"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

"Naan" Songs of the Non-Naan Man.

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Sun Sep 16, 2012 10:37 pm    Post subject: "Naan" Songs of the Non-Naan Man. Reply with quote

இன்றைய அதிசய உலகத்தில் ஓரிரு படங்களுக்கு இசையமைத்தாலே மார் தட்டிக்கொள்ளும் மனிதர்களுக்கு நடுவே, பல நூறு படங்களுக்கும், காலத்தால் அழியாத பல்லாயிரம் பாடல்களுக்கும் அற்புதமாக இசையமைத்து, என்றென்றும் இசை உலகின் முடி சூடா மன்னனாக விளங்கும் MSV அவர்களை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. வேறெவரும் அருகினில் கூட வர முடியாத அளவிற்கு பல்வேறு அற்புதங்களையும், சாதனைகளையும் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே செய்திட்ட இந்த அறிய மகானின் அமைதியும், இன்னும் தான் செய்ய வேண்டியது நிறையவே உள்ளது என்று நினைக்கிற மனப்பான்மையும் நம்மை வியக்க வைக்கிறது.

தன்னை எவராவது புகழ ஆரம்பித்தாலே உடனே அவரை கட் பண்ணி, தான் எதையும் பெரிதாக சாதித்து விடவில்லை, தான் பெற்ற வெற்றி எல்லாமே மற்றவர்களின் கூட்டு முயற்சியினால்தான் என்று சொல்லும் அவரது பெருந்தன்மையை என்னென்று சொல்வது. ஒரு பாடலின் வெற்றிக்கு 90 சதவிகிதம் அவருடைய அருமையான மெட்டும், பின்னணி இசையும்தான் காரணம் (சில பாடல்களுக்கு 100 சதவிகிதம்) என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை என்றாலும் கூட அதை ஒத்துக்கொள்ளாமல் "matterக்கு meter என்றும், பாடலாசிரியர், பாடியவர், வாசித்த கலைஞர்கள், டைரக்டர், நடிகர், மற்ற டெக்னிஷியன்கள், இவர்கள் அனைவரும்தான் பாடலின் வெற்றிக்குக் காரணம்" என்று மிகப் பெருந்தன்மையுடன் கூறும் பண்பு இவரைத் தவிர வேறேவரிடம் பார்க்கமுடியும்? பாடல் வரிகளிலேயே மெட்டு புதைந்து கிடக்கிறது என்று, தான் புரிந்த மகத்துவத்தை கவிஞருக்குத் தாரை வார்க்கவும் இவரன்றி வேறொருவராலும் முடியாது.

எந்த electronic gadgets-ம், எந்தவொரு technological advancement-ம் இல்லாமல், recording sudio-வில் போதிய இடம் கூட இல்லாமல் எத்தனையோ அறிய சாதனைகளையும் அற்புதங்களையும் இசையமைப்பில் நிகழ்த்திக்காட்டி நம்மை எல்லாம் இன்னமும் பிரமிப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் இந்த திரை இசை சக்கரவர்த்தி என்றுமே "நான்" என்று எதற்கும் கிரெடிட் எடுத்துக்கொண்டதில்லை. சொல்லப்போனால் அவரது உரையாடல்களைக் கூர்ந்து கவனித்தொமேன்றால், "நான்" என்ற வார்த்தையை அவர் உபயோகிப்பதே மிகவும் அறிதாக இருக்கும். அப்படியே உபயோகித்தாலும் அது "நான் என்ன பெரிசா செஞ்சிட்டேன்" போன்ற வார்த்தைகளாகத்தான் இருக்கும்.

இப்படிப்பட்ட அடக்கத்தின் மறுபெயரான மாமேதையோ, பல "நான்" என்று தொடங்கும் சூப்பர் ஹிட் பாடல்களை நமக்குக் கொடுத்திருக்கிறார். அவற்றில் சிலவற்றை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்:

