"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Monkey on my head
Goto page 1, 2, 3, 4, 5, 6  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV
View previous topic :: View next topic  
Author Message
N Y MURALI

Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Thu Mar 05, 2015 2:14 pm    Post subject: Monkey on my head Reply with quote

" MSV பாடல்களில் 'ஆதார ஸ்ருதி'" - Part 1

சில வருடங்களுக்கு முன், குறிப்பாக சொல்லுவதென்றால் msvtimes 4வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக வந்த திருமதி வாணி ஜெயராம் அவர்கள் MSV இசை அமைத்து அவர் பாடிய சில பாடல்களை ஒரு பாமாலையாய் பாடினார். ஒரு பாடலின் வரிகள் அவர் நினைவில் நிற்காமல் இருக்க ஆயினும் அதனை ஹம்மிங் மூலம் பாடினார். அந்த பாடலை படுவதற்கு முன் அவர் கூறிய ஒரு விளக்கம் 'MSV இசை அமைத்த இந்த பாடலின் ஆதார ஸ்ருதி கண்டுபிடிப்பது மிக கடினம்.' . அந்த பாடல் 1993ல் வந்த 'பத்தினி பெண்' என்ற படத்தில் வரும் 'உலகெங்கும் நம் வீடு என்ற பாடல்'.

வாணி அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியின் youtube link

https://www.youtube.com/watch?v=aqiasB-vKuw

சில பாடல்களின் ஆதார ஸ்ருதி கண்டுபிடிப்பது கடினம் தான். அதிலும் MSVன் பாடல்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.

ஒரு உதாரணம் சொல்லுகிறேன். 'நம்ம ஊரு சிங்காரி' என்ற பாடலை நான் பல வருடங்களாக 'ச க 1 ம2 ப நி1 ச' என்று 'சுத்த தன்யாசி' SCALE என்ற முறையிலேயே harmonum/keyboardல் வாசித்து கொண்டு இருந்தேன். ஆயினும் சில வருடன் முன்பு நண்பர் வத்சன் மூலம் அது 'ச க1 ம2 த1 நி1 ச' என்ற 'ஹிந்தோளம்' என்று அறிந்தேன். அதன் பின் பாடலை ஒலி தகட்டில் கேட்டு அந்த ஸ்வர ஸ்தானங்களை அறிந்து அதன் ஆதார ஸ்ருதி அறிந்த பொழுது அது 'ஹிந்தோளம்' என்று புரிந்தது.

Amateur ஆகிய நமக்கெல்லாம் இம்மாதிரி ஒரு சாதாரண பாடல்களுக்கு ஆதார ஸ்ருதி கண்டுபிடிப்பதும் சிரமம் ஆகிவிடும். எனவே இது இயற்கையே.

Amateurஆகிய நமக்கெல்லாம் இது பொருட்டல்ல. ஆயினும் seasoned ஜாம்பவான்களே சில சமயம் குழம்பியிருக்கிறார்கள். ஒரு நிகழ்ச்சியை உதாரணம் சொல்லுகிறேன்.

சில வருடங்களுக்கு முன் msvtimes 'வார்த்தைகள் சொல்லும் வாத்தியங்கள்' என்ற ஒரு அற்புதமான நிகழ்ச்சியை நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சி MSV அவர்கள் இசை அமைத்த Piano பாடல்களை தேர்வு செய்து அந்த பாடல்களை குரலுக்கு பதில் வாத்தியங்களை கொண்டு வாசிக்க செய்தார்கள். அதற்காகவே பிரத்யோகமாக ஒரு பியானோ இசை கருவியையும் கொண்டு வந்தார்கள். அந்த நிகழ்ச்சிக்கு ஒரு முக்கிய விருந்தினராக திரு இளையராஜா அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அவர் நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது வந்தார்கள். எனவே அப்போது நடந்து கொண்டிருந்த பாடல் முடிந்தவுடன் MSV அவர்கள் அருகில இருந்தவரின் காதில் ஏதோ கிசு கிசுக்க அடுத்த பாடல் திரு இளையராஜா அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடலான 'மாலை பொழுதின் மயக்கத்திலே' இசைக்கப்பட்டது.

பாவம் அப்போது வாசித்த இசை கலைஞர்கள். அந்த பாடலை அவர்கள் தேர்வு செய்யவும் இல்லை. எனவே அதனை பயிற்சி செய்யவும் இல்லை. ஆயினும் MSVன் வேண்டுகோளை ஏற்று அந்த பாடல் இசைக்கபட்டது.

அதனால் தான் குழப்பம். பொதுவாக இந்த பாடல் 'ச க1 ம2 த1 நி1 ச' என்ற 'ஹிந்தோளம்' ராகத்திற்கு மிக நெருக்க செயல் கொண்ட 'சந்த்ரகௌன்ஸ்' என்ற ராகத்தினை அடிப்படையாக கொண்டது என்று கூறுவார்கள். 'சந்த்ரகௌன்ஸ்' ராகத்தில் 'ஹிந்தோளம்' ராகம் போல 'ச க1 ம2 த1 நி1 ச' என்ற ஸ்வரத்துடன் 'நி2' என்ற ககாலி நிஷாதம் சேர்ந்து சில இடங்களில் 'நி1' என்ற ஸ்வரமும், சில இடங்களில் 'நி2' என்ற ஸ்வரமும் வரும்.

ஆயினும் பாடலை உன்னிப்பாக கவனித்தால் அதில் மேற்கூறிய ஸ்வரங்களை தவிர 'ப' என்ற பஞ்சமும் 'ரி2' என்ற சதுர்ஷ்ட ரிஷபமும் வரும். எனவே இதனை 'சந்த்ரகௌன்ஸ்' ராகம்தான் என்றும் சொல்லமுடியுமா ? ஆயினும் நாம்மவர் சொல்லும் 'சால்ஜாப்பு' மெல்லிசையில் அம்மாதிரி அந்நிய ஸ்வரங்களை சேர்த்துகொள்ளலாம் என்பது. சரி இந்த பதிவிற்கு அந்த விஷயம் பிரச்சனை இதுவல்ல.

பிரச்சனை எதுவென்றால் 'மாலை பொழுதின்' என்ற ஆரம்ப வரிகள் 'சாச சச சா' என்ற ஸ்வர கோர்வையில் அமைக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக வாசிக்க நேர்ந்ததால் அவர்கள் அதனை 'பாப பப பா' என்று வாசித்து விட்டார்கள். இது ஏன் நேந்தது ? ஏனெனில் அந்த பாடலின் ஆதார ஸ்ருதியை தவறாக எண்ணியதால் ஏற்பட்டது.

கீழே அமர்திருந்த திரு இளையராஜா அவர்கள் 'F minor' என்று கூறிகொன்டிருந்தார். அவர் அருகிலோ திரு T K ராமமூர்த்தி அவர்கள் அமர்ந்திருந்தார்கள். பாடலோ ஏற்கனவே தொடங்கியபடி போய்கொண்டிருந்தது.

