|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
msvramki
Joined: 18 Dec 2006 Posts: 418 Location: Chennai
|
Posted: Fri Mar 01, 2013 7:10 am Post subject: A HUMBLE REQUEST !!!!!!! |
|
|
அன்பான நண்பர்களே,
முரளி வெகு ஜோராக ஆரம்பித்த இந்தப் பதிப்பு பல நண்பர்களின் உற்சாகமான பதில் பதிப்புகளில் தொடர்ந்து, கடைசியில் ஒரு போர்க்களம் போல் ஆகிவிட்டதைப் பார்க்கையில் மனம் மிகவும் வருந்துகிறது.
நம் மாஸ்டர் மெல்லிசை மன்னரின் இசை பல பரிமாணம் கொண்டது என்பது நாம் அனைவரும் வெகு நன்றாக அறிந்ததே. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் ஆராய்ந்து தளத்தில் பதிக்க, நாம் அதைப் படிக்கும்போது நமக்கு ஏற்படுவது பிரமிப்பும், ஆனந்ந்தமும்.
அதுவும் முரளி ஆராய்ந்து தரும் விளக்கங்கள் வியப்பூட்டுபவை.
அத்தனை நண்பர்களும் எதிர்பார்த்துப் படித்து மகிழுபவை.
அவ்வாறே
சிலர் பாடல்களில் பொதிந்துள்ள பா(3)வங்களை விளக்கும பாங்கு, ஆ ர் வி எஸ் மணி போன்றோர், பாடல் வரிகளை விட்டு விட்டு, முன், இடை, பின், கடை இசைகளை மட்டும் ரசித்துச் சொல்லும் அழகு,
இசை நுணுக்கம் அறியாத என் போன்றோர், கண்மூடி, பாடல், இசையில் ஊறி, அதனால் வரும் மகிழ்வை எழுத்தில் சொல்வது,
பல உலக இசைகளின் பரிமாணங்களைப் பரவசித்த வத்சன் போன்றோரின் ஆணித்தனமான கருத்துக்கள் பொதிந்த அழகு ததும்பும் ஆங்கில அலசல்,
வைத்தி போன்றோரின், ஒன் அண்ட் ஒன்லி எம் எஸ் வி என அனுபவப் பதிப்புக்கள்,
புரொபசரின் படம், பாடல், இசை, என பல தலைப்பில் தரும் தொடர்கள்.......
இவை எல்லாம் எம் எஸ் வி டைம்ஸ்.காம் ற்கு மட்டுமே உள்ள, வேறு எந்த இசை இணைய தளத்திற்கும் இல்லாத சிறப்புக்கள்.
இவற்றை நினைத்துப் பெருமைப் படுவோம்.
அவரவர் பாணியில், பார்வையில் நம் மாஸ்டரின் இசையை அலச விட்டு படித்து மகிழ்ந்திருப்போம்.
போர்க் கொடியை இறக்கி, மகிழ்வுடன் ஒன்றுபட்டு, தொடர்ந்து இசைப்பரிமாணங்களை அலசுவோம்.
எழுத்தால் எம் எஸ் வி யின் புகழ் புவியெங்கும் பரப்புவோம். கூடி இசை கேட்டு மகிழ்ந்திருப்போம்.
இது என் தாழ்மையான வேண்டுகோள்.
வைத்தி, முரளி, எல்லா நண்பர்களே, PLEASE.
அன்புடன்
ராம்கி. _________________ isaiyin innoru peyar thaan emmessvee. |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|