"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Mellisai Maa Mannarukku Kanneer Anjali

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
Venugopalan Soundararajan
Philiac


Joined: 12 Dec 2006
Posts: 533
Location: Mumbai

PostPosted: Thu Jul 23, 2015 11:32 am    Post subject: Mellisai Maa Mannarukku Kanneer Anjali Reply with quote

மெல்லிசை மாமன்னருக்கு அவர் இசையமைத்த படங்களின் பெயர்களைப் பயன்படுத்தி எழுதிய ஒரு கண்ணீர் அஞ்சலி :

[size=18]கலைக் கோவில்-இல் வீற்றிருக்கும் இசைத் தாயின் தவப் புதல்வன், தெய்வ மகன், உயர்ந்த மனிதன், நமது பாச மலர் நம்மைஎல்லாம் சொல்லொணாத் துயரில் ஆழ்த்திவிட்டு தன் திரை உலக நண்பர்கள் கவிஞர் கண்ணதாசன், TK ராமமூர்த்தி, TMS, PBS, MGR, சிவாஜி முதலானோரை சந்திக்க சொர்க லோகம் சென்று விட்டார்.

MSV (Maக்களின் Seவிகளுக்கு Viருன்தளித்தவர்) பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு அன்பின் வடிவம், பண்பின் பிறப்பிடம், அடக்கத்தின் மறு உருவம். அதனால்தான் திரை உலகத்தினரும், ரசிகர்களும் அவரை 'மனிதரில் மாணிக்கம்', 'அவன்தான் மனிதன்' என்று எகோபித்தமாகப் புகழ்ந்தனர்.

சிறிய கிராமத்தில் பிறந்து நடிக்க ஆசைப்பட்டு பின் இசையில் சாதிக்கவேண்டுமேன்று பட்டினப் பிரவேசம் செய்தார். அவர் ஒரு நடிகராகாமல் இசையமைப்பாளர் ஆனது நமக்கு இறைவன் கொடுத்த வரம். எந்த ஒரு சவால்-ஐயும் சவாலே சமாளி என்று எதிர்கொண்டு MSV படைத்ததோ அபூர்வ ராகங்கள். அவர் இசையமைத்த படங்களைப் பார்த்தால் பசி தீரும், பாலும் பழமும் சாப்பிட்டது போலிருக்கும்.

இசையமைப்பதில் அவர் ஒரு ராஜா, எங்க ஊர் ராஜா என்று சொல்வதில் நாம் பெருமை கொள்ளலாம். அவர் டைரக்டர்களுக்கு ஒரு சுமை தாங்கி, தயாரிப்பாளர்களுக்கு கை கொடுத்த தெய்வம் மட்டுமன்றி லாபங்களை அள்ளித் தந்த கொடை வள்ளல் கர்ணன், ரசிகர்களுக்கோ சொர்கம், திரை உலகிற்குக் கிடைத்த ஒளி விளக்கு, அது ஒரு அணையா விளக்கு.

இசையை கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை, என்று பல பிரிவுகளாகப் பிரித்திருக்கின்றனர். இவை எல்லாம் ஒன்று சேர்ந்த இசையை ஏன் MSV இசை என்று அழைக்கக்கூடாது?

அவர் பாடல்களைக் கேட்கக் கூட வேண்டாம். சும்மா நினைத்தாலே இனிக்கும். அவர் படைத்த இசை நம் நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும், அதை நம் நெஞ்சம் மறப்பதில்லை. அவருக்கு இவ்வுலகில் என்னென்ன விருதுகள் உண்டோ அவை அத்தனையையும் பாத காணிக்கை ஆக்க வேண்டும். அவரை கௌரவிக்காத இந்திய அரசிற்கு பாவ மன்னிப்பு நிச்சயம் கிடையாது.

[/size]

Regards,
Venu Soundar
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group