"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Monkey on my head
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV
View previous topic :: View next topic  
Author Message
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Tue Mar 10, 2015 1:33 pm    Post subject: Reply with quote

அன்பு முரளி அவர்களே,

MSV, ச-ம-ச ஸ்ருதியில் அமைத்தார் என்பது நாம் அரிதியிட்டு கூறமுடியாது. அது நம் அனுமானமாக வேண்டுமானல் இருக்கலாம். ச-ம-ச ஸ்ருதியை நாம் தான் வைத்து பாடி "உள்ளத்தில் நல்ல உள்ளம்", சக்ரவாகத்தை விட (ச-ப-ச) விட நன்றாக இருக்கிறது என்று கூறுகிறோம்.

அதனால், திரு.லால்குடி ஜெயராமன் சொல்லுவார். ஒரு ஆலாபனை செய்து என்ன ராகம் என்று கேட்டால், அவர் சொல்லுவார், தெரியாது!!! என்ன ராகமாக வேண்டுமானலும் இருக்கலாம். முதலில் உன் ஆதார ஸ்ருதியைக் கூறு. பின் ராகம் சொல்லுகிறேன் என்பார்!!! சினிமாப்பாடல்களில் இது தான் நடக்கிறது.

உள்ளத்தில் நல்ல உள்ளம் ச-ம-ச ஸ்ருதியில் வைத்தால், நம் மனம் ம -சவாக வரிப்பாதல், சரசாங்கியாகத்தான் தொனிக்கும். சரசாங்கியை அடையாளம் தெரியாதவர்களுக்கு, சக்ரவாகமே "different shade" ஆகத்தோன்றும். இது தான் உண்மை...

உலகில் யார் ச-ம-ச வைத்தாலும், ம - ச ஆகிவிடாது. நம் மனம் தான் " ம" வை ஆதார ஸ்ருதியாக, அதாவது ஸ வாக வரிக்கிறது. மறுபடியும் கூறுகிறேன். இது MIND செய்கின்ற வேலை...
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Tue Mar 10, 2015 5:04 pm    Post subject: Reply with quote

அன்புள்ள சம்பத் அவர்களே,
ஒரு கட்டத்தில் இணைந்த கருத்து கொண்ட நாம் இவ்விடத்தில் வித்யாசமாக சிந்திக்கிறோம். அதில் தவறில்லை. உங்கள் கருத்துக்களை நான் மதிக்கிறேன். I respect your views.

இதுவரை நாம் பரிமாறிய கருத்துகளை சுருக்கமாக கூறுகிறேன்.
மேற்கூறிய 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' மற்றும் 'மகாராஜன் உலகை ஆளலாம்' என்ற 2 பாடலையும் 'D'' என்ற ஸ்வரத்தை ஆதார ஸ்வரமாக கொண்டு அமைக்கப்பட்டது.(இங்கு 'மகாராஜன்' பாடல் 'D' ல் என நான் கொண்டது ஒரு பொதுதன்மைக்கு தான். அது இப்பதிவினை புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்பதினால்) எனவே 'D' முதல் 'D' வரை உள்ள ஸ்வர கோர்வையை ச-ப-ச அதாவது 'D-A-D' என்று பஞ்சம ஸ்ருதியாகவும் வைத்து பாடலாம். அல்லது 'D-G-D' என்று 'மத்யம' ஸ்ருதியாகவும் வைத்து பாடலாம். இரண்டிலும் தவறில்லை. அது பாடுபவரின் திறன் பொருத்தது.

என்கருத்து படி அது 'ச-ப-ச' அதாவது 'D-A-D' அல்லாமல் 'D-G-D' என்று மத்யம ஸ்ருதியில் அமைக்கப்பட்டது என்பது. மேலும் கர்நாடக சங்கீத முறைப்படி இவ்வாறு மத்யம ஸ்ருதி கொண்டு அமைக்கப்படும் பொழுது 'ம1' என்ற 'G' ஸ்வரம் 'ச' ஆக மாறும் என்ற விதி முறைப்படி அல்லாமல் 'D' என்ற ஸ்வரமே 'ச' ஆக மாறாமல் இருக்கிறது. எனவேதான் இது 'சக்ரவாகம்' ராகம் போல உணர்வூட்டி, பொதுவாக அதன் அடிப்படை ஸ்ருதியான ச-ப-ச என்ற 'பஞ்சம' ஸ்ருதி அல்லாது மத்யம ஸ்ருதி போல உணர்வை அளிக்கிறது. எனவே இது ஒரு Deliberate attempt என்பது என் வாதம்.

இதே போல 'மகாராஜன் உலகை ஆளலாம்' பாடலும் 'D' என்ற ஸ்வரத்தை சட்ஜமாக கொண்டு ச-ப-ச என்று அதாவது 'D-A-D' என்று பஞ்சம ஸ்ருதி கொண்டு அமைக்கபடாமல் ச-ம1-ச அதாவது 'D-G-D' என்று மத்யம ஸ்ருதி கொண்டு அமைக்கப்பட்டது.