பாடல் முடிந்தவுடன் திரு இளையராஜா அவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டார்கள். அப்போது திரு ராமமூர்த்தி அவர்களும் எதிர்பாராத விதமாக மேடையேறினார்கள். 'மைக் ப்ளீஸ்' என்று வாங்கி இதை பற்றி பேச ஆரம்பித்தார்கள். இந்த நிகழ்சியின் முதலிலேயே திரு ராமமூர்த்தி அவர்கள் MSV ஒரு பாடலுக்கு இசை அமைக்கும் விதம் பற்றி ஒரு கருத்தை கூறியிருந்தார்கள். அதனை மீண்டும் இப்போது குறிப்பிட விரும்பி பேச ஆரம்பித்தார்கள். அவர் பேசியதை அப்படியே நினைவில் இல்லை. ஆயினும் அவர் கூறிய கருத்தின் தன்மை மாறது கூறுகிறேன். அவர் கூறியதாவது 'நான் ஏற்கனவே நம்ம தம்பி விசு எப்படி மியூசிக் பண்ணுவாருன்னு சொன்னேன் இல்லையா? அதாவது 'ச ரி க ம ப த நி' என்ற 7 ஸ்வரத்தையும் தம்பி விசு 'ஷட்ஜமமாகவே' வைத்து மியூசிக் பண்ணுவார். இப்போ இங்கே இவர் (வாசித்தவரை காட்டி) வாசித்தது 'பாப பப பா' என்று. இதுவும் அதே பாட்டு மாதிரிதானே இருந்தது. ஆனா நாங்க ரெகார்டிங் ல வாசிச்சது 'சாச சச சா' என்று. நாங்க வாசிச்சது 'F minor'. ஆனா இப்ப நீங்க கேட்டது 'C minor'.

(Thanks to Vijaykrishnan who located the same in youtube.
https://www.youtube.com/watch?v=dF_VmSmGNy8)

Now I felt a monkey on my head. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கருத்தின் அடிப்படையில் என் தலையில் ஏறிய குரங்கை உங்கள் தலையிலும் ஏற்றுகிறேன்.

நம் எல்லோருக்கும் பொதுவாக தெரிந்தது 'ச ரி க ம ப த நி' என்பது 7 ஸ்வரங்கள். அதில் 'ச' என்பது ஆதார ஸ்வரம் என்பது. ஆனால் திரு ராமமூர்த்தி அவர்கள் கூறியது MSV அவர்கள் அந்த 7 ஸ்வரங்களையுமே ஆதார ஸ்ருதியாக வைத்து இசை அமைக்கிறார் என்பது. இது எவ்வாறு சாத்தியம்?.

மேலும் இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. அது என்னவென்றால் இசை அமைக்கும் முறையில் MSVக்கும் மற்ற இசை அமைப்பாளர்களுக்கும் அடிப்படையில் மிகுந்த வேறுபாடு உள்ளது என்பது. அதுவும் மேற்கூறிய சொற்கள் MSVஉடன், இசை உருவாகும் பொழுதே அவருடன் கூட இருந்த பங்காற்றிய திரு ராமமூர்த்தி அவர்கள் சொன்ன பிறகு இதற்க்கு அப்பீலேகிடையாது.

இதில் மேலும் ஒரு விஷயத்தையும் திரு ராமமூர்த்தி அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார். அது, இந்த பாடலின் ஆதார ஸ்ருதி 'F Minor' என்பது.

சரி. இத்தருணத்தில் ஸ்ருதி என்பது என்ன என்று சிறிது தெரிந்து கொண்டால் மேலும் படிக்க எதுவாக இருக்கும். பொதுவாக ஒரு இசையில் வரும் ஸ்வர கோர்வைகளில் 'ச' என்ற 'சட்ஜம்' என்பது ஆதார ஸ்ருதி. மேலும் 'ப' என்ற 'பஞ்சமம்' சேர்ந்து 'சட்ச-பஞ்சம பாவம்' அல்லது 'பஞ்சம ஸ்ருதி' என்று இலக்கணம் உண்டு. மேலும் 'ம1' என்ற 'சுத்த மத்யமம்' சேர்ந்து 'சட்ச -மத்யம பாவம்' அல்லது 'மத்யம ஸ்ருதி' என்று சொல்வார்கள். ராகங்களின் அமைப்பினை பற்றி கூறும் பொழுது இதன் அடிப்படியில் அது பஞ்சம ஸ்ருதியா அல்லது மத்யம ஸ்ருதியா என்று கூறுவார்கள். இப்போது திரு ராமமூர்த்தி அவர்கள் முன் கூறிய வார்த்தைகளை மீண்டும் நினைவில் கொள்வோம். அதாவது 'நாங்க வாசிச்சது 'F minor'. ஆனா இப்ப இவர் வசிச்சது 'C minor'. இங்கு 'F minor' என்ற chordsல் வருவது 'ம1 த1 ச' என்ற மூன்று ஸ்வரங்களின் கூட்டு கலவை. நான் மேலே சொன்ன 'ஹிந்தோளம்' ராகத்தின் ஸ்வரங்களான 'ச க1 ம1 த1 நி1 ச' என்ற கோர்வையில் 'ம1 த1 ச' என்ற 'F minor'இன் ஸ்வரங்களும் வருவதை கவனிக்கவும். 'ம1 த1 ச' என்ற கூட்டு கலவையே இதன் ஆதார ஸ்ருதி. இதுவே ஒரு கர்னாடக இசை கோர்வையாக இருந்தால் அங்கு 'F minor' என்ற Chords எல்லாம் கிடையாது. அதற்கு பதில் 'ம1 ச' என்றே தம்புராவில் ஆதார ஸ்ருதி ஒலி எழுப்பப்படும். எனவே இந்த பாடலின் ஆதார ஸ்ருதி 'மத்யம ஸ்ருதி'

ஆனால் அன்று நிகழ்ச்சியில் வாசித்தவர்கள் வாசித்தது 'C minor' என்று திரு ராமமூர்த்தி கூறியதை நினைவு படுத்துகிறேன். 'C minor'ல் வரும் ஸ்வரங்கள் 'ச க1 ப' என்பது. ச-ப என்பது பஞ்சம ஸ்ருதி என்பதை ஏற்கனவே பார்த்தோம். எனவே 'C minor'என்பது பஞ்சம ஸ்ருதி.

எனவே ஒரு 'மத்யம ஸ்ருதி'ல் அமைந்த பாடலை 'பஞ்சம ஸ்ருதியில்' பாடியது குழப்பம். ஆயினும் திரு ராமமூர்த்தி கூறியது போல MSV அவர்கள் 7 ஸ்வரங்களையும் 'சட்ஜமமாகவே' வைத்து இசை அமைப்பர் என்பது. ஆயினும் இப்பாடலை கேட்பவர்களைவிட வாசிப்பவர்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்கள் 'F minor'' என்ற அடிப்படியிலேயே ஸ்வர குறிப்புகளை எழுதி வைத்து கொண்டிருப்பார்கள். ஆனால் திடீரென்று அதனை 'C minor' ல் வைத்து பாடினால் rhythm guitar வாசிப்பவருக்கு எங்கெங்கு என்னென்ன chords வாசிக்க வேண்டும் என்று புரியாது. ஆயினும் அன்று வாசித்தவர்கள் நல்ல திறமைசாலிகள். எனவே ஸ்வர குறிப்பு இல்லாமலேயே பாடலின் போக்குக்கு ஏற்ப சமாளித்து வாசித்து விட்டார்கள். 'ஸ்வர குறிப்புகளை எழுதி வைத்துதான் வாசிப்பேன்' என்பவர்கள் சொதப்பியிருப்பார்கள்.

