"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Unnaiththaan naanariven - Vaazhkai Padagu

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Sat Nov 28, 2009 8:06 pm    Post subject: Lyrics - Unnaiththaan naanariven - Vaazhkai Padagu Reply with quote

படம்: வாழ்கை படகு
பாடியவர்: பீ. சுசீலா
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி

உன்னைத்தான் நானறிவேன்
மன்னவனை யாரறிவார்
என் உள்ளம் என்னும் மாளிகையில்
உன்னையன்றி யார் வருவார்
(உன்னைத்தான்)

யாரிடத்தில் கேட்டு வந்தோம்
யார் சொல்லி காதல் கொண்டோம்
நாயகனின் விதி வழியே
நாமிருவர் சேர்ந்து வந்தோம்
ஒன்றையே நினைத்து வந்தோம்
ஒன்றாக கலந்து வந்தோம்
(உன்னைத்தான்)

காதலித்தல் பாபமென்றால்
கண்களும் பாபமன்றோ
கண்களே பாபமென்றால்
பெண்மையே பாபமன்றோ
பெண்மையே பாபமென்றால்
மன்னவரின் தாய் யாரோ?
(உன்னைத்தான்)

ஜெமினி கணேசன், தேவிகா, முத்துராமன் மற்றும் ரங்காராவ் அவர்கள் இணைந்து நடித்த ஒரு உணர்ச்சி மயமான குடும்பப் படம், 1965- ல் வெளிவந்த வாழ்கை படகு. விஸ்வநாதன், ராமமூர்த்தி இவர்கள் இருவர் இசையில், படத்தின் அனைத்து பாடல்களும் அருமை.

இந்த பாடல் எளிமையான இசையில், அருமையான மெட்டில், அழுத்தமான வரிகளில், இனிமையான குரலில் அமைந்தது.
படத்தில், ரங்கராவ் அவர்கள் ராஜ வம்சத்தை சேர்ந்தவர். அவரின் ஒரே மகன் ஜெமினி. இவர் மேடையில் நடனமாடும் நாயகியாக வரும் தேவிகாவை காதலிப்பார். ராஜ வம்சத்தை சேர்ந்ததால், ரங்காராவ் இந்த காதலை எதிர்கிறார். அப்பொழுது ஜெமினி அவர்கள், தேவிகாவின் நல்ல குணங்களை பற்றி தன் தந்தையிடம் எடுத்துரைத்து, அவரை வற்புறுத்தி, தேவிகாவின் ஒரு நடன நிகழ்ச்சியை பார்க்க அழைத்து வருவார். அந்த நடன நிகழ்ச்சியில் இந்த பாடல் இடம் பெறும்.

மேலே குறிப்பிட்ட இந்த காட்சிக்கு மிக மிக பொருத்தமாகவும், அற்புதமாகும் அமைந்துள்ளது இந்த பாடல் வரிகள்.
ஆத்மார்த்தமான காதல் என்பது எதையுமே எதிர்பார்த்து வருவதில்லை. இரு அன்பு மனங்களின் சங்கமிப்புதான் அது. இதை
பாடலில் 'ஒன்றையே நினைத்து வந்தோம், ஒன்றாக கலந்து வந்தோம்' என்ற எளிமையான வார்த்தைகளை கொண்டு, எவ்வளவு அருமையாக எழுதி இருக்கிறார்.

இந்த பாடலின் இரண்டாவது சரணம்தான் இந்த பாடலில் மிகவும் அற்புதம்.
காதல் தொடங்குவதே கண்கள் வழியாக. அதனால் இந்த காதல் பாவம் என்றால், அதை தொடக்கி வைத்த அந்த கண்கள் பாவம்தானே? கண்கள் பாவம் என்றால் பெண்மை? மிகவும் சரியான கேள்வி இது. எல்லோரும் பொதுவாக சொல்வது 'பெண்கள் கண்களைப் போன்றவர்கள்' என்று. அதனால் அந்த கண்கள் பாவம் என்றால் பெண்களும் பாவம்தானே? பெண்களே பாவம் என்றால், எங்கள் காதலை எதிர்க்கும் மன்னவா, உன் தாய் யாரோ? என்று பாடலை முடித்திருக்கும் விதம்
மிகவும் பொருத்தம். படத்தில் ரங்காராவ் அவர்கள் இந்த வரிகளால் மனம் வருந்தி தலைகுனிவது போல காட்சி அமைக்கப் பட்டிருக்கும்.

இந்த பாடலுக்கு அழகான அந்த கால மேடை நாட்டியத்துக்கு ஏற்ற இசை அமைப்பு. வயலின், கிட்டார், புல்லாங்குழல், தபலா இவைகள் எல்லாம் சேர்ந்து ஒரு துள்ளலான நடனத்தை நம் கண் முன்னே நிறுத்துகிறது. இந்த பாடலை கேட்கும்போது பாடலின் தொடக்க இசையும், மெட்டும், பாடிய விதமும் அந்த பெண்ணின் சோகத்தை சொன்னாலும், பாடலின் இடையில் வரும் பின்னணி இசை மட்டும் ஒரு அழகான நடன காட்சியைத்தான் நம் மனக்கண் முன் நிறுத்துகிறது.