01. நான் அன்றி யார் வருவார் (மாலையிட்ட மங்கை)
02. நான் பேச நினைப்பதெல்லாம் (பாலும் பழமும்)
03. நான் என்ன சொல்லிவிட்டேன் (பலே பாண்டியா)
04. நான் உன்னைச் சேர்ந்த செல்வம் (கலைக் கோவில்)
05. நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை (படகோட்டி)
06. நான் ஆணை இட்டால் அது நடந்து விட்டால் (எங்க வீட்டுப் பிள்ளை)
07. நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் (எங்க வீட்டுப் பிள்ளை)
08. நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா (நான் ஆணை இட்டால் )
09. நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு (குழந்தையும் தெய்வமும்)
10. நான் காற்று வாங்கப் போனேன் (கலங்கரை விளக்கம்)
11. நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் (அன்பே வா)
12. நான் போட்டால் தெரியும் போடு (எங்க பாப்பா)
13. நான் யார் நான் யார் நீ யார் (குடியிருந்த கோவில்)
14. நான் சொல்லித் தர என்ன உள்ளதோ (சங்கே முழங்கு)
15. நான் உன்னை அழைக்கவில்லை (எங்கிருந்தோ வந்தாள்)
16. நான் செத்துப் பொழச்சவன்டா (காவல்காரன்)
17. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை (புதிய பூமி)
18. நான் என்றால் அது அவளும் நானும் (சூரியகாந்தி)
19. நான் பொல்லாதவன் (பொல்லாதவன்)
20. நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று (நேற்று இன்று நாளை)
21. நான் பார்த்தா பைத்தியக்காரன் (நீதிக்கு தலை வணங்கு)

மேற்கண்ட அனைத்துப் பாடல்களுமே சூப்பர், சூப்பர் ஹிட். ஆனால் "நான் உயர உயரப் போகிறேன்", "நான் சொல்லித் தர என்ன உள்ளதோ" போன்ற பாடல்கள் அவ்வளவாகப் பிரபலம் அடையாதது வியப்புக்குரியது.

இந்த தன்னலமற்ற, இசையையும் உழைப்பையும் தவிர வேறொன்றும் அறியாத மகானைப் பற்றி மீண்டும், மீண்டும் வியக்கும் தருணம், 1977ல் திரு. சோ அவர்கள் 'துக்ளக்' இதழ் ஒன்றில் எழுதிய வரிகள்தான் நினைவுக்கு வருகிறது - "தமிழ் சினிமா உலகில் அனைவராலும் நேசிக்கப்படுபவரும், எதிரியே இல்லாத ஒருவரும் உண்டென்றால் அது மெல்லிசை மன்னர் M S விஸ்வநாதன் அவர்கள்தான். அதே மாதிரி MGR, சிவாஜி இருவருமே எவ்வளவு நேரம் அல்லது நாட்கள் கூட கால்ஷீட்டுக்காக காத்திருக்கத் தயாராக இருக்கக்கூடிய இருவர் உண்டென்றால் அது நாகேஷ் மற்றும் MSV ஆகியோர்தான்".

நீடூடி வாழ்க MSV, அவரது மெய் மறக்கச்செய்யும் இசை, மற்றும் புகழ்.

வாய்ப்புக்கு நன்றி,

வேணு சௌந்தர்
Back to top
View user's profile Send private message Send e-mail
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Tue Nov 13, 2012 8:41 pm    Post subject: Reply with quote

Good selection Mr.Venu.
Few more songs:
1.Naan alavodu rasippavan,
2.Naan oru medai padagan - Naalai Namadhey,
3.Naan oru kadhanayagi - Moondru Mudichu,
4.Naan kanda kanavinil nee.
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Tue Nov 13, 2012 8:54 pm    Post subject: Reply with quote

A good write up.
"நான்" என்ற வார்த்தையை அவர் உபயோகிப்பதே மிகவும் அறிதாக இருக்கும். அப்படியே உபயோகித்தாலும் அது "நான் என்ன பெரிசா செஞ்சிட்டேன்" போன்ற வார்த்தைகளாகத்தான் இருக்கும்.
endru arumaya sollirukeenga...

"Naan" endra ego illatha manithar is our Master. He usually tells in all the interviews that "Ego iruntha Ugo- nu solli virattidanum".

Two more starting with "Naan"
Naan thannandhani kaattu raja
Naan paadikkonde iruppen.

Few more songs starting with "Ennai":
Ennai eduthu
Ennai theriyuma
Ennai yaarendru enni
Ennai vittal
Ennai marandhadhey nenjame
Ennai thottu chendrana.
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
Venugopalan Soundararajan



Joined: 12 Dec 2006
Posts: 532
Location: Mumbai

PostPosted: Wed Nov 21, 2012 11:53 pm    Post subject: Reply with quote

Dear Mr Mahesh,

Sorry for my late response. But I am happy that at least one person has responded to my posting. Thanks for your additions to the "Naan" list.

Regards,
Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group