மேலும் வரும்

Last edited by N Y MURALI on Fri Mar 13, 2015 12:35 pm; edited 6 times in total
Back to top
View user's profile Send private message Send e-mail
parthavi

Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Thu Mar 05, 2015 8:50 pm    Post subject: Reply with quote

Murali,

Another insightful post which people like ma can only enjoy from a distance. I can only watch the monkey on your head. I couldn't hold it in my hands when you pass it on.

I have heard TKR mentioning something about nenjam marappathilai notes. He said that the notes can be looked at two ways. I think he mentioned it in the same program.

Can you please elaborate on this, if you could locate TKR's observations?
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
VaidyMSV & Sriram Lax

Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Thu Mar 05, 2015 10:25 pm    Post subject: Reply with quote

https://www.youtube.com/watch?v=dF_VmSmGNy8 TKR's speech -a part
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
N Y MURALI

Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Fri Mar 06, 2015 9:42 am    Post subject: Reply with quote

parthavi wrote:
Murali,

Another insightful post which people like ma can only enjoy from a distance. I can only watch the monkey on your head. I couldn't hold it in my hands when you pass it on.

I have heard TKR mentioning something about nenjam marappathilai notes. He said that the notes can be looked at two ways. I think he mentioned it in the same program.

Can you please elaborate on this, if you could locate TKR's observations?

Dear Parthavi. The youtube link that VK provided does not have the speech about Nenjam Marappadhilai. I do not recollect any. Sorry.
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI

Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Fri Mar 06, 2015 1:02 pm    Post subject: Reply with quote

'Monkey on my head' பதிவின் தொடர்ச்சி.
"MSV பாடல்களில் 'ஆதார ஸ்ருதி" - Part 2

மேற்கண்ட 'மாலை பொழுதின் மயக்கத்திலே' பாடலின் இசை முறையில் ஏதும் குழப்பம் இல்லை. அந்த பாடலை, அன்று பாடிய முறையில் தான் குழப்பம் ஏற்பட்டது. அதுவும் திரு ராமமூர்த்தி அவர்களால் தெளிவாக விவரிக்கப்பட்டது.

ஆனால் ஒரு பாடல் அது உருவாகி 50 ஆண்டுகள் கடந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனதில் பல முறை கேட்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் அந்த பாடல் என்ன ராகம் என்பதில் இன்று வரை குழப்பம். ஏனெனில் அது உருவாக்கப்பட்ட ஸ்ருதி. அது ராக இலக்கண முறையின் மரபுக்கு அப்பாற்ப்பட்டது. அது எந்த பாடல் தெரியுமா?
1965ல் வந்த 'கர்ணன்' திரைபடத்தில் வரும் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' என்ற பாடல்தான்.

இந்த பாடல் அமைந்த ராகம் 'சக்ரவாகம்' என்று கர்நாடக சங்கீதம் பற்றி பேசுபவர்கள் கூறுவார்கள். அவர்கள் கூற்றில் சில நியாயங்கள் உள்ளன. இந்த பாடலை கேட்டால் 'சக்ரவாகம்' ராகத்தின் சாயல் தெளிவாக தெரியும்.

ஆயினும் 'ஹிந்துஸ்தானி' ராகம் பற்றி பேசுவோர் கூறுவது இது 'ஆகிர் பைரவ' என்ற ராகம். அதற்கு அவர்கள் கூறும் அடிப்படை காரணம் அது அந்த ராகத்தின் சாயலை காண்பிப்பதோடு மட்டும் அல்லாமல் 'இந்த படம் வடஇந்திய சூழலுக்கு ஏற்ப இசை அமைக்கப்பட்டது' என்பதுதான். அதிலும் நியாயம் இருக்கிறது.

எனவே இந்த பாடல் அமைந்த ராகம் சக்ரவாகமா அல்லது ஆகிர் பைரவியா? இம்மாதிரி 2 குரங்குகள் என் தலை மீது ஆட்டம் ஆடுகின்றன.

இதை பற்றி என் தாழ்மையான கருத்து. நான் முறையாக கர்னாடக சங்கீதமோ அல்லது ஹிந்துஸ்தானி சங்கீதமோ பயின்றவனல்ல. ஆயினும் பொதுவாக இசை மேல் உள்ள ஈர்ப்பால் கேட்டும், படித்தும் தெரிந்து கொள்பவன். எனவே நான் அறிந்தவரையில் 'சக்ரவாகம்' ராகத்தின் ஸ்வரங்கள் 'ச ரி1 க2 ம1 ப த2 நி1 ச' என்பது. அது ஒரு பஞ்சம ஸ்ருதி ராகம். எனவே அந்த ராகத்தின் இலக்கணப்படி சட்ச-பஞ்சம பாவம் இந்த பாடலில் தெரிய வேண்டும். ஆனால் பாடலை கேட்கும் பொழுது இது 'சட்ச-மத்யம' பாவத்தை சொல்கிறது. அதாவது இது பஞ்சம ஸ்ருதியில் அமைக்கபடாமல் மத்யம ஸ்ருதியில் அமைக்கப்பட்டது. எனவே 'சக்ரவாகம்' ராகத்தின் அடிப்படை ராக இலக்கணத்தை தாண்டுகிறது.

ஆயினும் ஹிந்துஸ்தானி ராகமான 'ஆகிர் பைரவ்' ராக இலக்கணத்தின் படி அது ஒரு பஞ்சம ஸ்ருதி ராகமா அல்லது மத்யம ஸ்ருதி ராகமா என்று எனக்கு தெரியவில்லை.

மேற்கூறிய என் கருத்துகளில் தவறு இருந்தால் தெரிவியுங்கள். திருத்தி கொள்கிறேன்.

அடிப்படையில் நம்மை இவ்வளவு நுணுக்கமான விஷயத்தை ஆராயசொல்லும் இந்த பாடலை உருவாக்கியவர்கள் ஏதாவது சொன்னார்களா? எனக்கு தெரிந்த வரையில் MSV ஒன்றும் கூறவில்லை. ஆனால் திரு ராமமூர்த்தி அவர்கள் இந்த பாடல் பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறியது 'இந்த பாட்டு 'சக்ரவாகம்' ராகம்னு சொல்லலாம். ஆனா இதே 'சக்ரவாகம்' ராகத்தை மத்யம ஸ்ருதிபேதம் பண்ணினா அது 'சரசாங்கி' ராகத்தை கொடுக்கும்.

இவ்வாறு திரு ராமமூர்த்தி சொன்னதன் புண்ணியம். என் தலையில் ஏற்கனவே இருந்த 2 குரங்குகளுடன் 3வது ஒன்றும் சேர்ந்து கொண்டது.