இதனை ஏன் கூறுகிறேன் என்றால் இதே ராகத்தில் அமைந்த 'மாதவி பொன் மயிலாள்' என்ற பாடல் 'ச-ப-ச' கொண்டு அதாவது 'D' ஆதார ஸ்ருதியில் 'D-A-D' என்று பஞ்சம ஸ்ருதி கொண்டு அமைக்கப்பட்டது.

Again it is a deleberate attempt by the composer.


ஆனால் நீங்கள் சொல்வது, MSV, ச-ம-ச ஸ்ருதியில் அமைத்தார் என்பது நாம் அரிதியிட்டு கூறமுடியாது. அது நம் அனுமானமாக வேண்டுமானல் இருக்கலாம். அதற்கு நீங்கள் கூறும் விளக்கம் அது 'மனம்' சம்பந்தப்பட்டது. இதே பாடலை ச-ப-ச என்று பஞ்சம ஸ்ருதி வைத்து பாடினாலும் இதே தான் கேட்கும். எனவே இது 'மனம்' சம்பந்தப்பட்டது.


ஆயினும் நான் கூறும் மறுப்பு என்னவென்றால், அவ்வாறெனில் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடல் துவக்கம் 'மேல் ச' என்ற ஸ்வரத்தில் தொடங்குகிறது. ஏனெனில் கர்நாடக சங்கீத முறைப்படி 'ம1' என்ற 'க' ஸ்வரம் 'ச' என்ற ஆதார ஸ்ருதியாக மாறினால் பாடல் தொடங்கும் ஸ்வரமான 'மேல் ச' என்ற ஸ்வரம் 'ப' ஸ்வரமாக மாறிவிடும் என்பதே.

ஆயினும் அதற்கும் நீங்கள் கூறும் விளக்கம் அவ்வாறும் பாடலாம் என்றும் It gives different color.என்றும் கூறுகிறீர்கள்.

ஒப்புகொள்கிறேன். அவ்வாறெனில் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடலின் துவக்க ஸ்வரம் 'ச' விலிருந்து 'ப' ஆக விடாதா? அவ்வாறு மாறினாலும் அதனை 'ப' என்றே சொல்லலாமா? நீங்கள் கூறும் விளக்கத்திலிருந்து அவ்வாறும் கொள்ளுவதில் தவறில்லை என்று தோன்றுகிறது.

எனவே இதனை கர்னாடக சங்கீதம் விதிமுறை கொண்டு இல்லாமல் மெல்லிசை முறை கொண்டு பேசுவோம்.

மேற்கூறிய 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடலில் 'D' என்பது தான் ஆதார ஸ்ருதி. இந்த 2 பாடல்களிலும் அந்த ஆதார ஸ்ருதியை root ஆக கொண்ட chordsகள் தவிர்க்கபட்டிருகின்றன. அதாவது 'D' MAJOR தவிர்க்கபட்டிருக்கிறது. அது போலவே 'மகாராஜன் உலகை ஆளலாம்' பாடலில் அதன் ஆதார ஸ்ருதியான 'D' ஸ்வரத்தை root ஆக கொண்ட 'D' minor தவிர்க்கப்பட்டு உள்ளது.

அதற்கு பதிலாக மேற்கூறிய 2 பாடல்களிலும் ஆதார ஸ்ருதி என்ற 'D' ஸ்வரத்தின் மத்யம ஸ்வரமான 'G' என்ற ஸ்வரத்தின் chordsஆன 'G' MAJOR chords பிரதானமாய் எடுக்கபட்டிருக்கிறது. இந்த scaleல் 'G' MAJOR வருவது normal தான் என்றாலும், ஆதார ஸ்ருதியின் 'D' MAJOR மற்றும் 'D' minor தவிர்க்கப்பட்டது. ஆயினும் 'மாதவி பொன் மயிலாள்' பாடலில் 'D' minor தவிர்க்கபடவிலை.

எனவே தான் இதனை 'Deliberate attempt' என்று கூறுகிறேன்.

நன்றி.
Back to top
View user's profile Send private message Send e-mail
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Tue Mar 10, 2015 6:30 pm    Post subject: Reply with quote

அன்பு முரளி அவர்களே,


நீங்கள் கூறும் வாதத்திற்கே வருகிறேன். அப்போதும் நான் கூறுவதுதான் நடக்கிறது.

Western chord டே, எடுத்துப்போம். பாடல் D யில் ஆரம்பிக்கிறது. அதாவது 'ச'. நீங்கள் கூறுவது என்னவென்றால், D major, D minor அறவே நீக்கப்பட்டு, G Major உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பதே. சரியா?

