"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Mahaan Viswanathan! Isai Viswaroopan!! 2.Adult Theme
Goto page 1, 2  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1160

PostPosted: Tue Aug 05, 2014 1:50 am    Post subject: Mahaan Viswanathan! Isai Viswaroopan!! 2.Adult Theme Reply with quote

மஹான் விஸ்வநாதன்! இசை விஸ்வரூபன்!!

Adult Theme - Part 2


"நெருப்பு" என்றவுடன் பொதுவாக அனைவருக்கும் நினைவு வருவது "சமைப்பது". குளிர் தேசங்களில் இருப்பவர்களுக்குத்
தோன்றுவது "குளிர் காய்வது". சரியான பாதைகளில் செலுத்தப் படாத ஆன்மாக்களுக்குத் தோன்றுவது "புகை பிடிப்பது" அல்லது
பொருளையோ உயிரையோ அழிப்பது. அவ்வளவுதானே. இது வெறும் இயல்பு. சராசரி. ஆனால் நெருப்புப் பந்துடன் விளையாடுபவன் உலகில் வீரனாகிறான். விளையாட்டையும் தாண்டி நெருப்பிலிருந்து உயிர் காப்பவன் உயர்ந்த மனிதனாகிறான். அதையும் தாண்டி அதே நெருப்புடன் யாகம் செய்பவனும் அந்த நெருப்பின் மீது யோகம் செய்பவனும் "யோகி" ஆகிறான். இது நெருப்பு குறித்த ஒரு விஷயம். இந்த நெருப்புக்கு பதிலாக "இசை" என்பதைக் கொண்டால், மெல்லிசை மன்னர் ஒரு "யோகியின்" நிலையிலுள்ளவர் என்பதற்கு - அவர் இசை நம்மைத் துளைத்துக்கொண்டு செல்லும் கூர்மையும், கேட்ட மறுநொடி நம்மை வேறு உலகத்திற்குக் கொண்டு செல்லும் வேகமும், ஒரு முறை கேட்டாலும் உள்ளத்தில் நீங்கா இடம் பெறும் பாங்கும் - அவர் ஒரு "இசை யோகி" என்பதை உணர்த்தப் போதுமானவை ஆகும்!

"இசையுடன் "யாகம்" செய்பவர், அதன் மீது "யோகம்" செய்பவர் என்று கூறும் அளவிற்கு அப்படி என்னதான் செய்து விட்டார் மெல்லிசை மன்னர்?" என்று அவரை அறியாதவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவரது இசை வேள்விகளே பதிலாக விளங்கும்.

அப்படி அவர் 1975'இல் உருவாக்கிய ஒரு வேள்விதான் இன்னமும் தன் ஜோதி குன்றாமல் விளங்கிக் கொண்டிருக்கும் பாடல்.

நேரடியாக உயிர் சக்தியைத் தாக்கும் தன்மை கொண்ட அப்பாடல் - "வைர நெஞ்சம்" திரைப் படத்தில் வரும் "நீராட நேரம் நல்ல நேரம்" என்கிற பாடல்.

இதைக் கேட்டவுடன் அநேக பேருக்கு வரும் உணர்வு "குழப்பம்". என்னடா இவன் "யாகம்", "யோகம்" என்றெல்லாம் பேசிவிட்டு
கிட்டத்தட்ட ஒரு "அபாச" பாடலைக் கூறுகிறான் என்கிற குழப்பம் நியாயமானதே. பாடல் காட்சியில்தான் ஆடை குறைவே தவிற பாடலில் தெய்வீகம் நிறைவு! "எவ்வாறு தெய்வீகம்" என்பதற்கு காரணங்களையும் சாட்சிகளையும் பின்வரும் இக்கட்டுரையில் காண்போம் என்றாலும், இப்படி ஒரு ADULT பாடலில் - காட்சிக்கு கணக்கச்சிதமாக பொருந்தும் வகையிலும் அதே சமயம் இசையின் உன்னதத்தை பல ஆயிரம் மடங்கு உயர்த்திக் காட்டும் திறன், பாங்கு மெல்லிசை மன்னர் விஸ்வநாதனைத் தவிற எந்த பீத்தோவனுக்கு உண்டு? எந்த மொசார்ட்டுக்கு உண்டு? எந்த ஹாலிவுட், பாலிவுட் இசையமப்பாளர்களுக்கு உண்டு? Even for a song, meant to be for sensual pleasure, how on earth does MSV bring in and contain a DIVINE TRANQUILITY ???!!!