இம்மாதிரி ஒரு விஷயம் இந்த படத்தில் உள்ள மற்றொரு பாடலுக்கும் இருப்பது குரங்குகளின் சேட்டையை அதிகப்படுத்தியது. ஆயினும் அதில் ஒரு தெளிவு இருக்கிறது. அது என்னவென்றால் இதை MSV அவர்கள் conscious ஆக செய்கிறார் என்பது. ஆனால் அது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. சரி இம்மாதிரி விஷயம் அமைந்த மற்றொரு பாடல் என்ன? அது 'மகாராஜன் உலகை ஆளலாம்' என்ற பாடல்தான். இந்த பாடலில், 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடல் போல் ராக விஷயத்தில் கருத்து வேறுபாடு இல்லை. எல்லோரும் ஒப்புகொள்வது அது 'கரஹரப்ரியா' ராகம் என்பது. அது 'கரஹரப்ரியா' ராகம் என்பது சரிதான் என்றாலும் அதிலும் இந்த ஸ்ருதி விவகாரத்தில் ஒரு catch உள்ளது. எனக்கு தெரிந்த வரையில் 'கரஹரப்ரியா' ராகம் என்பது ஒரு பஞ்சம ஸ்ருதி ராகம். அதாவது இந்த ராகத்தில் 'சட்ச-பஞ்சம' பாவம் பேச வேண்டும். ஆனால் இந்த பாடலிலோ 'சட்ச-மத்யம' பாவம் தான் கேட்கிறது. மேலும் பாடலின் வார்த்தைகளுக்கு வரும் ஸ்வர கோர்வைகள் மத்யம ஸ்வரதிலும் அதன் பரிவார ஸ்வரங்களான ஷதுச்ர தைவதம் மற்றும் கைசகி நிஷாதம் போன்ற மத்யம தொடர்புடைய ஸ்வரங்களிலேயே நிற்பது தெரியும். மேலும் 'ப' என்ற பஞ்சம ஸ்வரம் தொட்டு வந்தாலும் பஞ்சமத்தில் நிற்காதது அது பஞ்சம பாவம் பெறவில்லை என்பதனை தெளிவாக உணர்த்தும். மேலும் 'க1' என்ற சுத்த காந்தாரத்தை தொடும் பொழுதும் அதன் பரிவார ஸ்வரங்களான 'ப' மற்றும் 'நி1' என்ற ஸ்வரங்களுடன் கலந்து 'க1-ப-நி1' என்ற த்வனியில் தான் ஒலிக்குமே தவிர 'ச-க1-ப' என்று ஒலிக்காது.

மேலும் இதனை தெளிவாக்கும் விதமாக MSV அவர்களே அமைத்த மற்றொரு 'கரஹரப்ரியா' பாடலான 'மாதவி பொன் மயிலாள்' பாடலை எடுத்து கொள்வோம். அது சட்ச-பஞ்சம பாவத்துடன் Agmark கரஹரப்ரியா ராகத்தில் அமைந்தது. குறிப்பாக பல்லவி முடியும் இடமான 'மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்' என்று முடியும் பொழுது நன்றாக பஞ்சம பாவத்தை உணர முடியும்.

இவ்விஷயமாக இந்த பாடலை பற்றி திரு ராமமூர்த்தி அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. ஆயினும் அவர் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடலை பற்றி கூறும் பொழுது 'சக்ரவாகம்' ராகத்தின் மத்யம ஸ்வர ஸ்ருதி பேதம் 'சரசாங்கி' ராகத்தினை தரும் என்று கூறியதை இங்கே மீண்டும் நினவு கொள்வோம். அதுபோல இதே 'கரஹரப்ரியா' ராகத்தின் மத்யம ஸ்வரத்தை ஸ்ருதி பேதம் செய்தால் என்ன ராகம் கிடைக்கும்? அது 'ஹரிகாம்போஜி' என்ற ராகத்தினை தரும். ஆயினும் இப்பாடல் 'ஹரிகாம்போஜி' என்று சொன்னால் சிரிப்பார்கள். அது 'கரஹரப்ரியா' ராகமே. ஆயினும் அதன் இலக்கணப்படி உள்ள பஞ்சம ஸ்ருதி கொண்டில்லாமல் மத்யம ஸ்ருதி கொண்டு அமைக்கப்பட்டது.

இப்போது மீண்டும் திரு ராமமூர்த்தி அவர்கள் MSVஅவர்கள் இசை அமைக்கும் முறை பற்றி சொன்னதை நினவு படுத்துகிறேன். 'நம்ம தம்பி விசு 'ச ரி க ம ப த நி' என்கிற 7 ஸ்வரங்களையுமே 'சட்ஜமமா' வச்சு மியூசிக் பண்ணுவாரு'.

7 ஸ்வரங்களுமே சட்சமம் என்றால் அப்பொழுது எது 'பஞ்சமம்' எது 'மத்யமம்'. அப்படியென்றால் அங்கு 'பஞ்சம ஸ்ருதி' மற்றும் 'மத்யம ஸ்ருதி' என்ற வேறுபாடு எப்படி ஏற்படும்? MSVக்கு, அவர் தேவைகேற்றாற்படி 7 ஸ்வரங்களுமே 'சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், தைவதம் மற்றும் நிஷாதம்'

His is a relative music.

நன்றி

Last edited by N Y MURALI on Fri Mar 13, 2015 12:56 pm; edited 1 time in total
Back to top
View user's profile Send private message Send e-mail
S.SAMPAT

Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Sat Mar 07, 2015 2:44 am    Post subject: Reply with quote

மத்ய ஸ்ருதி எற்பட்டதற்கான காரணம், சில ராகங்கள் ' நிஷாதான்த்ய ராகங்களாகவோ ( நாதநாமக்ரியா, புன்னகவராளி,செஞ்சுருட்டி),தைவதாந்த்ய ராகங்களாகவோ (குறிஞ்சி), பஞ்சமாந்த்ய ராகமாகவோ ( நவ்ரோஜ்) இருக்கும் பட்சத்தில், இலகுவாக பாடுவதற்காகவே ஆகும்.

ஒரு கேள்வி வரலாம். கிருஷ்ணா நீ பேகனெ பாரோ ஏன் மத்யம ஸ்ருதியில் பாடுகிறோம். யமுனா கல்யாணியின் ஆரோகணம் அவரோகணம் "ஸ" வில் தானே ஆரம்பிக்கிறது. அதற்கு காரணம், அப்பாடல் "நிஷாதத்தில்" தான் ஆரம்பிக்கிறது. கீழ் "த" வரை செல்லுகிறது. மேலும் யமுனா கல்யாணியில் அமைந்த தியாகராஜ க்ருதிகள் "விதிசக்ரதுலகு, ஹரிதாஸுலு" ஆகியவை சம ஸ்ருதியில் தான் பாடப்படுகின்றன.

ஆதார ஸ்ருதி என்பது ஒவ்வொருவருடைய குரல்வாகு பொருத்து மாறுபடும். எந்த ஸ்ருதியில் கிட்டத்தட்ட இரண்டு அல்லது இரண்டரை octave சுலபமாகப்பாட முடியுமோ, அது ஒருவருடைய ஆதார ஸ்ருதியாகும். உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலைப்பொருத்தவரை அந்த பாடல் "D" (இரண்டு கட்டை) யில் ஆரம்பிக்கிறது. இதை ஸா வாக வைத்துக்கொண்டால், நமக்கு கிடைக்கக்கூடியது சக்ரவாகம் Scale. இந்த பாடலின் ரிஷபத்தின் கமகம் ஆஹிர் பைரவியைத்தான் suggest செய்கிறது. சரசாங்கி மத்ய ஸ்ருதியில் பாடுவதற்கு ஏற்புடைய ராகம் இல்லை. D யின் மத்யமம் Ab. Ab ஆதார ஸ்ருதியாக (சம ஸ்ருதி) சீர்காழிக்கு வைத்துக்கொண்டால் M D ராமனாதன் குரல் போல் ஆகிவிடும். சரி, D பின் வரும் Ab ஆதார ஸ்ருதியாக வைத்துக்கொண்டால் என்று கேட்கலாம். அப்படி என்றால் மேல் ஸா பிடிப்பது கடினமாகிவிடும். ஒரு பேச்சுக்கு வேண்டுமென்றால், D, Ab சேர்த்து பிடித்து சரசாங்கி வருகிறது என்று சொல்லாமேயொழிய, அது முறையானது ஆகாது.

