"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

RARE RAGHAS -IN CINEMA - BY DR SRINIVASAN KANNAN IN FACE BOO

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Mon Apr 13, 2015 7:38 pm    Post subject: RARE RAGHAS -IN CINEMA - BY DR SRINIVASAN KANNAN IN FACE BOO Reply with quote

RARE RAGAS IN CINEMA – PART- 3 :
MSV and Rare ragas : MSV அவர்களின் அபூர்வ ராகப் பாடல்கள்;
இப்போது மெல்லிசை மன்னர் MS விஸ்வநாதன் அவர்கள் இசை அமைத்த சில அபூர்வ ராகங்களையும் அவற்றில் அமைந்த அவரது பாடல்களையும் பார்ப்போம்!ஏற்கனவே அவர் இசையமைத்த சுமநேச ரஞ்சனி பற்றி எழுதியுள்ளோம்- அந்த ராகத்தில் அவர் இசைத்த பாடல் காவியத்தலைவி படத்தில் வரும் ‘ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு ‘என்ற பாடல் என்று ! இது மட்டும் அல்லாது அவரது அபூர்வ ராகங்கள் இப்போது பார்க்கலாம்!
1.மகதி: இந்த ராகம் பற்றி அனைவருக்கும் ஏற்கனவே தெரியப் படுத்தியுள்ளோம். இது ஒரு அபூர்வ ராகம் – இதில் நான்கு ஸ்வரங்கள் மட்டுமே உள்ளது ! இதை DR பாலமுரளிக்ருஷ்ணா அவர்கள் COIN செய்த ராகம் – இதை அவர் அபூர்வ ராகம் படத்தில் அதிசய ராகம் என்ற பாடலை ஜேசுதாஸ் அவர்கள் பாட இசை அமைத்துள்ளார் !( இது பற்றி ஏற்கனவே தனி செய்தி: கர்நாடக இசையில் உள்ள UNCONVENTIONAL ராகங்கள் என்ற தலைப்பில் விவரித்துப் பகிரப்பட்டது).
2.வலஜி : இது 16 வது மேளகர்த்தா சக்ரவாகம் ராகத்தின் ஜன்யம் – இந்த ராகத்தில் வந்த பாடல்கள் :
A பொட்டு வைத்த முகமோ- படம் : சுமதி என் சுந்தரி – பாடியவர்: SPB
B. பொங்கும் கடலோசை – மீனவ நண்பன்- வாணி ஜெயராம்
C.சொந்தம் ஒரு கை விலங்கு – முத்துராமன் நடித்த படம் – SPB
3. கலாவதி : இது ஹிந்துஸ்தானியில் இருந்து நாம் சுவீகரித்துக்கொண்ட ஒரு ராகம் ! இதுவும் சக்ரவாகம் ராகத்தில் ஜன்யம் . இது கிட்டத்தட்ட நமது வலஜி ராகத்தைப் போலவே இருக்கும் – ஆனால் சிறிது ஸ்வர வித்யாசம் உள்ளது – இந்த ராகத்தில் வந்த பாடல் :
உன்னை எண்ணி என்னை மறந்தேன் – ரகசிய போலீஸ் 115 – P. சுசீலா
(இதே ராகத்தில் உள்ள ஹிந்தி பாடல் : ஹம் கிஸீ சே கம் நஹின் )
4. ஜனசம்மோதினி : இது 28 வது மேளகர்த்தா ராகம் ஹரிகாம்போதி ராகத்தில் ஜன்யம் ! சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள் ! இது வலஜி, கலாவதி ராகங்கள் போலவே இருக்கும். ஆனால் வேறு தாய் ராகத்தில் ஜன்யம் ! இதில் அமைந்த பாடல்கள் :
A. கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று- பச்சை விளக்கு- TMS
B. தத்தி செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு- தங்கப்பதக்கம் tongue emoticon சுசீலா
C. இன்னும் சொல்லப் போனால் சுமை தாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும் பாடல் கூட இதன் பிரதிபலிப்பு தான்- ஆனால் இந்த பாடலை சிலர் இதன் தாய் ராகமான ஹரிகாம்போதியில் சேர்க்கிறார்கள் – கொஞ்சம் ஸ்வர வித்யாசம் தான்!
