"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

How to compose a Song?

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV
View previous topic :: View next topic  
Author Message
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Wed Nov 05, 2014 11:48 am    Post subject: How to compose a Song? Reply with quote

ஒரு பாடலுக்கு இசை அமைப்பது என்பது எப்படி? ஒரு குறிப்பிட்ட ராகங்களின் அடிப்படையில் அல்லது ராகங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு இசை வடிவை உருவாக்கி அதன் தாள கட்டுபாட்டிற்கு உட்பட்டு சொற்கட்டுகளை அமைப்பது ஒரு முறை. மற்றொரு முறை எழுதப்பட்ட சொற்க்கட்டுகளுக்கு இசை சுரங்களை ஒரு ராகத்திலோ அல்லது அதற்கு அப்பாற்பட்டோ அமைப்பது. இது தான் ஆயிரக்கணக்கான இசை அமைப்பாளர்கள் கையாளும் முறை. ஆயினும் திரு MSV அவர்கள் மேற்கூறியவர்களிடமிருந்து சற்று வித்யாசமானவர். இது ஏன் என்றால் அவரை தவிர மற்றவர்கள் ஒரு பாடலின் வார்த்தையிலேயே இசை அடங்கியுள்ளது என்றும், மேலும் காட்சியின் தன்மையினை இயக்குனர் விளக்கும் பொழுது தன் மனத்திரையில் அந்த காட்சி தெரியும் என்றும் அந்த காட்சியிலேயே ஒரு இசை தனக்கு கேட்கிறது என்றும் அதன் அடிப்படையிலேயே தான் இசை அமைப்பதாகவும் கூறுகிறார். அவரை தவிர மற்றவர்கள் எவரும் இவ்வாறு கூறியதில்லை.

சரி அவர் அவ்வாறு கூறுவதற்கு ஒரு சாட்சியாக இந்த பாடலை காணலாம்.

'காசேதான் கடவுளடா' என்ற படத்தில் இயக்குனர் சித்ராலயா கோபு அவர்கள் ஒரு விதயாசமான பாடல் காட்சி பற்றி MSV யிடமும், பாடலை எழுதப்போகும் கவிஞர் வாலி அவர்களிடமும் விளக்குகிறார்.

காட்சி: காதலி தன் காதலனை பூங்காவிற்கு அழைக்க அவர்கள் அங்கு சந்தித்து பேசி கொண்டு இருக்கிறார்கள். அப்போது பூங்காவில் உள்ள வானொலியில் பாடல் வருகிறது. காதலியும் காதலனும் தாங்களே அந்த பாடல் பாடுவது போல புனையப்பட்ட கனவு காட்சி. இவ்வளவு தான். இதில் என்ன வித்யாசம் இருக்கிறது? இது எல்லா படத்திலும் வருவது தான். ஆயினும் இயக்குனர் அந்த கனவு காட்சியை அமைத்த விதம் வித்யாசமானது. பாடலின் பல்லவியில் காதலர்கள் பாடல் கேட்கின்ற வானொலியின் கூம்பு போன்ற ஒலிப்பான் கருவியின் உள்ளே இருந்து பாடுவதாக அமைக்கப்பட்டது.

பின் முதல் சரணத்தில் அவர்கள் ஒரு தொலைபேசி கருவியின் மேலே பாடுவதாக காட்சி அமைக்கப்பட்டது. 2வது சரணத்தில் அவர்கள் பேனா வைக்கும் Pen Stand ல் பாடுவதாக அமைக்கப்பட்டது. இந்த காட்சிக்கான கற்பனை இயக்குனருக்கு எவ்வாறு தோன்றியது? அதன் காரணம் காதலர்கள் பொதுவாக பூங்காவில் சந்திப்பார்கள். மேலும் தொலைபேசியில் பேசுவார்கள். கடிதம் எழுதுவார்கள். இதன் அடிப்படையிலேயே இயக்குனருக்கு இம்மாதிரி வித்யாசமான காட்சி அமைக்க தோன்றியது.

