"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

NTFANS' PROGRAMME 30.08.2015
Goto page 1, 2  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> TRIBUTES TO THE MASTER
View previous topic :: View next topic  
Author Message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Sep 04, 2015 3:54 pm    Post subject: NTFANS' PROGRAMME 30.08.2015 Reply with quote

கடந்த 30.08.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் நிகழ்த்தப்பட்ட மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களுக்கான அஞ்சலி நிகழ்ச்சியில், தேர்ந்தெடுத்த பாடல்களும் பின்னணி இசையும் பல்வேறு பங்களிப்பாளர்களை அதில் கொண்டு வரவேண்டும் என்கின்ற நோக்கத்திலேயே அமைந்தன. இதனால் பல பாடல்களை இதில் சேர்க்க முடியவில்லை. இவர்கள் இருவரின் இணையில் வெளிவந்த படங்கள், அவற்றில் இடம் பெற்ற பாடல்கள் அவற்றிலிருந்து ஒரு மாலை நேர நிகழ்ச்சிக்காக எவ்வளவு இடம் பெறச் செய்ய முடியுமோ அதைக் கருத்தில் கொண்டே நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டது. .

இதில் இடம் பெற்ற பாடல்களாவன -

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே - புதையல்
தாழையாம் பூ முடிச்சு - பாகப் பிரிவினை
பாலிருக்கும் பழமிருக்கும் - பாவ மன்னிப்பு
மயங்குகிறாள் ஒரு மாது - பாச மலர்
நான் பேச நினைப்பதெல்லாம் - பாவ மன்னிப்பு

புதிய பறவை - முகப்பிசை

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை - படித்தால் மட்டும் போதுமா
இது வேறுலகம் - நிச்சய தாம்பூலம்
பந்தல் இருந்தால் கொடி படரும் - பந்தபாசம்
ஆறோடும் மண்ணில் - பழநி
ஓ..லிட்டில் ஃப்ளவர் - நீலவானம்

தெய்வ மகன் - சிதார் இசை

மகராஜா ஒரு மகராணி - இரு மலர்கள்
பூமாலையில் ஓர் மல்லிகை - ஊட்டி வரை உறவு
அந்த நாள் ஞாபகம் - உயர்ந்த மனிதன்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் - ராமன் எத்தனை ராமனடி
ஆகாயப் பந்தலிலே - பொன்னூஞ்சல்

சிவந்த மண் - பார்வை யுவராணி பாடலுக்கு முந்தைய வெளிநாட்டுச் சுற்றுலாக் காட்சி

சொர்க்கம் பக்கத்தில் - எங்க மாமா
பொன்மகள் வந்தாள் - சொர்க்கம்
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும் - பாதுகாப்பு
ஐ வில் சிங் ஃபார் யூ - மனிதரில் மாணிக்கம்
இனியவளே என்று பாடி வந்தேன் - சிவகாமியின் செல்வன்

ராஜா - ரந்தாவா வுடனான சண்டைக் காட்சி

அலங்காரம் கலையாத - ரோஜாவின் ராஜா
கங்கை யமுனை - இமயம்
தலைவன் தலைவி - மோகன புன்னகை

சுமதி என் சுந்தரி - இறுதிக் காட்சி

ஆட்டுவித்தால் யாரொருவர் - அவன்தான் மனிதன்

மெல்லிசை மன்னரின் பேட்டி - தேவனே என்னைப் பாருங்கள் பாடலைப் பற்றி

தேவனே என்னைப் பாருங்கள் - ஞான ஒளி
தெய்வத்தின் தேரெடுத்து - பாட்டும் பரதமும்

கௌரவம் - கேஸ்கட்டுக் காட்சி

ஞான ஒளி - கருவிசை - மூன்று காட்சிகள்

தங்கப் பதக்கம் - கருவிசை - இரு காட்சிகள்

ஆறு மனமே ஆறு - ஆண்டவன் கட்டளை

மெல்லிசை மன்னரின் பேட்டி - எங்கே நிம்மதி பாடலைப் பற்றி

எங்கே நிம்மதி - புதிய பறவை

உள்ளத்தில் நல்ல உள்ளம் - கர்ணன்

நிகழ்ச்சியில் நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் பொருளாளர் முரளியின் சூப்பரான தொகுப்புரை மக்களிடம் பெருத்த கரகோஷத்தைப் பெற்றது.

