோன்றுகிறது.

இப்படியெல்லாம் பியானோவில் திரைப்பாடல்கள் சாத்தியமா என்ற வியப்பை, கேட்கும் ஒவ்வொரு நொடியும் உணர்த்தும் பாடல்கள் இவை. இசைக் கருவியின் தன்மைகள், இசையமைத்த கால கட்டங்கள், மக்கள் ரசனை போன்ற - திரை இசைக்கு இயற்கையாய் இருக்கும் தடைகளைத் தாண்டி, மலரென பூத்தது மெல்லிசை மன்னரின் இசை. அவ்வரிசையில் இம்மூன்று பாடல்களும் வானுயர்ந்து நிற்கின்றன என்பது திண்ணம்!

முதலாவதாக நாம் பார்க்கப் போவது "பாசமலர்" படத்தில் வரும் "பாட்டொன்று கேட்டேன்" பாடல். இப்பாடலில் வரும் பியானோவ 'பீத்தோவனின்' 'Fur-Elise' க்கு ஒப்பிடுவது கொஞ்சமும் மிகையில்லை. அப்படிக்கூற காரணங்களும் உள்ளன. எப்படிப்பட்ட 'Chord' மாற்றங்கள், பியானோ கொண்டிருக்கும் ஓட்டம், உருக்கம், அரேஞ்மென்ட் என்று வியப்பில் பெருமூச்சு விட வைக்கிறது இப்பாடல்.

கனவுப் பாடல் போன்ற தொடங்கும். முன்னிசையில் பியானோ இசைக்க மட்டும் இல்லை. அது வார்த்தையின்றி உரைக்கிறது. பல்லவி...

பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்
நானதைப் பாடவில்லை
பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர்
நானதைப் பார்க்கவில்லை


மறுமுறை பெண் குறல்கள் "பாவையின் முகத்தை" என்று தொடங்குமுன் பியானோவும், தபேலாவும், Bass கிட்டாரும் ஒரு அருமையான ஓட்டத்தை இனிதே முடிக்கும்.

அந்த சிறு ஓட்டத்தில் ஒரு சிறப்பாம்சம், ஆரோகணம் 'Major' ஸ்கேலிலும் அவரோகணம் 'Minor' ஸ்கேலிலும் அமைந்திருக்கும். இந்த 'Major', 'Minor' மாற்றங்கள் பாடல் முழுவதிலும் வந்து கொண்டே இருக்கும். முதல் இடையிசை மெதுவாக 'Major' பின் 'Minor' என்று மாறி, சரணம் பிரதானமாக 'Major' ஸ்கேலில் துவங்கும்.

ஆடி முடிந்தது ஆவணி வந்தது
பாடிய பைங்கிளி உலா வளர்ந்தது
நாடகம் போலே தூது நடந்தது
காதலர் கண்ணாலே..


என்று கோரஸ் உற்சாமாக பாடி முடிக்க, பியானோவில் பளிச்சென ஒரு 'Minor' Chord விழுவது கொள்ளை அழகு! பிறகு மீண்டும் "பாவையின் முகத்தை.." தொடரும்.

எப்படி இது போன்ற விந்தைகளை அநாயசமாக அள்ளி வீசியுள்ளார் மெல்லிசை மன்னர் என்பது சற்றும் புரியாத ஒன்று.

இடையிசைகளில் ஃப்ளூட், ஆர்கெஸ்ட்ரேஷன், Bass-lining அனைத்தும் பியானோவுடன் கூடி, கோரஸ் அழகாக வருடுமாறு வருவது, முத்தாய்ப்பாக ஒரு உணர்ச்சிகள் நிறைந்த பாடலில் விளையாடும் தபேலா நடைகளை அமைத்தது - அனைத்தும் புதுமைகளின் உச்சம்!

'உணர்ச்சிகள் நிறைந்த' - என்பதை உணர, பாடலை மட்டும் (வேறு வாத்தியங்களைக் கொஞ்சம் மறந்து) கேட்டுப் பார்த்தால்தான் பாடலின் உருக்கம் விளங்கும். அந்த உருக்கம் தான் மெல்லிசை மன்னரின் பாடலில் இன்னமும் சாகாவரத் தன்மையை ஒளிரச் செய்து கொண்டிருக்கிறது!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1160

PostPosted: Wed Jun 17, 2009 11:01 am    Post subject: Reply with quote

மெல்லிசை மன்னர் தொட்ட 'இசை வகைகளும்' (Music Genres) அதை அவர் பிரயோகப் படுத்திய முறையும் அளப்பதரிது. பெயருக்குச் சில வகைகளையும் ஓரிரு பாடல்களை மட்டும் எடுத்துக் காட்டாகப் பார்ப்போம்:

காஷ்மிரி Folk ("அன்று ஊமைப் பெண் அல்லோ"), தென் தமிழக Folk ("முத்துக் குளிக்க வாரீகளா"), மலபார் Folk ("மந்தார மலரே"), ராக்-அன் -ரோல் ("ஆடவரெல்லாம்"), Cabarey ("சம்போ சிவ சம்போ", "நீராட நேரம்"), Fusion ("நிலவு வந்து பாடுமோ"), இந்துஸ்தானி ("உன்னை எண்ணி என்னை மறந்தேன்"), Core ஜாஸ் ("என்ன வேகம் நில்லு பாமா"), ப்ளூஸ்-ஜாஸ் ("வரவேண்டும் ஒரு பொழுது"), ராக் ("உத்தரவின்றி உள்ளே வா"), கர்னாடிக் ("ஏழு ஸ்வரங்களுக்குள்"), க்ளப் ("அதிசய உலகம்"), Chinese ("பன்ஸாயி.."), Soft Rock ("சொர்கம் பக்கத்தில்"), Country ("ஆண்டவன் படச்சான்"), Slow Spanish ("கண்ணிரெண்டும் மின்ன மின்ன"), Arabic ("நினைத்தேன் வந்தாய்"), Pop (South-Asian) ("நம்ம ஊரு சிங்காரி"), கவாலி ("தங்க மகள் வயிற்றில்"), Waltz ("என்னைத் தொட்டு சென்றன"), Cajun/Zydeco ("உலகம் எங்கும் ஒரே மொழி") - இது தவிற - ஆன்மீக, மற்றும் மதங்கள் அடிப்படையில் பாடல்கள், "மெல்லிசை" (இதைச் சாதாரணமாகக் கூறிவிட்டேன் - இதில் இருக்கிறதே கோடி வகைகள்!), குழந்தைகள் பாடல்கள், சிரிப்புப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், வார்த்தையின்றி உயிரூட்டும் டைட்டில், பின்னணி இசை..... என்று எண்ணற்ற வகைகள். வகைகளை விட வகைப்படுத்த முடியாமல் நிற்கும் பாடல்கள் தாம் ஏராளம். அதுதான் மெல்லிசை மன்னர் இசையின் சிறப்பாம்சமும் கூட! ஆயுளுக்கு ஆராய்ச்சி செய்ய வல்ல ஆயிரக் கணக்கான ஆன்மா தொடும் இசை!