(பாதை தெரியுது பார் என்ற படத்தில் வரும் தென்னங்கீற்று சோலையிலே என்று வரும் பாடல் கூட இதே ஜன சம்மோதினி ராகம் தான் ! ஆனால் இசை ஸ்ரீனிவாசன் )
5.காளிங்கடா : இந்த ராகம் ஒரு அபூர்வ ராகம் . இது வகுளாபரணம் ஜன்யம் -ஹிந்துஸ்தானியிலும் காளிங்கரா என்ற பெயரில் உள்ளது . இதில் அமைந்த பாடல்கள் :
A.: பொன் மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் –‘ சொர்க்கம் படம்- TMS அவர்களின் கலக்கலான பாடல் !
B. நினைத்தேன் வந்தாய் நூறு வயது கேட்டேன் தந்தாய் ஆசை மனது- படம் : காவல்காரன்- பாடியவர்கள் : TMS மற்றும் P. சுசீலா !
6. சமுத்ரப்ரியா – இதுவும் சுமநேச ரஞ்சனியும் ஒன்று தான்- இதில் அமைந்த இன்னொரு பாடல் : அந்தமானைப் பாருங்கள் அழகு – படம் : அந்தமான் காதலி – TMS / P. சுசீலா !
7. அடுத்து பிலாஸ்கானி தோடி என்று ஒரு ராகம் – ஹிந்துஸ்தானி இறக்குமதி ; கொஞ்சம் சிந்துபைரவி ஜாடை ;இதில் வந்த பாடல்கள்
A. பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனி மரமாக – படம் :பணக்கார குடும்பம் – TMS
B. ஊரெங்கும் மாப்பிளை ஊர்வலம் – படம் சாந்தி – P. சுசீலா
C. குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும்- ஜெய்சங்கர் படம்: TMS/சுசீலா !
8.ஜின்ஜோட்டி : நமது செஞ்சுருட்டி போலவே இருக்கும் – இதில் வந்த பாடல் : தேவன் கோயில் மணி ஓசை நல்ல சேதிகள் கூறும் மணி ஓசை- படம் : மணி ஓசை- சீர்காழி கோவிந்தராஜன் !
9.அடுத்து திலக் காமோத் – இது ஹிந்துஸ்தானி ராஹம் – இதுவும் நளின காந்தியும் மிகவும் நெருக்கம் – இரண்டும் ஒன்றே என்றும் சொல்லலாம் – இதில் வந்த பாடல்கள் :
A. மௌனமே பார்வையாய் ஒரு பாட்டு பாட வேண்டும் – கொடிமலர் படம்- பாடியது PB ஸ்ரீநிவாஸ் அவர்கள் !
B. தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே – படம்: தங்கை- பாடியவர்- TMS அவர்கள் !
C. இன்னொரு DEVOTIONAL தனிப் பாடல் : ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ – பாடியவர் SPB- அருமையான பாடல் !
10.நந்தகௌன்ஸ் : இது ஒரு ஹிந்துஸ்தானி ராகம் – இதில் உள்ள ஒரே பாடல் : அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தெய்வமன்றோ- பாடியது : P சுசீலா / மற்றும் TMS- படம்: அண்ணன் ஒரு கோயில் ! தமிழ் சினிமாவில் இந்த ராகத்தில் அமைந்த ஒரே பாடல் இது மட்டும் தான் !
11.அடுத்து மாரு பெஹாக் : பெஹாக் ராகத்தில் இருந்து மாறுபட்டது – இதில் அமைந்த பாடல் சூப்பர் ஹிட் பாடல் : ‘பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இல்லை பூவாடை போர்த்தி வர பூத்த பருவமா ‘ கண்ணதாசனின் அற்புத வரிகள் கொண்ட இந்த பாடல் வந்த படம் :நிச்சய தாம்பூலம் – TMS அவர்களின் மகத்தான பாடல் !