நான் ஏற்கனவே, கூறியிருக்கிறேன், சினிமாப்பாடல்களுக்கு ஆதார ஸ்ருதியை சொல்வது கடினம் என்று. அப்படிச்சொல்வதற்கு பாடுகிறவர் ஆதார ஸ்ருதி எது என்பதை முடிவு செய்யவேண்டும்.
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI

Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Sat Mar 07, 2015 10:41 am    Post subject: Reply with quote

S.SAMPAT wrote:

மேற்கண்ட விளக்கங்களுக்கு மிக்க நன்றி.

இதில் கூறியது போல 'சரசாங்கி' ராகத்திற்கு ச-ம1 என்ற மத்யம ஸ்ருதி ஏற்புடையது அல்ல என்பது புரிகிறது. ஆயினும் அதன் மற்றொரு காரணம் அந்த ராகத்தின் ஸ்வரங்கள் 'ச ரி2 க2 ம1 ப த1 நி2 ச' என்பதுதானே. சட்ச-மத்யம பாவத்தில் வருவதற்கு அந்த ராகத்தில் 'த2' என்ற தைவதம் இல்லை. ஆயினும் இந்த ராகத்தில் 'சட்ச-பஞ்சம' பாவம் கொண்டதன் முக்கிய காரணம் 'ச-ப' என்ற சுரங்களின் பரிவார சுரமான (harmonic note) 'க2' என்ற அந்தர காந்தராம் வந்ததால் என்று நான் நினைப்பது சரியா?

ஆயினும் க2 வராத 'ச ரி2 ம1 ப த1 ச' என்ற நீலமணி ராகத்தை மத்யம ஸ்ருதியில் படுவதை கண்டிருக்கிறேன். அது ஏன்?

'ச ரி2 க2 ப த2 ச ' என்ற மோகன ராகத்தை பஞ்சம ஸ்ருதியில் தான் பாடுகிறார்கள் என்று நினைக்கிறன். ஏனெனில் அதில் மத்யமம் கிடையாது என்பது என் எண்ணம். ஆயினும் 'ச ரி2 ம1 ப த2 ச' என்ற சுத்த சாவேரி ராகத்தை மத்யம ஸ்ருதியில் பாட வேண்டுமா அல்லது பஞ்சம ஸ்ருதியில் பாட வேண்டுமா? அதுபோல 'ச ரி2 ம1 ப நி1 ச' என்ற மத்யமாவதி ராகத்தை பஞ்சம ஸ்ருதியில் பாடுவது ஏன்? இத்தனைக்கும் மத்யமாவதி ராகத்தின் ஸ்வர கட்டுமான அமைப்பு ஒவ்வொரு சுரம்களும் 4வது ஸ்வரம் என்ற மத்யம தொடர்பு கொண்டுள்ளது. ச-ம1, ரி-ப, ம1-நி1, ப-ச என்ற முறையை கவனிக்கவும்.

மேலும் இப்பதிவின் தொடர்பாக சில விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டுகிறேன். 'சக்ரவாகம்' ராகத்தில் பஞ்சம ஸ்ருதி அல்லாது மத்யம ஸ்ருதி கொண்டு அமைக்கப்பட்டுள்ள கீர்த்தனைகள் எதாவது சான்று உள்ளதா?

மேலும் இதில் கூறியபடி இந்த பாடல் 'D' ல் வருகிறது என்றால் பஞ்சம ஸ்ருதிபடி D-A ஆக இருக்க வேண்டும். ஆனால் மத்யம ஸ்ருதிபடி D-G ஆக ஒலிப்பதன் காரணம் என்ன?

இதுபோல 'கரஹரப்ரியா' ராகத்திலும் பஞ்சம ஸ்ருதி அல்லாது மத்யம ஸ்ருதி கொண்டு அமைக்கப்பட்ட கீர்த்தனைகள் எதாவது சான்று உள்ளதா?

நன்றி

Last edited by N Y MURALI on Fri Mar 13, 2015 12:58 pm; edited 1 time in total
Back to top
View user's profile Send private message Send e-mail
S.SAMPAT

Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Sat Mar 07, 2015 3:20 pm    Post subject: Reply with quote

அன்பு முரளி,

ஒரு கிருதி 'மத்யம ஸ்ருதி' யில் பாடப்படுவது என்பது வேறு. ஒரு ராகத்தில் மத்யம ஸ்ருதியை கிரகபேதம் செய்து வேறு scale ஆக மாயத்தோற்றம் காட்டுவது என்பது வேறு.

மத்ய ஸ்ருதி என்பது நான் ஏற்கனவே சொன்ன காரணத்திற்காகத்தான் ஏற்பட்டது. அதில் ராகம் /scale வேறு ராகமாக/scale ஆக தொனிக்காது.

ஆதார ஸ்ருதி ஒன்றாக இருந்து, ஒரு scale ஆக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உதாரணத்திற்கு மோஹனம். இதில் ரி, க, ப, த ஆகிய ஸ்வரங்களை 'ஸ' வாக வைத்துக்கொண்டால் கிடைக்கும் scales முறையே மத்யமாவதி, ஹிந்தோளம், சுத்த சாவேரி, சுத்த தன்யாசி ஆகும். இதற்கும் "மத்ய ஸ்ருதி'க்கும் சம்மந்தம் கிடையாது. இந்த ராகங்களை தம்புராவில் நம் ஆதார ஸ்ருதி எதுவோ அதை வைத்தே பண்ணலாம்.

ஆனால், சினிமா பாடல்கள், ஒரு ஸ்ருதி ஆதாரமாக வைத்து பண்ணப்படவேண்டிய அவசியம் இல்லை. எனவே, கேட்பவர்கள் எந்த ஸ்வரத்தை ஆதார ஸ்ருதியாக நினைக்கிறார்களோ, அது அந்த ராகமாகத்தோன்றும். ஆனால், விஷயம் அறிந்தவர்கள் ஒரு பாடலில் வரும் ராகத்தின் கமகங்கள், மூர்ச்சனை, பாடுவோரின் ஆதார ஸ்ருதி ஆகியவற்றை கவனித்தில் கொண்டு இது இன்ன ராகம்/scale என்று நிர்ணயம் பண்ணலாம். இதையும் மீறி மோஹனத்தில் அமைந்த பாடலை, ஒருவர் எனக்கு ஹிந்தோளமாகக்கேட்கிறது (அவர் மனதில் காந்தாரத்தை "ஸ" வாக வைத்துக்கொண்டு ) என்று சொன்னால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில், சினிமாப்பாடல்களில் தம்புரா ஆதார ஸ்ருதி ஒலிப்பதில்லை.

நீங்கள் எதை சட்ஜ - பஞ்சம ஸ்ருதி பாவம், சட்ஜ - மத்யம ஸ்ருதி பாவம் என்று எதை குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை.

