"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Yedho oru nadhiyil naan iranguvadhai pole

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Rare Songs of MSV
View previous topic :: View next topic  
Author Message
rajeshkumar_v



Joined: 19 Apr 2007
Posts: 79

PostPosted: Fri Jul 06, 2007 11:16 am    Post subject: Yedho oru nadhiyil naan iranguvadhai pole Reply with quote

60'களில் மெல்லிசை மன்னர் இசை ராஜாங்கம் நடத்தியிருந்தாலும் 70'களில் அவரது பரிமாணம் பல மடங்காக விரிந்தது என்றால் அது மிகையில்லை

70'களில் பாலு -சுசீலா, பாலு- வாணி, யேசுதாஸ் -சுசீலா, யேசுதாஸ் -வாணி ஜோடிக்குரல்களில் பல இனிய பாடல்களை நமக்கு தமிழ்த்திரையுலகிற்கு வழங்கினார் ஆம் எல்லாம் இசை முத்துக்கள் பொக்கிஷங்கள் அவற்றில் பல பாடல்களை நாம் அடிக்கடி கேட்பதுண்டு அலசுவதுண்டு குறிப்பாக

ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன (பாலு-சுசீலா)
கேட்டதெல்லாம் நான் தருவேன் (பாலு-சுசீலா)
கண்டேன் கல்யாண பெண் போன்ற மேகம் (பாலு-சுசீலா)
இலக்கணம் மாறுதோ (வாணி -பாலு)
விழியே கதையெழுது (யேசுதாஸ்- சுசீலா)
என பல பாடல்களை சொல்லலாம்


இருந்தாலும் இன்னும் பல பாடல்கள் உள்ளன அவை இன்று ஒலிபரப்பபடுவதுமில்லை ஞாபக படுத்துவதுமில்லை

அப்படி மறந்த பாடல்களை இங்கே ஞாபகப்படுத்தும் முயற்சி இது

அப்படி மறக்கபபட்ட பாடல்களில் ஒன்று
"ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதை போலே " என்ற அழகான பாடல்
அதுவும் சுசீலா- பாலு ஒரு சிறந்த கூட்டணி ஆம் இந்த ஜோடிக்குரலில் ஒலித்த
எல்லா பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்தது.

இந்த பாடலின் ஆரம்பமே ஒரு அழகு

ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதை போலே

படம் :என்ன தவம் செய்தேன்
வரிகள்: கண்ணதாசன்

காட்சியில் நடித்தவர்கள் : விஜயகுமார் -சுஜாதா

சுசீலா ஆரம்பிக்கும் விதமும் பாலுவின் இளமை ததும்பும் குரலில் ஒலிக்கும் அந்த தொடக்க ஹம்மிங்கும் மெல்லிசை மன்னரின் துள்ளலிசையும் நம்மை எங்கோ கொண்டு செல்லும் என்பது உறுதி

நாம் நதியின் நடுவே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் மெல்லிசை மன்னரின் இசை ..

இதோ இந்த பாடலின் வரிகள்

ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
சிங்கார செம்மாதுளை உந்தன் செந்தூரம் காட்டும் கலை
பொழுது செல்ல பொழுது செல்ல கல்யாணப் பந்தலிடும் கலைச் சோலை

ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
சிங்கார செம்மாதுளை உந்தன் செந்தூரம் காட்டும் கலை
பொழுது செல்ல பொழுது செல்ல கல்யாணப் பந்தலிடும் கலைச் சோலை


கண்ணம் சிறு குழி விழி சிரிக்கின்ற வண்ணம்
மின்னும் இதழ் பறவைகள் குடிக்கின்ற கின்னம்
தாலாட்டு பூச்சூட்டு நான் உந்தன் சொந்தம்
ஆராத்தி நீ காட்டு ஆனந்த மஞ்சம்
என் வீட்டுப் பச்சைக்கிளி
இன்று என் தோளில் தொற்றும் கிளி
இடமிருந்து வலமிருந்து என்னோடு வட்டமிடும் வண்ணக்கிளி


மங்கை தினம் கலகலவென வரும் கங்கை
மன்னன் தினம் குழலிசை வடிக்கின்ற கண்ணன்
தாகாங்கள் பாவங்கள் நான் கண்டேன் அங்கே
மேளங்கள் தாளங்கள் ஊர்வலம் இங்கே
கல்யாணப் பெண்ணாயிரு
அங்கே கண்ணாடி முன்னாலிரு
கடவுளுக்கு நன்றி சொல்லி
என்னாளும் அன்பு கொண்ட பெண்ணாயிரு


பாடலை கேட்டு மகிழுங்கள்
http://music.cooltoad.com/music/song.php?id=176566
ராஜ்

Back to top
View user's profile Send private message
P. Sankar



Joined: 03 Feb 2007
Posts: 142

PostPosted: Fri Jul 06, 2007 2:08 pm    Post subject: Reply with quote

There are lots and lots of such songs. Good that we have to bring them under one head like this.

P. Sankar.
Back to top
View user's profile Send private message Send e-mail
tvsankar



Joined: 24 Jan 2007
Posts: 229

PostPosted: Fri Jul 06, 2007 4:26 pm    Post subject: Reply with quote

Dear rajeshkumar,
Thanks for the beautiful song..
Andha naalil, Radio vil adikadi olitha oru azhagana padal..

With Love,
Usha Sankar.
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Fri Jul 06, 2007 8:44 pm    Post subject: Reply with quote

Dear Rajesh...

That was really a beautiful post... You affirmed the fact on the greatness in MSV's 70's Music with wonderful examples...

Please bring out more and more gems like this with your writings! Very Happy
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Rare Songs of MSV All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group