Last edited by Meenakshi on Thu Dec 03, 2009 2:12 am; edited 1 time in total
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Wed Dec 02, 2009 2:11 pm    Post subject: Reply with quote

அன்புள்ள மீனாக்ஷி,

இன்னொரு அருமையான பாடலைத் தேர்ந்தெடுத்து அலசியிருக்கிறீர்கள். இந்தப் பாடல் இந்துஸ்தானி இசையில் கஜல் பாணியில் அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன். 'காவியத்தலைவி'யில் சௌகார் பாடும் ஒரு நாட்டியப் பாடலும் 'எங்கிருந்தோ வந்தாளி'ல் ஜெயலலிதா பாடும் ஒரு நாட்டியப் பாடலும் (பாடல் வரிகளை உடனே நினைவு கூர முடியவில்லை.) இதே வடிவில் அமைந்திருப்பதாகக் கருதுகிறேன். எனினும் இந்தப் பாடல் ஒரு தனித்துவமான அழகைக் கொண்டது.

'பழமுதிர்ச்சோலையிலே,' 'அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்' போன்ற பாடல்களும் நடனப் பாடல்களாக இருந்தாலும், அவை தமிழ்க் கடவுள் என்று அழைக்கப்படும் முருகனைப்பற்றி என்பதாலோ என்னவோ, அவற்றுக்குக் கர்நாடக இசை அடிப்படையில் இசை அமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர்!

'மன்னவரின் தாயாரோ?' என்று, தேவிகா பாடல் மூலம் கேள்வி எழுப்பியதும் ரங்கா ராவின் முகத்தில் தோன்றும் சங்கட உணர்ச்சியைப் படம் பார்த்து சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் என்னால் நினைவு கூற முடிகிறது. இதை நீங்கள் பொருத்தமான விதத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள்.

ஒரு சிறு திருத்தம். பல்லவியின் இறுதி வரியில்,

'உன்னயன்றி யாரறிவார்'

என்று எழுதியிருக்கிறீர்கள். அது

'உன்னயன்றி யார் இருப்பார்'

என்று இருக்க வேண்டும்.

இது உங்களை அறியாமல் நிகழந்திருக்கும் என்று நம்புகிறேன்.

தொடர்ந்து பல பாடல்களை உங்கள் பாணியில் அலச வேண்டும் என்பது எனது கோரிக்கை.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Thu Dec 03, 2009 3:37 am    Post subject: Reply with quote

மிக்க நன்றி ரெங்கசாமி. தவறி செய்தாலும் தவறுதான், ஏனென்றால் அர்த்தமே மாறுகின்றதே! இப்பொழுது மாற்றி விட்டேன்.

காவிய தலைவியில் சௌகார் பாடுவது "என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு, என் வாழ்வினில் ஆயிரம் இன்ப நினைவு....."
எங்கிருந்தோ வந்தாள் ஜெயலலிதா பாடுவது "வந்தவர்கள் வாழ்க, மற்றவர்கள் வருக" என்று நினைக்கிறேன். இரண்டுமே அருமையான பாடல்கள்.

நேரமின்மை காரணமாகதான் தொடர்ந்து நிறைய எழுத முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக என்னால் முடிந்தவரை எழுதுகிறேன். நான் எழுதுவதையும் நீங்கள் எல்லாம் படித்து
பாராட்டுவது மிகவும் சந்தோஷத்தை தருகிறது.
உங்களிடம் ஒரு வேண்டுகோள் ரெங்கசாமி அவர்களே, நம் மெல்லிசை மன்னர் பாடல்களை நீங்கள்
ஆராய்ந்து எழுதும் விதம் மிக மிக அருமையாக உள்ளது. தயவு செய்து நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நீங்களும் எழுதுங்கள். நானும் அவைகளை படிப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறேன்.
Back to top
View user's profile Send private message
Baskar CS



Joined: 19 May 2007
Posts: 203

PostPosted: Fri Dec 04, 2009 9:59 am    Post subject: Reply with quote

i think unnayandri yaar varuvar is right .

unable to chek .

please correct me if i am wrong
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Fri Dec 04, 2009 12:13 pm    Post subject: Reply with quote

You are right Mr. Baskar. Thanks for stepping in with the needed correction.

Mrs. Meenakshi,

My apologies for hastily 'correcting' your right lines. I am a grammar purist and I should have been unconsciously misled by my perception that 'maaligaiyil yaar varuvaar?' is not grammatically correct. But in poetry, deviations are allowed.

Here is a link for the lyrics of the song.
http://mysite.verizon.net/vze2my9a/tamillyrics/tfsa/english/tfsa_eng.htm

I am unable to get any audio link. Perhaps Mr. Raghavendran or Mr. Jeev can help.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Baskar CS



Joined: 19 May 2007
Posts: 203

PostPosted: Fri Dec 04, 2009 1:15 pm    Post subject: Reply with quote

when it comes to film music it is the matter and matter as master says
.
in fact using your word few times i sang but could not feel comfortable and finally i felt that the link had got missed and that do not go well with the rhythmn

hence my observation and i am yet to hear as i have no audio link

but ullmenum maligaiyal unnnai anri yaar iruppar can be aptly used for all our forum members as master is there in them and none other than.[/b]
Back to top
View user's profile Send private message
Baskar CS



Joined: 19 May 2007
Posts: 203

PostPosted: Fri Dec 04, 2009 1:17 pm    Post subject: Reply with quote

please read as matter and meter
Back to top
View user's profile Send private message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Dec 04, 2009 6:03 pm    Post subject: Reply with quote

நன்றி பாஸ்கர்.

ரெங்கசாமி என்னை மன்னியுங்கள். நீங்கள் எழுதியதை படித்து விட்டு, நான் எப்படி மாற்றினேன் என்பதை உங்களுக்கு தெளிவாக எழுதவில்லை. இந்த பாடலில் 'உன்னையன்றி யார் வருவார்' என்றுதான் வரும் என்பது எனக்கு நன்றாக தெரியும். உங்களுக்கு பதில் எழுதும்போது இதை நான் குறிப்பிட மறந்து விட்டேன்.
இது என்னுடைய தவறுதான்.
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group