G major chord G B D (ச-க-ப - இதை பலமுறை நீங்களே எழுதியிருக்கிறீர்கள் - சரியா?) - அப்படியிருக்கும் பட்சத்தில் "D' note "ப' தானே. அப்போது G - note ச தானே. இந்த கருத்தில் இருந்து மாறுபடுகிறீர்களா? மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அப்போது அந்த scale ஸரசாங்கி ஆகிவிடுகிறது. உங்கள் மனதில் இருக்கும் சக்ரவாகம் different ஆகக்கேட்கிறது. MSV யே இதை deliberate ஆகப்பண்ணியிருந்தாலும் நான் கூறுவது தான் நடக்கிறது.
Back to top
View user's profile Send private message Send e-mail
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Tue Mar 10, 2015 7:42 pm    Post subject: Reply with quote

அன்பு முரளி அவர்களே,


ஒன்றை clarify செய்துவிடுகிறேன். Western Music Theoryyai, பொறுத்தவரை, Major Triad Chord - கீழ் கண்டவாறு construct செய்யப்படுகிறது.


Root - Major 3rd - Perfect 5th. ஒவ்வொரு Major chord இப்படித்தான் construct செய்யப்படுகிறது.

C Major - C - E - G (Root - Major 3rd - Perfect 5th)

D Major D - F# - A (Root - Major 3rd - Perfect 5th)

G Major G - B- D (Root - Major 3rd - Perfect 5th )

இப்போது, C major Scale பொறுத்தவரை G major (ப-நி-ரி).. அதே, G major, D major scale பொறுத்தவரை (ம-த-ச). இவ்வாறு நாம் சொல்வது, different ஆதார ஸ்ருதி இருப்பதால் தான். Western musicல் இவ்வாறு அவர்கள் கூறுவதில்லை.

G major என்றால், G தான் root. D அதனுடைய perfect fifth. அதாவது, நம் understandingல், G - ச, D - ப. இதில் எந்த மாற்றமும் இல்லை.
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Wed Mar 11, 2015 11:10 am    Post subject: Reply with quote

S.SAMPAT wrote:
அன்பு முரளி அவர்களே,


நீங்கள் கூறும் வாதத்திற்கே வருகிறேன். அப்போதும் நான் கூறுவதுதான் நடக்கிறது.

Western chord டே, எடுத்துப்போம். பாடல் D யில் ஆரம்பிக்கிறது. அதாவது 'ச'. நீங்கள் கூறுவது என்னவென்றால், D major, D minor அறவே நீக்கப்பட்டு, G Major உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பதே. சரியா?

G major chord G B D (ச-க-ப - இதை பலமுறை நீங்களே எழுதியிருக்கிறீர்கள் - சரியா?) - அப்படியிருக்கும் பட்சத்தில் "D' note "ப' தானே. அப்போது G - note ச தானே. இந்த கருத்தில் இருந்து மாறுபடுகிறீர்களா? மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அப்போது அந்த scale ஸரசாங்கி ஆகிவிடுகிறது. உங்கள் மனதில் இருக்கும் சக்ரவாகம் different ஆகக்கேட்கிறது. MSV யே இதை deliberate ஆகப்பண்ணியிருந்தாலும் நான் கூறுவது தான் நடக்கிறது.


அன்புள்ள சம்பத் அவர்களே,
G major chord G B D (ச-க-ப) என்பது 'G' ஐ ஆதார ஸ்ருதியாக வைத்துகொண்டால் சரிதான். ஆனால் இதன் ஆதார ஸ்ருதி 'D' தானே. எனவே எனக்கு 'D' என்னும் ஆதார ஸ்ருதிக்கு G மேஜர் (G B D) என்பது ம1-த2-ச ஆக கேட்கிறது. உங்கள் கருத்துப்படி 'D' note 'ப' வானால், அதே 'G' note 'ச' ஆக மாறிவிடுகிறது. எனவே 'D' என்னும் இடத்தில இருந்த ஆதார ஸ்ருதி உங்கள் கருத்துப்படி 'G' ஆக மாறிவிடுகிறது.
இது கர்னாடக சங்கீதத்தின் இலக்கணப்படி அமைகிறது. ஆயினும் நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன். இவ்வாறு ஆதார ஸ்ருதியாக 'D' என்ற ஸ்வரதையே கொள்ளவேண்டும் என்று. அப்போது தான் G மேஜர் என்பது ச-ம1-த2 ஆக கேட்கும். ஆனால் கர்னாடக சங்கீத முறைப்படி இது மத்யம ஸ்ருதி கொண்டு அமைக்கப்பட்டது. எனவே இதன் மத்யமம் சட்ஜமமாகும் என்ற விதிப்படி கொண்டால் நீங்கள் கூறியதுபோல இதே 'G' மேஜர் ச-க2-ப ஆக தான் கேட்கும்.

எனவே இப்பொழுது மீண்டும் துவங்கிய இடத்திற்கே வந்துவிட்டோம். அதாவது இதில் 'D' ஆதார ஸ்ருதியா அல்லது 'G' ஆதார ஸ்ருதியா?