மேலும்,இதன் அடுத்த கட்டமாக ஒரே ராகத்தை சம ஸ்ருதி ( ச-ப) யிலும் பாடலாம். மத்யம ஸ்ருதியிலும் ( ச - ம1 (ம2 இல்லை) ) பாடலாம். அதற்கு பாடுபவருக்கு ஞானம் வேண்டும். கட்டுபாடோடு பாடத்தெரியவேண்டும். நான் கச்சேரிகளில் பாடியிருக்கிறேன். உதாரணத்திற்கு பந்துவராளி.. மத்யம் ஸ்ருதியில் ராக ஆலாபனையே செய்திருக்கிறேன். மத்யம ஸ்ருதியில் அதுவே கமக வேறுபாட்டால் உங்களுக்கு பந்துவராளியாக ஒலிக்காது. It gives different color.
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI

Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Sat Mar 07, 2015 4:10 pm    Post subject: Reply with quote

அன்புள்ள சம்பத் அவர்களே,
நீங்கள் சொல்வதெல்லாம் எனக்கு ஏற்புடையதே. ஆயினும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லையே. கர்நாடக சங்கீதத்தில் 'சக்ரவாகம்' மற்றும் 'கரஹரப்ரியா' என்ற ராகங்களை பஞ்சம ஸ்ருதியில் பாடவேண்டுமா அல்லது மத்யமஸ்ருதியிலும் பாடலாமா? அவ்வாறென்றால் அதற்கு ஏதாகினும் கீர்த்தனைகள் சான்று உண்டா?

Quote:
நீங்கள் எதை சட்ஜ - பஞ்சம ஸ்ருதி பாவம், சட்ஜ - மத்யம ஸ்ருதி பாவம் என்று எதை குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை.

இன்னும் தெளிவாக கேட்கிறேன். மேற்கண்ட ராகத்தில் உள்ள கீர்த்தனைகளை நீங்கள் கச்சேரிகளில் பாடும்பொழுது தம்புராவில் 'ச-ப' வைத்து கொள்வீர்களா அல்லது ச-ம1 வைத்து கொள்வீர்களா?
Back to top
View user's profile Send private message Send e-mail
S.SAMPAT

Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Sat Mar 07, 2015 7:31 pm    Post subject: Reply with quote

அன்பு முரளி அவர்களே,

நான் மேற்கூறிய நாத நாமக்ரியா, செஞ்சுருட்டி, புன்னகவராளி,குறிஞ்சி,நவ்ரோஜ் தவிர உள்ள அனைத்து ராகங்களுமே ச-ப வைத்துத்தான் பாடப்படுகின்றன. சில சமயங்களில் சில வித்வான்கள் பாடலின் ஸ்வரங்கள் கீழ் ப விலிருந்து மேல் நிஷாதத்திற்குள்ளேயே அமைந்தால் அவர்கள் குரலின் புஷ்டி தெரியும்படியாக இருக்க மத்யம ஸ்ருதியில் பாடலாம். ஆனால் அவையெல்லாம் ரொம்ப rare.

இப்போது சில வித்வான்கள் பஞ்சமமே இல்லாத ராகங்கள் பாடும்போது மத்யம ஸ்ருதியில் பாடுகிறார்கள். (ஹிந்தோளம், ஆபோகி, ஸ்ரீரஞ்சனி). ஆனால் அந்த காலத்தில் இந்த வழக்கம் இல்லை.
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI

Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Mon Mar 09, 2015 3:04 pm    Post subject: Reply with quote

S.SAMPAT wrote:
அன்பு முரளி அவர்களே,

நான் மேற்கூறிய நாத நாமக்ரியா, செஞ்சுருட்டி, புன்னகவராளி,குறிஞ்சி,நவ்ரோஜ் தவிர உள்ள அனைத்து ராகங்களுமே ச-ப வைத்துத்தான் பாடப்படுகின்றன. சில சமயங்களில் சில வித்வான்கள் பாடலின் ஸ்வரங்கள் கீழ் ப விலிருந்து மேல் நிஷாதத்திற்குள்ளேயே அமைந்தால் அவர்கள் குரலின் புஷ்டி தெரியும்படியாக இருக்க மத்யம ஸ்ருதியில் பாடலாம். ஆனால் அவையெல்லாம் ரொம்ப rare.

இப்போது சில வித்வான்கள் பஞ்சமமே இல்லாத ராகங்கள் பாடும்போது மத்யம ஸ்ருதியில் பாடுகிறார்கள். (ஹிந்தோளம், ஆபோகி, ஸ்ரீரஞ்சனி). ஆனால் அந்த காலத்தில் இந்த வழக்கம் இல்லை.

அன்பு சம்பத் அவர்களே
உங்களின் தெளிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி. உங்கள் பதிவினை காண்பதற்கு முன் நானும் மற்றொரு கர்நாடக சங்கீதம் அறிந்த ஒருவரிடம் இந்த சந்தேகத்திற்கு விளக்கம் கேட்டேன். அவரும் உங்களை போலவே சில ராகங்களை தவிர்த்து (நீங்கள் கூறியது போல நாதநாமக்ரியா, செஞ்சுருட்டி போல) மற்றவை எல்லாம் பஞ்சம ஸ்ருதியிலேயே பாடப்படும் என்றார். அது ஏன் என்ற என் கேள்விக்கு அவரும் உங்களை போலவே மத்யம ஸ்ருதியில் அதன் range அதிகமாகும் காரணத்தினால் குரலில் range இருக்காது என்றும் கூறினார்.

இது மற்றொரு குழப்பத்தை எனக்கு ஏற்படுத்தியது. அது என்னவென்றால் அப்படி என்றல் மத்யம ஸ்ருதியில் 'ம1' என்ற ஸ்வரம் 'ச' ஆக உருமாற்றம் பெறுகிறதா? அப்படி இருந்தால் தான் இந்த range பிரச்சனை வரும்.

இதற்கான விளக்கம் பெற வலை தளத்தின் உதவியை நாடினேன். தெளிவான விடை கிடைத்தது.
அதனை புரியாதவர்களின் நலனுக்காக இங்கு இணைத்துள்ளேன்.

http://www.ragasurabhi.com/carnatic-music/surabhi-post/post--post0011--myriad-hues-of-ragas-ragas-sung-in-madhyama-shruti.html

எனவே பஞ்சம ஸ்ருதியில் தம்பூராவில் ஸ்ருதி கூட்டப்படும் 'ச-ப -ச- என்ற ஸ்வரத்தில் 'ச' என்ற சட்சமம் தான் ஆதார ஸ்ருதி. அதுவே மத்யம ஸ்ருதிக்கு மாற்றப்படும் பொழுது 'ச-ம1-ச' என்ற ஸ்வரத்தில் ஸ்ருதி கூட்டப்படும் பொழுது 'ம1' என்ற ஸ்வரம் 'ச' ஆக கற்பனை செய்யப்படுகிறது. எனவே 'ம1' ஸ்வரம் 'ச' ஆக மாறுகிறது. அவ்வாறு மாறும்பொழுது 'ச' என்ற ஸ்வரங்கள், விதிப்படி 'ப' ஆக மாறும். எனவே முன்னர் இருந்த 'ச-ப-ச' என்ற நிலை இப்பொழுது 'ப(இது கீழ் 'ப' ) -ச- ப என்று மாறுகிறது. எனவே இதுவும் ஒரு வகையில் பஞ்சம ஸ்ருதியே. அதாவது முதல் நிலை, 1 கட்டையில் பஞ்சம ஸ்ருதி. மத்யம ஸ்ருதியில் 4 கட்டையில் பஞ்சம ஸ்ருதி. எனவே 1 கட்டையில் பாடுபவர்கள் 'மத்யம' ஸ்ருதியான 4 கட்டையில் பாடும்பொழுது உச்ச ஸ்தாயியில் (high pitch) பாடுவது கடினம். என்ன நான் சொல்வது சரியா?

