"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Bharathi and MSV

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Wed Aug 06, 2014 11:45 am    Post subject: Bharathi and MSV Reply with quote

அன்புள்ள தள நண்பர்களுக்கு,
சில தினங்கள் முன் அன்பர் திரு ராம்கி அவர்கள் என்னை தொலை பேசியில் அழைத்தார். நீண்ட நாட்களுக்கு பின் அழைத்தால், அவரை பேச விடாமல் நான் சொல்ல வேண்டிய விஷயங்களை மட்டுமே பேசிகொண்டிருந்தேன். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டு விட்டு கடைசியாக ' 'வெள்ளை கமலத்திலே' பாடல் கேட்டேன். என்னவோ செய்கிறது. அதை சொல்வதற்காக தான் உன்னை அழைத்தேன்' என்று கூறியவுடன் 'அது என்ன படம்' என்று கேட்டேன். தெரியவில்லை என்று கூறி விட்டு 'கேட்டு பார்' என்று சொல்லிவிட்டு இணைப்பை முடித்துகொண்டார். ஆயினும் ஏதோ ஒரு காரணத்தினால் அப்பாடலை கேட்க முடியவில்லை. பின் இரண்டொரு நாட்களில் அவரை அவரை சந்தித்த பொழுது மீண்டும் அப்பாடலை நினைவூட்டி 'கேட்டாயா' என்றார். நான் இல்லை என்றவுடன் 'இது சரிப்படாது' என்று அவருடைய smart phone ல் போட்டு 'இப்போது கேள்' என்றார். அப்போது எங்கிருந்த சல சலப்பான சூழ்நிலையில் சரியாக கேட்க முடியவில்லை.

மறு நாள் ஆபீஸ் வந்தவுடன் கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் மறுபடியம் மறதி. இன்று காலை அந்த நினைவு வர பாடலை என் கம்ப்யூட்டர் ல் கேட்டேன். கேட்டவுடன் தான் அன்று ராம்கியின் மன நிலை புரிந்தது.

அஹா என்ன பாடல். என்ன வரிகள். என்ன இசை. பாரதிக்கும், MSV கும் இடையே என்ன ஒரு ஒற்றுமை. இருவருமே உணர்ச்சி பிழம்புகள். சில சமயம் நெருப்பாய் சுடுவார்கள். வேறு சமயம் தென்றல் போல இதமாக இருப்பார்கள். அது அவர்கள் உருவாக்கும் கற்பனையின் வெளிபாடு தானே தவிர, அவர்கள் சொந்த உணர்ச்சிகள் கிடையாது.

பாரதி பொதுவாகவே பாடலை ஒரு இசையின் மூலம் பாடிகொண்டே எழுதுவார் என்று சொல்வார்கள். ஆயினும் MSV இசை அமைத்த பாரதியின் பல பாடல்களை கேட்பதற்கு அவர் இன்னும் ஒரு 50 வருடம் உயிரோடு இல்லாதது துரதிர்ஷ்டம்.

அவரது பலவேறு பாடல்களின் வார்த்தைகள், MSV ன் ஹார்மோனியத்தில் உயிர் பெற்று எழும் காட்சியை பாரதியே நேரில் கண்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், பாரதிக்கு ஹார்மோனியம் என்றாலே பிடிக்காது. பாரதி மட்டுமல்ல. அந்த காலத்தில் உள்ள பல இசை அறிஞர்கள் (மேலை நாட்டு அறிஞர் உட்பட) ஹார்மோனியம் பற்றி அவ்வளவு நல்ல கருத்து கொண்டதில்லை.

அதை மாற்றத்தான் என்னவோ பாரதி மறைந்த 7 ஆண்டுகளில் மற்றுமொரு கலைஞன் பிறந்தான்.

வெறுக்கப்பட்ட அந்த வாத்தியத்தை விருப்பப்பட வைத்தான்.

நிற்க. இந்த பாடல் பற்றி ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதா? இருப்பினும் மீண்டும் யாராவது எழதலாம்.

I am giving below the you tube link

http://youtu.be/0oL9BklwdX8

Regret that the link has some cuts. No other link is available. In fact people like ragasuda can upload a nice version.
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group