"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

The Factors that inspires MSV - 6

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV
View previous topic :: View next topic  
Author Message
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Tue Mar 05, 2013 3:38 pm    Post subject: The Factors that inspires MSV - 6 Reply with quote

'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் '

என்ற பாடலை பற்றி பல பதிவுகள் இந்த தளத்தில் வந்துள்ளன. இந்த பாடலை பற்றி குறிப்புகளை எடுத்து அதை 'நாதமெனும் கோவிலிலே' நிகழ்ச்சியில் வழங்க திட்டமிருந்தும் நேரமின்மை மற்றும் சில காரணங்களால் சொல்ல முடியாமல் போய்விட்டது.

நண்பர் பார்த்தவி அவர்கள் அந்த நிகழ்ச்சி பற்றி நம் இணைய தளத்தில் பதிவு செய்த போது தன்னுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதும் நினவு வருகிறது. எனவே இந்த பதிவை திரு பார்தாவி அவர்களுக்கே சமர்ப்பிக்கிறேன்.

MSV இன் TRAIN பாடல்கள் ஒவ்வொன்றும் வித விதமாக இருப்பதை எல்லோரும் அறிவோம். TRAIN செல்லும் EFFECT க்கு EMERY PAPER கொண்டு தேய்க்கும் விதமும் அது முதல் முதலாக போர்ட்டர் கந்தன்(1954) படத்தில் 'வருந்தாதே மனமே' பாடலில் உபயோகித்தும் நண்பர்கள் சிலர் அறிந்து இருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்திலேய அந்த தகவலை கூறினேன்.

MSV அவர்கள் பொதுவாக ஒரு ராகத்தை மனதில் கொண்டு இசை அமைப்பதில்லை. அவ்வாறு ராகம் அடிப்படை கொண்டு அவர் இசை அமைத்தால் அதன் நோக்கம் தெளிவாக இருக்கும். சில நடன பாடல்கள் அல்லது கச்சேரி செய்வது போல இருக்கும் பாடலில் செய்வது இருக்கட்டும்.

'கௌரி மனோஹரியை கண்டேன்' என்ற வார்த்தை ஆரம்பிக்கும் பாடலுக்கு 'கௌரி மனோஹரி ராகத்திலும்

'மோகன புன்னகை ஏனோ" என்ற வரி கொண்டு ஆரம்பிக்கும் பாடலுக்கு மோகன ராகத்திலும்

'சரஸ்வதி லக்ஷ்மி பார்வதி' என்ற முப்பெரும் தேவியரில் 'சரஸ்வதி' பற்றி வரும் வார்த்தைகளுக்கு சரஸ்வதி ராகத்திலும் அவர் இசை அமைக்கும் நோக்கம் அந்த வார்த்தைகள் தான் ஊன்று கோலாக இருந்தது என்று துணியலாம்.

ஆனால் 'காஞ்சி பட்டுடுத்தி கஸ்துரி போட்டு வைத்து' என்ற பாடலுக்கு ஏன் 'கல்யாண வசந்தம்' ராகத்தில் பாடல் அமைத்தார்?
நாயகன் அந்த பெண்ணை திருமண கோலத்தில் காண்கிறான் என்ற கருத்தில் அதை அமைத்தார் என்று எண்ணுகிறேன். இது தொடர்பாக அந்த DIRECTOR இந்த TUNE இல்லாமல் வேறு மெல்லிசை வடிவாக இசை அமைக்க கோரினார். ஆனால் MSV அவர்கள் இந்த TUNE, POPULAR ஆகும் என்று உறுதியாக நம்பியதும் அதை DIRECTOR ஏற்றுக்கொண்டார். MSV கூறியது போலவே அந்த பாடல் மிக பிரபலமானது. இந்த விபரத்தை கவிஞர் முத்துலிங்கம் ஒரு முறை கூறினார்.


சரி.. இந்த பாடலில் அவர் செய்த மாயா ஜாலங்கள் என்ன என்ன!!!

இந்த பாடலிலும் அவர் கல்யாணி ராகத்தை அடிப்படையாக கொண்டு இசை அமைத்தார். ஆனாலும் இந்த பாடலை அவர் அமைத்த விதம் மற்ற கல்யாணி ரக பாடலான 'முகத்தில் முகம் பார்க்கலாம்', 'இசை கேட்டல் புவி அசைந்தாடும்' 'வெட்கமாய் இருக்கதடி' 'வருவான் வடிவேலன்' போன்ற பாடல்களுன் ஒப்பிட்டு பார்த்தால் இந்த பாடல் 'கல்யாணி' ராகமா என்ற சந்தேகம் வருவது திண்ணம். அந்த அளவிற்கு மாறுபட்ட வடிவம் கொண்டது இந்த பாடலின் சிறப்பு.