பாடல்களைத் தொகுக்கின்ற வேலையே முந்தைய நாள் தான் முடிவடைந்தது. நிகழ்ச்சியன்று காலையும் இருவரும் வேறு தவிர்க்க முடியாத சூழ்நிலையால் சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனவே தொகுப்புரை எவ்வாறு இருக்க வேண்டும் என்ன சொல்ல வேண்டும் என்கின்ற திட்டமிடலை மேற்கொள்ள இயலவில்லை. ஆதலினால் இருவருமே அந்நேரத்தில் பாடல்களைப் பற்றிய விவரங்களை மக்களிடம் Extemporeயாக எடுத்துரைத்தோம். படங்களின் வெளியீடு மற்றும் அதன் தொடர்பான விவரங்கள், பங்கேற்பாளர்கள் போன்ற விவரங்களை முரளி தன்னுடைய அபார நினைவாற்றலால் எடுத்துக் கூற, அவ்வப்போது அந்தப் பாடல் அல்லது அந்தப் பின்னணி இசைக் கோப்புகளில் உள்ள சிறப்பம்சங்களை அடியேனும் எடுத்துக் கூறினோம். லோசான டென்ஷனோடு தான் நாங்கள் நிகழ்ச்சியைத் துவக்கினோம், இருந்தாலும் ஒவ்வொரு பாடல் அல்லது இசை முடிந்த பின்னும் பலத்த கரகோஷத்துடன் ஆடியன்ஸ் வரவேற்றது மகிழ்ச்சியைத் தந்தது. அது மட்டுமல்ல, தொகுப்புரைகளும் பல இடங்களில் கரவொலியைப் பெற்றது, எங்களுக்கு ஊக்கமளித்தது.

பந்த பாசம் படத்தில் இடம் பெற்ற பந்தல் இருந்தால் கொடி படரும் பாடலையும் பாதுகாப்பு படத்தில் இடம் பெற்ற ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும் பாடலையும் பலர் அன்று தான் முதன் முதலில் பார்தததாகக் கூறினார்கள். இது எங்களுடைய தேர்விற்குக் கிடைத்த வெற்றியாகவே நான் கருதுகிறேன்.

பின்னணி இசைக் கோப்புகள் தேர்வும் மிகவும் சிரமமான காரியமாகவும் சவாலாகவும் விளங்கியது. மெல்லிசை மன்னரின் பின்னணி இசையைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் அவருடைய முழுத்திறமையையும் காட்டுவதற்கு அதிக வாய்ப்பளித்தவை நடிகர் திலகத்தின் படங்களின் உணர்ச்சி மிகுந்த காட்சிகள் என நான் கருதுகிறேன்.

பல்வேறு விதமான உணர்ச்சிப் போராட்டங்கள் நிறைந்த காட்சிகள் நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் அதிகம் இடம் பெற்றுள்ளன. இந்தக் கோணத்தில் பார்த்தால் அத்தனையிலும் மெல்லிசை மன்னரின் பின்னணி இசையமைப்பின் பல்வேறு பரிமாணங்களை நாம் காண முடியும். எனவே இந்த அடிப்படையில் அவருடைய பின்னணி இசைக்காட்சித் தேர்வும் எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது.

முகப்பிசையைப் பொறுத்த மட்டில் எடுத்தவுடனேயே எங்கள் இருவருக்குமே ஒரு சேரத்தோன்றியது புதிய பறவை டைட்டில் இசையே. எனவே அதனைத் தேர்ந்தெடுத்தோம். அதில் இடம் பெற்றிருந்த இசைக்கருவிகள், குறிப்பாக பாங்கோஸ் ஒலி, ஒரு விதமான திகிலை பார்வையாளரிடம் உண்டாக்கி படத்திற்கு அங்கேயே ஓர் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்து விட்டது.

