 |
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
Ram Devotee
Joined: 23 Oct 2006 Posts: 1160
|
Posted: Thu Sep 23, 2010 11:46 pm Post subject: Sambho Siva Sambho !!! |
|
|
சம்போ சிவ சம்போ!!!
முன்பொருமுறை கவியரசர் கண்ணதாசன் பற்றிய ஒரு வரிச் சுருக்கமொன்றைப் படித்தேன்: "கவியரசர் காதல் பாடலிலும் தத்துவமிருக்கும்!" என்று. "நினைத்தாலே இனிக்கும்" படத்தில் வரும் "சம்போ சிவ சம்போ" பாடலைக் கேட்கும் போது மேற்கூறிய மெய்க் கருத்தானது உயிர் பெற்று உயிர்மெய்யானதைப் போன்ற உணர்வு!
பாடலின் பொருட்சுவையை முதலில் கூறுவதா, இல்லை அதை கவின் மிகு அருளிய அருட்சுவையைக் கூறுவதா என்பதுதான் கவியரசர் பாடலைப் பற்றி எழுதத் தொடங்கும் ஒருவன் கொள்ளும் பெருங்குழப்பம். இப்பாடல் அதற்கு சற்றும் விதி விலக்கல்ல.
இப்பாடலின் பல்லவியே போதுமானது, அருள்வாக்களிக்கும் கவியரசரின் ஞானத்தை எடுத்துரைக்க:
ஆறு ஜோடி வார்த்தைகள் கொண்ட பல்லவியில், உயிர் சக்தியின் அடிப்படைத் 'தேடல்' (Seeking) குணத்தை, அதன் தத்துவத்தைத் திறம்பட வரைந்து விட்டார். எந்த மனிதனுக்குள்ளும் இயற்கை நிலை (Natural Intelligence) வெளிப்படும் போது எழும் கேள்விகள்: "இவ்வுலகென்பது என்ன? வாழ்வின் அர்த்தம் என்ன? மனிதன் எங்ஙனம்?" இதனினும் ஆழ்கேள்விகளாக ""இறை என்பதென்ன? இறை இருக்கும் ஆலயம என்பது யாது? வாழ்வின் பொருளென்ன?" போன்ற கேள்விகளுக்கு ஆயிரம் பாக்கள் கொண்டும் விளக்க இயலா நிலையிருக்க, ஆறு சிறு வரிகளில் சிலீரென விளக்குகிறார், கணக் கச்சிதமாக!
(சம்போ சிவ சம்போ)
ஜகமே தந்திரம்
சுகமே மந்திரம்
மனிதன் எந்திரம்
(சிவ சம்போ!)
நெஞ்சம் ஆலயம்
நினைவே தேவதை
தினமும் நாடகம்
(சிவ சம்போ!)
நச்! விளக்கம் பூர்த்தி! இதற்கு மேல் ஒரு தத்துவப் பாடல் தேவையில்லை; அனைத்துத் தத்துவங்ககளும் பல்லவியில் உள்ளடக்கப்பட்டு விட்டது!
சரி, "இது ஏதோ காதாகாலட்சேப வரிகளாய் இருக்கிறதே" என்று பார்த்தால் அப்படித் தெரியும். இதையே, இளமை சல்லாபிக்கும் ஒரு இளைஞன் பாடுவதாகப் பார்த்தால் அதற்கும் கணப் பொருத்தமாக இருக்கும். "நினைவே தேவதை" எனும் போது "நினைவுகளில் தோன்றும் கனவழகிகளுடன் சஞ்சாரம் செய்துகொண்டு நித்தமும் நாடகம் நடத்துவாயாக!" என்று அந்த இளைஞனைத் துள்ளலில் இறக்குவதாகவும் உள்ளது. பல்லவி வரிகளைத் தாண்டி பாடலின் அனைத்து வரிகளும் இதற்குப் பொருந்தும்!
தொடர்ந்து சரணம்...
"மனிதா உன் ஜென்மத்தில் என்னாளும் நன்னாளாம்
மறுநாளை எண்ணாதே இன்னாளே பொன்னாளாம்
பல்லாக்கைத் தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு
உன் ஆயுள் 90 என்னாளும் 16"
ஒவ்வொரு வரியும் கருத்துச் செம்மையில் நிறைந்து வழிகிறது. குறிப்பாக, கடைசி வரியைப் பார்க்கும் போது, "என்றும் 16 கொண்ட மார்க்கண்டேயனாக காலனை வென்று இரு!" எனலாம், இல்லை, "90 வயதானாலும் 16 வயது இளமைத் துள்ளலைச் சற்றும் குறைத்து விடாதே" என்றும் காணலாம்!