பேசப் படாத பொக்கிஷம் என்று நான் மெல்லிசை மன்னரின் இசையில் கருதுவது அவரது இசையில் - Western Classical & Symphonic Music.

இவர் அறிமுகப்படுத்திய ஆர்கெஸ்ட்ரேஷன் முறைகள், சிலிர்க்க வைக்கும் 'Harmonies', Chord Progressions, Strings அரேஞ்மெண்ட்'கள் என்று 'Western Classical' ஆழத்தை எளிதாக அள்ளிப் பருகி, அதை அமுதாக அளித்தவர் மெல்லிசை மன்னர்! வேறு சிலரால் தான் தமிழ்த்திரைக்கு அறிமுகமானதாக உலா வந்திருக்கும் தவறான கருத்தை முறியடிக்க பல பாடல்கள் மெல்லிசை மன்னரின் கை வண்ணத்தில் உள்ளன. "மன்னவனே அழலாமா" இடையிசைகளில் என்ன அட்டகாசமான ஆர்கஸ்ட்ரேஷன்! "பார்த்த ஞாபகம் இல்லையோ", "எங்கே நிம்மதி.." பாடல்களில் எப்பேற்பட்ட Strings Layering! "நெஞ்சம் மறப்பதில்லை" பின்னணி இசை முழுவதும் Symphony இசை தான். 'இப்படியெல்லாம் செய்து விட்டோம்' என்று சற்றும் பிரகடனப் படுத்தாமல், எதோ மலர் தூவுவது போல் இப்படிப்பட்ட பொக்கிஷங்களை அநாயாசமாக வாரி வழங்கிவிட்டு, 'இதை நாம் செய்திருக்கிறோம்' என்ற எண்ணம் கொஞ்சமும் தலையில் ஏறாமல், தனது இல்லத்தில் அமைதியாக அமர்ந்திருப்பவர் மெல்லிசை மன்னர். அடக்கம் அமரருள் உய்க்கும் என்பது உண்மைதான் - அதற்காக இப்படியா ???!!!

ஒரு உயர்ந்த எடுத்துக் காட்டாக நாம் பார்க்கப் போகும் "வெண்ணிற ஆடை" படத்தின் "என்ன என்ன வார்த்தைகளோ" தான் நம் இரண்டாம் பாடல்.

பாடலின் அழகை உரைக்க முன்னிசை மட்டுமே போதுமானது. பாடலுக்கு ஏற்றாற்போல், சில 'Chord' கள் வரிசையாக (Sequentially) வருவதையே 'Chord Progression' என்பார்கள். 'Western Classical' முறையில் இந்த 'Chord Progression' மிக முக்கியமான ஒரு அம்சம். தமிழ்த்திரையில் எப்படி இது போன்ற வினோதங்களை இவ்வளவு சிறப்பாகச் செய்துள்ளார் மெல்லிசை மன்னர் என்பது அவருக்கே விடை தெரியாத புதிர்! இப்பாடலின் முன்னிசையில் வரும் 'Chord Progression' கீழ் வருமாறு:

G6 (G Major Sixth)
E7 (E Major Seventh)
Am6 (A Minor Sixth)
B7 (B Major Seventh)
CmM7 b5 (C Minor Major Seventh Flatted Fifth !!!!)

நானும் சில கம்போசர்களின் Chord Progression களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு அருமையான, Complex ஆன ஒன்றைப் பார்த்ததே இல்லை! Chord Progression'க்கே உரிய குணமாய், பாடலின் ஜீவனை இருகிக் கொண்டே வரும் விந்தை. அதிலும் கடைசியில் குறிப்பிட்டிருக்கும் Chord'ஐப் பாருங்கள். எனது கீபோர்ட் உள்ளிருக்கும் Chord அகராதியில் இந்த Chord இல்லவே இல்லை. இதைப் பல Western இசை இணைதளங்களில் தேடி கண்டுபிடிக்க வேண்டியவாறு ஆனது. தமிழ்த்திரையின் 'The Most Advanced Chord' கொண்ட இடம் இதுவே எனலாம், சந்தேகமில்லாமல்! வடிவேலு பாணியில் "என்ன வ்ளாயாட்டு இது!!!" என்று தான் தோன்றுகிறது!!

முன்னிசையில் வரும் பியானோ-ரிதத்திலேயே ஒரு புதுமை. பாங்கூஸ் இரண்டாகப் (2) போய்க்கொண்டிருக்க பியானோ திஸ்ரத்தில் (3) வரும்! முதல் இடையிசையிலும் இதே தான்!!

முதலில் பல்லவி:

என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை


பல்லவி இரண்டாம் முறை வருகையில் இதமாய் பின்னணியில் வயலின் லேயரிங்க். இடையிசையில் என்ன அருமையான பியானோ ஹம்மிங்!! மெல்லிய ரிதம் வேறுபாடுகள், சிலிர்க்க வைக்கும்.

சரணம்...

உன்னைத் தான் கண்டு சிரித்தேன் - நெஞ்சில்
ஏதோ ஏதோ நினைத்தேன்
என்னைத்தான் எண்ணி துடித்தேன் எண்ணம்
ஏனோ ஏனோ வளர்த்தேன்


பின்னணியில் தான் எப்படி ஜீவனோடு வாத்தியங்கள் மெருகேற்றிக் கொண்டிருக்கின்றன - ஒவ்வொரு வரியிலும்!

பெண்மை பூவாகுமா - இல்லை
நாளாகுமா
இது தேனோடு பாலாகுமா!


இவ்வரி முடிகையில் மறுபடியும் (சிறிதாக) ஒரு Chord வரிசை.

E Minor - G Aug - G Major. இதைத் தொடர்ந்து பல்லவி.

புதுமுகங்கள் மட்டும் வைத்து ஒரு காவியம் படைத்த இயக்குனர் ஸ்ரீதரின் முயற்சி, அப்படிப்பட்ட படத்திலும் இவ்வகையான சோதனை முயற்சிகளை அசராது அளித்த மெல்லிசை மன்னர் - விளைவு காலத்தை வென்று நிற்கும் தொல்லிசையாய் இப்பாடல் - ஆகியவையே இப்பாடல் 'Top 3' க்குள் வந்தத்ற்கு முக்கியக் காரணங்கள்!

