"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

The Factors that inspires MSV - 1

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV
View previous topic :: View next topic  
Author Message
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Thu Feb 21, 2013 1:37 pm    Post subject: The Factors that inspires MSV - 1 Reply with quote

MSV ஒரு பாடலுக்கு இசை அமைக்கும் பொழுது கூறும் வார்த்தை

"படத்தின் இயக்குனர் பாடலின் காட்சியை விவரிக்கும் பொழுது தன் மனக்கண்ணில் தோன்றும் காட்சியில் ஒரு இசை இருக்கிறது என்றும் அந்த இசையின் உந்துதலின் அடிப்படையில் தனக்கு இசை பிறக்கின்றது" என்றும் கூறுவார். மேலும் அந்த காட்சிக்கு ஏற்ப பாடல் வரிகள் பிறக்கும் பொழுது அந்த வார்த்தையிலும் இசை உள்ளது என்றும் கூறுவார்.

இதை விளக்கும் விதமாக சில பாடல்களை காண்போம்.

ஒரு நீர் நிலையில் தாமரை மலர்கள் மிதப்பதை முதலில் மனக்கண் கொண்டு பாருங்கள். அந்த மலர் நீரின் மீது மிதப்பதில் ஒரு லயம் (TEMPO) இருப்பதை உணரலாம். அந்த லயத்திற்கு ஏற்ப வரும் பாடலின் வேகம் அந்த மலர்கள் எந்த லயத்தில் அசையுமோ அதே லயத்தில் இருப்பதை உணர முடியும்.

பாடல்
'தண்ணீரிலே தாமரை பூ தள்ளாடுதே அலைகளிலே"

http://youtu.be/jWCYHmsxPZ4


இதற்கு நேர் மாறாக உள்ள ஒரு காட்சியை எடுத்துக்கொள்வோம்.

ஒரு பெண் வேகமாக நடை போடுகிறாள். அவளை தொடரும் ஆண் அவளை பார்த்து பாடும் பாடலின் வேகம் எவ்வாறு இருக்க வேண்டும்?

பாடல் "என்ன வேகம் நில்லு பாமா"

http://youtu.be/eUVMhblrw-o



வேறு ஒரு காட்சியை பார்க்கலாம்.

ஒரு பெண்ணின் அழகை ஒரு ஆண் மகன் தேருக்கு ஒப்பிட்டு பாடுகிறான். தேரின் அசையும் வேகத்தையும் பாடலின் வேகத்தையும் ஒப்பிட்டு பாருங்கள்.
பாடல் "தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்'

http://youtu.be/v0XetBorpMg


அடுத்து மறுபடியும் நேர்மாறான ஒரு காட்சியை எடுத்துக்கொள்வோம்.
ஒரு கிராமத்து இளைஞன் வழி தவறி சென்னை நகருக்கு வந்து விடுகிறான். அவன் வாழும் கிராமத்து சூழ் நிலைக்கு மாறாக நகரம் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருப்பதை காண்கிறான்.
பாடலின் முன்னிசையே அந்த காட்சியின் தன்மையை உணர்த்தும்.
பாடல்
"MADRAS நல்ல MADRAS"

http://youtu.be/JVuZrI56frQ

மேலும் மேற்கத்திய நாகரீகத்தில் நகரம் மூழ்கி நுனி நாக்கில் மக்கள் ஆங்கிலம் பேசுவது எல்லாம் அவனுக்கு ஏற்படுத்தும் அவல நிலையை பாடும் பொழுது MSV உபயோகிக்கும் மேற்கத்திய இசை கருவிகளான TRUMPET, GUITAR, BANGOS, மற்றும் DRUMS எல்லாம் அந்த காட்சியின் தன்மையை துல்லியமாக உணர்த்துகிறது.

மேலும் பாடலின் நடுவே சரணத்தில் வரும் வார்த்தைகள் 'கன்னுக்குட்டி' 'மாடு' என்று வரும் பொழுது பாரம்பரிய இசை கருவிகளான புல்லாங்குழல் மற்றும் தபேலா நம்மை கிராமிய சூழலுக்கு அழைத்து செல்கிறது.

முடிவாக அந்த இளைஞன் நகரை சுற்றிப்பார்க்க எந்த இடத்தில ஆரம்பித்தானோ அங்கேயே மீண்டும் வருவது போன்ற உணர்வினை ஏற்படுத்தும் விதமாக, எந்த முன்னிசையில் பாடலை ஆரம்பித்தாரோ அதே இசையின் மூலம் பாடலை முடிப்பது பிரமாதம்.


N Y Murali


Last edited by N Y MURALI on Fri Feb 22, 2013 11:38 am; edited 1 time in total
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Thu Feb 21, 2013 9:14 pm    Post subject: LYRICS - THE TRIGGER FOR MSV Reply with quote

Dear All,

That was an excellent observation by Murali. MSV's melody effervescence is predominantly due to lyrics. His tunes for Kavi Emperor Kannadasan (when the world did not even bother to call this Legend this way, I thought it would be a befitting title for him from us) or Kavignar Vaali have been so infectious, that anyone could easily get infected or addicted to them for life. Some of us are in this state of permanent intoxication. That the flow of tunes coming out of the melody generator (read MSV's harmonium) is something one has to see it to believe it. To us it may appear to be a huge task but MSV would handle it with such ease that the listener would only crave for more for life...

All the songs that Murali has illustrated are only tip of the iceberg for MSV's melodies could easily be compared to an avalanche of unadulterated pleasure. Why do you all think that we are so addicted to this genius??? It's the sheer listening joy that we derive not once but several times over & again, not only that...each time we listen we get newer ideas to ponder as to how this genius could do this???

MSV MOMENTS.....MOMENTS OF LIFE, WORTH LIVING & LEAVING!!!

CHEERS
MSV IS MUSIC!!!

VAIDYMSV

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group