சரி. ஆயினும் நான் எழுதிய பதிவில் சரியான terminologyயை குறிப்பிடாததால் வந்த குழப்பம் இது. நான் சொல்லும் விஷயத்திற்கு என்ன terminologyயை குறிப்பிடவேண்டும் என்று எனக்கு புரியவில்லை. எனவே அதனை பொருட்படுத்தாமல் நான் சொல்ல வந்த விஷயத்தை புரிந்துகொள்ள உங்களை வேண்டி கோட்டுகொள்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

நான் சொல்லுவது என்னவென்றால் நீங்கள் முன்னர் கூறியபடி 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடல் 'D' ல் ஆரம்பிக்கிறது. எனவே 'D' தான் 'ச'. என்ன சரியா? இப்போது பாடல் 'மேல் ச'வில் தானே ஆரம்பிக்கிறது. அதாவது 'upper D'. இந்த நிலைபாட்டில் ஒரு நிமிடம் இதனை ஒரு சினிமா பாடலாக அல்லாது கர்நாடக இசையாக நினைத்து தம்புரா கொண்டு மீட்டி பாடினால் விதிப்படி 'ச-ப-ச' என்று 'D-A-D' என்று தானே ஸ்ருதி கூட்டி கொள்ள வேண்டும். ஆயினும் பாடலை போடும் பொழுது அதனை 'ச-ம1-ச' என்று அதாவது 'D-G-D' என்று ஸ்ருதி கூட்டி பாடிப்பாருங்கள். மிகபொருத்தமாக இருக்கிறது.

ஒரு முக்கிய விஷயம். 'ச-ம1-ச' என்று மத்யம ஸ்ருதியில் மற்றும் பொழுது கர்னாடக இசை முறையின் விதிப்படி 'ம1' என்பது 'ச' ஆக மாறும். அதாவது 'D' ல் உள்ள பாட்டு 'G' ல் மாறும். ஆயினும் அவ்வாறு விதிப்படி மாற்றாமல் 'D' ஐ 'ச' ஆகவே வைத்து பாடவும். இப்பொழுது பாடலின் ஸ்ருதி நிலை பஞ்சம ஒலி சம்பந்தம் அல்லாமல் மத்யம சம்பந்தம் கொண்டிருப்பதை நீங்கள் உணர முடியும். ஏனெனில் பாடலின் வார்த்தைகளுக்கு அமைக்கப்பட்ட இசை கோர்வைகள் அவ்வாறு உள்ளன. இதனை தான் நான் ' சட்ச-பஞ்சம' மற்றும் 'சட்ச-மத்யம' பாவம் என்றும் குறிப்பிட்டேன்.

அவ்வாறு இல்லாமல் கர்நாடக ஸ்ருதி விதிப்படி 'ம1' ஐ 'ச' வாக கொண்டால் பாடலின் துவக்கம் 'மேல் ச' வில் இல்லாமல் 'ப' வில் தானே ஆரம்பிக்கும் அவ்வாறும் இல்லாமல் ஸ்வர விதிப்படி பாட வேண்டும் என்றால் இப்போது மத்யம ஸ்ருதியின் மாறிய நிலையில் 'மேல் ச' என்ற 'upper g'ல் தொடங்க வேண்டும். அதாவது 2 கட்டை ஸ்ருதியிலிருந்து 5 கட்டை ஸ்ருதியாக மாற்றி பாடவேண்டும். அதாவது 5 கட்டையில் பஞ்சம ஸ்ருதி. அதன் range அதிகம். எனவே இயலாது. என்ன சரியா?

இப்போது மீண்டும் தெளிவாக உணர்த்த இந்த பாடலை ஒரு சினிமா பாடலாக கற்பனை செய்து கொள்ளுங்கள். 'சக்ரவாகம்' ராகத்தினை அடிப்படையாக கொண்டு 'D' ல் அமைந்த இந்த பாடலுக்கு பொதுவாக D மேஜர் வரவேண்டும். ஆயினும் இதன் ஆதாரம் 'G' மேஜர் ஆக இருக்கிறது என்பதுதான் நான் சொல்ல வந்த விஷயம்.

இதே நிலைதான் 'மகாராஜன் உலகை ஆளலாம்' என்ற பாடலுக்கும். இந்த பாடலை 'D' ல் ஆரம்பிக்கிறது என்றே கொள்வோம். எனவே 'கரஹரப்ரியா' என்ற ராகத்தில் அமைந்த இந்த பாடலின் ஆதாரம் 'D' minorவரவேண்டும். ஆயினும் இந்த பாடலை கேட்டீர்களானால் 'G' major வருவதை தெளிவாக உணர முடியும். ஆனால் அதே சமயம் 'மாதவி பொன் மயிலாள்' என்ற அதே 'கரஹரப்ரியா' ராகத்தில் அமைந்த பாடலுக்கு 'D' minor என்ற ஆதாரம் தான் இருக்கிறது.

இப்போது நான் சொல்வதன் முழு அர்த்தமும் புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

சினிமா பாடலில் இவ்வாறு எந்த 'chords' வருவது சகஜம் தான் என்றாலும், எத்தனை சினிமா பாடல்களில் இம்மாதிரி 'சக்ரவாகம்' மற்றும் 'கரஹரப்ரியா' ராகங்களை அதன் ஆதார சட்ஜம் கொண்ட chords ஐ தவிர்த்து இசை அமைக்கப்படிருக்கிறது என்பதனை அறிய வேண்டுகிறேன்.

உங்களின் பதில் இந்த பதிவின் மற்றொரு தொடர்ச்சியை எவ்வாறு எழ்தவேண்டும் எனபதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

மீண்டும் நன்றி.
Back to top
View user's profile Send private message Send e-mail
S.SAMPAT

Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Tue Mar 10, 2015 12:49 am    Post subject: Reply with quote

அன்பு முரளி அவர்களே,

நீங்கள் கூறியது முற்றிலும் சரி. மத்யம ஸ்ருதி வைக்கும் போது (பஞ்சமத்திற்கு பதில் மத்யமம்) "ப ஸ ஸ ஸ" என்பது "ஸ ப ப ப" என்று ஆகிவிடுகிறது. எனவே, எல்லாமே ச - ப- ச relations தான்.

இந்த ஸ்ருதியே என்னைப்பொருத்தவரை, MIND GAME தான். நீங்கள் கேட்கலாம். ஸ-ம வைக்கும் போது, மத்யம் "ஸ"விடுகிறது. ஏன் normal ஸ-ப வைக்கும் போது "ப" ஸ வாக வில்லை. நல்ல கேள்வி. ப வானல், தம்புராவில் ஏற்கனவே உள்ள "ஸ" - "ம" ஆகிவிடும். அதனால் ச-ப-ச வில் ச "ச" வாகக்கேட்கிறது. மத்யம் ஸ்ருதியில் "ம" "ஸ" ஆகிவிடுகிறது. INTERESTING இல்ல.

இப்பொழுது நீங்கள் கூறியதை ஆராயலாம்.