12.சுத்த சாரங்கா : இது ஹிந்துஸ்தானி இறக்குமதி- கல்யாணி ஜன்யம்- இதுவும் ஹம்சநாதம் மற்றும் சாரங்க தரங்கிணி ராஹங்களும் ஒன்று போலவே இருக்கும் வெவ்வேறு ராகங்கள் . இதில் உள்ள பாடல்கள் :
A. இரவும் நிலவும் வளரட்டுமே – கர்ணன்- TMS/சுசீலா
B. இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ- நிழல் நிஜமாகிறது – பாடியது SPB !
(குறிப்பு: இந்த சுத்த சாரங்கா ராகமும் சாரங்க தரங்கிணி ராகமும் ஒன்று என்று சிலர் சொன்னாலும் இரண்டுக்கும் ஒரு மெல்லிய ஸ்வர வித்யாசம் உண்டு.. சாரங்கா ராகம் வேறு, சுத்த சாரங்கா வேறு ! இவற்றுக்கு உள்ள ஒற்றுமை இவற்றின் தாய் ராகம் கல்யாணி – ஹம்சநாதம் ராகம் இதைப் போலவே இருந்தாலும் அதன் தாய் ராகம் வேறு ! எனவே ஸ்வரம் வித்தியாசப்படும் . இது பற்றி பல தடவை நாம் எழுதியிருக்கிறோம் !)
13.த்விஜாவந்தி ராகம் : இந்த ராகம் வடநாட்டில் இருந்து நாம் இறக்குமதி செய்து உள்ளோம். முதன் முதலில் MSV சார் மட்டும் தான் இந்த ராகத்தில் பாடல் அமைத்தார் ! மறைந்த முதல்வர் MGR அவர்கள் MS சுப்புலக்ஷ்மி கச்சேரியில் கேட்ட இந்த ராகத்தில் அமைந்த அகிலாண்டேஸ்வரி என்ற பாடலால் ஈர்க்கப்பட்டு MSV அவர்களை MSS அம்மாவைக் கேட்டு அவர் வழிகாட்டலின் பேரில் இசையமைக்கப்பட்ட பாடல் : அமுத தமிழில் எழுதும் கவிதை – படம்: மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் – பாடியது ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெயராம் அவர்கள் . இது பற்றி நான் ஏற்கனவே சிறப்பு பதிவு ஒன்று போட்டு உள்ளேன்!
14.பூர்வி கல்யாணி : 53 வது மேளகர்த்தா ராகம் கமனாச்ரமம் ஜன்யமான இந்த ராகத்தில் வந்த பாடல் : ஆடும் தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம் – படம் : திசை மாறிய பறவைகள் – பாடியது DR பாலமுரளி அவர்கள் !
15. யதுகுல காம்போதி : இது ஹரி காம்போதி ஜன்யம் – இதில் அமைந்த பாடல் : காசிக்குப் போகும் சந்நியாசி உன் குடும்பம் என்னாகும் நீ யோசி ‘நகைசுவையாக பாடப்பட்ட இந்த பாடல் வந்த படம் சந்திரோதயம் – பாடியவர்கள் : TMS மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் – கலக்கலான பாடல் –இன்றும் இதைப் பாடும் போது நமக்கு சிரிப்புடன் கூடிய ஒரு துள்ளல் வரும் !
(இதே யதுகுல காம்போதி ராகத்தில் இளையராஜா போட்ட நகைச்சுவை பாடல் ‘ஒத்தையிலே நின்னதென்ன மன்னவனே – படம் வனஜா கிரிஜா ! இவர்கள் நகைச்சுவையாக போட்டிருந்தாலும் இதற்கு முன் MKT அவர்கள் ஹரிதாஸ் படத்தில் உருக்கமாக இதே ராகத்தில் பாடிய பாடல் “என்னுடல் தன்னில் ஈ மொய்த்த போது ‘ அந்த பாடல் தான் இந்த ராகத்தில் வந்த முதல் பாடல் !)
16.அடுத்து ஷ்யாமா என்கிற சாமா : அனைவரும் சாமா என்று அழைக்கக்கூடிய இந்த ஷ்யாமா ராகம் ஒரு உருக்கமான ராகம் ! ஹரி காம்போதி ஜன்யமான இதில் MSV அவர்கள் இசைத்த பாடல் : நான் பாடிக் கொண்டே இருப்பேன் – படம் – சிறை ; பாடியது வாணி ஜெயராம் அவர்கள் !
