|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
ragasuda
Joined: 17 May 2007 Posts: 1532
|
Posted: Thu Jan 07, 2010 6:40 pm Post subject: Pudhiya Paravai song in Aasal |
|
|
அசல் - அலசல்
அஜீத்-சரண்-பரத்வாஜ் கூட்டணியில் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸுக்காக இளைய திலகம் பிரபு தயாரிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் அசல் திரைப்படப் பாடல்கள் மிகவும் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளன. அதை ஏமாற்றாத வகையில் இசை குறுந்தகடு விற்பனையில் புதிய சாதனை படைக்கும் வகையில் வேகமாக விற்பனையாகிக் கொண்டிருப்பது வரவேற்கத் தக்கதாகும். 6 பாடல்கள் அதில் இரு விதமாக வரும் ஒரு பாடலை சேர்த்தால் மொத்தம் 7 பாடல்கள்.
குறுந்தகடின் மிகப் பிரபலமாக அமையக்கூடியது
துஷ்யந்தா என்று துவங்கும் பாடல்தான். சுர்முகி மற்றும் குமரன் பாடியுள்ள இப்பாடல் புதுமையாகவும் எளிமையாகவும் இனிமையாகவும் அமைந்துள்ளது. வரிகளும் வார்த்தைகளும் நீண்ட நாட்களுக்குப் பின் இப்படத்தில் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்களை ஈர்க்கின்றன. இப்பாடல் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலுடன் ரீமிக்ஸ் செய்யப் பட்டுள்ளது. ஆனால் எங்கேயும் தற்போதைய ரீமிக்ஸ் கலாச்சாரம் போல் கெடுக்காமல் அழகாக ராகத்துடன் இணைக்கப் பட்டு சஞ்சாரம் செய்து பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலில் வந்து முடிவடையும் போது இப்படிப் பட்ட ரீமிக்ஸ்களை வரவேற்பதில் தவறில்லை எனத் தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால் இந்தப் பாடலை ரீமிக்ஸ் எனசொல்வது கூடத் தவறு. இரு வெவ்வேறு பாடல்களின் இணை இசை என சொல்லலாம்.
மொத்தத்தில் பிரபு-அஜீத்-சரண்-பரத்வாஜ் கூட்டணியில் 2010ன் தொடக்கம் தமிழ்த்திரையுலகிற்கு நம்பிக்கை அளிக்கின்ற படமாக அசல் திகழும் என்பதற்கு இக்குறுந்தகட்டின் பாடல்கள் கட்டியம் கூறுகின்றன.
இக்குறுந்தகட்டினைப் பொறுத்தமட்டில் இசையின் அடிப்படையில் பாடல்களை வரிசைப் படுத்த வேண்டுமானால் கீழ்க்கண்டவாறு அமையலாம் -
முதலிடம் - துஷ்யந்தா
இரண்டாமிடம் - குதிரைக்குத் தெரியும்
மூன்றாமிடம் - எம் தந்தைதான்
நான்காமிடம் - எங்கே எங்கே
ஐந்தாமிடம் - டொட்டொடெய்ங்
ஆறாமிடம் - தல போல வருமா
இது பிரபலமாகக் கூடிய வரிசை என்று அடிப்படையில் வரிசைப்படுத்தவில்லை. ஆனால் என்னுடைய தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் தான் அமைத்துள்ளேன்.
ராகவேந்திரன் _________________ Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com |
|
Back to top |
|
|
Baskar CS
Joined: 19 May 2007 Posts: 203
|
Posted: Thu Jan 07, 2010 7:32 pm Post subject: |
|
|
of course my son bought the CD and heard the song .
the thanks had been given to kavignar and master but Mr Ramamurthy name had not been mentioned |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|