ராஜா படத்தின் சண்டைக்காட்சியைப் பற்றி நாம் சொல்லியே ஆக வேண்டும். எதார்த்தம், இயற்கை என்றெல்லாம் கூறப்படுவது சண்டைக்காட்சிகளுக்கும் உரியது என்பதை நிரூபிக்கும் வண்ணம் அமைந்த காட்சி என்பதால் ரந்தாவாவுடனான சண்டைக்காட்சியை எடுத்துக்கொண்டோம். எதிரி அடிக்கிறானா, முகத்தில் குத்துகிறானா, உதைக்கிறானா என்பது எதுவும் தெரியாமல் எல்லாவற்றிற்கும் ஒரே டிஷ்யூம் டிஷ்யூம் என ஒலி எழுப்பப்பட்ட காலத்தில் மெல்லிசை மன்னர் சண்டைக்காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி ஒலியமைப்பைக் கொண்டு வருவார். பஞ்ச் விழும் போது மட்டுமே அந்த பஞ்சுக்கான ஒலியினை ஒலிப்பதிவாளரின் உதவியுடன் இணைப்பார். அதே போல் பலசாலியான எதிரியுடன் மோதும் போது நடிகர் திலகம் இரண்டு மூன்று முறை அடி வாங்குவதும், எதிரி காலால் உதைக்கும் பொழுது அதனை எதிர்க்க முடியாமல் விழுவதும் மிகவும் யதார்த்தமானதாகும். அதன் பிறகு வாலிபன் என்கிற முறையில் உள்ள சுறுசுறுப்பின் காரணமாக எதிரியை அநாயாசமாக எதிர்கொண்டு சமாளிப்பதும் இயல்பான சண்டைக் காட்சிக்குஉதாரணங்கள். எனவே இதற்கேற்ப மெல்லிசை மன்னர் சண்டைக்காட்சிக்கான பின்னணி இசையை மிகச் சிறப்பாக அமைத்திருப்பார். குறிப்பாக மான் கொம்பினை எடுத்துக்கொம்டு ரந்தாவா குத்த வரும் போது பாங்கோஸின் ஒலியில் தாளம் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கும்.

இறுதியில் கதாநாயகன் தோல்வியும் அடையாமல் வெற்றியும் அடையாமல் தன் முதலாளியால் காப்பாற்றப்படுவது போன்ற காட்சியமைப்பு, எந்த அளவிற்கு இயல்பான பாத்திரப்படைப்புகள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தன என்பதற்கோர் சான்று.


சிவந்த மண் திரைக்காவியத்தின் பின்னணி இசையைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அது தவிர்க்க இயலாததாகும். இந்தக் காலத்தில் கதைக்கு சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ பாடல் கம்போஸிங்கிற்கே இசையமைப்பாளர்கள் வெளிநாடுகளுக்கு ஓடி விடுகிறார்கள். கடைசியில் அங்கிருந்து அவர்கள் கம்போஸ் செய்வது ஏதேனும் ஒரு குத்துப்பாட்டாக இருக்கும் அல்லது வெளிநாட்டு இசைத்தட்டுகளில் இருந்து உருவிய மெட்டாக இருக்கும். ஆனால் எந்த வசதியும் இல்லாத அந்தக் காலகட்டத்தில் மெல்லிசை மன்னர் இங்கிருந்தவாறே பல வெளிநாட்டு இசையமைப்புகளைத் தன் இசையமைப்பில் அபாரமாக கொண்டு வந்திருப்பார். அதிலும் இந்தப் பின்னணி இசை, நாயகன் நாயகி இருவரும் ஐரோப்பிய கண்டத்தில் சுற்றுலா செல்வது போல வரும் கனவுக் காட்சியாகும். கனவுக்காட்சி தானே யார் கேட்கப்போகிறார்கள் என்ன வேண்டுமானாலும் போடலாம் என்று உரிமை எடுத்துக்கொள்ளாமல் அதிலும் முழு ஈடுபாட்டுடன் அற்புதமான பின்னணி இசையினைக் கொண்டு வந்தது மெல்லிசை மன்னரின் தன்னம்பிக்கைக்கும் அபார திறமைக்கும் எடுத்துக்காட்டு.