சரி. இப்போது இயக்குனர் இந்த காட்சியின் தன்மையினை வாலி அவர்களுக்கும் MSV அவர்களுக்கும் தெளிவாக விளக்கி உள்ளார் என்பதனை பாடல் வரிகளிலும் மேலும் இசையிலும் தெரியும். அதனை பார்ப்போம்.

பொதுவாக காதலர்கள் ரகசியாமாகதான் பேசிகொள்வார்கள். ஆனால் காட்சியிலோ அவர்கள் பேசிகொண்டிருக்கும் இடம் பொது மக்கள் கூடும் பூங்கா. மேலும் அவர்களின் ரகசிய பேச்சு கனவு காட்சியாக மாறி வானொலியில் ஒலி பெருக்கி மூலமாக வெளிபடுகிறது. எனவே எவ்வளவு தான் அவர்கள் ரகசியமாக பேசினாலும் ஒலி பெருக்கி மூலமாக அதன் ஒலி மேலும் அதிகமாகும் தானே ஒழிய குறையாது. இவ்வாறு வித்யாசமான காட்சிக்கு கவிஞர் வாலி அவர்கள் கொடுத்த பல்லவியின் முதல் வார்த்தையை கவனியுங்கள்.

'மெல்ல பேசுங்கள் பிறர் கேட்க கூடாது!'

என்ன ஒரு பொருத்தமான வார்த்தை. MSV ஒரு நிமிடம் அசந்து போயிருப்பார்.

இவ்வாறு ஒரு சாதரணமான வார்த்தையை அந்த வித்யாசமான காட்சிக்கு பொருத்தியது தான் வாலி அவர்கள் செய்தது. ஒரு கவஞரின் திறமை என்பது தமிழ் மொழியில் உள்ள எத்தனையோ வார்த்தைகளில் சரியான மற்றும் எளிமையான வார்த்தையை சரியான இடத்திற்கு பயன்படுத்துவது. அதில் கண்ணதாசன் மற்றும் வாலி என்ற இரண்டு கவிஞர்கள் தான் முன்னணியில் இருக்கிறார்கள்.


சரி இவ்வாறு இயக்குனரும், கவிஞரும் தங்களின் திறமையினை வெளிபடுத்திய பின் MSV என்ன செய்தார்?

நேரமின்மை காரணமாக அடுத்த பதிவினில் சொல்கிறேன்.
Back to top
View user's profile Send private message Send e-mail
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Thu Nov 06, 2014 6:07 am    Post subject: Songs composed by MSV-TKR Reply with quote

திரு . முரளி அவர்களே,
"மெல்லப்பேசுங்கள்' பாடலில் காதலி தான் காதலனை வழிநடத்த்துவதாக புனையப்பட்ட பாடல். இதனை பல்லவியின் சொற்கள் பறை சாற்றுவது ஒரு மாறுபட்ட சிந்தனை என்றே சொல்லலாம். தங்களின் விளக்கத்‌தை எதிர்நோக்கி காத்‌த்திருக்கிறேன்.
அன்பன் ராமன் மதுரை.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Thu Nov 06, 2014 10:26 am    Post subject: Re: Songs composed by MSV-TKR Reply with quote

madhuraman wrote:
திரு . முரளி அவர்களே,
"மெல்லப்பேசுங்கள்' பாடலில் காதலி தான் காதலனை வழிநடத்த்துவதாக புனையப்பட்ட பாடல். இதனை பல்லவியின் சொற்கள் பறை சாற்றுவது ஒரு மாறுபட்ட சிந்தனை என்றே சொல்லலாம். தங்களின் விளக்கத்‌தை எதிர்நோக்கி காத்‌த்திருக்கிறேன்.
அன்பன் ராமன் மதுரை.


நன்றி Prof ராமன்,
இப்பாடலில்,காதல் விஷயங்களை ரகசியமாக பேச காதலி தன் காதலனுக்கு வழி நடத்துகிறாள் என்று வேண்டுமானால் கொள்ளலாம். ஆயினும் அவன் பேசும் முறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தான் 'மெல்ல பேசுங்கள்' என்ற வார்த்தையின் பொருத்தம்.