கர்நாடக சங்கீதத்தின் விதிப்படி அதாவது மத்யம ஸ்ருதியில் 'ம1' என்ற ஸ்வரம் 'ச' ஆக மாறிவிடும் என்ற நிலையில் இதில் 'G' தான் ஆதார ஸ்ருதி. ஆயினும் அவ்வாறு விதிப்படி இல்லாமல் கொண்டால் அப்போது இதில் 'D' தான் ஆதார ஸ்வரம்.

'D' என்று ஆதார ஸ்ருதி கொண்டால் G மேஜர் என்பது ம1-த2-சா ஆக கேட்கும். அதுவே 'G' ஆதார ஸ்ருதி என்று கொண்டால் அதே G மேஜர் 'ச-க2-பா ஆக கேட்கும்.

எதை ஆதார ஸ்ருதியாக கொள்வது என்பது கேட்பவர் மன நிலையை பொருத்தது என்று நீங்கள் விளக்கம் கூறுகிறீர்கள். உண்மை. எனவே இந்த எண்ண பரிமாற்றங்களை இத்துடன் முடித்து கொள்ளலாம் என்று நினைக்கிறன்.

ஆயினும் நீங்கள் கூற விரும்புவது ஏதாவது இருந்தால் கூறவும். அதன் பிறகு இந்த பதிவின் தொடர்ச்சி பகுதியை துவங்குகிறேன்.

நன்றி
Back to top
View user's profile Send private message Send e-mail
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Wed Mar 11, 2015 5:27 pm    Post subject: Reply with quote

அன்பு முரளி மற்றும் அனைத்து MSV ரசிக பெருமக்களே,


உலகில் இந்த ராக concept பாரத தேசத்தில் பிரதான்யமாக இருக்கிறது. Western Musicல் வெறும் Major, minor than. Modes இருக்கிறது. ஆனால் நம்மைப்போல், ராக classification elaborate ஆக வேறு எந்த musicலேயும் இல்லை.

கேள்வி ஞானத்தால், நம் மனம், கர்னாடக இசைக்கேட்டுக்கேட்டு, பல ராகங்கள் நம்மை அறியாமலே நம் மனதில் பதிந்து பழக்கப்பட்ட காரணத்தால், ஒரு பாடலைக்கேட்க மாத்திரத்திலேயே, ஆதார ஸ்ருதியில்லாமலே, இது இன்ன ராகம் என்று கூறிவிடுகிறது. இது நம்மில் பல பேருக்கு நடந்திருக்கும் என்று நம்புகிறேன். உண்மையா? இல்லையா?

நான், நம் நண்பர், மூத்த ரசிகர் திரு. R V S மணி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னார். "நானும், என் நண்பர் வெங்கட்ரமணியும் 1979ல், நம்ம ஊரு சிங்காரி கேட்ட மாத்திரத்திலேயே , நான் சொன்னேன், வெங்கட்ரமணி, ஹிந்தோளம் தானே என்றேன். அவனும், ஆமாண்டா மணி கரெக்ட் அப்படின்னான்".

இதிலிருந்து என்ன தெரிகிறது, நம் பழக்கத்தால் மனம் ஒரு ஆதார ஸ்ருதியை அதுவாகவே தேர்ந்தெடுத்து, ஹிந்தோளம் என்ற முடிவுக்கு வந்து விட்டது.

ஆனால், நான், அந்த பாடலை கேட்டால், எனக்கு சுத்த தன்யாசி ஆகக்கேட்கிறது. இதற்கும் இருவரும் "Keyboard, Guitar" என்று எதையும் வைத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் மணி சார் மனம் எடுத்துக்கொண்ட ஆதார ஸ்ருதி வேறு. என் மனம் எடுத்துக்கொண்ட ஆதார ஸ்ருதி வேறு. அவர் தவறா? நான் தவறா? இருவருமே தவறில்லை. இதனால் தான், இந்த சினிமா பாடல், இந்த ராகம், இந்த scale என்று எழுதுவதையே நான் விட்டு விட்டேன்.

முரளி, இந்த discussionல் பங்கு கொண்டமைக்கு நன்றி. விடை பெறுகிறேன் . வணக்கம்
Back to top
View user's profile Send private message Send e-mail
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Wed Mar 11, 2015 5:37 pm    Post subject: Reply with quote

அடாட!!! அன்பு முரளி அவர்களே, உங்கள் இந்த postingகே , நம்ம ஊர் சிங்காரியில் தான் ஆரம்பித்திருக்கிறது என்பதை இப்போது தான் பார்த்தேன்!!!!!!!!!!! (மணி சாருக்கு நன்றி).

நானும் நீங்களும் இதில் ஒன்றாய் தான் சிந்தித்திருக்கிறோம். இதில், நாம் ஒத்துப்போயிருக்கிறோம் என்பதில் எனக்கு சந்தோஷம்.

நன்றி. வணக்கம்.