குதூகலம் என்பதற்குப் பொருளாக ஒரு பாடல் உண்டா? கேட்ட நொடியில் அனைவரையும் துள்ளி எழுந்து ஆட வைக்கும் பாடல் உண்டா? அது எப்படிப்பட்ட பாடலாக இருக்க வேண்டும்? "பாடுவோர் பாடினால்" மட்டுமே கேட்போர் அனைவருக்கும் "ஆடத் தோன்றும்". ஆம், இத்தொடரில் இறுதியான, சிறப்பில் முதன்மையான பாடல் "கண்ணன் என் காதலன்" படத்தின் "பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்."

புதுமை, இனிமை, இளமை, கற்பனை அனைத்தயும் சிந்தனை செய்து பார்க்க இயலாத உயரத்திற்கு கொண்டு சென்ற பாடல். இப்பாடல் முதன்மையானதாக நிற்பதற்கு 'காரணங்கள்' கூற முடியாது. இப்பாடலுக்கான மரியாதையை நாம் முறையாகச் செலுத்தாவிடில் தொடருக்கே இழுக்கு என்பதுதான் ஒரே காரணம்.

முன்னிசையே அமர்க்களப் படுத்தும் விதமாக பியானோ. டி.எம்.எஸ் அவர்கள் பல்லவியை மெதுவாகப் படித்தவாறு பாட, பின்னணியில் பியானோவும் பாடிக்கொண்டிருக்கும். பிறகு 'Solo' பியானோ பிட் ஒன்று. பிறகு பாங்கூஸ் ரிதம் துவங்க, வயலின் ஆர்கெஸ்ட்ரேஷன் முன்னிசையில் பரவ - என்ன அற்புதமான பாடல் துவக்கம்! முன்னிசை என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

பல்லவி...

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்


முதல் இடையிசை சாதாரண ஒன்று அல்ல. புதுமையின் உச்சம். பியானோ மிருதங்கச் சேர்க்கை. என்ன ஒரு அதீத கல்பனா சக்தி இருந்தால் இப்படி ஒரு புதுமையைச் செய்யத் தோன்றும்! இங்கும் பியானோ வுடன் வயலின் சேர, காற்றினிலே கலப்பது போன்ற உணர்வுக்குச் செல்லும் பாடல். அது முடிகையில் பாங்கூஸ் உடன் குழல் சேர்க்கை. தொடர்ந்து முதல் சரணம்:

பாட்டில் சுவை இருந்தால்
ஆட்டம் தானே வரும்
கேட்கும் இசை இருந்தால்
கால்கல் தாளமிடும்


அழகாக வயலின் எடுத்துக் கொடுக்க...

தன்னை மறந்தது பெண்மை
துள்ளி எழுந்தது பதுமை
நூல் அளந்த இடை தான் நெளிய
நூறு கோடி விந்தை புரிய
நூறு கோடி விந்தை புரிய
(பாடுவோர்)


இரண்டாம் இடையிசை முடிந்து, இரண்டாம் சரணம் தொடர்ச்சி:

பாதம் சிவந்திருக்கும்
பாவை செந்தாமரை
பார்வை குனிந்திருக்கும்
புருவம் மூன்றாம்பிறை

புத்தம் புது மலர் செண்டு
தத்தி நடமிட கண்டு
புத்தம் புது மலர் செண்டு
தத்தி நடமிட கண்டு
மேடை வந்த தென்றல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்
(பாடுவோர்)


உற்சாகத்தைப் பொதித்து, பொடித்து, பொறித்து உருவாக்கப் பட்டது போன்ற இடையிசை. அப்படி ஒரு இனிமை. இப்படி ஒரு பாடல் வெளியான காரணத்தால் தமிழகமே இன்பக் களிப்புற்றிருக்க வேண்டுமென நினைக்கிறேன். சிவாஜி பாடலா? வாத்தியார் பாடலா? என்று என்றுமே ஒரு தற்கம் நடந்து கொண்டு இருக்கின்றன. வாத்தியார் கட்சியினர்க்கு சாதகமாக ஒரு அதீத பாடல் இது. (சிவாஜி கட்சியினர் சினமுற வேண்டாம், "பாட்டொன்று கேட்டேன்" துவங்கி பல பாடல்கள் நம் பியானோ தொகுப்பில் உள்ளது) Very Happy

பாடல் வரிகளின் உற்சாகப் பெருக்கைப் பார்க்கும் போது இப்பாடல் வாலி என நினைத்தேன். ஆனால் இது ஆலங்குடி சோமுவின் வரிகள் என உணர்ந்தேன். அற்புதமான மொழி வெளிப்பாடு!

மொத்தத்தில் "The Ultimate Piano Composition!" என்ற அடைமொழியை இப்பாடலுக்கு சூட்டி நாம் மகிழ்வோம்!
_________________
Ramkumar


Last edited by Ram on Wed Jun 17, 2009 11:04 am; edited 1 time in total
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1160

PostPosted: Wed Jun 17, 2009 11:01 am    Post subject: Reply with quote

மெல்லிசை மன்னர் இசை அமைக்கும் முறையைத் தொகுத்து உணர்வது (Patternizing) என்பது முடியாத ஒன்று. அதாவது 'Chord' கொண்டு உருவாக்குகின்றாரா, மெலடி கொண்டு உருவாக்குகின்றாரா, ராகத்தின் அடிப்படையில் உருவாக்குகின்றாரா, இல்லை வரிகளுக்கு ஏற்றவாறு மட்டும் இசை அமைக்கிறாரா என்று இன்னும் பல கேள்விகள் நமக்கு அவர் பாடலைக் கேட்ட மாத்திரத்தில் எழும். ஆனால் இதற்கு விடையே இல்லை என்பது தான் விடை. எவ்வாறு என்று பார்ப்போம். இப்போது பார்த்த "என்ன என்ன வார்த்தைகளோ" பாடலில் அவர் 'Chords' ஐ முதலில் உருவாக்கி அதற்கு மேல் மெலடி அமைப்பை வைத்தாரா என்பதை நம்மால் கூறவே இயலாது. ஒரு வகையில் பார்த்தால் - அது சரி என்றும் தோன்றும், அதாவது முன்னிசையின் Chord Pattern அவருக்கு திடீரெனத் தோன்றி அதற்கு பின் பாடல் தோன்றியிருக்கலாம். அல்லது முதலில் உருக்கமான மெலடி தோன்றி அதன் பின் Chord Arrangements'ஐ அவர் செய்திருக்கலாம். இரண்டுமே சரி என்று தான் தோன்றுகிறது.