D (ஸ) D Eb F# G A B C D Eb F# G

ச ரி க ம ப த நி ச

G (ஸ) ச ரி க ம ப த நி ச

நீங்கள், கூறியது போல் ச-ப-ச வைத்து நீங்கள் பாடலை இசைக்கும் போது சக்ரவாக சாயலில் பாட்டு தொனிக்கிறது. ச-ம-ச வைக்கும் " நீங்கள் அதே ஸ்வரங்களை வாசிக்கும் போது " அது சரசாங்கி சாயல் அடிப்பதால் சக்ரவாகமே உங்களுக்கு different color ஆகக்கேட்கிறது.

[quote]மேலும்,இதன் அடுத்த கட்டமாக ஒரே ராகத்தை சம ஸ்ருதி ( ச-ப) யிலும் பாடலாம். மத்யம ஸ்ருதியிலும் ( ச - ம1 (ம2 இல்லை) ) பாடலாம். அதற்கு பாடுபவருக்கு ஞானம் வேண்டும். கட்டுபாடோடு பாடத்தெரியவேண்டும். நான் கச்சேரிகளில் பாடியிருக்கிறேன். உதாரணத்திற்கு பந்துவராளி.. மத்யம் ஸ்ருதியில் ராக ஆலாபனையே செய்திருக்கிறேன். மத்யம ஸ்ருதியில் அதுவே கமக வேறுபாட்டால் உங்களுக்கு பந்துவராளியாக ஒலிக்காது. It gives different color.

நீங்கள் கூறுவது போல் ம - ஸாவானால், மேல் மாவில் தானே பாட்டு ஆரம்பிக்க வேண்டும் என்றால், அதுவும் சக்ரவாக scale தானே... எனவே அவ்வாறு செய்யமுடியாது. பாடுவதும் மிகக்கடினம். இங்கு நடப்பது "ஒரே ஸ்வரக்கோர்வைகளுக்கு" இரண்டு வெவ்வேறு "chord" பிடிப்பதால், கிரகபேதத்தின் விளைவாக இரு வெவ்வேறு scale ஆகத்தோன்றுகிறது. நான் மேற்கூறிய பந்துவராளியை மத்யம ஸ்ருதியில் பாடினால், வஸந்தா சாயல் வரும் . அதுவும் இந்த கிரகபேதத்தின் விளைவு தான்.. Hope I have clarified...

PostPosted: Tue Mar 10, 2015 12:52 am    Post subject: Reply with quote

நான் முன்பு எழுதியதை நினைவு கூற விரும்புகிறேன்.

மேலும்,இதன் அடுத்த கட்டமாக ஒரே ராகத்தை சம ஸ்ருதி ( ச-ப) யிலும் பாடலாம். மத்யம ஸ்ருதியிலும் ( ச - ம1 (ம2 இல்லை) ) பாடலாம். அதற்கு பாடுபவருக்கு ஞானம் வேண்டும். கட்டுபாடோடு பாடத்தெரியவேண்டும். நான் கச்சேரிகளில் பாடியிருக்கிறேன். உதாரணத்திற்கு பந்துவராளி.. மத்யம் ஸ்ருதியில் ராக ஆலாபனையே செய்திருக்கிறேன். மத்யம ஸ்ருதியில் அதுவே கமக வேறுபாட்டால் உங்களுக்கு பந்துவராளியாக ஒலிக்காது. It gives different color.

நீங்கள் கூறுவது போல் ம - ஸாவானால், மேல் மாவில் தானே பாட்டு ஆரம்பிக்க வேண்டும் என்றால், அதுவும் சக்ரவாக scale தானே... எனவே அவ்வாறு செய்யமுடியாது. பாடுவதும் மிகக்கடினம். இங்கு நடப்பது "ஒரே ஸ்வரக்கோர்வைகளுக்கு" இரண்டு வெவ்வேறு "chord" பிடிப்பதால், கிரகபேதத்தின் விளைவாக இரு வெவ்வேறு scale ஆகத்தோன்றுகிறது. நான் மேற்கூறிய பந்துவராளியை மத்யம ஸ்ருதியில் பாடினால், வஸந்தா சாயல் வரும் . அதுவும் இந்த கிரகபேதத்தின் விளைவு தான்.. Hope I have clarified...[/quote]
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI

Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Tue Mar 10, 2015 11:38 am    Post subject: Reply with quote

அன்பு சம்பத் அவர்களே,
உங்கள் தெளிவான பதிலுக்கு மிக்க நன்றி. குறிப்பாக நீங்கள் கூறியதை Quote செய்கிறேன்.

Quote:
மேலும்,இதன் அடுத்த கட்டமாக ஒரே ராகத்தை சம ஸ்ருதி ( ச-ப) யிலும் பாடலாம். மத்யம ஸ்ருதியிலும் ( ச - ம1 (ம2 இல்லை) ) பாடலாம். அதற்கு பாடுபவருக்கு ஞானம் வேண்டும். கட்டுபாடோடு பாடத்தெரியவேண்டும். நான் கச்சேரிகளில் பாடியிருக்கிறேன். உதாரணத்திற்கு பந்துவராளி.. மத்யம் ஸ்ருதியில் ராக ஆலாபனையே செய்திருக்கிறேன். மத்யம ஸ்ருதியில் அதுவே கமக வேறுபாட்டால் உங்களுக்கு பந்துவராளியாக ஒலிக்காது. It gives different color.

எனவே ஒரே ராகத்தை சம ஸ்ருதி என்று ச -ப-ச வைத்தும் பாடலாம். அல்லது ச-ம1-ச என்று மத்யம மத்யம ஸ்ருதியிலும் பாடலாம். அதற்கு பாடுபவருக்கு ஞானம் வேண்டும்.

நான் சுட்டிகாட்டிய 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' மற்றும் 'மகாராஜன் உலகை ஆளலாம்' என்ற பாடலும் அவ்வாறே அமைந்தது. இதனை பொதுவாக ச-ப-ச என்று சம ஸ்ருதியில் பாடுவார்கள். ஆனால் MSV இதனை ச-ம1-ச என்று மத்யம ஸ்ருதியில் அமைத்துள்ளார். அதற்கு தக்க ஞானமும் அவர் பெற்றுள்ளார் என்பதே நான் கூற விரும்பிய செய்தி.

ஆயினும் இதன் சம்பந்தமாக மற்றொரு கேள்விக்கும் பதில் சொல்லவும். கர்னாடக சங்கீதம் போலவே ஹிந்துஸ்தானி இசை முறையிலும் இவ்வாறு ச-ப-ச என்ற சம ஸ்ருதியிலிருந்து ச-ம1-ச என்ற மத்யம ஸ்ருதியில் மற்றும் பொழுது அங்கும் 'ம1' என்ற மத்யமம் 'ச' என்ற சட்சமம் ஆகிறதா?

இதை நான் கேட்பதன் அடிப்படை காரணம் நான் மேற்கூறிய இரண்டு பாடல்களில் மட்டும் தான் இவ்வாறு ஸ்ருதி மாற்றப்பட்டுள்ளது. மேலும் இவ்விரண்டு பாடல்களும் வட இந்திய சூழ் நிலைக்கேற்ப ஹிந்துஸ்தானி முறையில் அமைக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. எனது இந்த தொடர் பதிவின் அடுத்த பதிவு இது பற்றியே இருக்கும் என்பதால் இந்த விளக்கம் தேவைப்படுகிறது.

மீண்டும் நன்றி திரு சம்பத் அவர்களே.
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV All times are GMT + 5.5 Hours
Goto page 1, 2, 3, 4, 5, 6  Next
Page 1 of 6

Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum

Powered by phpBB © 2001, 2005 phpBB Group