Last edited by S.SAMPAT on Thu Mar 12, 2015 9:24 am; edited 1 time in total
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Wed Mar 11, 2015 5:47 pm    Post subject: YOU HAVE NO RIGHTS TO QUIT Reply with quote

Hello Sampath,

How can you just ditch us like this?? The interaction between you & Murali may not enlighten a musical illiterate like me but I am sure, there are many in our forum to whom your writings will be of immense use. All I understood about MSV's music in particular was that none of his creations were based on a particular scale or a raga or for that matter anything to do with musical grammar. His creations have always been instantly spontaneous, (ravichandran inspired phrase) (appa, enna emphasis, sabhashda vaidy!!) and to him lyrics & the situation are the two biggest driving forces behind. Hence his music is delivered with very high emotions where none of the set theories are applicable is my humble understanding. Learners, please correct me if I am wrong. All the discussions on other parameters of his music may hence be part of an insatiable thirst to improve one's knowledge is also my other humble opinion.

By the way Sampath, who let you go in the first place?? Please take back your Vanakkam and begin from "Vanakkam, pala murai sonnen, intha sabayinar munney"!!!!

CHEERS

MSV IS MUSIC!!!

VAIDYMSV


_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Thu Mar 12, 2015 9:19 am    Post subject: Reply with quote

Dear Vaidy


As you said, MSV's music creations are instantly spontaneous...


என்னைப்பொறுத்தவரை, உள்ளத்தில் நல்ல உள்ளம் சக்ரவாகம் scale தான் பொறுத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஏனெனில், உள்ளத்தில் நல்ல உள்ளம் - கர்ணன் என்பதை emphatic ஆக சொல்ல வேண்டும் என்றால், அது மேல் "ஸ"வில் ஆரம்பித்தால் தான் பொறுத்தம்.

என் சிற்றறிவுக்கு எட்டிய வரை, சக்ரவாகம், ஆஹிர் பைரவியில் அமைந்த பாடல்கள் எதுவும் மேல் ஸட்ஜத்தில் ஆரம்பிக்கப்படவில்லை.

சுகுண முலே, எடுலப்ரோது - தியாகராஜ ஸ்வாமி

கஜானனயுதம் - முத்துஸ்வாமி தீஷிதர் (வேகவாஹினி என்று பெயர்)

ஈசனே இந்த (சுகுண முலே tune) - பாபனாசம் சிவன்

பிபரே ராமரசம் - சதாசிவ ப்ரம்மேந்த்ராள் (tuned by Balamurali)

MSV தான் மேல் ஸட்ஜத்தில் ஆரம்பித்திருக்கிறார்.
Back to top
View user's profile Send private message Send e-mail
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Thu Mar 12, 2015 9:29 am    Post subject: Reply with quote

நானும் மணி சாரும் நம்ம ஊர் சிங்காரி பற்றி பேசியது. எனக்கு அது சுத்த தன்யாசியாக கேட்டது எல்லாம், நேற்று (11-3-2015) மாலை 4 மணியளவில் நடந்தது.


நான், முரளியின் போஸ்டிங்கின் ஆரம்பமே நம்ம ஊர் சிங்காரியில் தான் ஆரம்பித்திருக்கிறது என்பதைப்பார்த்தது இந்த discussionக்கு அப்புறம் தான். அதாவது நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில் தான்!!!
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Thu Mar 12, 2015 12:32 pm    Post subject: Reply with quote

அறிவாளிகளை 3 ரகமாக பிரிக்கலாம் என்பது என் கருத்து.

முதல் ரகம்.
ஒரு பொருளை பற்றி அறிந்தவன். ஆயினும் தான் அறிந்ததே சரி என்று முடிவு சொல்லாமல். திறந்த மனதோடு மற்ற கருத்துகளையும் ஏற்று சீர்தூக்கி பார்த்து தெளிவு பெறுபவன். 'கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு' என்ற கருத்தை ஏற்பவன்.

எனவே இவ்வாறு அறிந்தவன் அறிவாளி.

இரண்டாம் ரகம்.
ஒரு பொருளை பற்றி அறியாதவன். அது அவன் விருப்பம் மற்றும் மற்ற சூழலை சார்ந்து இருக்கலாம். ஆயினும் மற்றொருவர் கூறும் அந்த பொருளை பற்றி அறியாததால் இது பற்றி கருத்து ஒன்றும் கூறாமல் ஒதுங்கி விடுவான். அவ்வாறு அவன் கருத்து கூறாமல் இருப்பது 'தான் அந்த பொருளை பற்றி அறிவு பெறவில்லை' என்று அறிந்ததனால் தானே. எனவே அவ்வாறு அறிந்ததனால் அறியாதவனும் அறிவாளியே.

மூன்றாம் ரகம்.
மடையன். ஒரு பொருளை பற்றி சிறிதும் அறியாதவன். ஆயினும் தான் அறியாத பொருளை பற்றி 'இது தேவையா அல்லது தேவை இல்லையா' என்ற வலிய வந்து கருத்து கூறுவான். அவ்வாறு அவன் கருத்து கூறுவது 'இது தேவை அல்லது தேவை இல்லை' என்பதனை அறிவை கொண்டே அல்லவா அறிகிறான்.