இன்னொரு பாடலைப் பார்ப்போம். "நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்" என்ற பாடல். ஜாஸ் முறைகளைத் தழுவி வரும் பாடல். இப்பாடலில் வரும் வரிகளான "என்னிடம் மயக்கம்", எழுத்துக்கு மெட்டு என்று முதலில் தோன்றினாலும், பின்னணியில் ட்ரம்பெட் Chords'ஐ உணர்த்திக் கொண்டு இருக்கும்.

"பாலிருக்கும் பழமிருக்கும்" பாடலில் Counter Melody போல ஹம்மிங்க் வந்துகொண்டே இருக்கும். ஒருவகையில் இதை 'Harmony Based Composition' எனலாம். ஆனால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதும் சரியே.

"Raga Based Melody" என்பதைப் பார்ப்போம். ஒரு ராகத்தில் ஏதோ ஒரு மெட்டமைத்தால், அப்பாடல் ராகத்தின் அடிப்படையில் உள்ள பாடல் என்று வேண்டுமானால் கூறலாமே தவிற அதுவே 'Raga Based Composition' என்ற தகுதியை முழுவதுமாய்ப் பெறாது. ராக 'பாவத்தை' அது எவ்வளவு அழகாக வெளிக்கொணர்கிறது என்பதை வைத்துதான் அது Raga Based Composition என்று நாம் உறுதியாகக் கூறலாம்.

உதாரணமாக தர்மவதி ராகத்தில் அமைந்த "ஹலோ மை டியர் ராங் நம்பர்" பாடல், துவக்கத்தில் எவ்வித சங்கதிகளைக் கொள்ளாமல் 'Plain' ஆக வரும். (அதிலும் மெலடி கொட்டி கிடக்கும் என்பது வேறு விஷயம்). ஆனால் "கற்பனை ஓராயிரம் நேரிலே பார்த்தால் என்ன" என்ற வரியில் வந்து சங்கதி விழுமே பார்க்கலாம். அவ்விடத்தில் தான் அது முழுமையாக அது ஒரு 'Raga Based Composition' ஆகிறது.

"சித்திரப் பூவிழி" சங்கதிகளுக்காகவே அமைத்த பாடல் போல் இருக்கும். "கண்ணிரண்டும் மின்ன மின்ன" ஒரு எளிதான பியானோ ரிதம் கொண்ட பாடல் என்று நினைத்தால் கீரவாணியை பிழிந்து எடுத்திருப்பார். அதே சமயம் ஆர்கஸ்ட்ரேஷனோ பின்னணியில் பட்டையைக் கிளப்பும். இப்பாடல்களை வகைப்படுத்தவே இயலாது.

ஜாஸ் இசையும், இந்துஸ்தானி இசையும் தான் முழுவதுமாக 'மனோபாவத்தின்' அடிப்படையில் உருவாகும் இசை. இந்த அடிப்படையினுள் வரும் எந்த ஒரு பாடலையும் 'Patternize' செய்ய இயலாது. இவ்விரு இசை வடிவங்களிளும் பாடல்கள் கொட்டி இருக்கிறது மெல்லிசை மன்னர் இசையில்!!!

நானே என் கண் முன்னே பார்த்த எடுத்துக்காட்டு ஒன்று. சில வருடங்களுக்கு முன் மெல்லிசை மன்னரது இல்லத்தில், அனைவரது வேண்டுகோளுக்கு இணங்கி, அவர் சில நிமிடங்கள் பியானோ வாசித்துக் காட்டினார். சங்கராபரண ராகம் 'போல' ஆரம்பித்தது - C Scale லில். அது வரை அவர் "ம" விற்கு "D-Minor" கொடுத்துக்கொண்டிருந்தவர், திடீரென்று "D-Major" ஆக்கி அதைக் கல்யாணி ராகமாக மாற்றி விட்டார். அவ்வளவு அருமையாக இருந்தது. கேட்டுக் கொண்டிருந்த நான்கைந்து பேருக்கும் அப்படி ஒரு ஆனந்தம் அந்த இடத்தில். அனைவரையும் "சபாஷ்" போட வைத்தது! Just flew out!

இதில் நாம் கவனிக்க வேண்டியது இதுதான். இவர் பியானோவில் ஒரு சிறிய ராக மாலிகை செய்ததால் இதை "Raga Based Melody" என்று கூறுவதா? (அப்படிக் கூறுவது அந்த இனிமையைக் குறைவாகக் கூறுவது போல இருக்கிறது!!) இல்லை மெலடியைச் சொட்ட சொட்ட அளித்ததால் அது "Melody Based Composition" என்று கூறுவதா?? இல்லை Western Classical இன் தெளிவான நியதி கொண்டு ஒரு இனிமை மாற்றத்தைக் கொண்டு வந்ததால் இதை "Chord Based Melody" என்பதா??? எப்படியும் கூற முடியாது! மெல்லிசை அளித்த நல்லிசை என்று கூறுவதுதான் சிறப்பானது !!!

ஆக எவ்வித விளக்கங்கள் கொண்டும் நாம் விளக்கிவிட முடியாத நிலையைத் தன் அனைத்து பாடல்களிளும் வைத்துள்ளார் மெல்லிசை மன்னர். பல இசை அமைப்பாளர்கள் "Pattern Melody" கொண்டு தவிப்பதைப் பார்த்திருக்கிறோம். "என்னப்பா... இது போல ஏற்கனவே இவரது பாடல் ஒன்று உள்ளது" என்று சலிப்புத் தட்டியிருக்கிறோம். இதுவரை மெல்லிசை மன்னரின் ஒரு பாடலாவது "இது வேறு ஒரு பாடல் போன்று உள்ளதே?!" என்று நம்மால் கூற முடியுமா? முடியவே முடியாது. அதற்கு ஒரே காரணம் அவர் எந்த வித "Pattern Based", "Conditional" என்று எதனுள்ளும் தன் இசையை அடக்காமல், இசைக்கே உரிய தடைகளையும் உடைத்தெரிந்ததால் தான் இன்னும் அவை உயிரோட்டத்துடன் இருக்கிறது.

பல இசையமைப்பாளர்களை "He re-defined Music!" என்று போற்றுவார்கள். உண்மைதான். ஆனால் "MSV Undefined Music!!!" "இசை என்றால் இதுதான்" என்று எவ்வகையிலும் விளக்கிவிட முடியாத நிலை. இந்நிலை மற்ற "விளக்கங்களை" விட ஒரு படி உயர்ந்துள்ளது என்பதில் துளியும் ஐயமில்லை!!! MSV Obliterated the Distinctions within Music !!!