சம்பிரதாயமான பாடலான மானச சஞ்சரரே என்ற பாடல் இதே ராகத்தில் அமைந்தது , சங்கராபரணம் படத்தில் வந்தது உங்கள் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும் ! இந்த ஷ்யாமா, ஆரபி மற்றும் சுத்த சாவேரி இவை அனைத்தும் நெருங்கிய ஸ்வரங்கள் உடையவை – கேட்பவர்களுக்கு பிரயோகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ராகங்கள் !
17.அடுத்து ராகேச்ரீ : இந்த ராகம் ஹிந்துஸ்தானி ராகம் – நமது இசை அமைப்பில் கிடையாது , கிட்டத்தட்ட பாகேஸ்ரீ ராகம் போலவே இருக்கும். தமிழ் திரை இசையில் இந்த ராகத்தின் ஏக போக அதிபதி MSV அவர்கள் தான் ! வேறு யாரும் இந்த ராகத்தை தொட்டதில்லை ! இந்த ராகத்தை பற்றி ஏற்கனவே நான் தனி செய்தி போட்டிருந்தேன் – இப்போது மறுபடி உங்கள் பார்வைக்கு:
A. ஹேய் ஹேய் மாம்பழத்து வண்டு வாச மலர் செண்டு- சுமை தாங்கி –PBS/ சுசீலா
B. வீடு வரை உறவு வீதி வரை மனைவி- பாத காணிக்கை – TMS
C. நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம் – காதலிக்க நேரமில்லை – PBS/ சுசீலா
D. நானொரு குழந்தை நீ ஒரு குழந்தை – படகோட்டி- tms/சுசீலா
E. மெல்ல போ மெல்ல போ மேல்லிழையாளே – காவல்காரன்- TMS/சுசீலா
F. பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா – பணத்தோட்டம் –TMS/ சுசீலா
G. பாரதி கண்ணம்மா ஏனடி சின்னம்மா – நினைத்தாலே இனிக்கும்- SPB/ சுசீலா .
H. பொன்னெழில் பூத்தது புது வானில்- கலங்கரை விளக்கம் – TMS/ சுசீலா !
18. மேக் மல்ஹார் : இது ஒரு ஹிந்துஸ்தானி ராகம் – இதில் MSV அவர்கள் இசையமைத்த பாடல் : முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ நெஞ்சம் – படம் : நெஞ்சிருக்கும் வரை ! பாடியது TMS / சுசீலா !
(குறிப்பு : இந்த பாடலை பிருந்தாவன சாரங்கா அல்லது ஸ்ரீ ராகம் என்றும் சிலர் கருதுகிறார்கள் – எல்லாம் நெருங்கிய பிரயோகம் உள்ளவை ! எனவே குழப்பம் வரலாம் !)
19.கல்யாண வசந்தம் : இது ஒரு அருமையான ராகம்- கீரவாணி ராகத்தின் ஜன்யம் – உண்மையில் இந்த கல்யாண வசந்தம் ராகத்தின் அதிபதி MSV அவர்கள் என்று சொல்லலாம் ! இதில் அமைந்த MSV பாடல்கள் :
A. காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து தேவதை போல் நீ நடந்து வரவேண்டும் – படம் : வயசுப் பொண்ணு – ஜேசுதாஸ்
B. நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா – படம் : கண்ணே கனியமுதே - பாடியது ஜேசுதாஸ் மற்றும் சுசீலா
(இந்த ராகத்தில் மற்றவர்கள் இசையில் வந்த பாடல்கள்
1.நல்ல மனம் வாழ்க – ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது – தேவராஜன் இசை
2. நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே- சதாரம்
3. ஆறு பெருகி வரின் அணை கட்டலாமா அன்பின் பாதையை – வஞ்சிக்கோட்டை வாலிபன் !)
20. ஜோகேஸ்வரி : இது அபூர்வ ராகம் – ஹிந்துஸ்தானி ராகம் : இது ராகேச்ரீ மற்றும் ஜோக் கலந்த ராகம் . இதை பண்டிட் ரவிசங்கர் அவர்கள் மிகவும் பிரபலப்படுத்தினார் ! இதில் வந்த பாடல் : மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் – படம் : மன்மத லீலை ! பாடியது : ஜேசுதாஸ் அவர்கள் !
A user's photo.
A user's photo.
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group