இவரைத் தவிற எவர்க்கும் அச்சிறப்பு இல்லை என்பதை இவர் ரசிகர்கள் மார் தட்டி பெருமிதம் கொள்ளும் நிலையை காலம்
தந்துள்ளது. இவர் இசையை நெஞ்சுருகி அகமகிழ்ந்து ரசித்து, இவர் பெருமையை உலகிற்கறியச் செய்ய நேரம் வந்தூள்ளது!

பாடலுகுள் செல்வோம்!

முதல் நொடியிலிருந்தே தன் இசை விளையாட்டைத் துவங்கி இருப்பார் மனுஷர். பன்னணியில் மர்ம உணர்வை உணர்த்தும்
வகையில் "Chords" கொண்டு துவங்கும் முன்னிசை - உடன் சேர்வது ஃப்ளூட் - அதே மர்ம (Mysterious) உணர்வைக் கொண்டு.

முன்னிசையில் இந்த மர்ம உணர்வை அளிக்க அவர் கையாண்ட ராகம் "அமிர்தவர்ஷிணி"!!!! Rolling Eyes Shocked Exclamation Question

எந்த ராகத்தை எங்கு கொண்டு வைத்திருக்கிறார் - ராகத்தின் தன்மை உயரும் வகையில்! இப்பாடல் முழுவதும் அமிர்தவர்ஷிணியா? இல்லை. முன்னிசை வரையில் தான். ஃப்ளூட் ஓடி ஒடி ராகத்துடன் விளையாடிக் கொண்டிருக்க முன்னிசை முடிவில் ஒரு ஒற்றை வயலின் ஒப்பிலா திருவிளையாடல் செய்துவிடும். மத்தியமத்தில் (ம) துவங்கி சுத்த தைவதத்தை (D1) வருடிக்கொண்டு மேல் ஷட்ஜத்திற்கு (ஸ) சென்று பாடலைத் துவங்க அழகாக நிற்கும். முன்னிசை முடிந்து பல்லவி துவங்குவதுதான் அவ்வளவு அருமை! ரம்மியம்! பேரானந்தம்!

அமிர்தவர்ஷினி + சுத்த ரிஷபம் (R1) + சுத்த தைவதம் (D1) = பூர்யதனஸ்ரீ (பந்துவராளி)

இந்த சூக்ஷ்மத்தை நன்கு அறிந்து கொண்டு இவ்வளவு அழகாக முன்னிசை அமிர்தவர்ஷிணியிலிருந்து பல்லவியின் பூர்யதனஸ்ரீ க்கு
மாற்றும் இவர் சத்தியமாக கந்தர்வ லோகத்தைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் !!!!!

"நீராட நேரம் நல்ல நேரம்" என்று சுகமாகத் துவங்கும் பல்லவி. "போராட பூவை நல்ல
பூவை
" என்ற வரி இரண்டாம் முறை வருகையில் பல அற்புத சங்கதிகள் பெற்று அருமையாக ஷட்ஜமத்திகு வந்து
அமரும். Great swift movement from "ப" to "ஸ". "மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை" எனும்
போது ரிதம் சற்று வேகம் பெறுவதை உணரலாம். பாடலில் ஒரு மர்ம தாகம் அதிகரிப்பதையும் உணரலாம்!

நச் என்று கிட்டார் இடையிசையை வர்ணிக்க முதல் சரணம் துவங்கப் பெரும்.

"காலம் பார்த்து வந்தாயோ
கமலம் மலர கண்டாயோ.... ஓ... ஓ... ஓ..