இந்தக் காட்சி 7 நிமிடங்களுக்குப் படத்தில் இடம் பெறுகிறது. இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள நெடுந்தகடுகளில் இக்காட்சியில் இடம்பெற்ற காளை அடக்கும் போட்டி இடம் பெறவில்லை. இந்த இரண்டு நிமிட ஸ்பெயின் புல் ஃபைட் காட்சியில் ஏராளமான விஷயங்கள் அடங்கியுள்ளன. அதை மேற்கோள் காட்டுவதற்காகவே இது தேர்வு செய்யப்பட்டது.இதுவும் பலருக்கும் காணக் கிடைக்காத அரிய பொக்கிஷமாகும்.

இந்த ஸ்பானிஷ் புல்ஃபைட் காட்சியில் பின்னணியில் ட்ரம்பெட், சாக்ஸஃபோன், ட்ராம்போன் போன்ற மேல்நாட்டு இசைக்கருவிகளை மெல்லிசை மன்னர் மிக அற்புதமாகக் கையாண்டிருப்பார். அந்தப் பின்னணி இசையின் மெட்டு, இந்த நிகழ்ச்சியை நடிகர் திலகம் பார்ப்பது போன்ற காட்சியும் இடம் பெற்றிருக்கும். கிட்டத்தட்ட லைவாக ஒளிப்பதிவு செய்திருப்பார் ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணன். அதில் நடிகர் திலகத்தை நாம் கவனித்தோமானால் அவருடைய அப்சர்வேஷன் பவர் புரியும், இதையெல்லாம் எடுத்துக் கூறத்தான் இந்தக் காட்சி.

இதே போன்று இந்த காட்சியில் ஒலித்த பின்னணி இசையின் மெட்டும் பொன் மகள் வந்தாள் பாடலின் சரணத்தின் மெட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவும் குறிப்பிடக்காரணம், ஒவ்வொரு பாடலுக்கும் காட்சிக்கும் தேர்விடலில் எங்களுக்கு எந்த அளவிற்கு சிரமம் இருந்தது என்பதைக் கூறவே.

நிகழ்ச்சியைக் கண்டுகளித்து, நம்மையெல்லாம் பாராட்டிய அன்புச் சகோதரர் ராம்குமார், மெல்லிசை மன்னரின் புதல்வர் கோபி, மற்றும் மெல்லிசை மன்னரின் புதல்வியரான லதா, சாந்தி, மற்றும் ஏராளமான ரசிகர்கள் அனைவருக்கும் என் சார்பிலும் முரளி சார்பிலும் என் உளமார்ந்த நன்றி.

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Sep 04, 2015 3:58 pm    Post subject: Reply with quote

நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்து ஊக்கமளித்து உதவிய அன்புள்ளங்கள், விஜயகிருஷ்ணன், ரங்கசாமி, சம்பத், சிவசங்கரன், வேணு சௌந்தர், புகைப்படம் எடுத்த சேகர் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றி.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Fri Sep 04, 2015 4:05 pm    Post subject: Reply with quote

கருவிசை (theme music) யைப் பொறுத்த மட்டில் தான் பணியாற்றிய அனைத்துப்படங்களிலும் இதை உருவாக்கியிருப்பார் மெல்லிசை மன்னர். எனவே இதுவும் தேர்வு செய்யக்கடினமான பணியாக இருந்தது. என்றாலும் உடனே நினைவுக்கு வந்த ஞான ஒளி மற்றும் தங்கப்பதக்கம் திரைப்படக் கருவிசைக்கோப்புகளை ஒளிபரப்பினோம்.

ஞான ஒளி படத்தில் மூன்று காட்சிகள்.

1. அந்தோணியை லாரன்ஸ் கைது செய்யும் காட்சி.
2. மகள் சாரதா மாளிகையிலிருந்து வெளியேறும் போது காலில் முள் குத்த அதைக்கண்டு தன் வருத்தத்தை வெளிக்காட்ட முடியாமல் அருண் தடுமாறும் காட்சி.
3. கடைசியில் படம் முடியும் கார்டுக்கு முந்தைய காட்சி.