இந்த பாடலில் அவர் 'கல்யாணி' ராகத்தை அடிப்படையாக கொண்டது ஏன்? நாயகி தன்னை நாயகன் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் ஏற்பட்டது என்று எண்ணுகிறேன். அதுவும் ஒரு கனவுப்பாடல் அவ்வாறு கதாநாயகன் கனவு காண்கிறான்.

சரி. வழக்கமான TRAIN EFFECTக்கு உப்பு காகிதம் தேய்ப்பதை தவிர வேறு விஷயம் என்ன?

குறிப்பாக TRAIN ஒரு பாலத்தை கடப்பது போல உணர்வினை தருவதற்கு DRUMS உபயோகிப்பதை சொல்லலாம். அந்த இசை வரும் போது காட்சியிலும் TRAIN பாலத்தை கடப்பது போலவே படமாக்கி இருப்பது இது ஒரு கூட்டு முயற்சி என்பதை காட்டுகிறது.

அதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒரு TRAIN சில சமயம் தன TRACK மாறி செல்லும். குறிப்பாக ஒரு ஸ்டேஷன் அருகில் வரும் போது TRACK மாறி சென்று பிறகு மீண்டும் தன வழக்கமான TRACK கிற்கு வந்து செல்வது எல்லோரும் அறிந்ததே.

அவ்வாறு செல்வது போன்ற ஒரு உணர்வினை இந்த பாடலில் அவர் தருவது மிக சிறப்பு.

'அந்நாளிலே நீ கண்ட கனவு காயாகி இப்போது கனியானதோ' என்ற வரி வந்தவுடன் வரும் ஒரு GUITAR STRUMMING யை கூர்ந்து கவனியுங்கள்.
அது கல்யாணி ராகத்திலிருந்து வேறுபட்ட ஸ்வரங்கள் கொண்டது. ஒரு ராகம் விட்டு விட்டு வேறு ஸ்வரம் போனால் TRACK மாறுகிறது என்று தானே அர்த்தம்.

மீண்டும் 'என் நெஞ்சிலே நீ தந்த உறவு கனவாகி இப்போது நனவானதோ' என்று வரும் போது வரும் GUITAR STRUMMING யையும் கூர்ந்து கவனியுங்கள். இப்போது மீண்டும் கல்யாணி ராகத்தின் ஸ்வரங்களில் வரும். எனவே TRAIN இப்போது மீண்டும் பழைய TRACKக்கு வந்து விட்டது. இது போன்ற உணர்வை அவர் கொண்டு வந்தது தான் என்னை பொறுத்த வரையில் அதி அற்புதமான கற்பனை.

மேலும் பாடலின் முதல் சரணத்திற்கு முன் வரும் இடை இசையிலேயே வரும் வயலின் இசை கல்யாணி ராகத்திலிருந்து மாறுபட்டதுதான். அந்த வயலின் இசையே TRAIN போகும் EFFECT போலவே இருப்பதும் சிறப்பு. அதை அடுத்து வரும் புல்லாங்குழல் இசை மீண்டும் கல்யாணி ராகத்தில் அமைவதும் மேலே குறிப்பிட்ட விஷயத்தை பாடலில் மட்டும் அல்லாது இடை இசையிலும் இந்த உணர்வுடன் அமைத்திருப்பது ஒரு COMPLETENESS இருப்பதை உணர்த்துகிறது.

முடிவாக 'அவள் தன கலயானத்தை பற்றி பாடுகிறாள்' என்ற உணர்விற்காக கல்யாணி ராகத்தை தேர்ந்தெடுத்தாலும் அங்கும் சில இடத்தில ராகம் மாற்றுவது, அந்த நாயகன் கண்ட கனவுப்படி கதை அமையாது என்பதை முன் கூட்டியே உணர்த்துவது போல இருக்கிறது.

Youtube link

http://youtu.be/w02bYPyi2rs

நான் இன்னும் இந்த படம் பார்க்கவில்ல. எனவே கதை என்ன என்று தெரியாது. அவ்வாறு அமைந்தால் இது தன அவர் இசையின் ULTIMATE EXPRESSION என்று சொல்வேன்.

நண்பர்கள் இதை உறுதிப்படுத்த வேண்டுகிறேன்


அன்புடன் .