கோலம் காணத் துடித்தாயோ
கூடல் வேதம் படித்தாயோ
"

என்று முடிந்து........

"நானும் கண்டேன் உன்னை
நீயும் கண்டாய் என்னை
"

என்கிற வரிகளில் பூர்யதனஸ்ரீ தேனாகச் சொட்டும். நம் கண்கள் இனிமையைத் தாங்க முடியாமல் கண்ணிரைக்
கொட்டும்
!!!!!!!

இரண்டாம் இடையிசையில் விந்தைகளைச் செய்திருப்பார் மெல்லிசை மன்னர். எலக்ட்ரிக் ஆர்கன் கொண்டு தொடங்கி, பின் ஃப்ளூட் கொண்டு தொடர்ந்து, பன் இரண்டு க்ளேரினட் பார்ட்ஸ் இசையை பிரமாதமாக இசைக்கும். இதயத்துள் உள்ளுணர்வுகளுக்குள் ஊடுருவி, அதில் உறங்கிக்கிடக்கும் அழுத்தங்களுக்கு அமைதி அளிப்பார் இதமாய், அதே இடத்தில் இருக்கும் பரமானந்ததை எடுத்து அள்ளித் தெளிப்பார் பதமாய்!!! உணர்வுகளுக்குள் ஏற்படுத்தும் பூகம்பங்களின் தன்மையை
விவரிக்க இயலாமல் நான் தவிப்பதை நன்கு உணர்ந்திருப்பீர்கள்!!!

இரண்டாம் சரணத்தில் வரும்....

"அருகில் வந்து நீ நீ நீ
விடியும் வரை சொல் சொல் சொல்
"

என்ற வரியின் போது பேஸ் கிட்டார் துள்ளிக் கொண்டு ஓடுவது மிக அழகாகவும் ரிதத்திற்கு அவ்வளவு ஏதுவாகவும் இருக்கும்!

இரண்டாம் சரணம் முடிந்து மூன்றாம் இடையிசையை "அய்யய்யோ" எப்படித்தான் விவரிப்பது. அதன் இனிமையை எப்படிக்
கூறுவது. அதில் இருக்கும் orchestration ஐ எப்படி வார்த்தையில் உரைப்பது.

மூன்றாம் இடையிசையின் புதுமையே அதில் அவர் எடுத்தாண்டுள்ள tones. அதாவது அவர் எடுத்துக் கலவை செய்த வாத்தியக் கருவிகள். A PERFECT BLEND OF INSTRUMENTS!!! முதலில் distortion கிட்டார் கொண்டு துவங்கி, இதமான மெல்லிய எலக்ட்ரிக் பியானோ கொண்டு தொடர்ந்து, ஃளூட்டுடன் வயலின் ஆர்கெஸ்ட்ரேஷன் அறிமுகம் செய்து முடிவாக ஒற்றை clarinet கொண்டு முடித்திருப்பார்.

இவ்வளவு விஷயங்களை இவ்வளவு ஏதுவாக, அழகாக, சிறப்பாக மெல்லிசை மன்னர் எப்படிச் செய்திருக்க வேண்டும் என ஏங்குகிறது அறிவு. பாடல் உருவாக்கத்தின் போது இசையின் மூத்தவள் "வாணி" தன்னை முழுவதுமாக மெல்லிசை மன்னரின் கைகளுக்கு அர்ப்பணித்து, அவரது நாபிக்கமலத்தில் தனது ஸ்வாசத்தை உள் அளித்து "இன்னும் கொஞ்சம் எனை மீட்டடா மகனே" என்று அவள் ஆனந்தக் கட்டளை இட்டிருக்க வேண்டும். இல்லையெனில் இப்படியோர் இனிமையேது? இசையேது?

வாணி ஜெயராமின் தீங்குரல் இனிமைக்கு மறுபெயர் என்றாலும், கண்ணதாசனின் வரிகள் வைரங்கள் என்றாலும், நடிகர் திலகத்தின் ஸ்டைல் பட்டையைக் கிளப்புகிறது என்றாலும், இப்பாடலின் உண்மையான நாயகன் மெல்லிசை மன்னர் தான்!