அடுத்த சரணத்திலும் ஒவ்வொரு வரியிலும் இரு பொருள் கொண்ட கருத்துப் பெருக்கை நன்கு உணரலாம்....
"அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்
தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு
அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே"....
முடிந்து அடுத்த வரியில் தன் முத்திரையை வைக்கிறார்.....
"எப்பாதை போனாலும் இன்பத்தைத் தள்ளாதே!"
மீண்டும் கருத்து விளையாட்டு! "வாழ்வில் என்ன செய்தாலும் இன்பத்தில் மட்டுமே குறியாக இரு" என்பதில், "இன்பத்தை..." எனும் போது ஒரு இளைஞனின் சிற்றின்பத்தயும் ஒரு ஞானியின் பேரின்பத்தையும் குறிக்கிறார் கவியரசர். இறையையும் இளமையையும் அநாயாசமாகக் கையாண்டிருக்கிறார் மனுஷர்!
"கல்லை நீ தின்றாலும் செறிக்கின்ற நாளின்று
காலங்கள் போனாலே தின்னாதே என்பார்கள்"..... என்னே கருத்தாழம்!
கடைசி வரியில் பாடலின் மொத்தக் கருத்தையும் ஒரு சேர வைத்து விடுகிறார்:
"மதுவுண்டு பெண்ணுண்டு சோறுண்டு சுகமுண்டு
மனமுண்டு என்றாலே சொர்க்கத்தில் இடம் உண்டு!"
முடிந்தது! பாடலின் (வாழ்வின்) பொருள் முழுவதையும் இவ்வரியில் அமர்த்தி விடுகிறார் கவியரசர்!
இப்பாடல் யாப்பிலக்கணத்தின் படி "சிலேடை" அல்லது "இரட்டுற மொழிதல்" என்பதற்கு மிகவும் பொருத்தமாக இருக்குமெனத் தோன்றுகிறது. (வெகு வருடங்களாக "சிலேடை"க்கும் "உருவக அணிக்கும்" என்ன வேறுபாடு என்பது எனக்குத் தெரியாமல் இருக்கிறது. நம் களத்தின் தமிழ் வல்லுநர்களிடம் அதை விளக்கும் பொறுப்பை அளிக்கிறேன்)
இதே போல் கவியரசரின் மற்றொரு பாடலைப் பற்றி ஒருமுறை அவரது மகள் விசாலி கண்ணதாசன் நன்கு விளக்கினார். ரத்த திலகம் படத்தில் வரும் "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோல மயில் என் துணையிருப்பு" என்ற பாடல். முதலில் கேட்கும் போது இது "கோப்பையையும்", "மயிலையும்" பற்றிக் கூறுவதாக இருப்பினும், அது "மதுவையும்", "மாதுவையும்" குறிப்பதாக அமைந்திருப்பதை விளக்கினார். "அட ஆமா.." என்று தோன்றியது. இதிலும் "சிலேடை" விளையாட்டை வைத்திருக்கிறார். இப்படி என்ன பாடலிலெல்லாம் இது போன்ற கருத்துக்களை வைத்துள்ளார் என்று நினைத்துப் பார்த்தால் வியப்பாகவும், மலைப்பாகவும் உள்ளது.
சிலேடை என்பது ஏதோ இரண்டு பொருட்களைக் கொண்டு அவற்றின் தன்மைகளைக் குறிக்கும் இலக்கணமாகத் தோன்றுகிறது. ஆனால் "சம்போ சிவ சம்போ" வில் ஏதோ இரண்டு "பொருட்"களைக் குறிப்பிடவில்லை. "இறையை" அடைய இருவகை வழிகளை அழகாகக் கூறியிருக்கிறார். ஏதோ ஒரு "பொருளை"த் தாண்டி "மெய்ப் பொருள்" எனும் தலைப்புக்குச் செல்கிறது. இக்கருத்தை நன்குணர்த்த மற்றுமோர் பாவைப் பார்ப்போம்.
ஆதிசங்கரர் இயற்றி அருளிய "பஞ்சாட்சர ஸ்தோத்திர"த்தின் முதல் பாவின் இறுதி வரி....