எனவே மடையனும் அறிவாளியே.
Back to top
View user's profile Send private message Send e-mail
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Thu Mar 12, 2015 4:50 pm    Post subject: Reply with quote

அன்பு முரளி அவர்களே,


உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது, சங்கீதத்தில் பலது கற்று தெளிய வேண்டும் என்ற ஆர்வம் தான். அதற்காக, விஷயம் தெரிந்தவர்கள் கருத்துக்களை மட்டுமே கேட்டு, அது சரி என்று உடனே ஒப்புக்கொள்ளாமல், அது சம்பந்தப்பட்ட புத்தகங்களை படித்து, மேலும் சில விற்பன்னர்களிடம் படித்ததை பகிர்ந்து கொண்டு, உங்கள் அறிவு, அனுபவம்,மனம் காண்பிக்கும் முடிவை ஏற்றுக்கொள்கிறீர்கள்.

அதற்கு, மாற்றுக்கருத்து இருக்கலாம். நானும் நீங்களும் கருத்தால் வேறுபடலாம். அது பற்றி பரவாயில்லை.


ஆனால், இதற்குப்பின் இருக்கும் உங்கள் Passion, உழைப்பு ஆகியவை மெச்சத்தகுந்தவை.

அன்புடன்
சம்பத்
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Thu Mar 12, 2015 5:35 pm    Post subject: Reply with quote

அன்புள்ள சம்பத் அவர்களே.
உங்கள் மதிப்பீட்டிற்கு மிக்க நன்றி. இன்னும் சொல்லபோனால் நம் தளத்தில் தான், நான் அதிகமாக கற்றுக்கொண்டது. 'சக்ரவாகம்' ராகத்தில் அமைந்த சில கீர்த்தனைகளை சுட்டிக்காட்டி MSV சற்றே வித்யாசமாக மேல் சட்ஜமத்தில் ஆரம்பிக்கிறார் என்பதெல்லாம் உங்களை போன்ற நல்ல கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை தெரிந்தவர்கள் மூலம் தான் எங்களை போன்றவர்கள் தெரிந்து கொள்ள முடியும். மிக்க நன்றி.

ஆயினும் சென்ற பதிவில் நீங்கள் சுட்டிக்காட்டிய ஒரு விஷயத்தை மீண்டும் quote செய்கிறேன்.

இந்த விஷயமாக நம் எண்ண பகிர்வினை முடித்துகொள்ளலாம் என்று நான் முன்பே கூறியிருந்தாலும், உங்கள் அனுமதியுடன் நான் சொல்ல வந்த விஷயம்.

Quote:
Sampath quote

அன்பு முரளி அவர்களே,

நீங்கள் கூறும் வாதத்திற்கே வருகிறேன். அப்போதும் நான் கூறுவதுதான் நடக்கிறது.

Western chord டே, எடுத்துப்போம். பாடல் D யில் ஆரம்பிக்கிறது. அதாவது 'ச'. நீங்கள் கூறுவது என்னவென்றால், D major, D minor அறவே நீக்கப்பட்டு, G Major உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பதே. சரியா?

G major chord G B D (ச-க-ப - இதை பலமுறை நீங்களே எழுதியிருக்கிறீர்கள் - சரியா?) - அப்படியிருக்கும் பட்சத்தில் "D' note "ப' தானே. அப்போது G - note ச தானே. இந்த கருத்தில் இருந்து மாறுபடுகிறீர்களா? மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அப்போது அந்த scale ஸரசாங்கி ஆகிவிடுகிறது. உங்கள் மனதில் இருக்கும் சக்ரவாகம் different ஆகக்கேட்கிறது. MSV யே இதை deliberate ஆகப்பண்ணியிருந்தாலும் நான் கூறுவது தான் நடக்கிறது.


'D' யை ஆதார ஸ்ருதியாக கொண்ட சக்ரவாகம் பாடலில் மத்யம ஸ்ருதி கொண்டு பாடும் பொழுது 'G-B-D' என்பது ச-க2-பா தானே என்று நீங்கள் கூறினீர்கள்.

ஆயினும் அதே நிலை 'மகாராஜன் உலகை ஆளலாம்' பாடலுக்கும் அமைந்தால் 'கரஹரப்ரியா' ராகத்திற்கும் வராதே. அதில் 'க2' என்ற ஸ்வரம் தான் வராதே. அப்படியென்றால் அதனை 'கரஹரப்ரியா' என்று சொல்லுவது சரியா அல்லது 'ஹரிகாம்போஜி' என்று சொல்லுவது சரியா? உங்கள் கருத்து என்ன?

நன்றி
Back to top
View user's profile Send private message Send e-mail
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Thu Mar 12, 2015 6:33 pm    Post subject: Reply with quote

அன்பு முரளி அவர்களே,


சக்ரவாகத்தில் வரும் chords D major and G major..