மெல்லிசை மன்னர் "ஏதோ பாடல்களுக்கு சிறப்பாக மெட்டமைக்கும் ஒரு இசை அமைப்பாளர்" என்ற ஒரு குறுகிய கோணத்தையும் பலரிடம் நான் கண்டிருக்கிறேன். "சிவந்த மண்" பின்னணியில் தாளவாத்தியக் குழுவுடன் ஒரு தனிஆவர்தனத்தை அழகாக நிகழ்த்தியிருப்பார். கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் செல்லும் அந்த இசை. இது ஒரு புறம் இருக்க "மோட்டார் சுந்தரம் பிள்ளை" படத்தின் டைட்டில் இசை 56 நொடிகள். அதற்குள் எவ்வளவு விஷயங்கள், ஸ்கேல் மாற்றங்கள், ஆர்கெஸ்ட்ரேஷன் என்று அசத்தியிருப்பார். இப்போது "Jingles" எனப்படும் ஒரு நிமிட குறு-இசை வடிவங்களை முதலில் சோதித்து வெற்றி கண்டவரும் மெல்லிசை மன்னர் தான். ஆக நீண்ட இசையானலும், குறுகிய கால இசையானாலும் மெல்லிசை மன்னரின் இசையில் எப்போதும் நிறைந்திருப்பது இரண்டு - இனிமை மற்றும் முழுமை!

ஒரு பாடல் வரிகளின் 'Presentation' இல் (சங்கதிகள், இசைக் கருவிகள், அழுத்த மாற்றங்கள் என்று பல வகையாக) மெல்லிசை மன்னர் தனக்கென ஒரு தனிச்சிறப்பு கொண்டவர். சிறந்த உதாரணமாக "பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த" பாடலில் பல்லவியை எத்தனை வகையாகக் காட்டியிருப்பார். முதலில் சாதாரணமாக, பின் ஒரு சில வார்த்தைகளுக்கு, அடுத்த முறை அநேக சொற்களுக்கும் சங்கதிகள் என்று படிப்படியாக சென்றிருப்பார்.

ஒரே வார்த்தையை ஒரு அடி நீளத்திற்கு இழுத்தாற் போன்ற வினோதத்தையும் மெல்லிசை மன்னர் செய்திருக்கிறார். "நான் உன்னை அழைக்கவில்லை" பாடலில், சரணம் முடிந்து பல்லவி வருகையில் -"நா...ஆ......ன்" என்று அவ்வளவு அழகாக குழைத்திருப்பார். இன்னொரு புதுமை கொண்ட பல்லவியும் ஒன்று. "ஒரே பாடல் உன்னை அழைக்கும்" ஆரோகணமாகவும், அடுத்த வரியான "உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்" அவரோகணமாகவும் அமைத்திருப்பார். நவீனம், அதி நவீனம் !!!

தனது இசையில் மட்டுமல்லாமல் வேறு ஒரு இசையமைப்பாளரிடம் ஒரு பாடகராகச் சென்றாலும் அவரது கற்பனையைக் கட்டுப்படுத்த இயலாது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் வரும் "விடை கொடு எங்கள் நாடே" பாடலில் வரிகளைத் தன் குரலில் உருக்கித் தள்ளியிருப்பார். இப்படி ஒரு பாடலுக்கு மெல்லிசை மன்னரின் குரலை வேண்டிய ரகுமானின் ரசனை உண்மையில் உயர்ந்தது தான். சரணத்தில் ஒரே மாதிரியான மெட்டை பல வகையாக வெளிப்படுத்தியிருப்பார்.

மெல்லிசை மன்னரின் இசையில் பல உக்திகளை தனித்தனியாக ஆராய்ந்து அனுபவித்து ஒவ்வொன்றிலும் ஒரு கட்டுரைத் தொடரே எழுதலாம். எப்படி ஒரு பாடல் ஒரு சிச்சுவேஷனுக்கு பொருந்துகிறது, எப்படி அவரது இசை கதையையும் கதா பாத்திரங்களையும் உயர்த்துகிறது, எப்படி பழையன கழித்து, பழமையைக் காக்கிறது, கற்பனையின் உச்சகட்ட வெளிப்பாடாக அவரது இசை எவ்வாறு திகழ்கிறது, காலத்தை வென்று, நூற்றாண்டுகள் தாண்டிய தொலைநோக்கை எவ்வாறு கொண்டுள்ளது, ஆர்கஸ்ட்ரேஷன், பின்னணி இசை - எல்லாவற்றையும் தாண்டி ஒவ்வொறு பாடலும் தனித்தனி மலரைப்போல் அழகைச் சுமந்து கொண்டு எவ்வாறு ஓராயிரம் வகையாக உருவாகி உள்ளது என்று நமது ஒவ்வொரு வியப்பையும் ஒரு 'முனைவர்' பட்டப் படிப்பாக மாற்றும் அளவிற்கான பொருளை மெல்லிசை மன்னரின் இசை கொண்டுள்ளது!

இப்படி நம்மால் நினைத்துப் பார்க்க இயலா வகையில் இசையளித்த மெல்லிசை மன்னரின் திறனை, சிறப்பை எப்படித்தான் உணர முடியும். எவ்விதமான இலக்கணங்களுக்கும், விளக்கங்களுக்கும் கட்டுப் படாமல் வானமாய் படர்ந்து கிடக்கும் அவரது இசைச் சிறப்பை எப்படித்தான் முழுவதுமாக உணர முடியும். முழுவதுமாக உணர்தல் என்கிற இயலாத ஒன்றை விடுத்து, எப்படி இது சாத்தியம் (அல்லது) என்ன தான் காரணமாக இருக்கும் என்பதை வேண்டுமானால் சற்று உணர 'முயலலாம்'.

சத்குரு ஜக்கி வாசுதேவின் மனித வாழ்க்கையைப் பற்றின ஆழ் கருத்து ஒன்று உள்ளது. அவர் கூறுவது: "Shifting Life from Pursuit of Happiness to Expression of Happiness; Only when that happens Human Intelligence Flowers!" என்பார்.

இது மிக ஆழமான கருத்தாகும். முதலில் "Intelligence" என்று அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்பதைப் பார்ப்போம். இந்த "Intelligence" - "Analytical Brilliance" அல்லது "Logical Brilliance" போன்றவற்றைக் குறிப்பிடுவதில்லை. உயிகளுக்குள் இருக்கும் "Natural" அல்லது "Subtle Intelligence" ஐக் குறிப்பிடுகிறது. அதாவது ஒரு செடியின் வேர், நீரை நோக்கிப் போகும் தெளிவு - இது தான் இங்கு குறிப்பிடப்படுகிறது.