"...தஸ்மை 'ந'காராய நம:சிவாய"
என்பதாகும். இங்கு "'ந' காராய" எனும் போது "'ந' என்ற எழுத்தின் வடிவானவன்" என்பது பொருள். ஆனால் அதில் உள்ள உட்பொருள்: சமஸ்கிருதத்தில் 'ந' என்ற எழுத்தானது 'எதிர் பொருளை'க் (Negation) குறிக்கும். ஆக 'ந' காராய எனும் போது "'வடிவற்றவனா'கத் (Formless or Omnipresent) திகழ்பவன் மகேஷ்வரன்" என்ற ஆழ் பொருளைக் குறிக்கிறது. (பஞ்சமய கோஷத்தில் 'ந' விற்கு வேறொரு பொருள் இருப்பதைப் பற்றியும் படித்திருக்கிறேன்... அது இன்னும் சற்றே ஆராய்ச்சிக்கு உரியது)
ஆக, இது போன்ற "மெய்ப் பொருள்" குறித்து நிற்கும் பாக்களை வெறும் சிலேடைகளென்றும் வேறொரு இலக்கணப் பெயர் கொண்டும் உரைப்பது, அது சுமந்து நிற்கும் ஆழ்பொருளைச் சற்றே சிறுமைப் படுத்துவதாகத் தெரிகிறது. "மெய்ச்சிலேடை" அல்லது "ஆழ்பொருட்பா" என்று தனி வகுப்பு தமிழ் மொழியில் உருவக்கப் பட வேண்டும். அப்படியொன்று ஏற்கனவே உள்ளதா? மறுபடியும் தமிழ் வல்லுநர்களின் விளக்கத்தை நாடி நிற்கிறேன். அப்படி ஒன்று உருவாக்கப்பெறின் கவியரசரின் பாடல்கள் நிச்சயமாக அதில் ஒரு அங்கம் வகிக்கும் எனும் எண்ணத்தில் நான் திண்ணம்.
இப்பாடலின் மற்றொரு பின்னணி நாயகன், வேறு யாராக இருக்க முடியும் - வத்ஸன் கூறுவது போல் கவியரசரின் கந்தர்வத் தோழனான மெல்லிசை மன்னர். வகுளாபரண ராகம் தழுவி ரூபக சாபு தாளத்தில் அமைத்ததோடு இல்லாமல் தன் குரலையும் அளித்ததில் புதுமை, இளமை, இனிமை! இப்படத்தில் அனைத்துப் பாடல்களிலும் ஒரு "Mystic feel" இருப்பதை உணரலாம். கதை அப்படி. குறிப்பாக இப்பாடலும், "எங்கேயும் எப்போதும்" பாடலும் என் சொந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றன. (எங்கேயும் எப்போதும் பாடலில் 'நாதனாமக்ரியை'யைக் கிழித்துக் கொண்டு பறக்கும் கிட்டாரும் ட்ரம்பெட்டும் தனியாகக் குறிப்பிடப் படவேண்டியவை!). இவ்விரண்டு பாடல்களும் கற்பனைக்கு ஒரு படி அப்பால் இருப்பவை.
பாடலின் மற்றொரு நாயகன் 'தலைவர்' சூப்பர் ஸ்டார்! கிட்டாரை இசைப்பதிலாகட்டும், புகை பிடிப்பதிலாகட்டும், வெடுக்கென தலையை வெட்டுவதிலாகட்டும் தனக்கென தனி பாணியை அட்டகாசமாக வெளிப்படுத்தி இருப்பார். இவரை "ஆஹா... இவர் சுண்டினால் ரத்தம் வந்துவிடும் போல் இருக்கிறாரே" என்று கூற முடியாது. "அவ்வளவு லட்சணம்!" என்றும் கூற இயலாது. "தலையை படிந்துப் வாரிக் கொண்டிருக்கும் சமர்த்து மனிஷன்" என்றும் கூற இயலாது. பரட்டைத் தலை. "நடனத்தில் அவ்வளவு நளினம்" - சத்தியமாகக் கிடையாது. அப்படி இருந்தும் அவர் எதை வைத்து அனைவரையும் கவர்கிறார் என்பதற்கு பதிலே இல்லை. ஒரு வேளை இயக்குனர் சிகரம் கே.பி சாரிடம் சென்று "இந்த பஸ் கண்டெக்டரிடம் அப்படி என்னத்தக் கண்டீர்?" என்ற கேள்விக்கு அவர் அளிக்கும் பதில் நம் கேள்விக்கும் பதிலாய் அமையுமோ என்னவோ, தெரியவில்லை.