பொதுவாக கூச்சம் காரணமாக பெண்கள் தங்களின் உணர்வுகளை மறைத்து பேசுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே 'மெல்ல பேசுங்கள்' என்று பெண்ணும் 'மெல்ல பேசிடவோ' என்று ஆணும் பாடும் முறை பெண்களின் 'வெட்கம்' சார்ந்த அடிப்படையில் வைக்கப்பட்டதாக நான் உணர்கிறேன். இதற்க்கு பல பாடல்களில் சான்று உள்ளது.

மேலும் 'மெல்ல பேசுங்கள் பிறர் கேட்க கூடாது' என்ற காதலியின் அன்பு கட்டளைக்கு காதலனின் பதில் எவ்வாறு உள்ளது? 'மெல்ல பேசிடவோ பிறர் கேட்க கூடாமல்' என்று தான் உள்ளது.

மேலும் 'மெல்ல பேசிடவோ' என்று ஆணின் குரல் இசை முறையில் எவ்வாறு உள்ளது என்பதை என் தொடர் பதிவினில் சொல்கிறேன்.


நன்றி
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Fri Nov 07, 2014 12:28 pm    Post subject: EMOTIONS PACKED Reply with quote

Dear Murali,

Yet another duet of a class of it's own!!! That MSV has revealed several times during our various interactions with him about the music imbibed in the lyric itself is something absolutely unheard of from anyone else as rightly mentioned by you. That God had to identify only MSV and reward him with this special talent is nothing but the greatest Blessing bestowed on our Legend by Kalaivani herself. The song thus born out of MSV's harmonium (nicknamed by me as "Melody Generator") is so aptly packed with every emotion the scene richly deserves is also a wonder of wonders!!!!!!!!!!

The question is, how does he manage to package all these in a nutshell and deliver it with such high quality that we become instant addicts!!! MSV's humbleness is also a hallmark of a True Creator's quality, where the creations are never retained by him for any other purpose except for people like us to enjoy for generations...

CHEERS
MSV IS MUSIC!!!

VAIDYMSV

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Sat Nov 08, 2014 11:51 am    Post subject: Reply with quote

சென்ற பதிவின் தொடர்ச்சி.
பொதுவாக இசை சுரங்களான 'ச ரி க ம ப த நி', மனிதர்கள் பாடக்கூடிய நிலையில் normal pitch என்றும், அதற்கு மேல் நிலையில் high pitch என்றும் அதன் கீழ் நிலையில் low pitch என்றும் வகுக்கபடுகிறது. normal pitch என்பதனை மத்திய ஸ்தாயி என்றும், high pitch உச்ச ஸ்தாயி என்றும், low pitch மந்த்ர ஸ்தாயி என்றும் அழைக்கபடுகிறது. மத்திய ஸ்தாயியை விட உச்ச ஸ்தாயியில் ஒலி அதிக அளவிலும் அதற்க்கு நேர்மாறாக மந்த்ர ஸ்தாயியில் ஒலி குறைந்த அளவிலும் கேட்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

மந்திரம் என்பது எல்லோருக்கும் கேட்கும் முறையில் உச்சரிக்க கூடாது. எனவே தான் குறைந்த ஒலி அளவை கொண்ட low pitch என்பது மந்த்ர ஸ்தாயி எனப்பட்டது.