அதேபோல் "Pursuit" & "Expression" என்பதையும் பார்ப்போம். மெல்லிசை மன்னர் இசையைத் தேடிப் போனதில்லை (Pursuit). எவ்வித இசையானாலும் அதைத் தனக்குள்ளேயே கொண்டவர். அது இடத்திற்கேற்ப தேவைக்கேற்ப வெளிப்பட்டுள்ளதன் (Expression) விளைவே ஆயிரக்கணக்கான பாடல்களின் ஜனனம். எனவே தான் "இசை" என்னும் "Aesthetic Intelligence" மெல்லிசை மன்னருக்குள் இயற்கையாக முழுவதுமாக இயங்கி ஒரு சோலையாய்ப் பூத்துள்ளது!

மெல்லிசை மன்னரின் பக்தரான சுந்தரவதனன் மாமா கூறுவார்: "பெருமாளுக்கு நம்மால் என்ன பட்டம் கொடுக்க முடியும். அவர் கழுத்தில் ஒரு மாலையைப் போட்டு விட்டு சாஷ்டாங்கமா நமஸ்காரம் செய்துவிட்டு தான் வரமுடியும்!" என்பார். அதுபோல், இப்படி பக்கம் பக்கமாக எழுதினாலும் இதனால் மெல்லிசை மன்னரின் பெருமையோ புகழோ பெருகப் போவதில்லை. அதே போல் எந்த ஒரு பட்டமும் மெல்லிசை மன்னரின் தகுதியை உயர்த்தப் போவதில்லை. மெல்லிசை மன்னரால் தான் அந்த பட்டத்திற்கு உயர்வு ஏற்படும். இது தெரிந்தும் ஒரு சிறு பாமாலையைப் படைக்க உள்ளம் ஆவல் கொள்கிறது:

மெல்லிசை மன்னா - நின் இசை
வெறும் திரைப் பாடல்கள் அல்ல
அவை உயிர்த் தேடல்கள்!

வியப்பில் விழ வைக்கிறாய்
உணர்ச்சியில் எழ வைக்கிறாய்
'இதற்கு எப்பேறு பெற்றேனோ' என
அகத்தில் அழ வைக்கிறாய்!

பலர் இசை
பயிற்சியில் படித்தது.
உனதிசை
உணர்ச்சியில் உதித்தது!

வீணைக்கென தனி குணம் இல்லை
அதை மீட்டவுடன் இசையின்றி வேறில்லை

வாணியின் கையில் வீணையாய் வீற்றிருப்பதால்
நீ நிற்குணன்!
இசைக்கு உனை மீறி ஒரு நற்பொருளிலை
இசையில் நீ சற்குணன்!!

உன் ஒவ்வொறு பாடலை
ஓராயிரம் முறை கேட்ட போதும் - மனம்
விடை பெறுவதில்லை
'இன்னும் வேண்டும்' என்ற எண்ணம்
விதை பெறுகிறது!


இதுதான் உண்மை. மெல்லிசை மன்னருடன் ஒவ்வொரு அனுபவமும் முடிவில்லை, அவை தொடக்கமே. எந்த ஒரு தொடக்கத்தின் போதும் சமஸ்கிருதத்தில் போற்றப்படும் ஒரு புனிதமான சொற்கள் கொண்டு இத்தொடரை முடித்து, இத்தொடரின் முடிவு இன்னும் பல இசை அனுபவங்களுக்குத் தொடக்கமாக இருக்க வேண்டி, இத்தொடரை மெல்லிசை மன்னரின் பாதக் கமலங்களில் வைத்து வணங்குகிறேன்.

"ஸ்ரீ குருப்யோ நம:"

(முற்றும்)


A Handful of Piano Picks - Listing
(Please click on the links below to go the respective articles)

Part 1 - Ennai Theriyuma
Part 2 - Kaatru Vandhaal
Part 3 - VannakkiLi
Part 4 - Oh Little Flower
Part 5 - Naan Nandri Solven
Part 6 - Thairiyamaaga Chol Nee
Part 7 - Maanicka Thottil
Part 8 - Collection of Piano Songs
Part 9 - Jazz Piano1 - Varavendum Oru Pozhuthu
Part 10 - Jazz Piano2 - Viswanathan Velai VeNdum
Part 11 - Jazz Piano3 - Enna Vegam Nillu Bama
Part 12 - Rock and Roll - Aadavarellam, Malarendra Mugamadhu
Part 13 - Unnai Ondru Ketpaen
Part 14 - Kannirendum Minna, Vidiya Vidiya
Part 15 - "Periya Idathu PaNN" - Kannenna Kannenna Kalanguthu
Part 16 - "Paal Thamizh Paal"
Part 17 - Chella KiLigaLaam
Part 18 - An Ensemble of Jazz Rhythms(1) - Thottu Kaattavaa
Part 19 - An Ensemble of Jazz Rhythms(2) - Hey..Naadodi (Anbe Vaa)
Part 20 - Piano Thisram - Jillendru, Manamedai, Senthamizh Paadum, Pillai Thamizh Paadukiren, Ninaithathai Nadathiye
Part 21 - "Rocking Piano" - Adadaa enna azagu, Allippanthal, Yaaro aada therinthavar
Part 22 - MSV-SPB Mesmerism
Part 23 - Avan Ninaithaana
Part 24 - "Expressions" - Athanin MuthangaL, Piano Fillers in different songs
Part 25 - Layam - An analysis on different beat patterns in Tamil Film Music
Part 26 - The Finale - Top 3 Piano songs of MSV
_________________
Ramkumar


Last edited by Ram on Wed Jun 17, 2009 10:59 pm; edited 1 time in total
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI
Maniac


Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Wed Jun 17, 2009 2:04 pm    Post subject: Reply with quote

Dear Ram,
Your writing is like Sunaami. I got sucked in to it. My mind is not working. But I want to reply. Give my some time. Good that you had given the list of all 26. Let me read all that.

N Y MURALI
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki
Fanatic


Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Wed Jun 17, 2009 2:13 pm    Post subject: Reply with quote

F A N T A S T I C Ram, your concluding articules in Piano Series !

" MSV undefined Music " ! That is the only way anyone could ever describle his creations !! Well said !!

Like MSV, who has great rasikas (trying to understand his music mapping with many definitions, but failing finally !), you too have many who constantly wait for your postings ( Iam one among them !).

Your postings should continue, may be under some other topic, trying to define an un-defined, but beautifully !