ஆனால், கரஹரப்ரியாவில் வரும் chords D minor ( Root - minor 3rd- Perfect 5th). அதாவது நம் understandingல் (ச-க1-ப) and G major (Root-Major 3rd-Perfect 5th அதாவது ச-க2-ப). எனவே, Dயை ஆதார ஸ்ருதியாகக்கொண்டால், கரஹரப்ரியா. G யை ஆதார ஸ்ருதியாகக்கொண்டால் ஹரிகாம்போஜி. Hope your question is clarified.

அன்புடன்
சம்பத்
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Fri Mar 13, 2015 11:28 am    Post subject: Reply with quote

S.SAMPAT wrote:
அன்பு முரளி அவர்களே,


சக்ரவாகத்தில் வரும் chords D major and G major..

ஆனால், கரஹரப்ரியாவில் வரும் chords D minor ( Root - minor 3rd- Perfect 5th). அதாவது நம் understandingல் (ச-க1-ப) and G major (Root-Major 3rd-Perfect 5th அதாவது ச-க2-ப). எனவே, Dயை ஆதார ஸ்ருதியாகக்கொண்டால், கரஹரப்ரியா. G யை ஆதார ஸ்ருதியாகக்கொண்டால் ஹரிகாம்போஜி. Hope your question is clarified.

அன்புடன்
சம்பத்



அன்புள்ள சம்பத் அவர்களே,

இப்போது மேற்கூறிய பாடலில் 'கரஹரப்ரியா' பாடலை எடுத்துகொள்ளுங்கள். இந்த பாடலின் வார்த்தைகளுக்கு அமைக்கப்பட்ட இசை முறையினை அறிந்து இருப்பீர்கள் என்றாலும், அதனை மீண்டும் நினைவு கொள்ளுங்கள். குறிப்பாக சரணம் முடியும் தருவாயில் வரும் ஹம்மிங்ல் 'D' என்ற ஆதார ஸ்ருதிகொண்டு அமைந்த இந்த பாடலில் ஹை பிட்ச் 'F' வரை செல்கிறது. அதாவது உச்ச ஸ்தாயி சுத்த காந்தாரம் கேட்கிறது. இந்த அடிப்படை தகவலை கொண்டு இதனை நீங்கள் கூறியபடி இரண்டு நிலையிலும் காணலாம்.

'D' என்பது ஆதார ஸ்ருதி - இது கரஹரப்ரியா ராகம்.

இந்த நிலையில் இது கரஹரப்ரியா என்னும் ராகமாக கொள்ளபடுகிறது. ஆயினும் இந்த ராகம் பொதுவாக 'பஞ்சம' ஸ்ருதி கொண்டு அமைக்கப்படும். ஆயினும் இந்த பாடலில் அந்த அடிப்படை இலக்கணம் மாற்றப்பட்டு 'மத்யம' ஸ்ருதி கொண்டு அமைக்கப்பட்டது. இவ்வாறு மத்யம ஸ்ருதி கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்று நான் கூறுவதன் காரணம் இதில் பஞ்சம ஸ்ருதி என்பதன் அடிப்படையான (ச-க1-ப) என்ற 'D' minorதவிர்க்கப்பட்டு, 'D' ஸ்வரத்தின் 4வது ஸ்வரமான மதயம ஸ்வரம் என்ற 'G' ஸ்வரத்தின் அடிப்படையான (ம1-த2-ச) என்று கொள்ளப்பட்டது. மேலும் இதனை (ம1-த2-ச) என்று கொள்ளுவது, 'D' என்பதை ஆதார ஸ்ருதியாக கொள்ளும் போது தான். ஆனால் கர்னாடக சங்கீத இலக்கணப்படி எப்போது ஒரு ராகம் 'பஞ்சம' ஸ்ருதியிலிருந்து 'மத்யம' ஸ்ருதிக்கு மாறியதோ, அப்போதே அதன் ஆதார ஸ்ருதி, முதலில் இருந்த சட்ஜமதிருந்து மாறி, மத்யம ஸ்வரத்தை ஆதார ஸ்ருதியாக கொள்கிறது. ஆனால் இங்கு 'D' என்ற முந்தைய நிலையில் இருந்த சட்ஜத்தையே ஆதார ஸ்ருதியாக கொள்ளுவதால் அந்த நிலையிலும் இது கர்னாடக சங்கீத இலக்கணத்தை தாண்டுகிறது. மேலும் இந்த பாடலில் நான் முன்பே கூறியது போல சரணத்தின் முடிவில் வரும் ஹம்மிங்ல் ஹை பிட்ச் 'F' ஸ்வரத்தை தொடுகிறது. 'D' ஐ ஆதார ஸ்ருதியாக கொண்டால் 'F' என்ற ஸ்வரம் உச்ச ஸ்தாயி சுத்த கந்தரம் ஆகும். பொதுவாக மத்யம ஸ்ருதியில் அமைந்த ராகங்கள் 'நிஷாதாந்திய' 'தைவதாந்திய' மற்றும் 'பஞ்சமாந்திய' ராகங்களுக்கு மட்டும் தான் அமைக்கபடுகிறது என்பதனை நீங்களே விளக்கினீர்கள். ஆயினும் படிப்பவர்களின் நலனுக்காக மீண்டும் இதன் தொடர்பினை தருகிறேன்

http://www.ragasurabhi.com/carnatic-music/surabhi-post/post--post0011--myriad-hues-of-ragas-ragas-sung-in-madhyama-shruti.html