"Mystic feel" என்பதைப் குறிப்பிட்டிருந்தோம். சற்று வருடங்களை ஓட்டுவோம். கல்லூரிப் படிப்பை நான் முடித்திருந்த தருணத்தில் ரகுமான் இசையில் வெளியான "ஆயுத எழுத்து" படத்தில் "யாக்கைத் திரி" என்ற பாடல் எனக்குள் இருந்த இசை 'எல்லை'யைச் சற்று நொறுக்கியது. முழுக்க முழுக்க "டெக்நோ" அதிர்வில் தமிழும் ஸ்வரமும் ஒலித்தது வியப்பாக இருந்தது. இதே நிலைதான் "பார்த்தாலே பரவசம்" படத்தின் "மன்மத மாசம்" பாடலுக்கும். மெரினா கடற்கரைச் சாலையில் நள்ளிரவில் செல்லும் போதும் சரி, டெனிசியைத் தாண்டி வெர்ஜீனியா மாநிலத்தில் அதிகாலைக்கும் முன் 140 கி.மீ வேகத்தில் நுழையும் போதும் சரி, இப்பாடல்களின் அந்த "Mystic feel"ஐ ஒருபடி கூடுதலாக உணர்ந்த அனுபவம் உண்டு. (பயணங்களின் போது இசை கேட்பது முற்றிலும் புதிய அனுபவம் என்பதை அநேகமாக அனைவரும் உணர்ந்திருக்க வேண்டும்) "யுவ்ராஜ்" எனும் இந்தி படத்தில் "மன்மோகினி" என்ற பாடலையும் இப்பட்டியலில் சேர்க்கலாம். இப்பாடல் "டெக்நோ"வின் சற்றே "சாந்த ஸ்வரூபமான" "ட்ரான்ஸ்" இசை வகையாகும். இது போன்ற இசைச் சுவை மிகுந்த பாடல்களை இசைப் புயலிடமிருந்து நிறைய எதிர்பார்த்துக் காத்து நின்று ஏங்கித் தவிக்கும் கூட்டத்தில் நானும் ஒருவன்.
சிறிய இடைச் செருகல். இசைச் சம்பந்தப்பட்டதுதான். மேற்கூறிய இந்த "ட்ரான்ஸ்" பாடல் "பீம்ப்ளாஸ்" ராகத்தில் அமைந்தது. இதைக் "கர்நாடக தேவகாந்தாரி" என்றும் கூறுவர். சிலர் "இல்லை இல்லை.... இரண்டும் வேறு" என்பர். இதுபோல் பல ராகங்களுக்குக் "குழாயடிச் சண்டை" காலம் காலமாக நிகழ்ந்து கொண்டு வருகிறது. கச்சேரியில் சிலர் தெரிந்தோ தெரியாமலோ அருகாமை ராகங்களைத் தொட்டுவிடுவதும் உண்டு. உதாரணமாக "சாரமதி"க்கும் "மார்க்க ஹிந்தோளத்திற்கும்" இந்த நிலைதான். ஒருமுறை கச்சேரியில் ரகசியமாக என்னிடம் ஒருவர் "இங்க பாருங்கோ... இந்த இடத்தில் ராக முத்திரை மாறிடுத்து!" என்றார். நான் மனத்திற்குள் "ஓ அப்படியாண்ணா.... நேக்கு ஒண்ணும் தெரியலையே!" என்று எனக்குள்ளேயே கூறிக் கொண்டு, என் அன்றைய அறியாமயை அவரிமிருந்து அழகாக மறைத்துக் கொண்டு , கச்சேரியைத் தொடர்ந்து ரசித்தேன். (இது போன்ற ஒட்டி நிற்கும் ராகங்களைக் கொண்டு பலர் "குடுமி பிடிச்" சண்டை போட்டுக் கொள்வது வேடிக்கையான நிகழ்வு) இசையின், குறிப்பாக இந்திய இசையின் ஆழத்திற்கு எல்லையே இல்லை என்ற உண்மையை உணரலாம். தோண்டத் தோண்ட ஆழம் அதிகமாகிக் கொண்டே போவதையும் உணரலாம்.