All the best

DAD

_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
baroque
Fanatic


Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Wed Jun 17, 2009 8:37 pm    Post subject: Reply with quote

Amazing Ram.

Most of the songs you mention here are very familiar and evergreen.

'வடிவேலு பாணியில் "என்ன வ்ளாயாட்டு இது!!!" என்று தான் தோன்றுகிறது!!' Very Happy Smile

LOVED IT. வடிவேலு never ceases to bring a smile to my face Very Happy .

இதுவரை படிச்சாச்சு ...return at the end of the day for the rest.

Listing of all the songs at the end of the article.....Very thoughtful of you. thanks.

vinatha.

Back to top
View user's profile Send private message
madhuraman
Devotee


Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Thu Jun 18, 2009 6:09 am    Post subject: Articles and Writings by Fans Reply with quote

Dear Mr.Ram
Another excellent piece of a crowning work. Besides, the narrations on the beauty of compositions at all apt locales, your effort to summarize MSV-THE MUSICIAN stands vividly tall. The simultaneous complements of 'his' music are beyond the limitations of human effort of description. The simultaneous complements I refer to are beauty and pity. Beauty is- the enjoyment that comes to everyone in a unique way and the pity is none can pick the nuances that went into the synthesizing the seamless blend of melody, synchrony, emotion, clarity and above all a non-repetitive assemblage in his compositions. His non-repetitive compositions have complimented MSV by his fans' listening to them repeatedly for the nth time with only amplified desire to hear more. We fans know every subtle note in all his popular pieces. There is an element of 'expected ecstasy' in listening to the 'known'numbers that sustain the thrill even after decades. It is a fine baffle, as it bewilders the experts and novice alike by the sheer variety and richness -all by human effort as to how this composer keeps coming out with 'timely' timings in orchestration, singing nuances with top priority to words and emotions. At last to settle for the expression that MSV UNDEFINED THE MUSIC stands simultaneous testimony to the prowess of the legend and to your fine sense of judgment as an analyst. May GOD bless you both. Please make a CD of your write-ups on Piano songs, so that in future, it may serve a different purpose as a sort of 'Review' of a select territory in MM's repertoire. Thank you for the grand work and the opportunity for us to enjoy. Warm regards. Prof.K.Raman Madurai.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
Vatsan
The Fervent


Joined: 20 Jan 2007
Posts: 352

PostPosted: Thu Jun 18, 2009 3:12 pm    Post subject: Piano Reply with quote

Ram, I managed to get into the site magically (past the "Websense" nonsense in Cognizant) and what do I find here (NY Murali sounded me off on this article actually) !!! Brilliant write-ups. Keep going, your writing style in Tamil has the lucidity of a MSV melody.

There are several composers who consciously reconcile Carnatic music rules with those of Western Classical and in their "holier than thou" interviews brag about how they perceive music as music and not as Carnatic and Western Classical. In my firm opinion, no composer in India other than MSV can say that. To MSV, it is a single piece. How else would you explain the sheer seamlessness ?!!? You quoted "Hello My dear Wrong number", a perfect example, or one of the perfect examples. "kAveriyil meenO" is all "light", while "dEva magaL thAnO" drips with classicism. Furthermore, "porumaiyudan irangaL" is a light stab at Dharmavathi, but the following "muthumai varum varayO" is all gamak laden, all classicism. How beautifully they all co-exist seamlessly.....primarily owing to the fact that they were not squeezed in consciously !!!! Such things happen when the composer does not "think" , but only "allows" something to happen, freeing himself from all pre-determined constructs and rules and agendas !!! Reminded of Jiddu Krishnamurthy's adage , "What humanity requires is not Freedome of Thinking, but Freedom FROM thinking " . Any thought structure has to be restricted in nature, emanating from a limited locale, the person's mental conditioning. But the when the person forgets himself and functions as a conduit (for music), what you have is........the MSV brand of music.
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI
Maniac


Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Thu Jun 18, 2009 5:17 pm    Post subject: Reply with quote

Dear Ram,
It is a great writing indeed. I have not read all your 26 articles but thanks for giving the list. I can read the left outs. The only thing which I did not like is the word ‘Finale’. You must continue to write articles I this series as long as takes. There is some more song which can be added like the song ‘Mezhuguvarthi Erigindradhu’ from ‘Gowravam’.

There is also another type Piano songs in which MSV used the piano not as a lead instrument but used the chords. Notables are ‘Manithan Enbavan Deivamaagalaam’, ‘Kannazhu Minna Minna’ and ‘Kannenna Kannenna Kalungudhu’. How beautiful is the piano piece that starts when the line ends ‘kili Pille Kili Pille KilPille’. These facets of MSV’s Piano have to be revealed. So keep writing more. Though you have mentioned these songs as a group it requires separate postings,.

How true you are when you said that MSV undefined music. Prior to MSV the world has not seen a composition like this. It is a pity that people who knows him as a ‘Mellisai Mannar’ unable to define what ‘Mellisai’ is. But is it only ‘Mellisai’? I do not agree. I think in a broad spectrum we can call his music as ‘Feel’ music. It is the feel factor that is special to MSV. Nobody other than him knows how to infuse feel in the music. We may infer a particular song on a raga based or a folk based or a chords progression based or combination of all based on the notes we decode from the sound generated by him and may be try to prove a theory. But how to write a theory or a practical step to infuse feel in a sound? Is there a practical step in which you can add or reduce the flavor in a coffee?

I have noticed and got dejected that MSV himself could not explain properly about how he handled the composition of a given song. But at times he himself reveals some information without knowing the truth. For example I remember him always mentioning that he found a tune for the words. He would not say that he created the tune or he composed a tune. In Tamil he would say ‘Oru mettu kandupittichen’. That means for him the melody was already there and it got revealed to him.

In this connection I want to bring the information about the ‘Vedic hymns’. Actually the Rishis who revealed the Vedic hymns never claimed that they created the hymn. They said that it flashed to them and they were able to see word by word in their inner consciousness. So in effect they are not the ‘Manthra Karthas’ (Creators) but ‘Manthra Dhrustaas’ (Seer).

It seems almost the same kind of activity happening in this case also. MSV also mentioned in many interview that when the director explains the situation the Music Director should be able to visualize the scene. But more than that MSV was not only able to visualize but also able to fine tune his feeling to that of the character and thus he become the character and not a music director. Once that happens then the flow of melody starts flowing like water falls and there is no stopping. This is exactly why he does not believe in not writing the notes like other MDs and just keeps his mind in tune with the extra intelligence from which he receives the idea flow and conveys then and there. But for this reason he would not have started the song ‘Oorayiram Naadagam Aadinal’ with the humming. The humming inspiration is a clear proof of him becoming of the character when the situation was explained to him. But for this song how could we have imagined as to how to express musically of a suppressed mind having exposed to a situation which it was longing for long. I have noticed many people including grown up people shouting with dupe words like ‘oh’ ‘oohu’ etc when they see water falls, a river or a hilly region after spending mechanical life.