இப்பாடல் ஒரு அப்பழுக்கற்ற "WILD MYSTICAL BEAUTY".

சரஸ்வதி தேவியுடன் செய்த வேற்று கிரக சஞ்சாரத்தினால்தான் இப்படி ஒரு இசை வேள்வியை மெல்லிசை மன்னரால் நிகழ்த்த முடிந்தது!!!!!

(தொடரும்)
_________________
Ramkumar


Last edited by Ram on Tue Aug 05, 2014 3:00 pm; edited 5 times in total
Back to top
View user's profile Send private message Send e-mail
Sai Saravanan
Philiac


Joined: 10 Jun 2008
Posts: 631
Location: Hyderabad

PostPosted: Tue Aug 05, 2014 3:11 am    Post subject: Reply with quote

Dear Mr.Ram,
Excellent! It is really a 'wild mystical beauty'!

Another unusual feature of this song is the use of VJ as the singer for such numbers, and so perfectly done, blemishless rendering of every note...

A small doubt: the clarinet that you have referred to, I was reading your essay hearing the song, simultaneously, and thought it was a trumpet played with a mute on, at least in the second occurrence? Kindly let us know.

Waiting for more...
Sai Saravanan
Back to top
View user's profile Send private message
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1160

PostPosted: Tue Aug 05, 2014 8:18 am    Post subject: Reply with quote

Dear Sai...

Did you mean second interlude??

If so, on closer listening - I could see both Clarinet & Trumpet playing in parts...

But as far as third interlude I think it is Clarinet.

வாத்தியக் கருவிகளின் வித்தகர் வைத்தி இதைத் தெளிவு படுத்தலாம்.

Thanks for your response, Sai. Glad you liked the write-up.


Thanks!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI
Maniac


Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Tue Aug 05, 2014 1:28 pm    Post subject: Reply with quote

அஹா ராம் அருமையான பதிவு..

நீங்களும் MSV போல unpredictable ஆக இருக்கிறீர்கள். மருத மனம் வீசும் 10 பாடல்கள் என்று எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் இப்படி ஒரு எதிர்பாராத மயக்கம் தரும் மோக பாடல் பற்றிய பதிவு.

ரொம்ப Techinacal ஆகா இல்லாமல் நீங்கள் உணர்ந்த உணர்வினை வெளிபடுத்த கோர்வையாக எழதுவது என்பது மிக கடினம். உணர்வு என்பது, நாம் வெளிபடுத்த வேண்டிய வார்த்தைகளை அடைத்துவிடும். அதையும் மீறி சொற்கட்டுகளால் பாடலை விவரித்த விதம் அற்புதம். வேறு என்ன சொல்ல.

இப்பாடல் குறித்து வெகு நாட்களாக குறிப்பு ஒன்று எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன். MSV பொதுவாக ஒரு பாடலை நல்ல கர்நாடக ராகத்தில் அமைத்தால் அதே ராகத்தினை அதற்கு முற்றிலும் நேர் மாறான காட்சிக்கு பொருத்தி இசை அமைக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளவர் என்பது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ரகுபதி ராகவ ராஜாராம் பாடலின் ராகத்தினை club sequenceக்கு 'love is fine darling' பாடல் மூலம் தந்தது அவரே சொன்ன தகவல்.

இந்த பாடலை கேட்டவுடன் இதுவும் அது போல தான் செய்து இருப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. அது உண்மையே என்பது என் கருத்து. பாடலின் ராகம் பூர்யதனஸ்ரீ (பந்துவராளி) என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். அடைப்பு குறியில் 'பந்துவராளி' என்பது அதனை நிரூபிக்கிறது. 'ஏழு ஸ்வரங்களுக்குள்' பாடல் வந்த பின், வழக்கம் போல MSV க்கு இந்த ராகத்தினையும், மேற்கூறிய பாடலுக்கு நேர்மாறான காட்சியில் பொருத்தி இசை அமைக்கண் வேண்டும் என்று தோன்றியிருக்க வேண்டும். காரணம் 'நீராடும் நேரம் நல்ல' பாடல் படம் 'வைர நெஞ்சம்' என்பது, முதன் முதலில் 'ஹீரோ 74' என்று பெயர் இடப்பட்டு 1974 வருடம் வெளி வரவேண்டியது. ஆனால் சில வருடங்கள் கால தாமதமானதால் அதன் பெயர் மாற்றப்பட்டது.