"பூவிழி வாசலிலே" படத்தின் "பாட்டு எங்கே" பாடல் கட்டாயமாக நம் பட்டியலில் உண்டு. பின் வரும் கார்ட்ஸ் ஆகட்டும், இடையிசையில் வரும் மகளிர் ஹார்மனியாகட்டும் அனைத்தும் அட்டகாசம்! _________________ Ramkumar
Last edited by Ram on Fri Sep 24, 2010 6:18 am; edited 2 times in total |
|
Back to top |
|
 |
Ram Devotee
Joined: 23 Oct 2006 Posts: 1160
|
Posted: Thu Sep 23, 2010 11:47 pm Post subject: |
|
|
திரையிசைத் திலகம் "மாமா" அவர்களின் இசையில் சில பாடல்கள் மெய்சிலிர்க்கும் வகையில் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, "தொழிலாளி" படத்தின் "ஆண்டவன் உலகத்தின் முதலாளி" பாடலில் தான் என்னே அமர்ச்சை, அமைதி! மக்கள் திலகத்தின் துடிப்புப் பாணியை உடைத்த ஒரு ஏகாந்தப் பாடல் எனலாம். கேட்ட மாத்திரத்தில் மனத்தை உருக்கும் மாமாவின் மற்றுமொரு அற்புதம் "சம்பூர்ண ராமாயணம்" படத்தின் "இன்று போய் நாளை வாராய்" என்ற பாடல்... சி.எஸ்.ஜெயராமன் குரலும், பாடல் வரிகளின் உருக்கமும், மாமாவின் இசையும் மனத்தைப் பிசைந்துவிடும்!
மெல்லிசை மன்னரின் இப்படப் பாடல்களைப்போல், பல பாடல்கள் இந்த அதீத ரம்மிய உணர்வை அளிக்கும். எடுத்துக் காட்டாக, வலஜ்ஜியில் வலம் வரும் "பொங்கும் கடலோசை" எந்நேரம் கேட்பினும் தனி உலகத்திற்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும். "மன்னாதி மன்னன்" படத்தின் "கனிய கனிய மழலை பேசும்" பாடல் ஒரே க்ஷணத்தில் மனதை லேசாக்கிவிடும்! எண்ணிலடங்கா பட்டியலிது.
தலைப்பு பாடலுக்கு மீண்டும் வருவோம்.... அத்வைதம் முதல் அகில சுகம் வரை அனைத்தையும் கவியரசர் அள்ளிப் பருகி அவைகளில் உறித் திளைத்திருந்திருக்கிறார் என்பதற்கு இப்பாடல் ஒன்று மட்டும் போதுமானது. இப்பாடல் கேட்டவுடன் "உச்ச இன்ப" (Ecstacy) நிலையில் ஒருவன் இரண்டு இடங்களுக்குப் போகலாம்.... (நியூயார்க் கேபரேக்குச் செல்ல கவியரசர் வேறொரு பாடலில் ஏற்கனவே வழிகாட்டிவிட்டதால்....)
ஒன்று அட்லாண்டிக் சிட்டியின் 'ஆடை-களை' அரங்கம் - மற்றொன்று
திருச்சிற்றம்பலன் வீற்றிருக்கும் தில்லை அரங்கம்!!! _________________ Ramkumar |
|
Back to top |
|
 |
tvvraghavan The Ardent

Joined: 15 Dec 2006 Posts: 175
|
Posted: Mon Sep 27, 2010 1:44 am Post subject: |
|
|
Dear Ram
Welcome back after the hiatus. Your posting certainly does kindle one's thoughts about the inner sense of the song. It is indeed an amazing effort to go to the extra mile or think beyond the normal process of just "listening" the songs and your posting is commendable and is completely in line with the above. It is yet another song where both Kavignar and MSV has proved to be a unique daring combo, as you rightly mention (Gandharva Thozhan).
The crux of your point is clearly proven by MSV in the interlude. Though the song itself gives a mystic feel, MSV gives the mortal feeling with the usage of electric guitar and drums in the first part of the interlude while the flute and the percussion arrangement in the second of the lude gives the immortal feeling to the listener thus proving what KD had to impart through his lyrics...
More importantly, it was really fortunate that our master sang this song as he could bring the exact emotion that he would want to as a composer.
Perhaps, this is one (or the only) song where he may not have used his harmonium during the recording (or at least the sound of his harmonium is not audible), which otherwise can be clearly heard in all the other songs.
Expecting more such posts...