There is another example. Take the case of the song ‘Anbu Nadamoodum Kalikoodame’. Forget for the lyrics which have many ‘mays’ see the tempo of the song. The song has a specific tempo except for the interlude before the 3rd charanam. That interlude happens in a faster tempo. Today we can say that it is because at that time the character which was going in a wheel chair got his fracture cured and has started running. But how MSV could visualize that situation before composing. Because we all know that composing takes place before the shooting. Unless he was explained that during the song that the character which was going in wheel chair would get cured and he visualized that situation and deliberately infused that idea in that interlude by was of fast tempo only for that place.

Take another case of the song ‘kettu kodi urimi melam’ in which MSV visualized that the couple one who is foreign educated the other village folk are trying to give up to each other initially. Hence he got the idea to make western style for the village folk and the folk style for the well educated.

No theory or thesis can be written for this kind of music. At best one can absorb understand and then probably try to bring their own idea for future situations. It is also similar to the fact that Vedas can never be written and recited. It can be taught from a guru only.

But I myself have written articles about many songs of MSV which has been composed based on chords progression or on a raga based. I have also argued that any creativity has to fall in some methods. The fact that any composition once decoded in to notes will fall in any of this categories. These are all the nuts and bolts of a composition. But the fuel for the composition is this feel factor.

But how powerful is this feel factor. I shall tell my own experience. Like MSV’s unique style in music his fans are also unique. MSV is the only composer in the world where his own fans may not like to hear some of his compositions. I heard our friend Vatsan telling that he wont hear ‘Maalai Pozhidhin Mayakkathile’. My wife won’t hear the song ‘Manidhan Niappathundu’. Srikumar won’t hear the song ‘Muthu nagaiye unnai naan ariven’. I will not hear ‘Nann unnai azhaikkavillai’. The problem is the fear of getting out of mood on that day. I want to mention hear that I had to hear the song ‘Naan unnai azhaikkavilli’ when I wanted to write a posting for our site. The result I got sucked in to deep emotion that once I finished that article in my office I forgot to lock the shutters of my office when I returned. Luckily I locked the outer grill gate without my consciousness. Some how I had to return to my office in the next half an hour because I forgot my cell, purse etc when I found the shutters not locked. The next 2 days I did not go to the office. This is the reason I avoid to hear such songs. This can never happen to any other MDs.
So the feel factor is the life in his songs. Rest all others are body parts. Many people have not understood this aspect. The world recognizes only the traditionalist because it understands tradition.

I can bring poet Bharathi as parallel to MSV in terms of this feel. If we read his poems we can understand that Bharathi is the one who had handled many situations of this human feel be it love, divine, national outlook, caste discrimination etc. No other poet has imagined of Kannan as Bharathi imagined in his mind. The result we have many poems as Kannan en kaadali, Kannan en velaikkaran etc. It took almost 50years for the world to understand Bharathi.

Like wise I am sure a time will come in future when the world would understand the same feel in the music of MSV.

Your articles in this series have brought out this feel. That is the reason I request you to continue more.

Regards,

N Y MURALI
Back to top
View user's profile Send private message Send e-mail
Vatsan
The Fervent


Joined: 20 Jan 2007
Posts: 352

PostPosted: Thu Jun 18, 2009 6:18 pm    Post subject: Resp. Reply with quote

Well said Murali Mama. The world understands only tradition or anything traditional packaged cleverly or anything easily quantifiable.

You cannot measure the quality of the output of a man who laid primary emphasis on aesthetics, taste and feel...all of the three being abstract elements.
Back to top
View user's profile Send private message Send e-mail
VaidyMSV & Sriram Lax
Maniac


Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Thu Jun 18, 2009 7:45 pm    Post subject: Reply with quote

dear Ram

what to say on your writting

an unparallel article , on un parallel genius of music .

you deserve a standing ovation for your work .

we need such articles as often as possible . i know its very tough in present conditions . pls do try

i second prof's suggestion, to copy in Cd ,i further suggest that to be distributed either , along with DVD of

MSV Unplugged . Or with the book to be published by Prof .

core members By the way when we are going to see them .....
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
baroque
Fanatic


Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Fri Jun 19, 2009 1:05 am    Post subject: Reply with quote

Terrific work, Ram!
thanks.
Vinatha.
Back to top
View user's profile Send private message
msvramki
Fanatic


Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Fri Jun 19, 2009 9:10 pm    Post subject: Reply with quote

Dear Murali,

Your article on the 'FEEL FACTOR' of MSV's music is fabulous.
Whatever you have said is 100% truth.

As you have rightly said, each of MSV fans have one or a few songs which they cannot stand.

If I hear the song " EN ANNAI SEITHA PAAVAM NAAN MANNIL VANTHATHU" from SUMAITHANGI, I get sucked into it and it would take hours to come out of the emotions it creates !

Similary, my wife goes into a different world when she listens to "ETHARKUM ORU KAALAM UNDU PORUTHIRU MAGALE" from SIVAKAAMIYIN SELVAN. She just cannot control her emotions when she listens.

But in spite of this, we are addicted to these songs and we do listen to them for the sake of the 'pleasure' of 'experiencing' the FEEL they create !!

As you have said only MSV's creations are capable of doing this.

RAMKI
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1160

PostPosted: Tue Jun 23, 2009 8:03 am    Post subject: Reply with quote

Dear All,

Thank you for the replies here!

Dear Murali - Yes the feel factor on MSV's songs is something acts as a fuel for his Music. And that is preciesly something that can never be put into words. Thanks for your writing that conveyed that fact!

Vatsan - Well said! Many 'Think' about 'Achieving' a 'Target' in Music, but they fail miserably! Unlike MSV who 'Allows' Music to Happen, as you always say ! Very Happy

Professor - Thanks for your appreciation on this write-up. If it is not too late & if possible, you can consider including this episode of the piano series in the proposed book - so that the series would have a sense of completion for the readers.

All - Thanks again for the responses! Very Happy
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1160

PostPosted: Wed Jun 24, 2009 8:50 pm    Post subject: Reply with quote

Mellisai Mannar's wishes for the completion of the Piano Series. What else could one yearn for !!!!!


_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Goto page 1, 2  Next
Page 1 of 2

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group