எனவே 1972 வது வருடம் வந்த 'அபூர்வ ராகங்கள்' படத்திற்கு பின் 1974 வது வருடம் வர வேண்டிய 'ஹீரோ 74' படத்திற்கு 1973 வருடம் COMPOSING நடந்திருக்கும்.

மேலும் இன்னொரு சாட்சி சொல்கிறேன். 'காதல் காதல் என்று பேச ' பாடலில் மதுவந்தி (தர்மவதி) ராகத்தினை sentimental ஆக கொடுத்த அதே MSVதான், அதே ராகத்தில் 'Hello My Dear Wrong Number' என்ற காம ரசத்தையும் கொடுத்தார் என்பதனயும் நினைவில் கொள்ள வேண்டும்.
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1160

PostPosted: Tue Aug 05, 2014 2:31 pm    Post subject: Reply with quote

முரளி மாமா,

தாங்கள் எனது பதிவை "அற்புதம்" என்று கூறி ரசித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

இத்தொடரில் 10 பாடல்களும் 10 வகையான சூழலைச் சேர்ந்தவையாக இருக்கும்.

மெல்லிசை மன்னரின் "டைவர்சிட்டி" மற்றும் "வெரைட்டி" இவற்றை உணர்த்தவே இத்தொடரைத் துவங்கி உள்ளேன்.

போக போக தெரியும்!! Very Happy Very Happy

(I'm not going to restrict myself to just 10 songs.... My idea has expanded multifold.... The series will have atleast 30 themes/genres!

Hoping for the best & resting on everybody's support)
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
parthavi
Philiac


Joined: 15 Jan 2007
Posts: 704
Location: Chennai

PostPosted: Tue Aug 05, 2014 4:51 pm    Post subject: Reply with quote

Ram's probing analysis can be understood and enjoyed better by listening to the song and comparing the two masterpieces. Hence I am giving the youtube link.

http://youtu.be/uvknaw6In7Q

Honestly, I am yet to digest Ram's posting which can be done only by repeated reading.

Murali, I think the original title of Vaira nenjam was Hero 72, not Hero 74.

In Endrum MSV, after the song Ezhy swarangalukkul was played, MSV mentioned 'neeraadum neram' as being set in the same raga and demonstrated using Ananthu. MSV rarely mentions any link of his songs to carnatic raagaas. Here he had compared these two. It appears that the two songs were composed within a short interval and MSV was conscious of using the same raagaa for both the songs.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
N Y MURALI
Maniac


Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Tue Aug 05, 2014 5:30 pm    Post subject: Reply with quote

parthavi wrote:
Ram's probing analysis can be understood and enjoyed better by listening to the song and comparing the two masterpieces. Hence I am giving the youtube link.

http://youtu.be/uvknaw6In7Q

Honestly, I am yet to digest Ram's posting which can be done only by repeated reading.

Murali, I think the original title of Vaira nenjam was Hero 72, not Hero 74.

In Endrum MSV, after the song Ezhy swarangalukkul was played, MSV mentioned 'neeraadum neram' as being set in the same raga and demonstrated using Ananthu. MSV rarely mentions any link of his songs to carnatic raagaas. Here he had compared these two. It appears that the two songs were composed within a short interval and MSV was conscious of using the same raagaa for both the songs.



Thanks Mr. Paarthavi. I was not aware about MSV's information about this song. Thanks again for your detailed information.
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv
Philiac


Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Tue Aug 05, 2014 8:03 pm    Post subject: IT'S INFINITE CHOICE WITH MSV Reply with quote

Hi Ram, Murali,

Yet another Master Piece (I would even call it Master Peace as only MSV's music can bring in real peace unto all of us Very Happy)...