எனவே இந்த பாடல் இந்த நிலையிலும், அதாவது மத்யம ஸ்ருதி என்பதின்படி, அதாவது (truncated aarohanam-avarohanam) என்ற நிலையிலும் இது கர்னாடக சங்கீதத்தின் இலக்கண வரம்புகளை தாண்டுகிறது. ஏனெனில் சரணத்தில் உச்ச ஸ்தாயி சுத்த கந்தாரத்தை தொடுகிறது.

ஆயினும் நீங்கள் கூறியது போல இதன் ஆதார ஸ்ருதி, ஏன் மத்யம ஸ்ருதியில் அமையும் பொழுது முந்தைய நிலையிலேயே மாறாமல் இருக்கவேண்டும். கர்னாடக சங்கீத இலக்கணப்படி இதன் ஆதார ஸ்ருதி 'மத்யம ஸ்ருதியில்' முந்தைய சட்ஜமதிலிருந்து 'மதயமம்' ஆக மாறலாமே என்ற கேள்விக்கு எழுகிறது. இவ்வாறு முந்தைய சட்ஜமதிலிருந்து இது மத்யமமாக மாறினால் இதன் ஆதார ஸ்ருதி இப்போது கர்நாடக சங்கீத இலக்கணப்படி 'D' லிருந்து 'G' ஆக மாறிவிடும். இவ்வாறு அமைந்தால் இதன் நிலை என்ன என்று ஆராய்வோம்.

'G' என்பது ஆதார ஸ்ருதி - இது ஹரிகாம்போஜி ராகம்.

இப்போது இது 'G-B-D' என்ற நிலையில் இது கரஹரப்ரியா ராகம் என்ற நிலையிலிருந்து மாறிவிடுகிறது. ஏனெனில் 'G-B-D' என்பது 'ச-க2-ப' என்று கொள்ளப்படும். 'க2' என்ற ஸ்வரம் 'கரஹரப்ரியா' ராகத்திற்கு வராது. இம்மர்திரி மாறிய நிலையில் இது 'ஹரிகாம்போஜி' ராகத்தின் ஸ்வர நிரல்களை கொள்கிறது. இந்த ராகமும் பொதுவாக பஞ்சம ஸ்ருதியிலேயே பாடப்படுகிறது. இப்போது ஆதார ஸ்ருதி மாறிய நிலையில் இது ஹரிகாம்போஜி ராகத்தினை பஞ்சம ஸ்ருதியில் அமைக்கப்பட்டது. எனவே இது கரநாடக சங்கீதத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு இருக்கிறது.

ஆயினும் இதில் முக்கியமாக காண வேண்டிய விஷயம் முன் கூறியது போல சரணத்தின் முடிவில் வரும் ஹம்மிங். அது 'F' ஸ்வரத்தை தொடுகிறது என்று பார்த்தோம். இப்போது ஆதார ஸ்ருதி முந்தைய 'D' என்ற 'கரஹரப்ரியா' ராகம் என்ற நிலையிலிருந்து மாறி இப்போது இதன் ஆதார ஸ்ருதி 'G' என கொள்ளப்பட்டு இது 'ஹரிகாம்போஜி' ராகம் என்ற நிலையில், சரணத்தின் முடிவில் வரும் ஹம்மிங் ல் வரும் 'F' ஸ்வரம் 'G' என்ற மாறிய ஆதார ஸ்ருதிக்கு 'நி1' என்ற கைசகி நிஷாதம் ஆகும்.
இப்பாடல் இந்த ஸ்வரத்தை தாண்டி போகவில்லை. எனவே இது ஒரு truncated aarohanam-avarohanam என்ற விதிப்படி அமைந்துள்ளது. ஆயினும் இவ்வாறு truncated aarohanam-avarohanam என்பது மத்யம ஸ்ருதி ராகங்களுக்கு தான் பொருந்தும் என்று பார்த்தோம்.
அதுவும் குறிப்பாக இந்த நிலை 'ஹரிகாம்போஜி' என்ற ராகத்திற்கு கிடையாது. அதுவும் இதனை நாம் ஏற்கனவே 'ஹரிகாம்போஜி' ராகம் என்றும் மற்றும் இது பஞ்சம ஸ்ருதி கொண்டு அமைக்கப்பட்டது என்றும் பார்த்தோம். எனவே அந்த வகையில் இது கர்னாடக சங்கீத இலக்கண வரம்புகளை தாண்டுகிறது.

இது பற்றி உங்கள் கருத்து என்ன?
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Songs Composed by MSV-TKR and MSV All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2, 3, 4, 5, 6  Next
Page 2 of 6

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group