தங்கப்பதக்கம் இரு காட்சிகள்

ஜெகன் தனிக்குடித்தனம் போக வீட்டைப் பார்த்து விட்டதாகச் சொல்லும் காட்சி.
தாயார் உடல் நலமின்றி படுத்திருக்கும் போது வந்து பார்க்க மகனை சௌத்ரி அழைக்கும் காட்சி.

மேற்கண்ட காட்சிகளனைத்தும் மக்களிடம் பெற்ற பெரும் வரவேற்பு எங்களுக்கு ஊக்கமளிக்கிறது.

மெல்லிசை மன்னரின் பின்னணி இசையின் மேன்மையைத் தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்த்து அவருடைய ஈடற்ற திறமையைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்ற என் ஆவல் நிறைவேறும் நாள் வந்து விட்டது என எண்ணுகிறேன்.

ஆதரவளித்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Fri Sep 04, 2015 4:35 pm    Post subject: Reply with quote

MR, Ragasudha and the other members of the committee to be applauded for their efforts in bring out yet another great tribute to the greatest composer of all times .

Packed house (people were seen standing including kavithaalaya krishnan and our Bhaskar ) witnessed this tribute with two rare personalities in public view Mr. MSV GOPI and Mr.RAMKUMAR GANESAN

Elder sons of both giants were seen trying to control their emotions , many times they won , and some times the emotions bettered them when the product of their parents , were well received by the packed crowd,

THE tribute function made generally less spoken Mr MSV GOPI , to open up informally with the people around and sharing his memories of NT and his brother Mr Shanmugam.

yes a few more points on musical side could have been told , but any way it was only a tribute programme and reached the audience well and what was expected as result .achieved ,

kudos to the team















0
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Sat Sep 05, 2015 12:01 am    Post subject: Reply with quote

Dear Sri Ragavendran,

Congrats to you on the excellent show, which I couldn't attempt since my present was requited at my home that evening. whatever you do, you do it in a professional way due to your sincerity and thoroughness. Pl upload the videos, if it is permissible.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sat Sep 05, 2015 10:18 am    Post subject: Reply with quote

Thank you VK and Parthavi for the compliments.

All credit goes to MSV-NT combo.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sat Sep 05, 2015 10:19 am    Post subject: Reply with quote

A few snapshots from the Programme



The Portrait of Mellisai Mannar placed for floral tribute.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sat Sep 05, 2015 10:19 am    Post subject: Reply with quote



Shri Ramkumar Ganesan and Shri MSV Gopi seen here. Behind Shri Gurumoorthy and Dr. Premeela Gurumoorthy
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sat Sep 05, 2015 10:20 am    Post subject: Reply with quote



Shri MSV Gopi lighting the lamp
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sat Sep 05, 2015 10:20 am    Post subject: Reply with quote



A poster placed at the venue
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sat Sep 05, 2015 10:21 am    Post subject: Reply with quote



Shri Ramkumar Presenting a Memento - A photo of Nadigar Thilagam and Mellisai Mannar to Shri MSV Gopi.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sat Sep 05, 2015 10:22 am    Post subject: Reply with quote



Shri Ramkumar showing the Photo to the audience as Shri T. Murali Srinivas (blue shsirt) looks on.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sat Sep 05, 2015 10:22 am    Post subject: Reply with quote



Shri MSV Gopi shows the Photo.[/img]
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sat Sep 05, 2015 10:23 am    Post subject: Reply with quote



Shri Murali Srinivas welcoming the audience
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com


Last edited by ragasuda on Sat Sep 05, 2015 10:28 am; edited 1 time in total
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sat Sep 05, 2015 10:24 am    Post subject: Reply with quote



Banner image paying tribute to Mellisai Mannar
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com


Last edited by ragasuda on Sat Sep 05, 2015 10:28 am; edited 1 time in total
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> TRIBUTES TO THE MASTER All times are GMT + 5.5 Hours
Goto page 1, 2  Next
Page 1 of 2

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group