MSV's usage of raagas (always unintended though) have always been a mystery of sort as the path of each song is so unpredictable in nature that seldom does he stay within the raga dharma. But at the same time, any deviation is so carefully negotiated by this Genius of a creator composer that even the seasoned or the knowledgeable listener is always awe struck at his sheer creativity that transcends all barriers laid down in the anals of music!!! No wonder giants like MS or Aruna Sairam have greatly revered his creations.

Now as far as the instruments used in this song are concerned, the prelude has a lilting Combo Organ piece followed by a defeaning Cello that literally gives a go ahead for Vaani Jayram to start... The interludes are dotted with marvellous combo organ & flute pieces seemlessly fused with muted trumpet pieces which no one could ever even conceive leave alone use one. One of the biggest puzzles to confront me which is yet to be answered by anyone is how does MSV choose his instruments and what runs inside his mind when the song is composed and what warrants the usage of particular instrument in a song? For example, the cello piece I mentioned about is something that perfectly sits there as if it had reserved it's place in advance!!!!

Yet another fantastic tit bit on this song by Vaani Jayram as shared with us by her during one of our interactions... In the place where the song goes like this "pothum ena naan kooda, bodhaiyudan nee ada".....she mentioned about the usage of the word "bodhai" which in itself intoxicates the listener while anyone who could have used the same word would have made the listener to puke!!! Such was her inference on our Master's handling of this song and the emphasis he gives for the lyrical & emotional content of a song...

Ram, yet another immortal melody to show the composing prowess of our Master Creator. Another great feature of his music is the evolution that his music has gone through since the 50's to the 80's and beyond. But the indisbutable fact remains that MSV finished all the genres of music known to mankind in the 60's itself (when technology was primitive) while composers of today are still searching for a melody with technology at it's peak!!!

CHEERS

MSV
IS MUSIC!!!

VAIDYMSV

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
VaidyMSV & Sriram Lax
Maniac


Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Tue Aug 05, 2014 8:16 pm    Post subject: Reply with quote

அன்பு ராம்

இவ்வளவு திறமையை உள்ளடக்கி வைத்திருக்கும் நீங்களும் சரஸ்வதியின் செல்ல பிள்ளை தான் -
உங்களின் எழுத்தின் மூலம் நீங்களும் மெல்லிசை மன்னர் , கவியரசு, வாணி அவர்களுடன் பதக்க வாங்கும் போட்டியில் களம் காண்கிறீர்கள் '

எனக்கு மிகவும் பிடித்த இந்த பாடல், ஒரு வெற்றி பெறாத ,மிகத் தாமதமாக வந்த படத்தில் இடம் பெற்றமையினால் , இந்த பாடலுக்கு கிடைக்க வேண்டிய வெற்றிகள் கிடைக்காதது எமக்கு மிக பெரிய வருத்தம்
அந்த வருத்தம் உங்களுடய இன்றைய பதிவு தீர்த்தது என்றால் மிகையில்லை . நிச்சயம் இதை எல்லா ஊடக தளங்களிலும் பதிவு செய்வேன்

வாழ்த்துக்கள் நன்றிகள் பலப்பல
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1160

PostPosted: Tue Aug 05, 2014 10:28 pm    Post subject: Reply with quote

Dear Vaidy,

"MSV's Raga Application is Unintended Though" well said !!

Muted Trumpet - thanks for your clarification. Some how it sounded to me like clarinet.

Yes - it is Master Piece (Peace).

The instruments look as though they reserve a place in advance! Ahaaa.... Excellent way to put it!

Cheers Vaidy!!! You the man - the MSV patriot!!!