N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Wed Mar 06, 2013 9:33 am    Post subject: Reply with quote

அன்புள்ள முரளி,

என் 'குறையை' நினைவு கூர்ந்து அதை நிறை செய்ததற்கு நன்றி. இப்போது எனக்குக் 'குறையொன்றுமில்லை!'

என்னை வியப்பூட்டிய ஓரிரு பாடல்களைக் குறிப்பிட விழைகிறேன்.

'கால்கள் நின்றது நின்றதுதான்' (பூஜைக்கு வந்த மலர்) பாடலில் 'காற்றடித்தால் இங்கு ஓசை வரும்' என்ற வர்களுக்கு முன்பு 'டட் டட்' என்ற தாளத்தின் மூலம் அந்த ஓசையைக் காட்டியிருப்பார். அடுத்த சரணத்தில் இதே இடத்தில் இந்தத் தாளம் இடம் பெற வில்லை என்பதைக் கவனித்தால் காற்றடித்தால் வரும் ஓசையைக் காட்டத்தான் இந்தத் தாளத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் என்று உறுதி செய்து கொள்ளலாம்.

http://sangeethouse.com/jukebox.php?songid=25265

இதே படத்தில் வந்த 'வெண்பளிங்கு மேடை கட்டி' பாடல் நம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பாடப் பட்டது. பளிங்கின்மென்மையும் பளபளப்பும் இப்பாடல் முழுவதிலும் வியாபித்திருப்பதாக எனக்குத் தோன்றும். இந்தப் பாடல் பட்டியலில் இருப்பதைப் பார்த்ததும் இது பற்றிய என் உணர்வுகளை மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அனுப்பியிருந்தேன். அதைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

வெண்பளிங்கு மேடை கட்டி - இந்தப்பாடலின் துவக்கத்தில் பளிங்கு என்ற வார்த்தை வருவதால், இதன் இசையை மிக மென்மையாக அமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர் - அழுத்தம் கொடுத்தால் பளிங்கு உடைந்து விடுமோ என்ற உணர்வுடன் பாடல் முழுவதுமே மிக மிக மென்மையாக அமைந்திருக்கிறது. சீர்காழியின் குரலிலேயே அவரது வேறு பாடல்களில் இல்லாத ஒரு அலாதிக் குழைவு இருப்பதைக் கவனிக்கலாம். பல்லவி, சரணம், வாத்தியங்கள் எல்லாமே பளிங்கின் மிருதுத் தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. வழக்கமாக மெல்லிசை மன்னரின் பாடல்களில் ஒரு இடத்திலாவது உச்ச ஸ்தாயி (high pitch) இருக்கும். இந்தப் பாடலில் அது இல்லை. எல்லாம் பளிங்கு செய்யும் வேலைதான்! பல்லவியின் முடிவில் வரும் வயலின் இசை வழுக்கிக்கொண்டு போவது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துவது ஒரு அற்புதமான விஷயம்.

http://sangeethouse.com/jukebox.php?songid=25267

இவ்வளவு ஏன்? நான் அறியாப் பருவத்தில் இருந்தபோதே 'இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்' (போலிஸ்காரன் மகள்) பாடலின் பல்லவியைத் தொடர்ந்து வரும் இடையிசையை கேட்டபோது வானொலிப்பெட்டியிலிருந்து தென்றல் வெளியே வந்து என்னைத் தீண்டியதை உணர்ந்திருக்கிறேன். (தென்றல் 'ஓடி' வருவதைக் கூடத் துல்லியமாகப் 'படம் பிடித்திருக்கிறார்' பாருங்கள்! - அதாவது கேளுங்கள் அல்லது கேட்டுக்கொண்டே பாருங்கள்!)

http://sangeethouse.com/jukebox.php?songid=59623

'மெல்ல வரும் காற்று' (கலாட்டா கல்யாணம்) பாடலிலும் பல்லவிக்கு முன் வரும் முகப்பிசையில் மெல்ல வரும் காற்று!

http://sangeethouse.com/jukebox.php?songid=57934

தென்றலுக்கும் காற்றுக்கும் உள்ள வேறுபாட்டைக் கூட இவ்விரு பாடல்களையும் ஒப்பிட்டு உணரலாம்

வாத்தியங்களைக் கூட வார்த்தைகள் பேச வைக்கும் கலையை அறிந்தவர் மெல்லிசை மன்னர் (மட்டும்தான்)
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Wed Mar 06, 2013 10:15 am    Post subject: Reply with quote

Dear Mr. Parthavi,
Thanks for your reply and very happy to note that your have quoted many songs. I shall have to hear now with your information in mind.

Regarding the song 'Ven palingu' I gave that information to Srishar but unfortunately he has not spoken about that.


N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group