சரி இப்போது பாடலின் பல்லவி வரிகளான

'மெல்ல பேசுங்கள்' என்ற வார்த்தைகள் எவ்வாறு இசை சுரம் கொண்டு அமைக்கப்பட்டது? அது 'சச நிநி தா' என்று 'ச' என்ற சுரம் மத்திய ஸ்தாயியில் தொடங்கி 'நி' மற்றும் 'தா' என்ற ஸ்வரங்கள் மந்த்ர ஸ்தாயியில் கீழிறங்குவது போல அமைக்கப்பட்டுள்ளது. எனவே ஒலி அளவுகள் குறைந்துகொண்டே போகின்றன. மேலும் 'பிறர் கேட்க கூடாது' என்னும் வரிகள் மந்த்ர ஸ்தாயியில் மேலும் கீழிறங்கி 'க' வரை செல்கிறது. பொதுவாக ஒரு நல்ல பாடகருக்கு மந்த்ர ஸ்தாயியின் 'க' வரை குரல் செல்லும். எனவே. பாடுகின்ற மனித குரல் எவ்வளவு கீழிறங்க முடியுமோ அவ்வளவு கீழிறங்கி இசை சுரங்கள் அமைக்கப்பட்டன.

ஒரு வார்த்தையிலேயே இசை இருக்கிறது என்பதனை MSV எவ்வாறு கண்டு பிடித்துள்ளார் என்பதும் அது வார்த்தைக்கு எவ்வாறு முழு பொருத்தமாக இருக்கிறது என்பதையும் உணர முடியும்.

சரி. இப்போது Prof ராமன் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.

அவர் கூறியது 'காதலி தன காதலனை வழி நடத்தி செல்கிறாள்' என்பது. ஆயினும் அவள் சொன்ன வழியில் காதலன் நடந்தானா என்று பார்க்கலாம்.

'மெல்ல பேசுங்கள் பிறர் கேட்க கூடாது' என்று வழி சொன்ன காதலிக்கு காதலன்

'மெல்ல பேசிடவோ பிறர் கேட்ககூடாமல்' என்று பதில் சொல்லுவது போல வார்த்தை அமைக்கப்பட்டுள்ளது. சரி காதலன் பதில் சொல்லும் வார்த்தையின் இசை முறை எவ்வாறு உள்ளது. 'மெல்ல பேசிடவோ' என்ற வார்த்தைகள் 'பப மம கா' என்று மத்திய ஸ்தாயியில் அமைந்துள்ளது. மந்த்ர ஸ்தாயியை விட மத்திய ஸ்தாயியின் ஒலி நிலை அதிகமாக இருக்கும் என்று நமக்கு தெரியும். எனவே அந்த காதலி சொன்ன வழியில் அவன் நடக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு MSV வேண்டும் என்றே மத்திய ஸ்தாயியில் அமைத்தாரா என்று நாம் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் நிலை இதுதான்.

சரி. "காட்சியிலேயே இசை இருக்கிறது. அதை இயக்குனர் விளக்கும் பொழுது என்னால் அந்த காட்சியினை மனக்கண்ணில் காணும் பொழுது ஒரு இசை கேட்க்கும். அதன் அடிப்படையிலேயே நான் இசை அமைக்கிறேன்" என்று MSV சொன்னார் என்று முன் பதிவில் பார்த்தோம். அதற்கு ஏதாவது சாட்சி இந்த பாடலில் இருக்கிறதா என்பதை அடுத்த பதிவினில் காண்போம்.

நன்றி
Back to top
View user's profile Send private message Send e-mail
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Sat Nov 08, 2014 2:50 pm    Post subject: Songs composed by MSV-TKR Reply with quote

Dear Mr. NYM ,
About 'mella pEsungaL' my observation is that it is an unusual duet.

Yes, the deliberation is begun by the lady character and so the pallavi is

opened by her [in LRE's voice]. I do not say that the man tows her line. He

has his way as usual. But the plan of the lyric suggests that as per this

movie the heroine is much more commanding while the hero is more

submissive and has to look up for small money from the family where the

heroine enters the house-hold as the lady secretary to the rich landlady

under whom the entire household revolves. Therefore the lyric is framed

with the true state of affairs in mind. In fact, MSV's setting of the terminal

word "koodAdhu" in pallavi reinforces the 'friendly command that the lady

issues to the man in love. There are other interesting facets which we can

consider after your apprisal of this composition. Anyway I certainly enjoy

your line of thought as well.


Regards K.Raman Madurai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group