Very Happy Very Happy Very Happy

_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram
Devotee


Joined: 23 Oct 2006
Posts: 1160

PostPosted: Tue Aug 05, 2014 10:38 pm    Post subject: Reply with quote

vk1959 wrote:
அன்பு ராம்

இவ்வளவு திறமையை உள்ளடக்கி வைத்திருக்கும் நீங்களும் சரஸ்வதியின் செல்ல பிள்ளை தான் -
உங்களின் எழுத்தின் மூலம் நீங்களும் மெல்லிசை மன்னர் , கவியரசு, வாணி அவர்களுடன் பதக்க வாங்கும் போட்டியில் களம் காண்கிறீர்கள் '

எனக்கு மிகவும் பிடித்த இந்த பாடல், ஒரு வெற்றி பெறாத ,மிகத் தாமதமாக வந்த படத்தில் இடம் பெற்றமையினால் , இந்த பாடலுக்கு கிடைக்க வேண்டிய வெற்றிகள் கிடைக்காதது எமக்கு மிக பெரிய வருத்தம்
அந்த வருத்தம் உங்களுடய இன்றைய பதிவு தீர்த்தது என்றால் மிகையில்லை . நிச்சயம் இதை எல்லா ஊடக தளங்களிலும் பதிவு செய்வேன்

வாழ்த்துக்கள் நன்றிகள் பலப்பல


தங்களின் வெகுவான பாராட்டுக்கள் என்னை நெகிழச்செய்கிறது.

தங்களுக்கு நன்றி!

வாணிக்கு வணக்கம்!!

_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
Sai Saravanan
Philiac


Joined: 10 Jun 2008
Posts: 631
Location: Hyderabad

PostPosted: Wed Aug 06, 2014 1:24 am    Post subject: Reply with quote

Very beautiful and excellent sum up by Vaidy sir! Your analysis of the use of instruments, raga and the meanings that you derive, it has given a completeness to Ram's descriptions.
Thanks,
Sai Saravanan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax
Maniac


Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Wed Aug 06, 2014 5:56 am    Post subject: Reply with quote

face book responses

Kunjitha Swaminathan It certainly makes an interesting reading for us.
9 hrs Unlike 1

ரவி ச்சந்திரன் அபாரமான விவரிப்பு.சாதாரணமாய் ஈஸ்வரியக்காவிற்குப் போகும் பாடல் இது(அவருக்கும் ஒரு பாடல் தந்திருக்கிறார் -அம்மான் மகன் அதுவும் முற்றிலும் மாறுபட்டது)முதலில் வாணியைப் பாடவைத்தால் சிறப்புறும் என்பதன் தீர்க்க தரிசனம்தான் என்ன.இதர சிற்றின்பப் பாடல்களுக்கான வாத்தியங்களோ அதிரும் இசையோ இல்லை.மகுடியைப் போல் சுழலும் இசை வித்தை.சரியான காட்சியும் எழுதும் கவிராயரும்,பாடும் பாடகியும் அமைந்தால் இப்படித்தான் ஒரு பாடல் உயரும்.மின்னுவது என்று ஒரு சங்கதி பாடும் வாணியம்மாவிற்கு வந்தனம்.மன்னன் என்றாலே ஆட்சி செய்பவர் தானே?ஆண்டு விட்டார்



.
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax
Maniac


Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Wed Aug 06, 2014 6:16 am    Post subject: Reply with quote

thank you Mr vaidy

conceiving the idea and on usage of instruments - like you said its a puzzle.
ny number it wont be jarring , and like you said " seemlessly fused "

i tried to find out from him , but Smile was his answer. i hope one day i will make him open up on this subject

A Request -you should take up to explain the instrumention side of the Master's creation

we read on ragas compositions ,but not on instrumentation . pls consider and write a series
thanks for your considerstion
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
N Y MURALI
Maniac


Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Wed Aug 06, 2014 10:13 am    Post subject: Re: IT'S INFINITE CHOICE WITH MSV Reply with quote

vaidymsv wrote:
[b][color=green][size=18]Hi Ram, Murali,

One of the biggest puzzles to confront me which is yet to be answered by anyone is how does MSV choose his instruments and what runs inside his mind when the song is composed and what warrants the usage of particular instrument in a song?



Yes. Vaidy. That is a mystery unlocked so far.
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Goto page 1, 2  Next
Page 1 of 2

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group