MSV Rules
Venkat |
|
Back to top |
|
 |
S.Balaji Maniac
Joined: 10 Jan 2007 Posts: 772
|
Posted: Mon Sep 27, 2010 12:51 pm Post subject: |
|
|
Grand comeback Hey Ram though I am not entitled to this comment I have been a major defaulter .
Dont judge Kavignar by this song only He has also written Idhu malai nerathu mayakkam ! where he is totally philosophical.
Also remember Partha pasumaram..paduthukitta nedumaram !
wherein he has pumped loads of thathuvams.
Coming to the song of the day.... Jaya TV Hariyudan Naan recently had this song when KB - MSV where present and KB was showering accolades on MSV recollecting that the title was supported by Idhu Oru innisai mazai !
I was one of those thrilled fans when the songs were aired first. An unforgettable moment in 1979 when song after song from NI used to be played in AIR and we were breaking our heads to pick the best one !
Each one had their likes . Some friends chose Namma ooru singari , some Engeyum eppodhum ( incidentally this was also sung in Jaya tv ).
I will have another post to write about the song .
 |
|
Back to top |
|
 |
saradhaa_sn Addict

Joined: 17 Dec 2006 Posts: 268 Location: Chennai
|
Posted: Sun Oct 03, 2010 5:33 pm Post subject: |
|
|
டியர் ராம்,
நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு அருமையான பாடலோடு வந்திருக்கிறீர்கள். 'ஜெகமே தந்திரம் சுகமே மந்திரம்' பாடலை அலசி ஆராய்ந்து விட்டீர்கள். மிக அருமை.
கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளை திருப்பி திருப்பிப் படிக்க புதுப்புது அர்த்தங்கள் வந்துகொண்டேயிருக்கும். அது அவருடைய தனிச்சிறப்பு. இப்பாடலில் இவ்வளவு வாழ்க்கைத்தத்துவங்கள் அடங்கியுள்ளன என்பதே நீங்கள் இப்போது சொன்னபிறகுதான் ரொம்ப பேருக்கு தெரியவரும்.
வாழ்த்துக்கள். _________________ Saradha Prakash |
|
Back to top |
|
 |
Ram Devotee
Joined: 23 Oct 2006 Posts: 1160
|
Posted: Sun Oct 03, 2010 10:32 pm Post subject: |
|
|
வெங்கி - உன் பதிலுக்கு நன்றி. நீ கூறியது போல் மெல்லிசை மன்னரின் குரலே இப்பாட்டிற்கு மிகப் பொருத்தமானதாக அமைந்துள்ளது. இப்பாடல் பற்றிய இத்தொகுப்பை நீ ரசித்ததில் உன் கந்தர்வத் தோழனான எனக்கு மிக்க மகிழ்ச்சி!
பலாஜி சார்.... தங்களின் பதிலுக்கும் நன்றி. கவியரசரின் பல பாடல்களில் இது போன்ற ஆழ்கருத்துக்கள் இருக்கும் என்பதை நான் இக்கட்டுரையை எழுதும் போதுதான் உணர்ந்தேன்! தாங்கள் குறிப்பிட்ட கவியரசரின் மற்ற சில பாடல்களைப் பற்றித் தாங்களே எழுதிவிடுங்களேன்!
சாரதாக்கா.... கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பின் நம் களத்திற்கு வந்து இந்த பாடலுக்குக் குறிப்பாக பதில் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி! எனக்கு அதில் பெருமையும் கூட. தங்களின் எழுத்துப் பணி மீண்டும் தொடர இது ஒரு சிறந்த தருணமாக இருக்குமென நம்புகிறேன்!
தங்களின் பதிலுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி! _________________ Ramkumar |
|
Back to top |
|
 |
Sai Saravanan Philiac
Joined: 10 Jun 2008 Posts: 631 Location: Hyderabad
|
Posted: Mon Oct 18, 2010 1:23 am Post subject: |
|
|
Dear Mr.Ram,
What a song to launch and write about! This new philosophical dimension of the song is not so easily felt by all. Adding to the mystic touch is the master's voice. There was an air of mystery shrouding this song when we used to hear this during the release of the film NI. Somehow, I could manage to see this film then as a schoolboy, and was so thrilled by MM's singing for Rajinikanth. This was and has been my favourite song of this movie. But, now the added new dimension by you will make me listen more carefully!
Thanks for this treatise!
Sai Saravanan |
|
Back to top |
|
 |
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|